கற்க கற்க கள்ளும் கற்க...

ஞாயிறு, அக்டோபர் 16, 2011

கள்ளக்காதல் - இது காதலா? அல்லது காமமா?

சமீபத்தில் மகேஷ்குமார் என்பவர் தன் மனைவியை மூனாறு கூட்டிச் சென்று கொலை செய்துவிட்டு, பின்பு தானும் தன் சொந்த ஊருக்கு சென்று தற்கொலை செய்து கொண்டார். போலீசார் கைப்பற்றிய அவரது கடிதத்தில் 'தன் மனைவி பலரோடு 'தொடர்பு' வைத்திருந்ததால் கொன்றேன்' என்று எழுதியிருக்கிறார். இத்தனைக்கும் இறந்த இருவரும் காதல் மனம்
புரிந்தவர்கள். இந்த செய்தி வெறும் சாம்பிள் தான். தினமும் இது போன்ற 'கள்ளக்காதல்' செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டே தான் இருக்கின்றன.

'கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி, கள்ளக்காதலியுடன் சுற்றிய கணவனின் ஆணுறுப்பை வெட்டிய மனைவி' என்று தினமும் நாளிதழ்களில் நாம் இது போன்ற செய்திகளை படித்துக் கொண்டுதானிருக்கிறோம். பொதுவாகவே இந்தியாவிற்கு இன்றளவும் மற்ற நாடுகளிடத்தில் ஒரு நல்ல பெயர் இருக்கிறதென்றால், அது நம் கலாச்சாரத்திற்க்காகத் தான். இன்னும் சில ஆண்டுகளில் அந்த பெயரும் போய் விடுமோ என்று கவலையாக இருக்கிறது.

இந்த முறையற்ற உறவு குறித்த விஷயங்கள் சமீபகாலமாகத் தான் அதிகமாக நடக்கிறது. இந்த தவறான உறவின் நிகழ்வு எப்படி நடக்கிறது? உண்மையில் இதற்க்கு பல காரணங்கள் உண்டு. அதில் சிலவற்றை விரிவாக பார்ப்போம்.

தொழில் நுட்ப வசதிகள் என்று பார்த்தோமேயானால், அவை Facebook, Orkut, Sex Websites, Mobiles & Media. முதலில் செல்போன். சில வருடங்களுக்கு முன்பிருந்த பெண்கள் பூமியை பார்த்தவாறு தலை கவிழ்ந்து நடப்பார்கள். காரணம், பணிவு. ஆனால் இன்றைய பெண்கள் தலை சாய்ந்து நடக்கிறார்கள். காரணம், செல்போன். எனக்கு இந்த செல்போன் பேசிக்கொண்டு திரியும் பெண்களை பார்த்தால் பற்றிகொண்டு வரும். அப்படி என்ன பேசுவார்கள் இவர்கள்? ரயில்வே கிராசிங்கில் அதிகப்படியாக அடிபட்டு இறப்பது இந்த பெண்கள் தான். அதற்க்குக் காரணம் இந்த செல்போன். பிரச்சனையே இந்த செல்போனில் தான் ஆரம்பிக்கிறது.

அடுத்தது இணையதளங்கள். இப்போதைய பெரிய பிரச்சனையே இந்த இணையத்தளம் தான். இந்த இணையதளங்கள் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கிறதோ, அவ்வளவுக்கு மோசமானதாகவும் இருக்கிறது. ஆனால் Facebook, Orkut போன்ற இணையதளங்களில் இருக்கும் சில கயவர்களால் தான் இந்த பிரச்சனையே வருகிறது. குறிப்பாக குடும்பப் பெண்களை இவர்கள் குறிவைத்து வருகிறார்கள். ஆரம்பத்தில் நல்லவராக அறிமுகமாகி, பின்பு அவர்களுக்கு இருக்கும் குடும்பப் பிரச்சனைகளை அந்தப் பெண்களின் மூலமாகவே தெரிந்து கொண்டு, 'ஆறுதல் சொல்கிறேன்' என்று தங்கள் வலையில் விழவைக்கிறார்கள்.

இந்த கள்ளக்காதல் பிரச்சனைக்கு டிவியும், சினிமாவும் பெரும் பங்கு வகிக்கவில்லை என்றாலும், அவர்களுக்கும் ஒரு பங்கு இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. பள்ளி மாணவர்கள் டிவி, சினிமாக்களில் வரும் ஆபாச காட்சிகளை பார்த்து தவறான செயல்களில் ஈடுபடுகிறார்கள். கொடுமை என்னவென்றால் சில பெண்களுடைய கள்ளக் காதலர்களின் வயது என்ன தெரியுமா? 18 இல் இருந்து 25 வயது தான் இருக்கும். என்ன சொல்வது?
மாறிவரும் குடும்ப சூழ்நிலை ஒரு காரணமா என்று கேட்டால் 'ஆம்' என்று பலமாக தலையாட்ட வேண்டும். காரணம் இன்றைய உலகில் பணத்திற்கு இருக்கும் மதிப்பை தவிர வேறு எதற்கும் இல்லை. அதை சம்பாதிக்க மனிதர்கள் நேரம் காலம் பார்க்காமல் உழைக்க வேண்டிவருகிறது. பல இடங்களில் பெண்கள் கட்டுப்பாடோடு இருந்தாலும் சில இடங்களில் பெண்களை தவறு செய்ய வைக்கிறது அவர்களின் உணர்வுகள். இதில் நாம் யாரை குறை சொல்வது என்றே தெரியவில்லை. கணவன் ஓடுவது பணம் சம்பாதிப்பதற்கு, மனைவி தேடுவது தனக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய அரவணைப்பு. இதில் யார் மீது தவறு?

இது கூட பரவாயில்லை. சில கணவன்மார்கள் மனைவியை ரொம்ப சுதந்திரமாக விட்டு விடுகிறார்கள். அதுவும் ஒரு வகையில் பெண்களுக்கு தவறு செய்ய வசதியாக இருந்து விடுகிறது. இது மிகப் பெரிய தவறு. பெண்கள் குழந்தையை போன்றவர்கள். அவர்களுக்கு எது நல்லது எது கெட்டது என்பதை சரியாக தெரிந்திருக்க மாட்டார்கள். அவர்கள் என்ன செய்கிறார்கள், எங்கு போகிறார்கள், யாருடன் பேசுகிறார்கள் என்பதில் ஒரு கண் வைத்துக் கொள்ளவேண்டும். இது சந்தேகப்படுவதல்ல, நம் துணையை கண்காணிப்பது.

உளவியல்ரீதியாக பார்த்தால் பெண்களுக்கும் ஆண்களுக்கும் இரண்டுவிதமான மனநிலை இருக்கும். ஆண்களுக்கு தவறு செய்வது என்பது, அடிக்கடி லைசன்ஸ் இல்லாமல் வண்டி ஒட்டி போலீசிடம் அபராதம் கட்டுவது போல. ஆனால் பெண்களுக்கு அது கொலை செய்வது போல. அதாவது 'எத்தனை தடவை கொலை செய்தாலும் தண்டனை ஒன்று தான்' என்பதை உணர்ந்து தவறு செய்கிறார்கள். அதற்க்கு காரணம், அவர்கள் உணர்ச்சிகளுக்கு அடிபணிபவர்கள். இவர்களால் அதை கட்டுப்படுத்தவோ, அல்லது அதை உதாசினப்படுத்தவோ தெரியாது. ரொம்ப சிம்பிளாக சொன்னால், ஆண்கள் கோபப்பட்டு சத்தம் போட்டால் பெண்கள் பயந்து அழுகிறார்கள் அல்லவா? அது உணர்ச்சி மேலிட்டால் தான்.இதற்க்கு என்ன தான் தீர்வு?

'பணம், பணம்' என்று அலையும் ஆண்கள் கொஞ்சம் குடும்பத்தையும் கவனிக்க வேண்டும், எவ்வளவு தான் நாம் சம்பாதித்தாலும் அதை நம் குடும்பத்திற்க்காகத்தான் செலவிடப்போகிறோம். முதலில் அந்த குடும்ப உறுப்பினர்கள் நிறைவாக இருக்கிறார்களா என்று பார்த்துக்கொள்ளவும். எந்த ஒரு மனைவியும் 'தன் கணவனைத்தான் தன் உலகம்' என்று நினைப்பாள். அந்த உலகமே இல்லையெண்டால் அவர்கள் எங்கு போவார்கள்? புரிந்து கொண்டு செயல்படுங்கள்.

பெண் என்பவள் குடும்பத்தின் தெய்வம் போன்றவள். பெண் ஆத்திரப்பட்டால் குடும்பம் சுடுகாடாகும், அதே சமயம் அவள் சந்தோஷமாக இருந்தால் குடும்பம் கோவிலாகும். புரிந்து கொள்ளுங்கள் பெண்களே. உங்களுக்கு எப்படி 'கணவனும் குழந்தையும் தான் உலகம்' என்று நினைக்கிறீர்களோ அது போலத் தான் அவர்களும். உங்களுக்கு உடல்ரீதியாக பிரச்சனையா? மருத்துவரை கலந்தாலோசியுங்கள். மனரீதியாக பிரச்சனையா? கணவனோடு வெளிப்படியாக பேசி ஒரு நல்ல தீர்வு காணுங்கள். மரணத்தை தவிர தீர்க்க முடியாத ஒரு பிரச்சனை இந்த உலகத்திலே இல்லை என்பதே உண்மை.

விடலை பருவ ஆண்கள் காமுறுவது இயற்கை தான். அதை மறுப்பதற்கில்லை.ஏனென்றால் அது இயற்கை. ஆனால் எல்லாவற்றிக்கும் ஒரு நேரம், காலம் இருக்கிறது. நன்றாக படிக்கிற வயதில் படியுங்கள், உங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்துங்கள். அது தான் நீங்கள் செய்ய வேண்டியது. உங்களை பெற்றெடுத்தவர்கள் உங்களை படிக்க வைத்தார்கள், உங்களுக்கு உடுக்க உடை, இருக்க நல்ல வீடு, உண்ண நல்ல உணவு வழங்கிய உங்கள் பெற்றோர் உங்களுக்கு கண்டிப்பாக திருமணமும் செய்து வைப்பார்கள். அதுவரை பொருத்திருக்கலாமே?
(தயவுசெய்து படித்ததோடு மட்டுமல்லாமல் வாக்களித்து, பின்னூட்டமிட்டு என்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தவும்).


என்றும் அன்புடன்

Post Comment

13 comments:

அருள் சொன்னது…

தியாகத்தின் வேரைத்தேடி: தென் ஆப்பிரிக்காவிலிருந்து மயிலாடுதுறைக்கு ஒரு பயணம்

http://arulgreen.blogspot.com/2011/10/blog-post_19.html

Mohamed Faaique சொன்னது…

சமூகத்தின் கருப்பு பக்கத்தை பற்றி அலசி இருக்கிறீர்கள்.

உரிய வயசில் கல்யாணம் ஆகாமையால் நடக்கும் பாவங்கள்தான் இதில் அதிகம் என்று நினைக்கிறேன்..

சினிமாவின் அதிகமாகவே இதில் இருக்கிறது,ஆனால் இதை சொன்னால் நிறைய பேர் அடிக்க வந்துவிடுவார்கள்

Philosophy Prabhakaran சொன்னது…

வேலு பிரபாகரனின் காதல் கதை படத்தில் இடம்பெற்ற வசனம்: காதலில் நல்லக்காதல் கள்ளக்காதல் ஏது...? எல்லாமே காமம்தான்...

Dr. Butti Paul சொன்னது…

ஒரு முக்கியமான விடயத்தையே கையில் எடுத்திருக்கிறீர்கள், ஒரு ஆணின் பார்வையில் அலசப்பட்டுள்ளது, பெண்களின் பார்வை வேறாக இருக்கலாம். வாழ்த்துக்கள் பதிவிற்கு.

G.BALAN FILM PRO, சொன்னது…

அருமை‌யா‌ன கட்‌டுரை‌. தங்‌களை‌ முழுமை‌யா‌க உணரா‌மல்‌, ஆசை‌க்‌கு அடி‌மை‌யா‌கி‌ இரு பக்‌கமும்‌ வே‌தனை‌களை‌யு‌ம்‌, வலி‌யை‌யு‌ம்‌, கோ‌பத்‌தை‌யு‌ம, வன்‌மத்‌தை‌யு‌ம்‌ உருவா‌க்‌கும்‌ சம்‌பவங்‌களே‌, இந்‌தக்‌ கள்‌ளகா‌தல்‌. இதற்‌கு மனை‌வி‌கள்‌ மட்‌டுமல்‌ல கணவன்‌களும்‌ கா‌ரணம்‌hக இருக்‌கி‌றா‌ர்‌கள்‌. அதற்‌கு அன்‌பு‌ ஒன்றே‌‌ மருந்‌து‌.
அன்‌பு‌ வலி‌மை‌யா‌னது. அன்‌பு‌ நி‌ரந்‌தரமா‌னது. அன்‌பா‌ல்‌ எதை‌யு‌ம்‌ சா‌தி‌க்‌க முடி‌யு‌ம்‌. அன்‌பு‌க்‌கு நி‌கர்‌ எதுவு‌ம்‌ இல்‌லை‌. அன்‌பு‌ உண்‌மை‌யா‌னது.
அன்‌பு‌டன்‌ பா‌லு மலர்‌வண்‌ணன்‌

அப்பு சொன்னது…

பிரசாத்,
நீண்ட நாட்களாக உங்கள் பக்கம் வர வேண்டும் என்று நினைத்து - இப்போதுதான் சாத்தியப் பட்டது. நல்ல பதிவு... உங்கள் பழைய பதிவுகளையும் படிக்க வேண்டும்.

shakthi சொன்னது…

நல்ல சமூக பொறுப்புணர்வு!

தவறு செய்பவர்களுக்கு ஒரு சாட்டையடி!

வாழ்த்துக்கள்!!

மாங்கனி நகர செல்லக் குழந்தை சொன்னது…

அருமையாக உள்ளது...வாழ்த்துகள்.........

Arun Ambie சொன்னது…

படத்தின் பெயர் நினைவில்லை. சத்யராஜ் ஒரு வசனம் சொல்வார். சந்தோசமாவும் இருந்துக்க... சாக்கிரதையாவும் இருந்துக்க என்று. அது போல சுதந்திரமாவும் இருக்கோணும் பத்திரமாவும்
இருக்கோணும்...
கொஞ்சம் இதையும் பாருங்க...
http://ch-arunprabu.blogspot.com/2011/10/blog-post_20.html

பெயரில்லா சொன்னது…

well analysed blog article.. hats off..

Ganesh சொன்னது…

good post.needed post....

cyberthiru சொன்னது…

See ippo Thaan call girls mathiri call boys irukanga. First We must cut those guys Pe___.
Also those who calls them (girls) must be sealed.

திருமயிலை எங்க ஊரு ... சொன்னது…

மிக நல்ல பதிவு.. இன்றைய சமுதாயத்துக்கு தேவையான பதிவு...

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

கருத்துரையிடுக