கற்க கற்க கள்ளும் கற்க...

வியாழன், ஆகஸ்ட் 02, 2012

Swordfish (2001) - ஆங்கிலப் பட திரை விமர்சனம்

'Swordfish' English Movie Tamil Review 1
 இந்த படத்தின் டைட்டிலை நான் பிடித்ததே 'அயன்' படத்தில் இருந்து தான். சூர்யா நடித்த அந்த படத்தில், ஒரு காட்சியில் கருணாஸ் ஒரு சினிமா இயக்குனருக்கு ஆங்கில திருட்டு DVD's வாங்கித் தருவார். அந்த இயக்குனர் கேட்ட வங்கிக் கொள்ளை சம்பந்தப்பட்ட படங்கள் என சூர்யா
இந்த படத்தை தான் முதலில் குறிப்பிடுவார். அப்படி என்ன தான் இருக்கும் இந்த படத்தில்? என்று நினைத்து படத்தை தேடித் பிடித்து டவுன்லோட் போட்டு பார்த்தேன். சும்மா சொல்லக் கூடாது., செம படம். ரொம்ப நாள் கழித்து ஒரு நல்ல Action Thriller வகையறாவான படத்தை பார்த்தேன்.
'Swordfish' English Movie Tamil Review 2
 படத்தின் கதை ரொம்ப சாதாரணம். நம்ம தல நடித்த 'மங்காத்தா' படத்தின் கதைக்கும், இந்த படத்தின் கதைக்கும் பெரிதாக ஒன்று வேறுபாடில்லை. அமெரிக்க அரசாங்கத்தின் 'Slush Fund' இல் இருக்கும் 9.5 Billion அமெரிக்க பணத்தை Computer மூலமாக ஹைக் செய்து எப்படி கொள்ளையடிக்கிறார்கள் என்பதே படம். எந்த ஒரு இடத்திலும் சிறு தொய்வு கூட இல்லாமல் படத்தை கொண்டு சென்று இருப்பதே இந்த படத்தின் வெற்றிக்கு காரணம் என்று நான் கருதுகிறேன்.


 படத்தின் ஆரம்பமே அமர்க்களமாக இருக்கும். ஆரம்ப காட்சியில் John Travolta பேசும் காட்சி வரும் . கொஞ்சம் கூட படத்திற்கு சம்பந்தமே இல்லாமல் Al Pacino நடித்த Dog day Afternoon படத்தை பற்றி பேசிக்கொண்டிருப்பார். ஆனால், பிறகு தான் தெரியும் அவர் யாரிடம் பேசிக்கொண்டிருக்கிறார்? என்ன செய்ய போகிறார் என்று. அதிலிருந்து வேகமெடுக்கும் திரைக்கதை. படத்தின் நாயகனாக Hugh Jackman நடித்திருந்தாலும், படத்தின் வில்லனாக வந்து ஒன் மேன் ஷோவாக கலக்குவது John Travolta தான். என்னமா கலக்குறாரு மனுஷன். அவரின் Body Language, சிகார் பிடிக்கும் ஸ்டைல், டயலாக் பேசும் விதம் என்று அதகளப்படுத்துகிறார் இவர். அவர் வந்த காட்சிகளில் எது பெஸ்ட் என்று கேட்டால், எல்லாமே தான் என்று கண்டிப்பாக சொல்லலாம். அவ்வளவு அருமையான Perfomance. இவர் நடித்த 'Broken Arrow' படத்தையும் முன்பு ஒரு முறை பார்த்திருக்கிறேன். ஆனால் அந்த படத்தை விட, இந்த படத்தில் வரும் இவரின் வேடம் தான் எனக்கு மிகவும் பிடிக்கிறது. இந்த படத்தில் ஒரு car Chasing Action Scene வரும். அதில் இவரின் ஸ்டைலிஷான சண்டைக்காட்சிகள் சூப்பர்.
'Swordfish' English Movie Tamil Review 3
 படத்தின் நாயகியாக Halle Berry. இந்த படத்தில் இவர் கண்டிப்பாக கதாநாயகி இல்லை என்பதே உண்மை. இவர் வில்லனாக வரும் John Travolta வின் காதலி. இவருடைய நடிப்பும் சொல்லிக் கொள்ளும்படியாகவே இருக்கிறது. ஆனால் ஒரு சின்ன உறுத்தல். இவர் ஒரு காட்சியில் Topless ஆக நடித்திருக்கிறார். ஆனால் அந்த காட்சியில் அப்படி அவர் நடித்தது தேவையில்லாத ஒன்று என்றே நினைக்கிறேன். படத்தின் நாயகனாக Hugh Jackman வில்லன் & கோ இடத்தில் மாட்டிக் கொண்டு அல்லாடுகிறார் பாவம். அதே சமயம், FBI அதிகாரியாக வரும் Don Cheadle நடிப்பு படத்தில் பேசப்படுகிறது. படத்தின் கிளைமாக்ஸ் ட்விஸ்ட் யாரும் எதிபாராதது. அதை எந்த இடத்திலும் உடைக்காமல் திரைக்கதையை கொண்டு சென்றது மிகவும் அருமை. படத்தின் ஆரம்பம் முதல் கிளைமாக்ஸ் வரும் காட்சி வரைக்கும் வரும் சின்ன, சின்ன முடிச்சுகளை மொத்தமாக கிளைமாக்ஸ்சில் அவிழ்ப்பது Simply Super.
 படத்தின் இறுதியில் வரும் அந்த Helicopter - Bus காட்சிகளை படமாக்கிய விதம் மிகவும் அருமை. படத்தின் கேமரா மேன் Paul Cameron. மிகச் சிறந்த ஒளிப்பதிவு. குறிப்பாக படத்தின் ஆரம்பத்தில் வரும் அந்த குண்டு வெடிப்பு காட்சியை படமாக்கிய விதம் Super. Skip Woods இன் திரைக்கதையில், Dominic Sena இயக்கத்தில் மிக அருமையாக வந்திருக்கிறது படம். இந்த படத்தை வெளியிட்டது Warner Bros. Pictures. படம் வெளியான தேதி - 8 June, 2001. படத்தின் மொத்த பட்ஜெட் 102 Million Dollars. படத்தின் உலகளாவிய வசூல் 147 Million Dollars. IMDb Rating - 6.4 / 10.
(தயவுசெய்து படித்ததோடு மட்டுமல்லாமல் வாக்களித்து, பின்னூட்டமிட்டு என்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தவும்).
என்றும் அன்புடன்

Post Comment

10 comments:

King Viswa சொன்னது…

நண்பரே,

படத்தில் வரும் வசனங்களும் சூப்பர் ஆகவே இருக்கும். குறிப்பாக அந்த செனட்டர் கூறும் வளர்ப்பு நாய் பற்றிய உதாரணமும், ஜான் ட்ரவோல்டா ஜாக்மேனுக்கு அளிக்கும் வன்முறை பற்றிய சமாதானம் மறக்கவியலா காட்சிகள்.

ஆனால் இதை மங்காத்தா பற்றி ஒப்பிடுவது கொஞ்சம் இல்லை ரொம்பவே ஓவர்.

வல்லத்தான் சொன்னது…

நல்லப்படம்....அருமையான விமர்சனம்...

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நல்லதொரு விமர்சனம்...
(ரொம்ப நாள் பதிவு பக்கம் வந்து...?)
நன்றி...

Ramya சொன்னது…

nice

சேக்காளி சொன்னது…

I am going to type "sword fish torrent" in google.com

ARM சொன்னது…

seen it long time a ago. you did't mention the blowjob while hacking scene. that's one of best

Gobinath சொன்னது…

இந்த மாதிரி கதை ஆங்கிலத்துக்கு பழகிப்போன ஒன்றுதான் என்றாலும் தரமாகத்தான் எடுத்திருக்கிறார்கள்.

Easy (EZ) Editorial Calendar சொன்னது…

நல்ல விமர்சனம்


நன்றி,
ஜோசப்
http://www.ezedcal. com (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம்)

MuratuSingam சொன்னது…

விமர்சனம் நன்று.
நல்ல படம், எனக்கு ட்ரவோல்டா நடித்ததில் இந்த திரைப்படமும் ரொம்ப பிடிக்கும், முக்கியமான ஒரு காட்சியை பற்ற ஒன்னும் குறிப்பிடவில்லையே....????

Thara fx சொன்னது…

hotel rwanda என்னும் ஒரு திரைப்படட்தையும் நீங்கள் பார்க்க வேண்டும்.

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

கருத்துரையிடுக