கற்க கற்க கள்ளும் கற்க...

சனி, டிசம்பர் 31, 2011

எனக்கு பிடித்த டாப் 20 தமிழ் திரைப்படங்கள் பாகம் - 2

அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த பதிவின் முந்தைய பகுதியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Post Comment

வெள்ளி, டிசம்பர் 30, 2011

எனக்கு பிடித்த டாப் 20 தமிழ் திரைப்படங்கள் பாகம் - 1

இன்னும் இரண்டு நாட்களில் புத்தாண்டு பிறக்கப் போகிறது. கடந்த வருடத்தை விட, இந்த வருடம் நிறைய நல்ல படங்கள் வெளி வந்திருக்கின்றன. அவற்றில் எனக்கு பிடித்த 20 படங்களை பட்டியலிட்டிருக்கின்றேன். இதில் சில படங்கள் சிலருக்கு பிடிக்காமல் போகலாம். ஆனால் இந்த படங்கள் அனைத்துமே எனக்கு இந்த வருடத்தின் பிடித்த படங்கள்.

Post Comment

சனி, டிசம்பர் 24, 2011

மக்கள் திலகம்...

எம்.ஜி.ஆர். அன்றைய தமிழ் சினிமாவில் 'புரட்சித் திலகம்'. அரசியலில் 'மக்கள் திலகம்'. தொடர்ந்து மூன்று முறை தமிழ்நாட்டில் முதலமைச்சராக இருந்தவர். இன்றும் இவர் படங்கள் தியேட்டரில் வெளியானால், கண்டிப்பாக 'ஹவுஸ் புல்' போர்டு வைப்பார்கள். அவர் மறந்தாலும் அவர் புகழ் மறையவில்லை என்பதற்கு இந்த ஒரு விஷயமே போதும். இன்று புதிதாக கட்சி

Post Comment

திங்கள், டிசம்பர் 19, 2011

கமலின் 'குணா' - திரை விமர்சனம்

நான் எழுதிய என் முதல் பதிவான 'விக்ரம் - திரை விமர்சனத்தின்' முடிவில் நான் இப்படி எழுதியிருப்பேன். அதாவது 'விக்ரம் படம் கமலின் தோல்வி படங்கள் வரிசையில் சேர்ந்து கொண்டது. அதற்கு காரணம், உலகநாயகன் கமல்ஹாசனின் அவசரபுத்தி தான். ஏனென்றால் இந்த படத்தின் திரைக்கதையும், வசனமும் அன்றைய பார்வையாளர்களுக்கு புரியவில்லை.

Post Comment

திங்கள், டிசம்பர் 12, 2011

சினிமாவா? ஆன்மிகமா? அரசியலா? - ரஜினியின் பிறந்தநாள் பதிவு...

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தமிழ்நாட்டில் பிறக்கும் அனைத்து குழந்தைகளும் முதலில் அழுவது தாய் பாலுக்காக. அதற்க்கடுத்து அவைகள் அழுவது 'ரஜினி படத்தை பார்ப்பதற்காக'. ஒருவர் படத்திற்கு மட்டும் பூஜை போடும் ஐயரில் இருந்து, அந்தப் படம் வெளியான தியேட்டரில் சைக்கிள் மற்றும் வண்டிகளுக்கு டோக்கன் போடுபவன் வரை பெரிய லாபம் பார்த்தால்,

Post Comment

புதன், டிசம்பர் 07, 2011

மூன்று விதமான ''Why திஸ் கொலைவெறி டி'' பாடல்... (வீடியோவுடன்)

இந்த 'Why This Kolaveri' பாடல் முதன்முதலில் கேட்டபோது வழக்கமான செல்வராகவன் படங்களில் வரும் பாடல் போலவே இருந்தது. ஆனால் இன்று, Facebook, Twitter மற்றும் ப்ளாக்கர் போன்ற தளங்களின் மூலம் உலகளவில் பிரபலமடைந்து விட்டது. அதேசமயம் ஏதாவது ஒரு சில காரணங்களுக்காக இந்த பாடலுக்கு எதிர்ப்பு இருக்கவும் செய்கிறது.

Post Comment

புதன், நவம்பர் 30, 2011

எனக்கும் படிப்புக்குமான தூரம்...

'தலை வாரி பூச்சூடி உன்னை,
பாடசாலைக்கு போ என்று சொன்னாளே அன்னை.
சிலை போல ஏன் இங்கு நின்றாய்?
நீ சிந்தாத கண்ணீரை ஏன் சிந்துகின்றாய்?'
இந்த பாடல் என் பள்ளியில் பணிபுரிந்த ஒரு தமிழாசிரியர் பாடிக் கேட்டிருக்கிறேன். கல்வி என்பது ஒருவனின் தகுதியை தீர்மானிக்கிறது என்று பொதுவாக சொல்வார்கள். ஆனால் அந்த

Post Comment

வெள்ளி, நவம்பர் 18, 2011

தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் - ஒரு பார்வை

வர,வர தமிழ்நாட்டை விட உகாண்டா ரொம்ப மோசமாகி வருகிறது. முன்பெல்லாம் தினமும் ஒரு ஐந்து மணிநேரமாவது பவர் கட் செய்துவிடுவார்கள். கடந்த இரண்டு வாரமாக கிட்டத்தட்ட பத்து மணிநேரம் பவர் கட் செய்கிறார்கள். தொடர்ந்து இரண்டு, மூன்று நாட்களாக பவர் இல்லாமல் ரொம்பவே கஷ்டப்பட்டு விட்டேன். அதனால் தான் என்னால் பதிவெழுதாமல்

Post Comment

புதன், நவம்பர் 09, 2011

எனக்கு பிடித்த சில வீடியோ கிளிப்பிங்க்ஸ்...

இந்த வீடியோ கிளிப்பிங்க்ஸ் எல்லாமே எனக்கு ரொம்ப பிடித்த ஒன்று. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை. நீங்களும் பார்த்து ரசியுங்கள்.

Post Comment

வெள்ளி, நவம்பர் 04, 2011

மங்கோலிய மன்னன் செங்கிஸ்கான் - ஒரு பார்வை

கிரேக்க மன்னன் Alexander, இந்தியாவுக்குப் படையெடுத்து போரஸ் மன்னனை வெற்றி கண்டபோது, அவரை Alexander பெருந்தன்மையோடு நடத்தியது நமக்கு தெரிந்ததே. சிறைப் பிடிப்பட்ட பிறகும் ஒரு மன்னருக்குரிய மரியாதையுடன் நடத்தப்பட்டார் போரஸ்.

Post Comment

வியாழன், நவம்பர் 03, 2011

1980's நடிகர்களின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்...

இந்த புகைப்படங்களின் தொகுப்பு இந்தப் பதிவுடன் நிறைவுபெறுகிறது. இந்த புகைப்படங்கள் அனைத்தும் திரு. 'ஸ்டில்ஸ்' ரவி அவர்கள் எடுத்தது. இந்த புகைப்படங்களில் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, தமிழ் நடிகர்கள் மோகன், சத்யராஜ், விஜயகாந்த், சரத்பாபு, சிவாஜி கணேசன், பிரபு, சிவகுமார், ராதாரவி, ஜெய்ஷங்கர், பிரதாப் போத்தன், ராமராஜன், மற்றும் ரஜினிகாந்த்

Post Comment

செவ்வாய், நவம்பர் 01, 2011

எனக்கு பிடித்த தெலுங்கு பாடல்கள் (விடியோவுடன்)...

இந்த பதிவு எழுத ஆரம்பிக்கும்போது ஒரு அதிர்ச்சி தரக்கூடிய செய்தி வந்தது. இசைஞானி இளையராஜாவின் மனைவி திருமதி. ஜீவா இளையராஜா அவர்கள் இரவு மாரடைப்பால் காலமானார் என்று. மெல்லிசை மன்னருக்குப் பிறகு அருமையான பாடல்களால் உலகத் தமிழர்கள் அனைவரும் பெருமிதப்பட்டுக் கொள்ளும் அளவுக்கு இசையமைத்த

Post Comment

திங்கள், அக்டோபர் 31, 2011

இசை ஞானியின் இளமை கால புகைப்படங்கள்...

'புது ராகம் படைத்ததாலே நானும் இறைவனே'. இந்த வரி யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ, கண்டிப்பாக இந்த வரிகள் உள்ள பாடலுக்கு இசையமைத்த இளையராஜாவுக்கு பொருந்தும். எனக்கு மிகவும் பிடித்த இசை ஞானியின் புகைப்படங்களை இங்கே தொகுத்து வெளியிட்டிருக்கிறேன். இந்த புகைப்படங்களில் இளையராஜா மட்டுமல்லாது இவரின்

Post Comment

சனி, அக்டோபர் 29, 2011

கிரேக்க 'சாடிஸ' மன்னன் கலிக்யுலா - ஒரு பார்வை

பண்டைய காலத்திலிருந்து இந்த நூற்றாண்டு வரை மிக மோசமான, அயோக்கியத்தனமான ஆட்சியாளர்களை மக்கள் அவ்வப்போது அரியணையில் அமர்த்திவிடுவது வரலாற்றின் சாபக்கேடு.

Post Comment

செவ்வாய், அக்டோபர் 25, 2011

அன்றைய இயக்குனர்களின் அரிய புகைப்படங்கள்...

சினிமாவில் நடிக்கும் நடிகனை நாம் பாராட்டுகிறோம், ரசிகர்களாகிறோம். ஏன்? 'அடுத்த சி.எம் நீ தான் தலைவா' என்று கூட சொல்கிறோம். ஆனால் அந்த நடிகனை இயக்கிய இயக்குனரை நம் மறந்து விடுகிறோம். ஒரு நடிகனிடமிருந்து எப்படி நடிப்பை வெளிக் கொணர வேண்டும் என்பது இயக்குனருக்கு மட்டுமே தெரிந்த சூட்சமம். இந்த புகைப்படப் பதிவில் இயக்குனர்கள்

Post Comment

ஞாயிறு, அக்டோபர் 23, 2011

எனக்கும், சென்னைக்குமான தொடர்பு...

இன்னும் இரண்டு நாட்களில் தீபாவளி. அனைவரும் புது துணி, பட்டாசு, ஏழாம் அறிவு படத்தின் முன்பதிவு டிக்கெட் என்று பிஸியாக இருப்பார்கள். கொஞ்ச நாளைக்கு முன்பு 'எங்கேயும் எப்போதும்' படத்தை பார்த்தேன். படத்தை விட, நான் பிறந்து வளர்ந்த சென்னையை பார்த்தது எனக்கு கொஞ்சம் சந்தோஷமாக இருந்தது.

Post Comment

சனி, அக்டோபர் 22, 2011

1980's நடிகைகளின் அரிய புகைப்படத் தொகுப்பு...

Silk Smitha Rare Pictures1980 களில் தமிழ் சினிமா ரொம்பவே செழிப்பாக இருந்தது. அருமையான நடிகர்கள், மிகச் சிறந்த இயக்குனர்கள் என்றிருந்த காலகட்டத்தில், அழகான மேலும் நடிக்கத் தெரிந்த நடிகைகளும் இருந்தார்கள். இன்றும் அன்றைய நடிகைகளின் முகங்கள் நம் மனதில் பசுமையோடு நினைவில் நிற்கிறது. அதனால் மீண்டும் திரு. 'ஸ்டில்ஸ்' ரவி அவர்கள்

Post Comment

ஞாயிறு, அக்டோபர் 16, 2011

கள்ளக்காதல் - இது காதலா? அல்லது காமமா?

சமீபத்தில் மகேஷ்குமார் என்பவர் தன் மனைவியை மூனாறு கூட்டிச் சென்று கொலை செய்துவிட்டு, பின்பு தானும் தன் சொந்த ஊருக்கு சென்று தற்கொலை செய்து கொண்டார். போலீசார் கைப்பற்றிய அவரது கடிதத்தில் 'தன் மனைவி பலரோடு 'தொடர்பு' வைத்திருந்ததால் கொன்றேன்' என்று எழுதியிருக்கிறார். இத்தனைக்கும் இறந்த இருவரும் காதல் மனம்

Post Comment

சனி, அக்டோபர் 15, 2011

கலைஞானி கமல்ஹாசன் & கேப்டன் விஜயகாந்தின் அரிய புகைப்படங்கள்


திரைப்பட போட்டோகிராபர் திரு. 'ஸ்டில்ஸ்' ரவி அவர்கள் எடுத்த புகைப்படங்கள் அனைத்தும் அற்புதம். அதனால் தான் இந்த புகைப்பட தொகுப்பை தொடர விரும்புகிறேன். இதில் 'ஸ்டில்ஸ்' ரவி எடுத்த படங்களைத் தவிர மற்ற இரண்டு, மூன்று போட்டோகளையும் இணைத்துள்ளேன். இந்த புகைப்படங்களில் கமல்ஹாசனுடன்

Post Comment

வெள்ளி, அக்டோபர் 14, 2011

ஆவிகளின் கோட்டை - அமானுஷ்யத் தொடர் பகுதி - 10

லண்டனில் 'லண்டன் டவர்' வளாகத்தில் அமைந்துள்ள பழங்காலக் கோட்டை எட்டாம் ஹென்றியின் ஆதிக்கத்தில் இருந்ததாக சரித்திரச் சான்றுகள் ஆதாரபூர்வமாக கூறுகின்றன.இந்தக் கோட்டைக்கு வருடந்தோறும் ஏராளமான டூரிஸ்டுகள், ஆராய்ச்சியாளர்கள் உலகெங்கிலுமிருந்து வருகிறார்கள். இந்த பழங்காலக் கோட்டையில்

Post Comment

வியாழன், அக்டோபர் 13, 2011

'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்தின் அரிய புகைப்படங்கள்...

இன்று காலை ஆனந்த விகடனை பார்த்தபோது எனக்கு ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது. தமிழ் திரைப்பட போட்டோக்ராபர் திரு. 'ஸ்டில்ஸ்' ரவி அவர்கள் தன் எடுத்த புகைப்படங்களை ஆனந்த விகடனில் பகிர்ந்து கொண்டார். ஒவ்வொன்றும் அருமை. குறிப்பாக தலைவர் ரஜினியின் புகைப்படங்கள் செம கலக்கல். இந்த தலைவரின் புகைப்படங்களை மட்டும்

Post Comment

திங்கள், அக்டோபர் 10, 2011

என் வீட்டு கொலு பொம்மைகள்...

இரண்டு தம்பதிகள் சத்யநாராயணா பூஜை செய்கிறார்கள். பக்கத்திலேயே பெண்கள் அம்மனிடம் மாங்கல்ய பூஜை செய்கிறார்கள். மேற்க்கூரையே இல்லாமல் ஒருவருக்கு திருமணம் நடக்கிறது. ராவணன் தனக்கு உட்கார இருக்கை தராததால் தன் வாலையே இருக்கையாக்கி அனுமார் அமர்ந்திருக்கிறார். சிங்கம், காண்டாமிருகம், யானை என அனைத்து மிருகங்களும் ஒற்றுமையாக காட்டில் உலாவுகின்றன.

Post Comment

புதன், அக்டோபர் 05, 2011

ஆந்தையாக மாறிய தேவதை - அமானுஷ்யத் தொடர் பகுதி - 9

ஆலன் கார்னர் (Alan Garner) - என்ற இங்கிலாந்தின் பிரபல எழுத்தாளர் ஒரு கதை எழுதினார்.

வானுலகத்திலிருக்கும் ஒரு தேவதை பூமியைப் பார்க்க ஆசைப்படுகிறாள். அவளை ஒரு நிபந்தனையோடு பூமிக்கு அனுப்புகிறார்கள். 'உலகத்தில் உள்ள எல்லாவற்றையும் பார்த்து ரசிக்கலாம். ஆனால் எந்த இளைஞனையாவது பார்த்து காதல் வயப்படக்கூடாது. அப்படி காதல்

Post Comment

ஞாயிறு, அக்டோபர் 02, 2011

'நடிகர் திலகம்' சிவாஜி கணேசன் - சில நினைவுகள்


இந்தப் பதிவு திடீரென்று தான் எனக்கு எழுதத் தோன்றியது. காரணம், அக்டோபர் 1 மறைந்த நடிகர் திலகம் 'செவாலியே' சிவாஜி கணேசனின் 83 வது பிறந்த நாள். சிவாஜியின் பிறந்த நாள் என்று சொல்வதை விட,'மறைந்த நடிப்பிற்கு' பிறந்த நாள் என்று தான் நான் சொல்வேன். இந்த பதிவு அன்றே எழுதியிருக்கவேண்டும். அன்று பார்த்து ப்ளாக்கரில் எதோ கோளாறு போல.

Post Comment

வெள்ளி, செப்டம்பர் 30, 2011

கதவு தட்டப்பட்டது - அமானுஷ்யத் தொடர் பகுதி - 8

லில்லி ஆன் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள்.

'டொக்... டொக்...'

கதவு தட்டும் சத்தம் கேட்டு கண் விழித்தாள். பெட்ரூம் லைட்டைப் போட்டாள். இரவு மணி 11.55.

Post Comment

புதன், செப்டம்பர் 28, 2011

கே.பாக்யராஜின் 'தாவணிக் கனவுகள்' - திரை விமர்சனம்

ஒரு படத்திற்கு கதை முக்கியமா? அல்லது திரைக்கதை முக்கியமா? என்று பார்த்தால் என்னைப் பொறுத்தவரை திரைக்கதை தான் முக்கியம் என்று சொல்வேன். காரணம் ஒரு படத்தின் கதையை, படம் பார்க்கும் பார்வையாளருக்கு மிக அழகாக புரியவைத்து திருப்திபடுத்துவது திரைக்கதை தான். தமிழ் சினிமாவில் ஒரு சில மோசமான கதைகள் கூட

Post Comment

புதன், செப்டம்பர் 21, 2011

லிப்டில் நடந்த பயங்கரம் - அமானுஷ்யத் தொடர் பகுதி - 7

கல்லூரிப் பருவத்தில், ரீடர்ஸ் டைஜஸ்ட் இதழில் 'உண்மை நிகழ்ச்சி', என்ற தலைப்பில் ஒரு ஆவி அனுபவத்தை நான் படித்தேன். அந்த வயதில் என் மனதில் பதிந்துவிட்ட பேய்க் கதை இது.அதன்பிறகு எவ்வளவோ புத்தகங்களைப் புரட்டிய போதும், அந்தக் குறிப்பிட்ட ஆவி பற்றிய தகவல் மட்டும் கிடைக்காதது சற்று ஏமாற்றமாகவே இருந்தது. பின்னர் ஒரு புத்தகக்

Post Comment

புதன், செப்டம்பர் 14, 2011

914 பக்தர்களை கொன்ற சாமியார் 'ஜிம் ஜோன்ஸ்' - ஒரு பார்வை

இந்த சீரியல் கில்லர்கள் பற்றிய பதிவெழுதி ரொம்ப நாளாகிவிட்டது. 'வாரம் ஒரு சீரியல் கில்லர்' என்று சொல்லிவிட்டு இப்போது மூன்று மாதம் கழித்து எழுத வந்திருக்கிறேன். ஆனால் இது சீரியல் கில்லர் பதிவல்ல.

Post Comment

வெள்ளி, செப்டம்பர் 09, 2011

எனக்கு வந்த 20 வகை SMS கவிதைகள்

தாய்
நீ தெருவில் கண்டவளை நேசிப்பதை விட,
உன்னை கருவில் கொண்டவளை நேசி.
அது தான் உண்மையான 'காதல்'.

Post Comment

திங்கள், செப்டம்பர் 05, 2011

தல, தளபதி வெறியர்களே - இந்த பதிவு உங்களுக்காக

தல அஜித் குமார் நடிப்பில் வெளிவந்த 'மங்காத்தா' திரைப்படம் திரையிட்ட இடங்களிலெல்லாம் வெற்றி நடைபோடுகிறது. ரொம்ப நாள் கழித்து அஜித்தை ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருப்பது தல ரசிகர்களை குஷி படுத்தி இருக்கிறது. இந்த படம் வெளிவந்து ஒரு வாரம் கூட ஆகியிருக்காது. அதற்குள் நம் பதிவுலகில் ஒரு யுத்தமே

Post Comment

திங்கள், ஆகஸ்ட் 29, 2011

தெலுங்கு நடிகர் 'Prince' மகேஷ் பாபு - ஒரு பார்வை

கடந்த முறை ரவி தேஜாவை பற்றி பதிவு வெளியிட்டிருந்த போது பலர் கருத்துரைகளில் பதிவை தொடர சொல்லியிருந்தார்கள். அதுமட்டுமல்ல, ஒரு அனானி, மகேஷ் பாபுவை பற்றி எழுத சொல்லியிருந்தார். நானும் அடுத்த பதிவில் மகேஷ் பாபுவை பற்றித்தான் எழுத வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். மகேஷ் பாபுவை பற்றி நம்மாட்களுக்கு

Post Comment

வியாழன், ஆகஸ்ட் 25, 2011

அந்தரத்தில் பறந்த பூக்கிண்ணம் - அமானுஷ்யத் தொடர் பகுதி - 6


கோவை மாவட்டம், மேற்கு மலைத் தொடர்ச்சியின் அடிவாரத்தில் அமைந்திருந்த ரெட்டிபட்டி கிராமத்தில் அந்தச் சாமியார் குறித்த பேச்சு கொஞ்சம் கொஞ்சமாகப் பரவ ஆரம்பித்தது.

சாமியார் யாரிடமும் எதையும் யாசிக்கவில்லை. உண்பதற்குப் பழங்கள் போன்று ஏதாவது கொடுத்தாலும் வாங்க மறுத்து விட்டார். யாரிடமும் ஒரு வார்த்தைக்கூடப் பேசவில்லை. எந்நேரமும் ஊர்க்கோடியில் உள்ள கோவிலின் மரத்தடியில் அமர்ந்து தியானம் செய்தபடி இருந்தார். சில பேர்

Post Comment

செவ்வாய், ஆகஸ்ட் 23, 2011

நம் சிங்கார சென்னைக்கு வயது, 371 வருஷம்...


இந்த பதிவை நான் நேற்றே வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால் என் கணினி சற்று மக்கர் பண்ணி விட்டது. அதனால் தான் இன்று வெளியிடுகிறேன். எனக்கு சென்னையை பற்றி சில, பல அறிய தகவல்களோடு பதிவு எழுத வேண்டும் என்று ரொம்ப நாளாக யோசித்துக் கொண்டிருந்தேன். கடந்த ஞாயிறன்று விகடன்.காமில் இந்த கட்டுரையை திரு சி.சரவணன்

Post Comment

ஞாயிறு, ஆகஸ்ட் 14, 2011

அகத்தியனின் 'கோகுலத்தில் சீதை' - திரைவிமர்சனம்


1980 களில் பல கதாநாயகர்கள் வெற்றிகரமாக தமிழ் சினிமாவில் உலா வந்து கொண்டிருந்தார்கள். ரஜினி, கமல் தவிர்த்து மோகன், ராமராஜன், சத்யராஜ், முரளி என்று பலர் நடித்து வந்தாலும், சில நடிகர்களே இன்று வரை தாக்குபிடித்து நடித்திருக்கிறார்கள். அதில் முக்கியமானவர், நடிகர் முத்துராமனின் மகனான 'நவரச நாயகன்' கார்த்திக். கார்த்திக் ஒரு

Post Comment

ஞாயிறு, ஆகஸ்ட் 07, 2011

தெலுங்கு நடிகர் ரவி தேஜா - ஒரு பார்வை


எனக்கு சிறு வயதிலிருந்தே பிற மொழிப் படங்களை பார்ப்பது மிகவும் பிடிக்கும். காரணம், எனக்கு தமிழ் மட்டுமல்லாது தெலுங்கும் சரளமாக பேச வரும். தெலுங்கு தவிர்த்து மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற படங்களில் எனக்கு சில படங்கள் ரொம்ப பிடிக்கும். மலையாளத்தில் மனிச்சித்ரத் தாழ் (தமிழில் சந்திரமுகி), கன்னடத்தில் 'உபேந்திரா', ஹிந்தியில்

Post Comment

வியாழன், ஆகஸ்ட் 04, 2011

ஹிட்லரின் 'ஜெர்மானிய' விசுவாசிகளும், துரோகிகளும் - ஒரு பார்வை

அடோல்ப் ஹிட்லர், இரண்டாம் உலகப்போரை தொடங்கி வைத்த ஜெர்மன் சான்ஸ்லர். இனக் கோட்பாட்டைப் பின்பற்றி ஜெர்மானியர் அல்லாதவர்களை, குறிப்பாக யூதர், ஸ்லாவியர் மற்றும் கம்யூனிஸ்ட்களை லட்சக் கணக்கில் கொலை செய்ய உத்தரவிட்டவர். நாஜிக் காட்சியை தொடங்கி 1933 -இல்

Post Comment

வெள்ளி, ஜூலை 22, 2011

காதருகே பெரும்மூச்சு! - அமானுஷ்ய தொடர் பகுதி - 5

பிரிட்டனில், லங்காஸ்டர் ஊரில் உள்ள ஜெயிலில் பல ஆண்டுகளுக்கு முன் தலைமை அதிகாரியாக இருந்த நீல் மௌன்சேய் விவரிக்கும் பேய் வேறு மாதிரியானது. கற்பனை சக்தி கொண்ட சற்று கலாட்டாவான ஆவி அது.

மௌன்சேய் விவரிக்கிறார்:

Post Comment

வியாழன், ஜூலை 21, 2011

நடிகர் ரகுவரன் - என் மறக்கமுடியாத வில்லன்

எனக்கு அப்போது பதினோரு வயது. என் பெற்றோர்கள் என்னை தலைவர் நடித்த 'பாட்ஷா' படத்தை பார்ப்பதற்கு சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அபிராமி திரையரங்கிற்கு அழைத்து சென்றார்கள். படத்திற்கு செம கூட்டம். படத்தில் ரஜினியை 'ஆ'வென்று வாயை பிளந்து கொண்டு ரசித்தேன். இண்டர்வல்லுக்கு பிறகு வரும் 'பாட்ஷா' ரஜினிக்கான காட்சிகள்

Post Comment

திங்கள், ஜூன் 27, 2011

அம்மா, உன் மடியில் - அமானுஷ்ய தொடர் பகுதி - 4

தபாலில் வந்த அந்தக் கடிதத்தை, பிரித்துப் படித்தபோது சம்பந்தமில்லாத ஒருவிதமான பயம், அந்தத் தாயின் மனதில் நிழலாகப் படிந்தது. ஆனால் மகன் கப்பல்படை பயிற்சி நிலையத்திலிருந்து மகிழ்ச்சியுடன் 'நலம் விசாரித்துத்தான்' கடிதம் எழுதியிருந்தான்.

Post Comment

புதன், ஜூன் 22, 2011

'அவன் இவன்' திரைப்படம் - இது உலக சினிமா அல்ல...

நான் பதிவெழுத ஆரம்பித்ததிலிருந்தே புதிதாக ரிலீஸ் ஆகும் படங்களை விமர்சித்ததில்லை. காரணம், புதிய படங்களை விமர்சிக்க பல பதிவர்கள் இருக்கிறார்கள். ஆனால் பழைய படங்களை விமர்சிப்பதற்கு ஆட்கள் மிகவும் கம்மி. 'எவ்வளவோ புதிய, நல்ல படங்கள் வெளிவந்தபோது நீ எந்த படத்தையும் விமர்சிக்கவில்லையே. இந்த படத்திற்கு மட்டும் ஏன்?

Post Comment

ஞாயிறு, ஜூன் 19, 2011

பயப்பட்டால் தான் ஆபத்து - அமானுஷ்ய தொடர் பகுதி - 3

'This World and That' என்ற புத்தகத்தை எழுதிய Febeebi Payan என்கிற பெண்மணி, ஆவிகள் பற்றி நிறைய ஆராய்ச்சிகள் செய்தவர். டிஸ்கவரி சேனலில், எங்கோ உள்ள ஓர் உயிரினத்தைப் பார்க்க காடு மலையெல்லாம் தாண்டுகிற ஆராய்ச்சியாளர் மாதிரி இவரும் உலகில் எங்கு ஆவி நடமாட்டம் இருப்பதாகக் கேள்விப்பட்டாலும், உடனே அங்கே கிளம்பிப் போய்விடுகிற டைப்!

Post Comment

புதன், ஜூன் 15, 2011

ரெயின்கோட் - அமானுஷ்ய தொடர் பகுதி - 2

சக்திவேல், ராமநாதபுரம் டவுனில் தன் வேலைகளை முடித்தபோது இரவு மணி 12.00. அகால வேளையைப் பற்றி சக்திவேல் கவலைப்படவில்லை. அவிடம் Suzuki பைக் இருந்ததால், தன்னுடைய கிராமத்துக்குத் திரும்பிச் செல்வதில் அவனுக்கு தயக்கமோ தடையோ இல்லை.

Post Comment

செவ்வாய், ஜூன் 14, 2011

உகாண்டாவில் திருப்பதி வெங்கடாசலபதி கோயில் - சுவாமி தரிசனம்பதிவு போட ஆரம்பித்ததிலிருந்து இன்றுவரைக்கும் சீரியல் கொலைகாரர்கள், Necrophilia மற்றும் புதுசாக ஆவிகள் தொடர் என்று ஒரே 'ரத்தத்தின் ரத்தமாக' பதிவெழுதிக் கொண்டிருக்கிறேன். ஒரே ஆறுதல் என்னவென்றால் பழைய படங்களின் திரை விமர்சனங்கள் தான். எனக்கே என் ப்ளோக்கை திறக்க கொஞ்சம் பயமாகவே இருக்கிறது. சரி என்ன பண்ணலாம்? என்று

Post Comment

திங்கள், ஜூன் 13, 2011

உகாண்டாவின் சர்வாதிகாரி இடி அமீன் - ஒரு பார்வைகிறுக்குத்தனமான கொடுங்கோலர்கள் அரிதாகத்தான் ஆட்சிக் கட்டிலில் அமர்கிறார்கள் என்று மக்கள் தப்புக்கணக்கு போட்டால், திடீர் திடிரென்று 'கலிக்யுலா அனுபவங்கள்' நிகழ்ந்து, நாட்டில் வாழும் அத்தனை மக்களும் அதில் சிக்கித் தவிக்க நேரிடும். உகாண்டா நாட்டு மக்கள் அப்படித்தான் அலட்சியமாக இருந்துவிட்டு, பரிதாபமான முறையில் பாடம் கற்றுக்கொண்டார்கள். அந்த பாடத்தின் பெயர் 'இடி அமீன் தாதா'.

Post Comment

செவ்வாய், ஜூன் 07, 2011

கே.பாக்யராஜின் 'முந்தானை முடிச்சு' - திரை விமர்சனம்

1980 களின் காலகட்டங்களில் எவ்வளவோ தமிழ் திரைப்படங்கள் வெளிவந்திருக்கிறது. அப்போது வந்த பல திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது என்பதை அனைவரும் அறிந்திருப்பார்கள். அதே போல ஒவ்வொரு படத்துக்கும், ஒவ்வொரு Variety இருக்கும். காதல், குடும்ப செண்டிமெண்ட், பக்கா கமர்சியல் என்று அன்றைய இயக்குனர்கள் பின்னி

Post Comment

வெள்ளி, ஜூன் 03, 2011

ஒரு சிம்பிளான ஆவி - அமானுஷ்ய தொடர் பகுதி - 1

எனக்கு 'பேய்' என்றாலே கொஞ்சமல்ல, நிறையவே பயம். ஆனால் பேய் கதைகளை பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வமோ ரொம்ப அதிகம். குறிப்பாக 'சினிமா பேய்களை' அறவே ஒதுக்கி விடுவேன். காரணம், அதில் பேய்களை சற்று மிகைபடுத்தி காட்டியிருப்பார்கள். எனக்கு பேய்களை பற்றிய நிஜக்கதைகளை கேட்பதும், படிப்பதும் ரொம்ப இஷ்டம். ஏற்கனவே நான்

Post Comment