கற்க கற்க கள்ளும் கற்க...

ஞாயிறு, ஜனவரி 12, 2014

தலயின் 'வீரம்' - திரை விமர்சனம்...

தலயின் 'வீரம்' - திரை விமர்சனம் 1
 வீரம் படத்தை பற்றி பலர் பலவிதமாக பதிவெழுதி விட்டார்கள். So, புதிதாக எழுதுவதற்கு என்னிடம் ஒன்றுமில்லையென்றாலும், படத்தில் ரசித்தவற்றை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். 'கிராமத்து கெட்டப்பில் அஜித்தா? அஜித்தை வைத்து மாஸ் கமர்ஷியல் படமா? முடியுமா?' என்று பலர் யோசித்த கேள்விகளுக்கு சத்தமே இல்லாமல் படம் எடுத்து, பெரிய
வெற்றிப்படமாக்கிக் அதன் மூலமாக அதற்க்கு பதில் கொடுத்திருக்கிறார் இயக்குனர் சிவா. போன தீபாவளி 'தல தீபாவளி', இந்த பொங்கல், 'தல பொங்கல்' என்று அஜித் ரசிகர்களாகிய எங்களை திக்குமுக்காட வைத்திருக்கிறார் எங்க தல. எத்தன நாளாச்சி தல, இப்படி ஒரு தொடர் வெற்றிகளை பார்த்து.
தலயின் 'வீரம்' - திரை விமர்சனம் 2
 படத்தின் முதல் காட்சியில் இருந்து, கிளைமாக்ஸ் வரைக்கும் எந்த இடத்திலும் ஒரு சின்ன தோய்வு கூட இல்லை. அப்படி ஒரு விறுவிறுப்பு. முதல் பாதி காமெடி + காதல் என்றால், இரண்டாம் பாதி செண்டிமெண்ட் + ஆக்க்ஷன். கோட் சூட் போட்டு, கூலிங் கிளாஸ் அணிந்து, கையில் எப்போதும் துப்பாக்கியுடன் திரிந்த அஜித், இதில் வேட்டி சட்டையில், அரிவாளோடு இறங்கி அடித்திருக்கிறார். Body Language, Dialogue Delivery என்று அனைத்தும் புதிது. ரசிகர்களாகிய நாங்கள் எதிர்பார்த்த அனைத்து அம்சங்களும் இந்த படத்தில் இருக்கிறது. அதற்காகவே இயக்குனர் சிவாவை தனியாக பாராட்டலாம். அதே சமயம் அஜித்திடம் ஒரு வேண்டுகோள். இனிமே சால்ட் & பெப்பர் ஹைர் ஸ்டைல் வேண்டாமே தல. எங்களுக்கே கொஞ்சம் போர் அடித்து விட்டது. எங்களுக்கு எங்க 'Handsome' அஜித்குமார் வேணும். அநேகமாக கௌதம் மேனன் படத்தில் உங்களை இப்படி எதிர்பார்க்கலாம் என்று நினைக்கிறேன்.
தலயின் 'வீரம்' - திரை விமர்சனம் 3
 ரொம்ப நாள் கழித்து சந்தானத்திடம் ப்ரெஷ்ஷான காமெடியை ரசித்து சிரிக்க முடிந்தது. அதே போல தம்பி இராமையாவின் காமெடியும் நன்றாகவே இருந்தது. தமன்னாவின் கதாபாத்திரமும் அருமை. படத்தின் சண்டை காட்சிகளில் அனல் பறக்க வைக்கிறார் 'அனல்' அரசு. குறிப்பாக அந்த ட்ரைன் சண்டை காட்சிகள். வாவ் தல, கலக்கிட்டிங்க. அஜித்தின் தம்பிகளாக நடித்திருக்கும் விதார்த், பாலா, முனிஷ், சுஹைல் என்று அனைவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். வில்லன்களில் பிரதீப் ராவத்தை விட, அதுல் குல்கர்னி நம்மை ஒரு படி மேலே கவர்கிறார். மற்ற கதாபாத்திரகளில் நடித்திருக்கும் நாசர், அப்புக்குட்டி, ரமேஷ் கண்ணா, அவினாஷ், 'நாடோடிகள்' அபிநயா, மயில்சாமி, தேவதர்ஷினி, இளவரசு என்று அனைவரும் தங்களுக்கு அளிக்கப்பட கதாபாத்திரங்களில் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
தலயின் 'வீரம்' - திரை விமர்சனம் 4
 பாடல்களை விட, பின்னணி இசையில் அதிகமாக கவர்கிறார் தேவி ஸ்ரீ பிரசாத். வெற்றியின் கேமரா கிராமத்தையும், அதிரடியையும் அட்டகாசமாக காட்டியிருக்கிறது. பாரம்பரியமிக்க 'விஜயா Productions' கம்பெனியில் இருந்து ஒரு நல்ல மாஸ் Entertainer படம். தனி மனித துதி பாடலுக்கான காட்சிகள் அதிகம் இருந்தும், பஞ்ச் வசனங்கள் அதிகம் பேச வேண்டிய காட்சிகள் இருந்தும் அதையெல்லாம் செய்யாமல் நடித்த அஜித்தை பாராட்டாமல் என்ன சொல்வது? ஆனால் அஜித்குமாரை சரியாக பயன்படுத்திய விஷயத்தில் கண்டிப்பாக இயக்குனர் சிவாவை பாராட்டியே ஆக வேண்டும். சீக்கிரம் தல கூட அடுத்து ஒரு மாஸ் படம் ஒன்னு பண்ணுங்க சிவா சார். மொத்தத்தில் வீரம், Super, Fantastic, Excellent, பலே...Thanks & Regards,

Post Comment

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

கருத்துரையிடுக