புதுப்பட விமர்சனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதுப்பட விமர்சனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், ஜனவரி 08, 2019

2018 தமிழ் டாப் 10 திரைப்படங்கள்...

இனிய 2019 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். பதிவு எழுதி பல மாதங்கள் ஆகிறது. சோம்பலும், வேலையும் சேர்ந்து என்னை எழுத விடாமல் செய்து விட்டன. இந்த பதிவு கூட ஜனவரி ஒன்றாம் தேதி வெளியிட வேண்டியது. வழக்கம் போல தள்ளி வைத்து இப்போது பதிவேற்றுகிறேன். இந்த வருடம் முதல் தொடர்ந்து எழுதுவேன் என்று நம்புகிறேன். பார்ப்போம். சரி, இந்த ஆண்டில் பல படங்கள் வெளியாகின. 'தல' அஜித்தை தவிர பெரிய நடிகர்களின் படங்கள் குறைந்த பட்சம் ஒன்றாவது வெளிவந்திருந்தது மகிழ்ச்சி. ஆனால், ஓப்பனிங் வசூல் நிலவரங்கள் தவிர்த்து விமர்சனரீதியாக பெயர் பெற்ற படங்கள் எதுவுமே இல்லை என்பதே வருத்தம் கலந்த உண்மை. அதே சமயம் சிறிய பட்ஜெட்டில், கதையை மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட சில படங்கள் விமர்சனரீதியாகவும், வசூல்ரீதியாகவும் வெற்றிபெற்றிருந்தன. அதில் எனக்கு பிடித்த 10 படங்களை பட்டியலிடுகிறேன்.

மேற்குத்தொடர்ச்சி மலை:
இந்த திரைப்படத்தை பார்க்கும்போது என் மனதிற்குள் ஒலித்த குரல், 'இப்படி ஒரு வாழ்க்கை நமக்கு வாய்க்கவில்லையே, எவ்வளவு பெரிய யோகக்காரன் நான், பாவம் அவர்கள்'. கடவுள் சத்தியமாக எனக்கு அப்படித்தான் தோன்றியது. மலையும், மலை சார்ந்த மழையும் என்பது அவ்வளவு சாதாரணமானது அல்ல. ஒரு குறிப்பிட்ட காட்சி, அந்த ஏலக்காய் மூட்டை

திங்கள், ஜூலை 13, 2015

எஸ்.எஸ். ராஜமௌலியின் 'பாகுபலி' - திரை விமர்சனம்

உண்மையில் சரித்திரக் கால படங்களை எடுப்பதென்பது ஒன்றும் சாதாரண காரியம் அல்ல. படத்திற்கான மெகா பட்ஜெட், நடிகர், நடிகையரின் வருடக்கணக்கில் கால்ஷீட், நேர்த்தியான தொழில்நுட்பம் என்று ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கின்றன. இதை எல்லாவற்றையும் விட முக்கியமானது, தணிக்கை குழுவினர். மிருக வதை, மனித வதை என்று அவர்களையும் தாண்டி இயக்குனர் நினைத்தபடி வரும் படம் தான், ரசிகனின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும். அப்படிப்பட்ட ஒரு படம் தான் இந்த 'பாகுபலி'.

ஞாயிறு, ஏப்ரல் 19, 2015

காஞ்சனா 2 - திரை விமர்சனம்...

2007 இல் 'முனி' வெளி வந்திருந்தபோது கண்டிப்பாக அதன் தொடர்ச்சியாக, தொடர்ந்து நாம் எடுக்க வேண்டிவரும் என்று ராகவா லாரன்ஸ் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார். வெறும் ஏழு வருடத்திற்குள் 3 பாகங்கள். அதுவும் 2011 அன்று வெளிவந்த 'காஞ்சனா' அதிரி புதிரி ஹிட். அந்த படத்தின் எதிர்ப்பார்ப்போடு வெளிவந்திருக்கும் படம் தான் இந்த 'காஞ்சனா 2'. முந்தைய 'காஞ்சனா' போலவே இந்த படமும் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்பதை தொடர்ந்து பார்க்கலாம்.

செவ்வாய், டிசம்பர் 02, 2014

காவியத் தலைவன் & ஆ - 2 in 1 திரை விமர்சனம்

இந்த வாரம் தொடர்ச்சியாக நிறைய படங்கள் வெளிவந்தன. அதில் முக்கியமான இரண்டு படங்களை விமர்சிக்கப் போகிறேன். இன்னும் 10 நாட்களில் 'லிங்கா' வந்துவிடும். அதிலிருந்து தொடர்ச்சியாக முன்னணி நடிகர்களின் படங்களை தியேட்டர்களை ஆக்கிரமித்துவிடும். எனக்குத் தெரிந்து அடுத்த ஆண்டு பிப்ரவரி வரைக்கும் சின்ன ஹீரோக்களுக்கும், சிறு முதலீட்டு படங்களும் வெளிவருவது கடினம்.

செவ்வாய், செப்டம்பர் 30, 2014

மெட்ராஸ் (2014) - திரை விமர்சனம்

ஒரு அறிமுக  இயக்குனருக்கு முதல் படத்தை விட அடுத்த படத்துக்குதான் கூடுதல் எதிர்பார்ப்பு இருக்கும். காரணம், முதல் படத்தின் அறிமுக வெற்றியை விட, அடுத்த படத்துடைய வெற்றியை தான் முழுவெற்றியாக திரையுலகில் ஏற்றுக் கொள்ள முடியும். அதே சமயம் பல அறிமுக இயக்குனர்கள் பெரிதாக சறுக்குவது, 'Over Expectation' என்ற விஷயத்தில் இருந்து தான். முதல் படத்தை பெரிதாக கொடுத்துவிட்டு

திங்கள், ஆகஸ்ட் 04, 2014

ஜிகர்தண்டா - திரை விமர்சனம்...

 மதுரையை பின்னணியாகக் கொண்டு எடுக்கப்பட்ட எத்தனையோ ரவுடியிசம் சம்பந்தப்பட்ட படங்களை நாம் நிறையவே பார்த்திருக்கிறோம். இது போன்ற கதைகளத்திற்கு This or That என்ற வகையில் இரண்டு விஷயங்கள் தேவை. ஒன்று, மாஸ் ஹீரோ. படம் ஓடவில்லையென்றாலும் ஹீரோவின் இமேஜை வைத்து ஒப்பேற்றி கல்லா கட்டி விடலாம். இன்னொன்று, திரைக்கதை. இந்த Screenplay Treat மட்டும் சரியாக அமைந்துவிட்டால், யார் நடித்திருந்தாலும் படம் சூப்பர் ஹிட் தான். 'பீட்சா' என்று வெற்றிப்படத்திற்கு பிறகு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இந்த Gangster படம் எப்படி இருக்கிறது என்பதை பின் வரும் விமர்சனத்தில் பாப்போம்.

வியாழன், ஏப்ரல் 17, 2014

மனதை கவர்ந்த சமிபத்திய 5 படங்கள்...

இந்த வருடம் தொடங்கியதிலிருந்தே பல தமிழ் திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. அதில் பெரிய ஹீரோ, பெரிய இயக்குனர் என்று இல்லாமல் புதுமுக இயக்குனர்கள் பலர் இந்த வருட ஆரம்பத்திலிருந்தே நல்ல படங்களை கொடுத்திருக்கிறார்கள். ஆனால் இந்த வருடம் நான் பெரிதாக எதிர்பார்த்த சில படங்கள், என்னை கடுப்பெற்றியதேன்னவோ உண்மை. அதே சமயம், பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் நான் பார்த்த சில படங்கள், என்னை வெகுவாக கவர்ந்ததும் உண்மை. அந்த படங்களை தனித்தனியாக பதிவெழுதலாம் என்று ஆசை தான். ஆனால் நேரமின்மை காரணமாக 5 படங்களையும் இந்த ஒரே பதிவில் எழுதுகிறேன்.

கோலி சோடா:

ஞாயிறு, ஜனவரி 12, 2014

தலயின் 'வீரம்' - திரை விமர்சனம்...

தலயின் 'வீரம்' - திரை விமர்சனம் 1
 வீரம் படத்தை பற்றி பலர் பலவிதமாக பதிவெழுதி விட்டார்கள். So, புதிதாக எழுதுவதற்கு என்னிடம் ஒன்றுமில்லையென்றாலும், படத்தில் ரசித்தவற்றை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். 'கிராமத்து கெட்டப்பில் அஜித்தா? அஜித்தை வைத்து மாஸ் கமர்ஷியல் படமா? முடியுமா?' என்று பலர் யோசித்த கேள்விகளுக்கு சத்தமே இல்லாமல் படம் எடுத்து, பெரிய

செவ்வாய், டிசம்பர் 31, 2013

எனக்கு பிடித்த டாப் 20 தமிழ் திரைப்படங்கள் 2013 தொடர்ச்சி...

கடந்த பதிவில் இந்தாண்டு ஹிட்டான 10 படங்களை பார்த்தோம். இந்த பதிவில் மீதம் இருக்கும் 10 படங்களை பார்க்கலாம்.

 விஸ்வரூபம்:
எனக்கு பிடித்த டாப் 20 தமிழ் திரைப்படங்கள் 2013 தொடர்ச்சி 1
 நடிகர் கமல்ஹாசனின் இயக்கத்தில், தயாரிப்பில் மற்றும் நடிப்பில் வெளிவந்த படம். முஸ்லிம்களின் போராட்டம், தமிழக அரசு தடை என்று படம் கோர்ட் வரைக்கும் போய் வெளிவந்தது. படத்திற்கு இருந்த எதிர்ப்புகளே, ரசிகனின் எதிர்பார்ப்பை கிளப்பியபடியால், படத்திற்கு ஒப்பனிங் பிரம்மாண்டமாக அமைந்தது. படத்தின் Making, காட்சியமைப்பு, Locations என்று படம் வேறு லெவலில் இருந்தது. படத்தை பற்றி ஒரே வார்த்தையில் சொன்னால், 'அபாரம்'. இப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு வெளிவரும். சீக்கிரம் கமல் சார், 'Iam Waiting'.

எனக்கு பிடித்த டாப் 20 தமிழ் திரைப்படங்கள் 2013...

இந்த ஆண்டு ஆரம்பத்திலிருந்து இன்று வரை பல படங்கள் தமிழில் வெளியாகின. அதில் சில படங்கள் சூப்பர் ஹிட், சில படங்கள் சுமார். நாம் பார்க்கப்போவது இந்த இரண்டு வகை படங்களை தான். அதற்க்கு முன்பு அனைவருக்கும் Advance புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். வரும் 2014 நம் அனைவருக்கும் சிறந்த ஆண்டாக இருக்கவேண்டுமென இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

 சூது கவ்வும்:
எனக்கு பிடித்த டாப் 20 தமிழ் திரைப்படங்கள் 2013 1
 'Black Comedy' படம். விஜய் சேதுபதி, சஞ்சிதா ரெட்டி, M. S. பாஸ்கர் மற்றும் பலர் நடித்து ஹிட்டடித்த படம். இன்னும் சொல்லப்போனால், இந்த வருடத்தில் வெளிவந்த பல காமெடி படங்களுக்கு இதுவே முன்னோடி. 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்துக்கு பிறகு விஜய் சேதுபதிக்கு ஒரு நல்ல 'Bench Mark' இந்த 'சூது கவ்வும்'.

செவ்வாய், நவம்பர் 13, 2012

விஜயின் 'துப்பாக்கி' - திரை விமர்சனம்

ilaya Thalapathy Vijay's Thuppakki Tamil Movie Review 1
 அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். இந்த வருடம் வெளிவந்த பல டாப் ஹீரோக்களின் படங்களான பில்லா 2, மாற்றான், தாண்டவம் போன்ற பல படங்கள் தோல்வியடைந்திருந்தது. இந்த ஆண்டின் முதல் மாதத்தில் வெளிவந்த விஜய் படமான 'நண்பன்' மட்டும்

திங்கள், ஜூலை 23, 2012

பில்லா - II தோல்விப் படமா? - ஒரு பார்வை

Ajith Kumar's Billa 2 Tamil Movie Review 1
 இந்த பதிவு, கடந்த வாரமே எழுத வேண்டியது. வேலையில் கொஞ்சம் பிஸியாக இருந்ததால் எழுத முடியவில்லை. கடந்த வாரம் தான் நானும், என் மனைவியும் பில்லா 2 படத்தை பார்த்தோம். படம் வெளிவந்து ஒரு வாரமே ஆகியிருந்தாலும், அதற்குள் 'படம் செம மொக்கை, படத்தை வாங்கி வெளியிட்ட விநியோகிஸ்தருக்கு படம்

திங்கள், ஜூலை 09, 2012

Eega @ நான் ஈ - திரை விமர்சனம்

Eega @ Naan Ee Tamil Movie Review 1
 'ஈகா' படம் எப்போது வரும் என்று எதிர்பார்த்த ரசிகர்களில் நானும் ஒருவன். உகாண்டாவில் இந்த படத்தின் ஸ்பெஷல் ஷோவை ஏற்பாடு செய்திருந்தார்கள், இங்குள்ள திருப்பதி வெங்கடாசலபதி கோயில் டிரஸ்ட் உறுப்பினர்கள். இதற்க்கு முன்பே பல தெலுங்கு படங்கள் இவர்களால் இங்கே வெளியிடப்பட்டிருக்கின்றன.

செவ்வாய், ஜூன் 05, 2012

'தெலுங்கு' கப்பார் சிங் & 'ஹிந்தி' The Dirty Picture - 2 in 1 திரை விமர்சனம்...

 நான் இப்போதெல்லாம் நிறைய தெலுங்கு படங்கள் பார்க்கிறேன். எனக்கு தெலுங்கில் ஹீரோ பெயர் மட்டுமில்லாம் பலரை பற்றியும் ஓரளவுக்கு தெரிந்து கொள்ள ஆரம்பித்து விட்டேன். ஆனால் இதற்கெல்லாம் முன்பு, 'தொளி பிரேமா' என்ற படத்தை பார்த்தேன். அதில் வந்த ஒரு ஹீரோ செய்யும் கோமாளித்தனத்தை பார்த்து கண்டிப்பாக யாராலும் 

வியாழன், ஜனவரி 12, 2012

விஜயின் 'நண்பன்' - திரை விமர்சனம்

உகாண்டாவிலிருந்து சென்னைக்கு வந்து பத்து நாட்களுக்கு மேல் ஆகி விட்டது. சென்னையில் ராஜபாட்டை, மௌன குரு படத்திற்கு அப்பறம் நான் இன்று பார்த்த படம், விஜயின் 'நண்பன்'. வெளிநாடு போவதற்கு முன் நான் பார்த்த விஜய் படம் 'வேட்டைக்காரன்'. ஆனால் வேட்டைக்காரன், சராசரி விஜய் படம். நண்பன், பக்கா

வெள்ளி, டிசம்பர் 30, 2011

எனக்கு பிடித்த டாப் 20 தமிழ் திரைப்படங்கள் பாகம் - 1

இன்னும் இரண்டு நாட்களில் புத்தாண்டு பிறக்கப் போகிறது. கடந்த வருடத்தை விட, இந்த வருடம் நிறைய நல்ல படங்கள் வெளி வந்திருக்கின்றன. அவற்றில் எனக்கு பிடித்த 20 படங்களை பட்டியலிட்டிருக்கின்றேன். இதில் சில படங்கள் சிலருக்கு பிடிக்காமல் போகலாம். ஆனால் இந்த படங்கள் அனைத்துமே எனக்கு இந்த வருடத்தின் பிடித்த படங்கள்.

சனி, ஜனவரி 01, 2011

2010 Top 10 படங்கள் - ஒரு சிறப்பு பார்வை

அனைவருக்கும் என் 2011 புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த புத்தாண்டின் முதல் தேதியில் ஒரு பதிவு போடலாம் என்று நினைத்தேன். எதை பற்றி என்று நினைக்கும்போது நம் தமிழ் சினிமாவின் Top 10 படங்களை போடலாம் என்று முடிவு செய்து வெளியிட்டுள்ளேன். இந்த பத்து படங்களும் எனக்கு பிடித்த பத்து படங்கள் தானே தவிர, இது தான் Top 10 என்று சொல்லவில்லை. அப்படியே நான் சில படங்களை விட்டிருந்தால், Iam Sorry. Top 10 படங்களை பார்ப்போமா?