செவ்வாய், டிசம்பர் 31, 2013

எனக்கு பிடித்த டாப் 20 தமிழ் திரைப்படங்கள் 2013 தொடர்ச்சி...

கடந்த பதிவில் இந்தாண்டு ஹிட்டான 10 படங்களை பார்த்தோம். இந்த பதிவில் மீதம் இருக்கும் 10 படங்களை பார்க்கலாம்.

 விஸ்வரூபம்:
எனக்கு பிடித்த டாப் 20 தமிழ் திரைப்படங்கள் 2013 தொடர்ச்சி 1
 நடிகர் கமல்ஹாசனின் இயக்கத்தில், தயாரிப்பில் மற்றும் நடிப்பில் வெளிவந்த படம். முஸ்லிம்களின் போராட்டம், தமிழக அரசு தடை என்று படம் கோர்ட் வரைக்கும் போய் வெளிவந்தது. படத்திற்கு இருந்த எதிர்ப்புகளே, ரசிகனின் எதிர்பார்ப்பை கிளப்பியபடியால், படத்திற்கு ஒப்பனிங் பிரம்மாண்டமாக அமைந்தது. படத்தின் Making, காட்சியமைப்பு, Locations என்று படம் வேறு லெவலில் இருந்தது. படத்தை பற்றி ஒரே வார்த்தையில் சொன்னால், 'அபாரம்'. இப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு வெளிவரும். சீக்கிரம் கமல் சார், 'Iam Waiting'.



 ஆரம்பம்:
எனக்கு பிடித்த டாப் 20 தமிழ் திரைப்படங்கள் 2013 தொடர்ச்சி 2
 'பில்லா' ஹாட்ரிக் வெற்றிக்குப் பிறகு, அஜித்குமார் + விஷ்ணுவர்தன் கூட்டணியில் வெளிவந்த கமர்சியல் திரைப்படம். தல அஜித், நயன்தாரா, ஆர்யா, டாப்சி மற்றும் பலர் நடித்திருந்தாலும், படம் என்னவோ அஜித்தின் தோளில் பயணித்தது என்னவோ உண்மை. அதுமட்டும் இல்லையென்றால், ஆரம்பத்திற்கு 'ஆரம்பம்' கூட கிடைத்திருக்காது. ஒரு சில உண்மை சம்பவங்கள், சில பல ஹாலிவுட் படங்களில் சுட்ட காட்சிகள் என்ற அனைத்தையும் சரியான விகிதத்தில் கலந்து, தமிழ் சினிமா ரசிகனை திருப்திபடுத்திவிட்டார்கள்.

 சிங்கம் 2:
எனக்கு பிடித்த டாப் 20 தமிழ் திரைப்படங்கள் 2013 தொடர்ச்சி 3
 முதல் 'சிங்கத்தின்' பாய்ச்சல் எட்டடியென்றால், இந்த 'இரண்டாம் சிங்கத்தின்' பாய்ச்சல் கண்டிப்பாக பதினாறடி தான். இயக்குனர் ஹரியின் படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவரது படங்களில் ரசிகனின் டிக்கெட் பணத்திற்கேற்ப, அவன் எதிர்பார்க்கும் அனைத்து அம்சங்களும் இருக்கும். அது இந்த படத்திலும் தவறவில்லை. இந்தாண்டின் அருமையான பொழுதுபோக்குப் படமாக சூர்யாவிற்கு அமைந்தது இந்த 'சிங்கம் 2'.

ஓநாயும் ஆட்டுக்குட்டியும்:
எனக்கு பிடித்த டாப் 20 தமிழ் திரைப்படங்கள் 2013 தொடர்ச்சி 4
 இயக்குனர் மிஷ்கினின் இயக்கத்தில் வெளிவந்த அருமையான த்ரில்லர் வகைப் படம். ஒரே ராத்திரியில் நடக்கும் கதைக்களம், கதாபாத்திரத் தேர்வு, கதை சொன்ன விதம், தேர்ந்த இயக்கம் என்று மிக அருமையாக எடுத்திருந்தார். ஆனால் படத்திற்கு போதிய வரவேற்ப்பு கிடைக்காதால், வணிகரீதியாக வெற்றி பெறவில்லை. மற்றபடி படம், 'Clear Crystal' Classic Movie.

 பரதேசி:
எனக்கு பிடித்த டாப் 20 தமிழ் திரைப்படங்கள் 2013 தொடர்ச்சி 5
 இது ஒரு வழக்கமான பாலா படம் அல்ல. காரணம், 'எரியும் பனிக்காடு' என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம். இதில் பாலாவின் முத்திரை மொத்தமாகவே மிஸ்ஸிங். நடிகர் அதர்வா, நடிகைகள் வேதிகா, தன்ஷிகா போன்றவர்களின் உழைப்புக்காகவே படத்தை ஒருமுறை பார்க்கலாம். சில  உண்மை சம்பவங்களை தழுவி எடுக்கப்பட்ட படம், இந்த 'பரதேசி'.

ஆதலால் காதல் செய்வீர்:
எனக்கு பிடித்த டாப் 20 தமிழ் திரைப்படங்கள் 2013 தொடர்ச்சி 6
இன்றைய இளைய தலைமுறையினரின் மனப்போக்கை அப்பட்டமாக காட்டிய படம். படத்துக்கு படம் வித்தியாசம் காட்ட நடிகர்கள் மட்டுமல்ல, இயக்குனர்கள் கூட முயற்சிக்கலாம் என்று சொல்லாமல் சொன்ன சுசீந்திரன் படம். இந்த படத்தில் என்னை அதிகம் கவர்ந்தது, கதாநாயகியின் பெற்றோர்களாக வரும் ஜெயபிரகாஷ் மற்றும் துளசியின் நடிப்பு மிகவும் அருமை. இன்றைய தலைமுறை பெற்றோர்களுக்கு இது படம் அல்ல, பாடம்.

 பாண்டியநாடு:
எனக்கு பிடித்த டாப் 20 தமிழ் திரைப்படங்கள் 2013 தொடர்ச்சி 7
இயக்குனர் சுசீந்தரன் இயக்கத்தில், நடிகர் விஷால் தயாரித்து நடித்த படம். ஒரு அருமையான 'Action Block' சினிமா. இயக்குனர் பாரதிராஜாவின் நடிப்பு, பரோட்டா சூரியின் நகைச்சுவை, விஷாலின் அலட்டல் இல்லாத நடிப்பு என்று படம் பெரிதாக பேசப்பட்டது. இது போன்ற படங்களை விஷால் தேர்ந்தெடுத்து நடித்தால், அவரின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்.

 வனயுத்தம்:
எனக்கு பிடித்த டாப் 20 தமிழ் திரைப்படங்கள் 2013 தொடர்ச்சி 8
 சந்தன கடத்தல் வீரப்பனின் வாழ்க்கை வரலாறு தான் இந்த படம். வீரப்பனாக கிஷோர், டி.ஜி.பி விஜய்குமாராக அர்ஜுன் என்று படத்தில் நடித்த நடிகர்களின் பங்களிப்பும் நன்றாகவே இருந்தது. சில பல பிரச்சனைகளை சந்தித்து, சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கிய பின் வெளியானதால், படத்தின் சில முக்கிய காட்சிகள் மிஸ்ஸிங். இருந்தாலும் படம் நன்றாகவே இருந்தது.குறிப்பாக இரண்டாம் பாதி.

 ஹரிதாஸ்:
எனக்கு பிடித்த டாப் 20 தமிழ் திரைப்படங்கள் 2013 தொடர்ச்சி 9
 கிஷோர், சினேகா, பரோட்டா சூரி நடித்த இந்த படம் எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. காரணம், 'Autistic' நோயால் பாதிக்கப்பட்ட தன் மகனை, சாதிக்க வைக்கத் துடிக்கும் ஒரு அப்பாவின் கதை. சிறுவன் ப்ரித்விதாஸ் ராஜின் நடிப்பும் அருமை. படம் வணிகரீதியாகவும் வெற்றிபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

 மரியான்:
எனக்கு பிடித்த டாப் 20 தமிழ் திரைப்படங்கள் 2013 தொடர்ச்சி 10
 இந்த வருடம் நடிகர் தனுஷ் நடித்து வெளிவந்த இரண்டு படங்களில் மரியான் என்னை கவர்ந்தது. தனுஷும், பார்வதியும் போட்டிபோட்டு நடித்திருந்தார்கள் இந்த படத்தில். இயக்குனர் பரத் பாலாவின் இயக்கத்தில் முதல் பாதி கலகலப்பாகவும், இரண்டாம் பாதி விறுவிறுப்பாகவும் இருந்தது. மொத்தத்தில் தனுஷின் நடிப்பு, 'Superb'.



அனைவருக்கும் 2014-இன் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக