திங்கள், ஜூலை 23, 2012

பில்லா - II தோல்விப் படமா? - ஒரு பார்வை

Ajith Kumar's Billa 2 Tamil Movie Review 1
 இந்த பதிவு, கடந்த வாரமே எழுத வேண்டியது. வேலையில் கொஞ்சம் பிஸியாக இருந்ததால் எழுத முடியவில்லை. கடந்த வாரம் தான் நானும், என் மனைவியும் பில்லா 2 படத்தை பார்த்தோம். படம் வெளிவந்து ஒரு வாரமே ஆகியிருந்தாலும், அதற்குள் 'படம் செம மொக்கை, படத்தை வாங்கி வெளியிட்ட விநியோகிஸ்தருக்கு படம்
தோல்வியானதால் ஹார்ட் அட்டாக்' என்று சில விஷமிகள் தவறான செய்திகளை பரப்பி வருகிறார்கள். அதே சமயம், படத்தை வாங்கி வெளியிட்ட ஆஸ்கார் ரவிச்சந்திரன் 'வரி போக இதுவரை 40 கோடி வசூலாகியிருக்கிறது. இனி வரும் வாரங்களில் மொத்த வசூல் நிலவரம் தெரிய வரும்' என்று கூறியிருக்கிறார். சென்னை நிலவரத்தை பொறுத்தவரை, படம் வெளியான முதல் மூன்று நாட்களில் Rs. 2,79,30,353 வசூல் ஆகியிருக்கிறது. சரி, படம் எப்படி? என்று பார்த்தால் கலவையான விமர்சனங்கள் தான் இது வரை வந்து கொண்டிருக்கின்றன. உண்மையில் எதிர்மறை விமர்சனங்கள் உண்மையா? இல்லையா? என்பதையே இப்போது பார்க்க போகிறோம்.
Ajith Kumar's Billa 2 Tamil Movie Review 2
 பொதுவாகவே நாம் படம் பார்க்கும்போது, படம் நம்மை எரிச்சலூட்டினால் 'படம் மொக்கை' என்று முடிவு செய்து விடலாம். ஆனால் இந்த படத்தை பார்த்தபோது எனக்கு எந்த ஒரு காட்சியுமே என்னை எரிச்சலூட்டவில்லை. உண்மையில் தல ரசிகனான நானே அஜித் நடித்த திருப்பதி, ஆழ்வார், ஜனா மற்றும் அசல் போன்ற படங்களை தலயே என்னை நேரில் அழைத்து பார்க்க சொன்னாலும் பார்க்க மாட்டேன். ஆனால் அந்த படத்தை பார்த்தபோது வந்த கடுப்பு, எனக்கு இந்த படத்தை பார்த்தபோது வரவில்லை என்பதே உண்மை. படம் பார்த்த பலரும் 'படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை' என்று சொல்லி கேள்விப்படுகிறேன். அதற்க்கு இரண்டு காரணங்கள் உண்டு. அது, முந்தைய பில்லாவின் எதிர்பார்ப்பு & படத்தை குத்து பாட்டு, பஞ்ச் வசனங்கள் என்று படத்தை படு கமர்ஷியலாக எதிர்பார்த்தது. இந்த இரண்டுமே இந்த படம் ஈடு செய்யவில்லை என்பது உண்மை தான். ஆனால் இந்த படம், இந்த இரண்டு காரணங்களில் இருந்து வேறுபட்டிருக்கிறது என்பதே உண்மை.



 படத்தில் வன்முறை காட்சிகள் சற்று அதிகமாகவே இருக்கிறது. உண்மை தான். ஆனால் அது ஏன்? என்ற கேள்விக்கு 'சரித்திரத்தை ஒரு நிமிஷம் பாருங்க. அது நமக்கு கத்துக்கொடுத்தது ஒன்னு தான். நாம வாழனும்னா யாரை வேணும்னாலும், எப்ப வேணும்னாலும் கொல்லலாம்' என்று முந்தைய 'பில்லா' படத்திலேயே பதில் சொல்லி விட்டார் தல. அதே போல படத்தின் கிளைமாக்ஸ்சில் தலயும், இன்னும் இரண்டு பெரும் சேர்ந்து வில்லனின் ஆயுத தொழிற்சாலையை அழிப்பார்கள். அதற்கும் அது எப்படி கேட்கிறார்கள் நம்ம 'சினிமா' ரசிர்கள். பொதுவாகவே ரஜினியின் பெரும்பாலான படங்களில், தலைவர் ஒற்றை ஆளாகவே வில்லன் கூட்டத்தை அழிப்பார். அதற்க்கு உதாரணம்: மாப்பிள்ளை, சிவா etc. தலைவரோடு அஜித்தை ஒப்பிடக்கூடாது தான். ஆனால் சில 'கிறுக்கர்கள்' கேட்கும் கேள்விக்கு இதை தவிர வேறு பதில் எனக்கு சொல்ல தெரியவில்லை. உண்மையில் படத்தை எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் பார்த்தால், படம் ஓகே. கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்.
Ajith Kumar's Billa 2 Tamil Movie Review 3
 எனக்கு தெரிந்து இந்தியாவிலேயே முதல்முறையாக தயாரிக்கப்பட்ட முதல் Prequel படம் இது. உண்மையில் இந்த மாதிரி டான் படத்திற்கு கதாநாயகிகள் தேவையே இல்லை. ஆனால் 'தமிழ் இனிமாவின் தலைவிதிப்படி' இந்த படத்தில் தேவையே இல்லாமல் இரண்டு நடிகைகள். படத்தில் அக்கா, முறை பெண் செண்டிமெண்ட் காட்சிகள் தவிர்த்து படம் பார்த்தால், பக்கா 'Action Thriller Movie'. இரா. முருகன் எழுதிய ஒவ்வொரு வசனமும் அஜித் சுடும் தோட்டாக்கள் போல தெறிக்கின்றன. யுவனின் பின்னணி இசை கலக்கல். பாடல்கள் சொல்லிக்கொள்வது போல இல்லை. என்னோடு படம் பார்த்த என் மனைவி கூட, 'கண்டிப்பா ஒரு தடவ பார்க்கலாம். அப்பறம் ஏன் படம் நல்லா இல்லைன்னு சொல்றாங்க? என்று கேட்டாள். இந்த கேள்விக்கு அஜித் ரசிகனான எனக்கு கூட பதில் சொல்ல தெரியவில்லை.
 அஜித் ரசிகர்களிடம் ஒரு நல்ல பழக்கம் இருக்கிறது. படம் சரியில்லை என்றால், 'படம் நல்லா இல்ல' என்று பொட்டில் அடித்தார் போல சொல்லி விடுவார்கள். ஆனால் இந்த படத்திற்கு அவர்கள் சுமாராக இருக்கிறது என்று சொல்லவே யோசிக்கிறார்கள். காரணம், எதிர்கோஷ்டி நடிகர் ஒரு மொக்கை படத்தில் நடித்தாலும், அவர்களின் ரசிகர்கள் 'படம் கில்லி டா' என்று தம்பட்டம் அடித்துக் கொள்வார்கள். தல ரசிகர்களுக்கு தான் அப்படி சொல்ல வராதே? அதே போல 'படம் சரியில்லை' என்று பொய் செய்தி பரப்புபவர்களுக்கு என்ன காரணம் என்று பார்த்தால், ரஜினிக்கு பிறகு அஜித் தான் அடுத்த வசூல் மன்னன் என்ற விஷயமும், அஜித்திற்கு இருக்கும் அளவுக்கு அதிகமான ரசிகர்கள் செல்வாக்கை பார்த்து தான் அவர்கள் இப்படி செய்கிறார்கள். 'யப்பா அணில் ரசிகர்களே, உங்களுக்கு நாங்க போட்டி இல்லை நண்பர்களே. உங்களுக்கு போட்டி, உதயநிதி ஸ்டாலினும், சூர்யாவும் தான். நாங்க இன்னும் உங்க அளவுக்கு எறங்கல...





(தயவுசெய்து படித்ததோடு மட்டுமல்லாமல் வாக்களித்து, பின்னூட்டமிட்டு என்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தவும்).



என்றும் அன்புடன்

26 கருத்துகள்:

  1. என்னன்னு சொல்ல? ஒருத்தருக்கும் எதுவும் புரியவில்லைனு மட்டும் நல்லா தெரியுது :-))

    பதிலளிநீக்கு
  2. இதைச்சொன்னா நம்மள பைத்தியக்காரன்னு சொல்றாங்க? என்னத்த சொல்ல? நல்ல பதிவு நண்பரே

    பதிலளிநீக்கு
  3. நன் நேற்று படத்தை நான்காவது முறையாக பார்த்தேன் அலுக்கவில்லை , இன்னமும் படத்தில் பல காட்சிகளுக்கு திரையரங்கில் விசில் பறக்கிறது

    //அஜித் ரசிகர்களிடம் ஒரு நல்ல பழக்கம் இருக்கிறது. படம் சரியில்லை என்றால், 'படம் நல்லா இல்ல' என்று பொட்டில் அடித்தார் போல சொல்லி விடுவார்கள்
    உண்மைதான் தல ...

    //யப்பா அணில் ரசிகர்களே, உங்களுக்கு நாங்க போட்டி இல்லை நண்பர்களே. உங்களுக்கு போட்டி, உதயநிதி ஸ்டாலினும், சூர்யாவும் தான்.

    கார்த்தியை விட்டு விட்டீர்களே

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா23 ஜூலை, 2012 12:14

    Aamaa thala... Ungalukkellam E (naan E).. Koodathan potti.. Thalapathy kooda ethane dhadavai mothi mattaiyaneenga? Maranthittingala? (pokkiri- alwar, thirumalai-janaa, thirupachi- ji)... Sagunikku bayanthu odiponavangathane néenga? Padaththa aen thaniya release panringa? Bayamaa?

    பதிலளிநீக்கு
  5. தியாகராஜா பாகவதர்- பி.யு. சின்னப்பா, சிவாஜி-எம்.ஜி.ஆர், ரஜினி-கமல், விஜய்-அஜித், சிம்பு-தனுஷ் .............. என்று போய்க் கொண்டே இருக்கிறது இந்த சினிமா போட்டி. அவனுங்க பணம் சம்பாதிக்க ஏதோ தங்களுக்கு போட்டி இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்குகிறார்கள். உற்று கவனித்தால் ரசிகர்கள் தான் அடித்துக் கொள்கிறார்களே தவிர நட்சத்திரங்கள் அல்ல. எம்.ஜி.ஆரை தனது மூத்த அண்ணன் என்று சிவாஜி சொல்லியுள்ளார், எண்கள் இருவரைப் போன்ற நண்பர்கள் உலகிலேயே கிடையாது என்று கமல் ரஜினியைப் பற்றி கூறுகிறார். அஜித், விஜய் இருவரும் ஒருவர் வீட்டிற்கு இன்னோரத்தர் போய் நட்பு பாராட்டுகிறார்கள், அடுத்து சிம்பு தனுஷ் சேர்ந்து நடிக்கலாம் என்று உத்தேசம் இருப்பதாக செய்திகள் வருகின்றன. ஆக சண்டை வந்தால் உடைவது ரசிகர்கள் மண்டைதானே தவிர, மேலே உட்கார்ந்து கொண்டு வேடிக்க பார்க்கும் கூத்தாடிகளுக்கு நஷ்டம் ஏதுமில்லை. அவன் அடுத்து முதலமைச்சர் ஆவதற்கு எங்கேயாவது நூல் விட்டுக் கொண்டிருப்பான், அதற்க்கு போஸ்டர் ஒட்டவும், கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம் பண்ணவும் தான் ரசிகர்கள் அவனுக்கு வேண்டும். அவன் வீட்டில் திருமணம் நடந்தால் ரசிகனை கூப்பிட மாட்டான், அரசியல் வாதிகளைத்தான் கூப்பிடுவான். ராசிகள் அவனைப் பொறுத்தவரை ஒரு அல்லக்கை, எச்சக்கலை. எனவே நான், அவன் ரசிகன் இவன் ரசிகன் என்ற மாயையில் இருந்து வெளியில் வாருங்கள் நண்பர்களே.

    பதிலளிநீக்கு
  6. படம் நன்றாகதான் இருந்தது... எனக்கு இந்த படம் பிடித்து இருந்தது முதல் பக்கத்தை விடவும்.
    அஜித் சம கலக்கல்......படம் சூப்பர், கிளைமக்ஸ் அந்த இருபது நிமிடத்தை தவிர.

    பதிலளிநீக்கு
  7. அவங்களாவே வதந்தியை கிளப்பி விட்டுடுவாங்க பாஸ். அப்புறம் விமர்சனத்தோட ஆரம்பத்தில நடுநிலமை தவறாத விமர்சனம் என்று எக்ஸ்ரா பில்டப் வேற.

    பதிலளிநீக்கு
  8. உன் மூஞ்சில என் பீச்சாங்கையை வைக்க.. அதான் பிளாப் ஆச்சு-ல..

    தோல்வி எத்தனை படத்துக்குடா ஒத்துக்கீவீங்க? நடிச்ச அம்பது படத்துல எதனை ஹிட்? சொல்லு. சூர்யா நடிச்ச இருபதைஞ்சு-ல எதனை ஹிட்.

    solla முடியாது-ல.. உதயநிதி முதல் படம் ஹிட்.

    உன் தருதல etthani ஹிட்?

    பத்து படத்துக்கு ஒரு ஹிட் கொடுக்கிற பன்னாடை-க்கு ரசிகர்ள இருக்கிறதுக்கு நீங்களும்.. விஜய் & அஜித்-உம் தூக்கு போட்டு கிட்டு சாகணும்

    பயந்த கமெண்ட் போடா வேண்டாம்

    இதுக்கு சங்கி மங்கி பரதேசி பாலா & மொக்கை கூஜா சூப்பர் கமெண்ட் வேற

    போங்கடா புள்ளை குட்டி-யை படிக்க வைங்க

    பதிலளிநீக்கு
  9. bala so u agree u r mental?? ahh goodd true :))

    பதிலளிநீக்கு
  10. காதல் கோட்டை,கண்டுகொண்டேன்...கண்டுகொண்டேன் ... போன்ற படங்களில் காட்டிய யதார்த்தமான நடிப்பை விடுத்து, நான் அப்பேற்பட்டவன், இப்பேற்பட்டவன், புடுங்கி என்று ஹீரோயிசம் காட்டும் கேரக்டர்களில் மட்டுமே அஜித் நடிப்பது ஏன் என்று அஜித் ரசிகர்கள் விளக்க வேண்டும். [அது அவரு இஷ்டம், பார்க்கிறது எங்க நஷ்டம் போன்ற பதில்கள் ஏற்கப் படாது.]

    ஏம்பா, டுபுக்கு........... சாரி தீபக்கு, எதுக்கு அனாவசியமா இன்னொருத்தரை சீன்டிகிட்டு இருக்கீங்க? எவனோ பணம் சம்பாதிக்க நாம் ஏன் அடிச்சிக்கனும்? போங்கப்பா............ போய் புல்லை குட்டிகளை படிக்க வைக்கிற வேலையைப் பாருங்க............

    பதிலளிநீக்கு
  11. பெயரில்லா24 ஜூலை, 2012 20:03

    //உண்மையில் தல ரசிகனான நானே அஜித் நடித்த திருப்பதி, ஆழ்வார், ஜனா மற்றும் அசல் போன்ற படங்களை தலயே என்னை நேரில் அழைத்து பார்க்க சொன்னாலும் பார்க்க மாட்டேன்.///

    ஹீ ஹீ... நானும்தான்

    பதிலளிநீக்கு
  12. பெயரில்லா24 ஜூலை, 2012 20:13

    படத்த பத்தி சொல்லனும்னா பல பேர் சொன்ன மாதிரி படம் ஒன்னும் அவ்வளவு மொக்க இல்ல.. ஆனா கண்டிப்பா மங்காத்தா அளவுக்கு இல்ல பிரதர், அதுக்காக நீங்க, ஏகன் மாதிரியா?ன்னு கேட்டீங்கன்னா, நிச்சயமா இல்ல இல்ல இல்ல , அவ்வளவு ஏன், அசல விடவும் பெட்டரா இருக்கு..ஆஞ்சநேயா?, ஜனா?, ஆழ்வார்? ஜி? ஐயய்யோ அது எல்லாத்த விடவும் பெட்டர்! அப்ப எந்த மாதிரி? பில்லா-1 மாதிரின்னு சொல்லலாமா? ஆன்சர் தெரியலயே!!
    சரி யாரோ இது அஜித்தின் ராஜபாட்டை!! ன்னு சொன்னாங்களாமே? ஐயோ சொன்னவரு வாய் அழுகி போகனும், சாமி சத்தியமா அதவிட 1634 மடங்கு மேல இந்த பில்லா-2.. சகுனி? எதுக்கு நாங்க ஒரு நடிகரின் படத்த இன்னொரு நடிகர் படத்தோட கேவலமா கம்பேர் பண்ணிக்கிட்டு!!!
    ஸ்க்ரீன்பிளே மோசமா? இல்லையே!! இத விட பெட்டரா இந்த படத்துக்கு செய்ய முடியுமா? எல்லாம் சீனும் சீக்குவன்சா இருக்கு, ஒன்னு ரெண்டு டர்னிங் பாயிண்ட்ஸ் கூட இருக்கு!! கிட்டதட்ட சுவாரஷ்யமா இருக்கு!! அப்ப எங்க பிழைச்சிச்சி? ஹ்ம்ம்!! ஆனா சக்ரி டோலாட்டி மேல கொஞ்சம் கோவமா இருக்கு!! சரி கடைசியா நீ என்னதான் சொல்ல வர்ற? ம்ம்ம்ம்ம்ம். இப்புடி வேணும்னா சொல்லலாம், தல ரசிகர்கள், தலக்காக இந்த படத்த ஒரு வாட்டி பார்க்கலாம், ஏன் தல ரசிகர்கள் ரெண்டு வாட்டி கூட பார்க்கலாம்!! அப்ப மத்தவங்க? அவுங்க தேவைபட்டா பார்க்கலாம், வேணும்னா பார்க்கமா கூட இருக்கலாம்!!

    பதிலளிநீக்கு
  13. நல்ல அலசல்..நன்றி..நானும் படம் பார்த்தேன்..அம்புட்டு மோசமுனு சொல்ல முடியாது..இதைவிட மோசமா நிறைய படங்கள் வந்துட்டுதான் இருக்கு..
    யாரோ சில நடிகர்கள்..நமக்கு பிடிச்சிருக்கு..அவ்வளவுதானே..இதுல எதுக்கு ரசிகர்கள் மோதிக்கிறாங்க..

    பதிலளிநீக்கு
  14. padam nallathaan erukku ok !

    aanal ennum nallapanrathukku naraiya amsangal erukku toloti miss pannittar.

    ajith eppavumpola super !

    பதிலளிநீக்கு
  15. நல்ல பதிவு


    நன்றி,
    ஜோசப்
    --- ezedcal. com (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம். பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    பதிலளிநீக்கு
  16. hmhm... yeah, you were right in a lot of things but- Personally i thought that the character was not fleshed out right. Billa was not cunning enough. In every scene, first he gets cheated, then he fights back (thats not really how you become something like don).

    The screen play was horrible. there was no flow. You see- I love ajith in Vaali. I want that guy- I want that kind of suspense and story.

    And when you expect something from a good actor like ajith- It just disappointing you if he doesn't deliver. I don't want a movie that I can see once from ajith, I want a memorable classic.

    பதிலளிநீக்கு
  17. indha karuthu nala unakku enna labam>
    neram waste....
    avanugalukku nee podra ovvoru karuthum kaasu.... inumayavathu thirunthungada....

    பதிலளிநீக்கு
  18. இது சூப்பர் படம். உலகில் இதுவரை வந்த படங்களிலே இதுதான் டாப்பு. இனிமேலும் இதுபோன்ற படம் வருமா என்பது டவுட்டே?

    பதிலளிநீக்கு
  19. @பெயரில்லா

    unakku history e olunga theriyaathu.. pesaama pillai kuddikalai padikkavaikkira velaiyaippaaru,,,,, thirumala-aanchaneya thaan ondaa vanthathu.. thiruppaachchi-ji ondaa varela..villan-bakavathy, dheena-friends, paramasivan-aathy intha 3 race layum ungaal mankavviyathu theriyaatho!

    பதிலளிநீக்கு
  20. @deepak cbe

    டே உண்ட சொறிநாய் எத்தனை ஹிட் குடுத்தான்? அவன் வார எல்லாப்படத்துக்குமே சக்சஸ் மீட்டிங் வைப்பான்..நீங்களும் நம்பிட்டு இருங்கடா.. கொஞ்சம்கூட பகுத்தறிவுடன் ஜோசிக்கிற தன்மையில்லா ஈனப்பிறவிகள்டா நீங்கள்...

    பதிலளிநீக்கு
  21. அஜித் இல்லையேல் ஆரம்பத்திற்கு ஆரம்பம் கூட கிடைத்திருக்காது. அஜித்தை திரையில் காட்டினாலே திரையங்கம் ஆனந்த அலறல் போடுகிறது. வாய் திறந்து ஏதாவது பேசிவிட்டால் விசில் சத்தம் காதைக் கிழிக்கிறது. சர்வநிச்சயமாக ரஜினிக்கு அடுத்து அஜித்துக்கு தான் அதிக மாஸ் !

    பதிலளிநீக்கு
  22. பெயரில்லா29 ஜனவரி, 2023 22:29

    bro..film romba super a irukum and is a bigger hit thatn Thuppaki..theryaadha enna ungaluk , neenga dhan THALA rasigar ache

    பதிலளிநீக்கு