திங்கள், ஜூலை 02, 2012

Come September (1961) - ஹாலிவுட் திரைப்பட விமர்சனம்

Come September 1961 English Movie Tamil Review 1
 ஒரு நாள் நானும், என் அப்பாவும் டிவியில் எம்.ஜி.ஆர் நடித்த 'அன்பே வா' படத்தை பார்த்துக்கொண்டிருந்த போது, 'இந்த படம் Come September' என்ற ஆங்கில படத்தின் தழுவல்' என்று என் அப்பா சொன்னார். கொஞ்சநாள் கழித்து என் நண்பருடைய Hard disk ஐ ஆராய்ந்தபோது, இந்த படம் அதில் இருந்தது. அதை என்னுடைய Hard Disk இல் copy
செய்துகொண்டேன்.
இது நடந்து ஒரு வருடம் இருக்கும். ஆனால் இந்த படத்தை சமீபத்தில் தான் பார்த்தேன். உண்மையில், நான் இது போல ஒரு அருமையான படத்தை பார்த்ததில்லை. இதற்க்கு முன் 'Catch me if u can' படத்தை பார்த்திருக்கிறேன். அது வேறு ரகமான படம். படம் பார்க்கும்போதே கண்டிப்பாக இந்த படத்தை பதிவெழுத வேண்டும் என்று நினைத்தேன். அதுமட்டுமல்ல, இது நான் எழுதும் முதல் ஆங்கில பட திரை விமர்சனம்.



 Robert L. Talbot ஒரு அமெரிக்க பணக்காரர். இவர் தன் விடுமுறையை கொண்டாட இத்தாலியில் உள்ள தன் Guest House க்கு தன் காதலி லிசாவுடன் வருகிறார். ஆனால் அந்த மாளிகையை நிர்வகித்து வரும் ராபர்ட்டின் மேனேஜர் அந்த இடத்தை ஒரு ஹோட்டலாக மாற்றி காசு சம்பாதித்து கொண்டிருக்கிறார். ராபர்டிற்கு இந்த விஷயம் தெரிய வந்ததும், அவர் அங்கே தங்கியிருப்பவர்களை உடனடியாக காலி செய்ய சொல்கிறார். அங்கே சில பெண்கள் இத்தாலியை சுற்றி பார்க்க வந்திருக்கிறார்கள். அந்த பெண்களால் இவருக்கு என்ன பிரச்சனை? அந்த பெண்களை பார்க்க வரும் சில வாலிபர்களை இவர் எப்படி சமாளிக்கிறார்? என்பதை நகைச்சுவையோடு ரொமான்டிக்காக சொல்லியிருக்கும் படம் தான் 'Come September' படம்.
Come September 1961 English Movie Tamil Review 2
 இந்த படத்தின் கதாநாயகன் Robert L. Talbot ஆக Rock Hudson நடித்திருக்கிறார். இவர் ஹாலிவுட்டில் 1950 மற்றும் 1960 களில் ரொமாண்டிக் ஹீரோவாக வலம் வந்தவர். இந்த படத்தில் இவர் இவரின் வீட்டின் எதிரில் டென்ட் அடித்து தங்கும் இளைஞர்களோடு மல்லுகட்டுவது செமையாக இருக்கும். குறிப்பாக அந்த இளைஞர்களோடு குடித்துவிட்டு, அவர்கள் மட்டையான பிறகு, மிகவும் ஸ்டைலாகவும் பொறுமையாக தன் ரூமிற்கு வந்து 'டமார்' என்று போதையில் விழுவது செம காமெடி. இவருக்கு அடுத்து எனக்கு இந்த படத்தில் பிடித்த நடிகர், Bobby Darin. Tony என்ற விடலைபருவ இளைஞராக அழகாக நடித்திருக்கிறார் இவர். ஹீரோவை அலைய விட நினைத்து, கடைசியில் இவர் பல்பு வாங்குவது செம. இந்த படத்தில் இவர் பாடும் 'Multiplication, Thats the name of the Game' பாடல் ரொம்ப அருமையாக இருக்கும்.



 ராக் ஹட்சனுக்கு காதலியாக நடித்திருக்கும் Gina Lollobrigida அழகாக நடித்திருக்கிறார். இவர் ஒரு இத்தாலி நடிகை. கண்களால் காதல் மொழி பேசியும், காமெடியில் கலக்கவும் செய்கிறார் இவர். இப்போதுள்ள ஹாலிவுட் நடிகைகளை ஒப்பிடும்போது இவர் எவ்வளவோ தேவல. பாபி டரினின் காதலியாக வரும் Sandra dee யும் நன்றாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் நடித்தபோது பாபி டரினும் Sandra Dee காதலாகி அது திருமணத்தில் முடிந்தது தனிக்கதை. படத்தில் நடித்த மற்ற நடிகர்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
 இந்த படத்தை இயக்கியது Robert Mulligan. தயாரிப்பு - Universal Pictures. படம் வெளியான தேதி - 9th August 1961. உண்மையில் நல்ல பொழுதுபோக்கான படம் இது. இந்த படத்திற்கு பிறகு நான் இப்போது நிறைய Romantic Comedy படங்களை தேடி பிடித்துப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். ஆனால் எந்த படமும் இந்த படம் போல வரவில்லை என்பதே உண்மை.





(தயவுசெய்து படித்ததோடு மட்டுமல்லாமல் வாக்களித்து, பின்னூட்டமிட்டு என்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தவும்).




என்றும் அன்புடன்


9 கருத்துகள்:

  1. இன்றுதான் இந்த திரைப்படத்தை கேள்விப்படுகிறேன். இப்போது இது இங்கு கிடைக்குமோ தெரியவில்லை. தேடித்தான் பார்க்கவேண்டும். உங்கள் விமர்சனம் அபாரம்.

    கொஞ்ச நாளாவே சினிமா சார்ந்த பதிவுகளாவே இருக்கு பாஸ். பழைய பாணியிலும் கொஞ்சம் எடுத்துவிடுங்களன்.

    பதிலளிநீக்கு
  2. விமர்சனம் நன்று. ''அன்பே வா'' திரைப்படம் இந்த படத்தின் Copy எந்தபு புதுத் தகவல்.

    பதிலளிநீக்கு
  3. @Gobinath
    வருகைக்கு நன்றி கோபி. அடுத்த பதிவு 'டிராகுலா' பற்றி.

    பதிலளிநீக்கு
  4. நல்ல விமர்சனம் பண்ணியிருக்கீங்க. படமும் சுவாரஸ்யமாத் தெரியுது. சீக்கிரமே டவுன்லோட் செய்துவிடுகிறேன்.

    பழைய காமெடிப் படம் வேண்டுமென்றால் Some Like it Hot எடுத்துப் பாருங்கள். பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
  5. MGR காலத்திலிருந்தே ஆங்கில மற்றும் பிற மொழி படங்களின் கதையை copy அடிக்க ஆரம்பிச்சிட்டாங்களா!!!!!!!!

    பதிலளிநீக்கு
  6. அன்பே வா படத்தோட ஒரிஜினல்ன்னு இந்த படத்தை கேள்விப்பட்டு இருக்கேன்..., இன்னும் பார்க்கல சீக்கிரம் பாக்கணும் :).. நல்ல விமர்சனம்..,

    பதிலளிநீக்கு
  7. \\(தயவுசெய்து படித்ததோடு மட்டுமல்லாமல் வாக்களித்து, பின்னூட்டமிட்டு என்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தவும்).\\இப்படி எழுதி வச்சிட்டு ஓட்டுப் பட்டை எல்லாத்தையும் Inactive ஆக வச்சிருந்தா எப்படி ஓட்டு போடுவது?

    பதிலளிநீக்கு
  8. \\இன்றுதான் இந்த திரைப்படத்தை கேள்விப்படுகிறேன். இப்போது இது இங்கு கிடைக்குமோ தெரியவில்லை. தேடித்தான் பார்க்கவேண்டும். \\


    http://www.youtube.com/watch?v=qPqeDxBEOC8

    பதிலளிநீக்கு