வியாழன், ஆகஸ்ட் 09, 2012

கமலின் 'தேவர் மகன்' - திரை விமர்சனம்

Kamal Haasan's Devar Magan Tamil Movie Review 1
 கமல் எனக்கு என்றைக்குமே ஆச்சர்யம் தான். ஒரு முறை சினிமா சம்பந்தப்பட்ட ஒரு புத்தகத்தை பார்த்தபோது, தலைவர் ரஜினியை பற்றி 'நடிகர்' என்ற அந்தஸ்து மட்டுமே அவருக்கு மக்களால் தரப்பட்டிருந்தது. ஆனால் கமல்ஹாசனை பற்றி படிக்க ஆரம்பித்தபோது தயாரிப்பாளர்,
இயக்குனர், கதாசிரியர், திரைக்கதை இயற்றுபவர், வசனகர்த்தா என்று பல பரிமாணங்கள் இருந்தன. சூப்பர் ஸ்டாரின் மிகப் பெரிய ரசிகனான நானே அன்று சற்று மிரண்டு தான் போனேன். அதே போல நான் பார்த்த பல படங்களில், கமல் ஏதாவது ஒன்றை புதுமையாக செய்து வைக்கிறார். அப்படி அவர் ஆரம்பித்த பல விஷயங்கள் பின்னாளில் பலரால் தொடரப்படுகின்றன என்பதே உண்மை. அவர் இங்கிருந்து திருடினார், அங்கிருந்து திருடினார் என்று சிலர் சொன்னாலும் அதை இங்குள்ள சினிமா ரசிகர்களுக்கு காட்டத் தான் என்பதை மறுக்க முடியாது. அவர் எழுத்தில் வந்த பல படங்களில் குறிப்பிடத்தக்க ஒரு படம் என்று சொன்னால் அது கண்டிப்பாக 'தேவர் மகன்' என்று சொல்லலாம்.
Kamal Haasan's Devar Magan Tamil Movie Review 2
 லண்டனில் படிப்பை முடித்து சக்தி தனது சொந்த ஊருக்குத் தனது காதலியுடன் திரும்பி வருகின்றார். அங்கு தந்தையான பெரியத் தேவரைச் சந்தித்து தனது காதலியை அறிமுகமும் செய்து வைக்கின்றார்.ஆரம்பத்தில் கோபம் கொள்ளும் பெரிய தேவர் பின்னர் அமைதி கொள்கின்றார். இதற்கிடையில் அவ்வூரில் இருக்கும் சின்ன தேவரின் மகனான மாயனால் பல பிரச்சனைகள் உருவாகிறது. ஒரு பஞ்சாயத்தில் ஊர் பெரியவரான பெரிய தேவரை மாயன் வார்த்தைகளால் அவமானப்படுத்த, பெரியத்தேவர் காலமாகிறார். 'நம்மையே நம்பியிருக்கும் இந்த மக்களுக்கு ஏதாவது செய்' என்று பெரியத்தேவர் சொல்லியதை நினைத்துப் பார்க்கும் அவரின் மகன் சக்தி, அந்த ஊரிலேயே தங்கி மக்களுக்காக வாழ்கிறார். அதே சமயம் மாயன் மூலமாக பல பிரச்சனைகள் வந்தாலும் பொறுத்துக்கொள்ளும் சக்தி, மாயனால் ஊர்மக்களுக்கு பிரச்சனையை வர, சக்திவேல் என்ன செய்தார் என்பதை மிகவும் அருமையாக சொல்லியிருக்கும் படம் இந்த கமல்ஹாசனின் 'தேவர் மகன்' திரைப்படம்.


 இந்த படத்தின் திரைகதையை கமல் எழுத ஆரம்பித்து ஒரு பத்து பக்கத்தை தாண்டும்போதே 'பெரிய தேவர்' கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவர் சிவாஜி மட்டுமே என்று முடிவு செய்து தான் எழுதி முடித்தாராம். சிவாஜியின் நடிப்பை பற்றி வெறும் வார்த்தைகளால் சொல்ல முடியாது. எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும், அதில் வாழ்ந்து காட்டுவார் அவர். அதை இந்தப் படத்திலும் செய்யத் தவறவில்லை நம் 'நடிகர் திலகம்'. 'பஞ்சாயத்தாடா இது, பஞ்சாயத்தே கெடயாது டா' என்று பொருமிக் கொண்டு போகும் காட்சியும், 'நீங்க பொன்னா சம்பாரிச்சி கொண்டுவரும் போது அப்பா போய்ட்டா என்ன பண்ணுவீங்க?' என்று மகனிடம் கலங்கும் காட்சியிலும் கலக்குகிறார் நம் 'சிம்மக் குரலோன்'. கமலின் காதலி பானுமதியாக வரும் கௌதமி நடிப்பு மிகவும் அருமை. 'Why, Shakthi Why? என்று கலங்கி அழும் காட்சியிலும், கடைசியாக ரயிலில் கமலின் கன்னத்தில் முத்தம் கொடுத்து விட்டு Go man, Go! என்று சொல்லி கலங்கிக்கொண்டே கதவை சாத்திக் கொள்ளும்போது அந்த கதாபாத்திரத்தின் மேல் பரிதாபம் வருவதை நம்மால் தடுக்க முடியவில்லை.
Kamal Haasan's Devar Magan Tamil Movie Review 3
 கமலின் மனைவி பஞ்சவர்ணமாக ரேவதி. இவர் எனக்கு மிகவும் பிடித்த நடிகை என்று ஏற்கனவே பாண்டியராஜனின் 'ஆண் பாவம்' - திரைவிமர்சனத்தில்  சொல்லியிருக்கிறே
ன். 'அதுவும் நான்தென், வேப்பெண்ணை தடவியிருக்கேன்' என்று சொல்லும் அந்த வெகுளித்தனமும், 'அடியாத்தி, எனக்கு வாழ்க்கை குடுத்த சாமி நீங்க, நான் தான் Sorry, என்னால தான் Sorry' என்று பேசும் அழகும் சூப்பர். மாயனாக வரும் நாசர் செய்யும் வில்லத்தனத்தில் அதகளப்படுத்துகிறார். கிளைமாக்ஸ் காட்சியில் அருவாளை கையில் வைத்துக் கொண்டு 'வாடா, தேவர்மவனே வா, எமனை பாத்திருக்கியா? நான்தென்' என்று கமலோடு போட்டிபோடுகிறார் நடிப்பில். வடிவேலுவின் கதாபாத்திரமும் சொல்லிக் கொள்ளும்படியாகவே அமைத்திருப்பது சிறப்பு.
 படத்தில் வசனங்கள் ஒவ்வொன்றும் அருமை. 'உனக்குள்ள முழுச்சிகிட்டிருக்குற அதே மிருகம் எனக்குள்ள தூங்கிகிட்டு இருக்கு, அதை தட்டி எழுப்பிடாதே', ;நான் குடுத்த பாலெல்லாம் ரத்தமா போகுதே' என்று மிக அருமையான வசனங்களை வழங்கியிருக்கிறார் கலைஞானி. இசைஞானியின் இசையில் பாடல்களும் சரி, பின்னணி இசையிலும் சரி கலக்கல். படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு, கதாநாயகன் அனைத்தும் நம் 'பத்மஸ்ரீ' கமல்ஹாசன். படத்தை இயக்கியது பரதன். இவர் மலையாளத்தில் பெரிய இயக்குனர். தேவர் மகன் திரைப்படம் 25 October 1992 அன்று வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. இந்த படம் ஐந்து தேசிய விருதுகளையும், இரண்டு பிலிம்பேர் பெற்றது. 'தேவர் மகன்' படம் தெலுங்கில் 'சத்ரிய புத்ரடு' என்ற பெயரில் டப் செய்யப்பட்டும், ஹிந்தியில் அணில் கபூர் நடித்து 'விரசாத்' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டும் வெளியிடப்பட்டது. அதே சமயம் இந்தப்படம் 'டொராண்டோ திரைப்பட விழாவில் இந்திய மொழி திரைப்படங்களின் சார்பில் திரையிடப்பட்டு பாராட்டுக்களை பெற்றது.





(தயவுசெய்து படித்ததோடு மட்டுமல்லாமல் வாக்களித்து, பின்னூட்டமிட்டு என்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தவும்).




என்றும் அன்புடன்

14 கருத்துகள்:

  1. மிக நல்ல படம்... படத்தைப் பற்றி சொல்ல
    வேண்டுமென்றால் பக்கம் பக்கமாக எழுத வேண்டும், அவ்வளவு இருக்கு...

    படத்தில் எனக்கு மிகவும் பிடித்தது... அப்பா மகனின் (பாசக்) காட்சிகள்...

    தொடருங்கள்... வாழ்த்துக்கள்...

    நன்றி…

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா09 ஆகஸ்ட், 2012 23:02

    Kamal is a very good actor and multiple talent person.

    பதிலளிநீக்கு
  3. ஒரு நல்ல திரைப்படத்திற்கு ஏற்ற நல்ல விமர்சனம். படத்தில் வசனங்கள் அனைத்தும் அருமை. சிவாஜியும் நாசரும் மிக சிற்பக நடித்து இருப்பார்கள்.

    பதிலளிநீக்கு
  4. அருமையாக விமரிசனம் எழுதி இருக்கிறீர்கள். எனது வேர்ட்பிரஸ் ஹோம் பேஜில், உகாண்டாவிலிருந்து ஒரு வருகையாளர் என்று பார்க்கும்போது 'யார்?' என்று யோசிப்பேன். இன்று விடை கிடைத்தது.
    இந்தப் படத்தில் சிவாஜியின் இறப்புக்குப் பிறகு கமல் 'தேவராக' வேஷ்டி, தோளில் துண்டுடன் வரும் காட்சி எனக்கு மிகவும் பிடித்த காட்சி. அதுவரை, விளையாட்டுத் தனமாக இருந்த கமலின் முகத்தில், தோற்றத்தில் பெறும் மாற்றம் தெரியும்.மிகவும் ரசித்த காட்சி இது.
    பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  5. Ever thought somebody non-South Indian can stumble upon your blog??

    This is Kamal Hasan, I could only make that much out. :)

    பதிலளிநீக்கு
  6. I saw the films 3times after a long years in my life.The dialogue,actions of all artists, the photography and direction perfion in all .

    பதிலளிநீக்கு
  7. I love kamalahasan. But if you ask me- his best movie is kuruthi punal.

    Cheers...

    I love your blog. Tamil la oru attagasamana blog. Cheers oorkavalan.

    பதிலளிநீக்கு
  8. Well reviewed, great observation.
    As like many fans, i did watch this film for more than 15 times. Each time i feel like watching 1st time. Particularly the panchayathu scene, after that in home discussion with Sivaji wow wow amazing.

    I saw many films of the director Bharadhan in Manalayalam, but this is his one of the master piece.

    Kindly write about Virumandi also, i strongly believe this is also one of the best Kamal.

    Keep going, looking forward more reviews.

    பதிலளிநீக்கு