வியாழன், மார்ச் 24, 2011

நகைச்சுவை நடிகர் சந்திரபாபு - சில உண்மையான குறிப்புகள்


தமிழ் சினிமாவின் உலகில் முதன்முதலாக மிகவும் நேர்த்தியாக உடை அணியும் பழக்கத்தை (கோட், சூட் அணியும் பழக்கம்) கொண்டுவந்த பெருமை சந்திரபாபுவையே சாரும். அவர் உடை அணியும் அழகே தனி. புதிய நாகரிகத்தை தன்னை பார்த்து பிறர் தெரிந்துகொள்ளும்படி உடை அணிவார்.

சந்திரபாபுவுக்கு மிகவும் பிடித்த உடை - வெள்ளை சட்டை, கருப்பு பேண்ட். சட்டையின் கையை மடித்துவிட்டிருப்பது அழகாக இருக்கும். பேண்ட் பாக்கெட்டுக்கு வெளியே கர்சிப் தெரிவதுபோல் ஸ்டைலாக வைத்திருப்பார்.
Perfume மீது அதிக காதல் கொண்டிருந்தார் சந்திரபாபு. அவருக்கு மிகவும் பிடித்த Perfume - Channel 5. படபிடிப்புகளில், காட்சியில் நடித்துவிட்டு வந்ததும் - 'ரெவ்லான்' என்ற உயர்தர சென்ட் பூசப்பட்ட வெள்ளை நிற கர்சிப்பை எடுத்து முகத்தை துடைத்துகொள்வது, சந்திரபாபுவின் வழக்கம்.
'ஓ Jesus' என பெருமூச்சு விட்டபடி, அமெரிக்க பாணியில் அடிக்கடி உச்சரிப்பார். வெகுநேரம் மெளனமாக வேறு எங்கோ பார்ப்பதுபோல் இருந்துவிட்டு, தம் முன் உள்ள நபரை சட்டென்று திரும்பிப்பார்த்து குழந்தைபோல் புன்னகைப்பார்.
வீட்டில், பெரும்பாலும் வெள்ளை நிற கட்டம் போட்ட லுங்கியைத்தான் அணிந்திருப்பார். பனியன் இல்லாமல் வெள்ளைநிற முழுக்கை சட்டை அணிந்திருப்பார். பொத்தான்கள் போடப்படாமல் இருக்கும். கையை மடித்து விட்டிருப்பார்.
சோபாவில் ஏறி சம்மணம் போட்டு உட்கார்ந்து, Gold Flake சிகரெட்டை ஸ்டைலாக ரசித்து குடிப்பார்.
ரேடியோகிராமில், வெளிநாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட அமெரிக்க, ஸ்பானிய, Mexican இசைத்தட்டுக்களை போட்டு ஓடவிட்டு, பக்கத்தில் இருப்பவர் யாராக இருந்தாலும் சரி, அவரை தன்னுடன் நடனமாட அழைப்பார். தன்னுடன் ஒழுங்காக ஈடுகொடுத்து ஆடாதவர்களை செல்லமாக கெட்ட வார்த்தைகள் சொல்லி திட்டுவார்.
ஷூட்டிங்கின்போது, துண்டுதுண்டாக நறுக்கப்பட்ட பச்சை காரட்களையும் வெள்ளரிகளையும் ஒரு தட்டு நிறைய வைத்து சாப்பிடுவார் சந்திரபாபு.
யாருக்கு போன் பண்ணினாலும், வெளியில் இருந்து அழைப்பு வரும்போதும், 'ஹலோ' என தொடங்காமல், 'சந்திரபாபு' என, தன் பெயரை ரசனையுடன் சொல்லி உரையாடலை அழகாக தொடங்குவார்.
யாரையும் 'சார்' போட்டு அழைக்கமாட்டார் சந்திரபாபு. எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் பெயருக்கு முன்னால் 'மிஸ்டர்', 'மிஸ்', 'மிஸ்ஸஸ்' சேர்த்து அழைப்பதே சந்திரபாபுவின் பழக்கம்.
வீட்டில், தானே சப்பாத்தி மாவு பிசைந்து, உருட்டி, சப்பாத்திகளை போட்டு சுட்டு எடுத்து, அதற்கு தொட்டுக்கொள்ள பதார்த்தமும் ஏதாவது செய்து வைத்துவிட்டு, குளித்துவிட்டு வந்து, பாட்டிலை திறந்து ஒரு கிளாசில் விஸ்கியை ஊற்றி வைத்துக்கொண்டு, சப்பாத்தியை கத்தியால் அழகாக வெட்டி ஸ்டைலாக உண்பார் சந்திரபாபு.
சந்திரபாபு - ராஜா அண்ணாமலைபுரத்தில் (அந்நாளில் கேசவபெருமாள்புரம்) சொந்தமாக வீடு ஒன்று கட்டினார். இரண்டு மாடிகள் கொண்ட வீடு இது. தரைதளத்தில் இருந்து இரண்டாவது தளத்திற்கு காரிலேயே செல்லும்படியாக கட்டப்பட்டது.
ஒருமுறை - தொலைபேசியில் மனோரமாவிடம், ''நான் ராஜா அண்ணாமலைபுரதுல19 கிரௌண்டுல ஒரு வீடு கட்டுறேன் மனோரமா. அந்த மாதிரி வீடு எங்காவது இருக்குன்னு யாராவது சொல்லட்டும், அந்த வீட்டை நான் குண்டுவச்சி வெடிச்சிடுவேன்'' என்று தான் கட்டும் வீட்டை பற்றி பெருமையாக சொன்னார் சந்திரபாபு. இந்த வீடு, 'மாடி வீட்டு ஏழை' படத்தால் ஏற்பட்ட கடனால், அவர் கையை விட்டுப்போனது.
சந்திரபாபு, கார் ஓட்டுவதில்கூட ஒரு வித்தியாசத்தை கடைப்பிடித்து வந்தார். அவர் தனது பியட் காரை ஒட்டி செல்லும்போது பார்ப்பவர்கள் - ஒன்று பயப்படுவார்கள், இல்லை சிரிப்பார்கள். காரணம், அடிக்கடி தன் முழங்கைகளாலேயே ஸ்டியரிங்கை பிடித்து காரை வளைத்து திரும்பி, அவர் ஓட்டும் வேகம் பிறரை திரும்பிபார்க்க வைக்கும். இப்படி ஒட்டி சிறிய விபத்துக்கள் சிலவற்றையும் சந்தித்துள்ளார்.
''எனக்கு மேலைநாட்டு நாகரிகங்களை, பழக்கவழக்கங்களை கற்றுக்கொடுத்தவன் அவன். என்னை கிளப்புக்கெல்லாம் அழைத்து செல்வான். அதற்காக என்னை டை, கோட் எல்லாம் அணியவைப்பான். என்னைப்பற்றி என் இசையறிவை பற்றி, இசையில் எனது டெஸ்ட்டை பற்றி முழுமையாக தெரிந்துகொண்டவன் என் நண்பன் சந்திரபாபு தான். அவன் சந்தோஷத்துக்கும் குடிப்பான், கவலைக்கும் குடிப்பான், கோபத்திலும் குடிப்பான்'' என்று தன் நண்பனின் செய்கைகளை பற்றி கூறியுள்ளார் MS. விஸ்வநாதன்.
'யார்டிலிங்' (குரலை இழுத்து இழுத்து பிசிர் அடிப்பது போல் பாடுவது) என்ற பாடும் முறை, மேலை நாட்டை சார்ந்தது. ஹிந்தியில் நடிகர் கிஷோர் குமார் அடிக்கடி யார்டிலிங் செய்வார். சந்தோஷமாக பாடப்படும் பாடல்களின் இடையே யார்டிலிங் செய்வார்கள். தமிழ் பாடல்களில் யார்டிலிங் என்ற முறையை கொண்டுவந்த பெருமை சந்திரபாபுவையே சாரும்.
'குங்கும பூவே...' பாடல் 'சபாஷ் மீனா' படத்துக்காக உருவாக்கப்பட்டதுதான். தயாரிப்பாளர் P.R. பந்தலுவை விட்டுவிலகிய சந்திரபாபு, அந்த பாடலை 'மரகதம்' படத்துக்காக பாடிவிட்டார்.
பாக்யராஜின் மிக சிறந்த திரைக்கதை அம்சம் உள்ள படமான 'அந்த 7 நாட்கள்' - சந்திரபாபுவின் நிஜ வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட படம் என்ற பேச்சு அந்த சமயத்தில் வந்தது.
ஒரு நடிகனுக்கு பெயர் என்பது, அவனுக்கென்று ஒரு தனி பாணி உருவாக்கிகொள்வதுதான். பிற்காலத்தில் வேறு யாராவது அந்த பாணியை பின்பற்றி நடிக்கவேண்டும். அதைபார்த்து இது அந்த நடிகரின் பாணி என மற்றவர்கள் கூறவேண்டும். சந்திரபாபுவும் அப்படி தனக்கென தனி பாணி உருவாக்கி கொண்டவர் தான். ஆனால் அவரது பாணியை பின்பற்றி நடிப்பது என்பது யாராலும் இயலாத காரியம். ஒரு ரிக்க்ஷாகாரன் பாத்திரம் என்றால் அதற்கு ஏற்றாற்போல் தன் நடை, உடை, பாவனைகளை மாற்றி அசத்துவார். அதேபோல் ஜெர்ரி லூயிஸ் போன்ற ஹை-கிளாஸ் காமெடிக்கும் பொருந்திவந்த நபர் சந்திரபாபு.
தன் திறமைமீது அவருக்கு கர்வம் உண்டு. அதற்காக அதை திமிர் என்று சொல்லமுடியாது. ஆனால், பலரால் 'திமிர் பிடித்தவன்' என தவறாக புரிந்துகொள்ளப்பட்டவர். தன் புதுமையான ஐடியாக்களை தான் நடிக்கும் படங்களில் தன் கேரக்டர்களில் செயல்படுத்தி பார்க்க நினைப்பவர் சந்திரபாபு. தன் நினைப்பதை, செயல்படுத்த நினைத்த ஐடியாக்களை செயல்படுத்தியே தீரவேண்டும் என்ற பிடிவாத குணம் உண்டு. தான் சொல்வது தவறு என்று தெரிந்தால், தயங்காமல் ஒப்புக்கொள்வார். அதற்காக வருத்தம் தெரிவிப்பார்.
1958-இல் சந்திரபாபுவுக்கு 'நடிகமணி' என்றொரு பட்டம் கொடுக்கப்பட்டது. பட்டத்தை அளித்தவர், அப்போதைய அமைச்சர் லூர்த்தம்மாள் சைமன்.
ஒரு நகைச்சுவை நடிகர் பாடிய 'சோக கீதங்கள்' பெரிய அளவில் ரசிக்கப்பட்டது சந்திரபாபு பாடல்களை மட்டும்தான்.
இன்றும் பெரும்பாலான லைட் மியூசிக் குழுக்களில் - யாராவது ஒருவர், சந்திரபாபுவின் குரல், மேனரிசம், நடனம் என அவரது பாடல்களை இந்த தலைமுறைனரிடமும் பரப்பி வருகின்றனர். அவரது பாடல்களுக்கு இந்த தலைமுறையினரிடமும் நல்ல வரவேற்பு கிடைக்கிறது.
'சென்னை சினிமா ரசிகர்கள் சங்கம்' சார்பாக ஆண்டுதோறும் திரை கலைஞர்களுக்கு விருது வழங்கப்பட்டு வந்தது. அதில் 1957 முதல் 'சிறந்த நகைச்சுவை நடிகர்-நடிகை' என விருதுகள் உருவாக்கப்பட்டன. அதில் முதல் விருதை பெற்றவர் சந்திரபாபு தான். படம்: 'மணமகன் தேவை'.
தன்னம்பிக்கை ஒரு மில்லிலிட்டர் கூடிப்போனாலும் தலைகனம் ஆகிப்போகும். சந்திரபாபுவிடம் இருந்தது தன்னம்பிக்கை மட்டுமே. அதற்கு உதாரணம், இலங்கை வானொலியில் அவர் பேட்டி கொடுக்கும்போது - 'உலகத்திலேயே சிறந்த நடிகர் யார்?' என பாபுவிடம் கேள்வி கேட்கப்பட்டபோது, 'There is only one சந்திரபாபு. அடுத்து சிவாஜி கணேசன் நல்லா நடிக்கிறான்' என்று பேட்டி கொடுக்க, சிவாஜி கணேசனின் வெறித்தனமான ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்துக்கொண்டார் சந்திரபாபு.
நடிகை சாவித்திரி ஒருமுறை இந்தோனேசியாவுக்கு போயிருந்தபோது, அப்போதைய அந்நாட்டு அதிபர் சுகர்தோ கொடுத்த விருந்தில் கலந்துகொண்டார். அதிபரின் வற்புறுத்தலால் விருந்தில் மது அருந்திய சாவித்திரி, அதன்பிறகு மதுவுக்கு அடிமையாகிவிட்டார். மாலை நேரங்களில் மது அருந்த சாவித்திரிக்கு 'கம்பெனி' கொடுத்தவர் சந்திரபாபு தான். இருவருக்கும் இடையே முறையற்ற உறவு இருந்தது என்று சொல்லப்பட்டது. 'சாவித்திரியால் சந்திரபாபு கெட்டான்', 'சந்திரபாபுவால் சாவித்திரி கெட்டாள்' என்றும் சொல்லப்பட்டது.
ஒருவரை பற்றி விமர்சனம் செய்யும்போது, அந்த நபருக்கு எதிரான உண்மையான கருத்துக்களை கூற சந்திரபாபு தயங்கியதே இல்லை. அதனால் வரும் பின் விளைவுகளை பற்றி அவர் யோசித்ததும் இல்லை. மனதில் தோன்றியதை உதட்டில் பேசிவிடுவார். இதனால் அவர் அடைந்த இன்னல்கள் ஏராளம்.
ஒருமுறை சந்திரபாபு மது அருந்தியிருந்த நிலையில், ஒரு பத்திரிக்கைக்கு பேட்டி கொடுத்தார். அந்த பேட்டி, அவருக்கு திரை உலகில், பலரது வெறுப்பை சம்பாதித்து கொடுத்தது. அந்த பேட்டியில்...
ஜெமினி கணேசன் பத்தி என்ன நினைக்கிறிங்க?
அவன் என்னோட ஆதி கால நண்பன். திருவல்லிகேணியில குப்புமுத்து முதலி தெருவில ஒரு மாடியில நான் குடியிருந்தேன். அப்பா அவன் 'தாய் உள்ளம்' படத்துல நடிச்சிகிட்டிருந்தான். அப்பா அவனுக்கு நான் காமெடி எப்படி பண்ணனும், பேத்தாஸ்னா எப்படி பண்ணனும், லவ் சீன எப்படி பண்ணனும்னு நடிச்சி காட்டினேன். அடே அம்பி, இத்தனை வருஷம் ஆச்சேடா, இன்னும் நடிப்புல எந்த முன்னேற்றத்தையும் காணுமேடா. நீ போன ஜென்மத்துல வட்டி கடை வச்சிருந்திருப்படா, படுபாவி.
சிவாஜி கணேசன் பத்தி உங்க அபிப்ராயம் என்ன?
அவர் நல்லா நடிகர். பட், அவரை சுத்தி காக்கா கூட்டம் ஜாஸ்தி இருக்கு. அந்த ஜால்ரா கூட்டம் போயிடிச்சின்னா அவர் தேறுவார்.
MGR பத்தி உங்க அபிப்ராயம் என்ன?
அவர் கோடம்பாக்கத்துல ஒரு ஆஸ்பத்திரி கட்டுறதா கேள்விப்பட்டேன். பேசாம கம்பவுண்டரா போகலாம்.
அந்த மூன்று உச்ச நடிகர்களும், சந்திரபாபுவிடம் இருந்து விலகிச்செல்ல காரணமாக அமைந்தது இந்த பேட்டி தான்.
மிகப்பெரிய போராட்டத்துக்கு பின் திரையுலகுக்கு வந்த சந்திரபாபு, மிக குறுகிய காலத்தில் அளப்பரிய சாதனைகள் செய்துவிட்டு இறந்துபோனவர். தமது சொந்த வாழ்க்கையின் ஆறாத சோகங்களை மறைத்துக்கொண்டு மக்களை சிரிக்கவைத்த மகத்தான கலைஞர். சற்றும் நம்பமுடியாத அதிரடி கருத்துக்களை அடிக்கடி வெளியிட்டு, திரையுலகினரை தர்மசங்கடத்துக்கு உள்ளாக்கியவர்.
ஆனால் சந்திரபாபு பேசியதெல்லாம் சத்தியம். அந்த காலத்து முன்னணி கலைஞர்கள் பலருடனான தமது கசப்பான அனுபவங்களை சந்திரபாபுவே பல்வேறு தருணங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார். அவர்களெல்லாம் அவரது கண்ணீரை அதிகமாக்கியவர்கள்.
பதிலுக்கு சந்திரபாபு வெளிப்படுத்தியது புன்னகை மட்டுமே.



தகவல்கள்: 'கண்ணீரும் புன்னகையும்' புத்தகம், கிழக்கு பதிப்பகம்



(தயவுசெய்து படித்ததோடு மட்டுமல்லாமல் வாக்களித்து, பின்னூட்டமிட்டு என்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தவும்).

23 கருத்துகள்:

  1. பல விஷயங்கள் தெரிந்து கொண்டேன் நன்றி நண்பா

    பதிலளிநீக்கு
  2. படிக்கும் ஆர்வம் உள்ளவர்களால்தான் அருமையாக எழுத முடியும்., இந்த பதிவில் உங்கள் வாசிப்பின் ஆளுமை புரிகிறது

    பதிலளிநீக்கு
  3. // பேண்ட் பாக்கெட்டுக்கு வெளியே கர்சிப் தெரிவதுபோல் ஸ்டைலாக வைத்திருப்பார்//
    இது ஸ்டைல் என்று சொல்வது அபத்தமாக உள்ளது...

    //சோபாவில் ஏறி சம்மணம் போட்டு உட்கார்ந்து, Gold Flake சிகரெட்டை ஸ்டைலாக ரசித்து குடிப்பார்.//
    //பக்கத்தில் இருப்பவர் யாராக இருந்தாலும் சரி, அவரை தன்னுடன் நடனமாட அழைப்பார். தன்னுடன் ஒழுங்காக ஈடுகொடுத்து ஆடாதவர்களை செல்லமாக கெட்ட வார்த்தைகள் சொல்லி திட்டுவார்.//
    //குளித்துவிட்டு வந்து, பாட்டிலை திறந்து ஒரு கிளாசில் விஸ்கியை ஊற்றி வைத்துக்கொண்டு, சப்பாத்தியை கத்தியால் அழகாக வெட்டி ஸ்டைலாக உண்பார் சந்திரபாபு.//
    மேற்சொன்ன எந்த விஷயமாவது மக்களை நல்வழிப்படுத்துமா?
    //தொலைபேசியில் மனோரமாவிடம், ''நான் ராஜா அண்ணாமலைபுரதுல19 கிரௌண்டுல ஒரு வீடு கட்டுறேன் மனோரமா. அந்த மாதிரி வீடு எங்காவது இருக்குன்னு யாராவது சொல்லட்டும், அந்த வீட்டை நான் குண்டுவச்சி வெடிச்சிடுவேன்'' என்று தான் கட்டும் வீட்டை பற்றி பெருமையாக சொன்னார் சந்திரபாபு//
    இப்படி சொல்பவன் எப்பேற்பட்ட தற்பெருமைக்காரனாக இருப்பான்?

    இன்னும் குடிப்பது கூத்தடிப்பது பற்றிதான் அதிகம் சொல்லப்படிருக்கிறது..
    இந்த பதிவில் நகைச்சுவையும் இல்லை...நல்ல செய்தியும் இல்லை..
    சந்திரபாபுவைப் பற்றி தெரிந்து என்ன ஆகப்போகிறது..?
    சினிமாக்காரர்களை புகழ்வதால் எந்தவிதமான நன்மையையும் விளையப்போவதில்லை..
    இது ஒரு உபயோகமற்ற பதிவு..

    பதிலளிநீக்கு
  4. ///பல விஷயங்கள் தெரிந்து கொண்டேன் நன்றி நண்பா///


    நன்றி விக்கி உலகம்

    பதிலளிநீக்கு
  5. ///படிக்கும் ஆர்வம் உள்ளவர்களால்தான் அருமையாக எழுத முடியும்., இந்த பதிவில் உங்கள் வாசிப்பின் ஆளுமை புரிகிறது///

    நன்றி ராஜகோபால்

    பதிலளிநீக்கு
  6. சந்திரபாபுவைப் பற்றி பல சுவாரசியமான தகவல்கள் சொல்லப்பட்டிருக்கிறது.

    வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  7. பெயரில்லா29 மார்ச், 2011 17:59

    Is Actor Charli, son of Mr.Chandrababu?

    பதிலளிநீக்கு
  8. திரு மர்மயோகிக்கு,
    இந்த பதிவு மக்களை நல்வழிப்படுத்தும் பதிவு என்று நான் எப்போது சொன்னேன்? இந்த பதிவு மறைந்த ஒரு நகைச்சுவை நடிகரை பற்றிய உண்மையான பதிவு. பொதுவாகவே சினிமாவில் சிலர் ஹீரோவாக வலம்வந்தாலும் நிஜவாழ்க்கையில் எப்படி இருந்தார்கள் என்பதற்கான சாட்சி இந்த பதிவு. ஒருவர் எவ்வளவு பெரியாளாக இருந்தாலும், கட்டுப்பாடாக வாழத்தவறினால் இது தான் கதி என்று நீங்கள் எடுத்துக்கொள்ளலாமே?

    பதிலளிநீக்கு
  9. //சந்திரபாபுவைப் பற்றி பல சுவாரசியமான தகவல்கள் சொல்லப்பட்டிருக்கிறது.

    வாழ்த்துகள்//

    நிகழ்காலத்திற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  10. //Is Actor Charli, son of Mr.Chandrababu?//

    No. Charli is not a son of Mr. Chandrababu.

    பதிலளிநீக்கு
  11. இந்தத் தகவல்களை தொகுத்து வெளியிட்டவருக்கும் ஒரு நன்றியைத் தெரிவித்திருக்கலாமே!! சாவித்திரி, சந்திரபாபு இருவருமே படமெடுத்து, குடித்து நாசமாய்ப் போனவர்கள்.

    பதிலளிநீக்கு
  12. எங்கே இருந்து இவ்வளவு தகவலை பிடித்திர்கள்.சந்திர பாபுவை நினைவு படுத்தியதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  13. //Jayadev Das சொன்னது…
    இந்தத் தகவல்களை தொகுத்து வெளியிட்டவருக்கும் ஒரு நன்றியைத் தெரிவித்திருக்கலாமே!! சாவித்திரி, சந்திரபாபு இருவருமே படமெடுத்து, குடித்து நாசமாய்ப் போனவர்கள்.//

    வருகைக்கு நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
  14. //kadhar24 சொன்னது…
    எங்கே இருந்து இவ்வளவு தகவலை பிடித்திர்கள்.சந்திர பாபுவை நினைவு படுத்தியதற்கு நன்றி.//

    வருகைக்கு நன்றி நண்பரே. கிழக்கு பதிப்பகத்தின் வெளியிட்டான 'கண்ணீரும் புன்னகையும்' என்ற புத்தகத்தில் இருந்து தான் இந்த தகவல்களை சேகரித்தேன்.

    பதிலளிநீக்கு
  15. அந்த உழக்கு பதிப்பகம், இணையம், இன்ன பிற ஊடகங்களில் இருந்து காபி அடிக்கும் அதை நீங்க காபி அடிச்சிங்களாக்கும், எதுவுமே புதுசு இல்லை, எல்லாம் பழைய சரக்கு இதுல இத படிச்சு மக்கள் கத்துகணுமா, குறைந்த பட்சம் அவர் முழு பேர போட்டு இருக்கலாம், அவர் தூத்துக்குடில பிறந்து இலங்கைல வளர்ந்தவர்னாவது செய்தி சேர்த்து இருக்கலாம். அவங்க அப்பா ஒரு பத்திரிக்கையளர், ஆங்கிலேய அரசுக்கு எதிராக கட்டுரை எழுதியதால் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார்னு விக்கில இருக்கு.

    சும்மா சினிமா செய்தி போட்டாலே படிக்காமலே நாலு பேர் சூப்பர்னு சொல்வாங்க நம்பி ஏமாந்தா நீங்க தான் தேறாம போவிங்க!(ஒரு வரி கமெண்ட் போடுறவங்க எல்லாம் தொழிலில் கெட்டி)

    பதிலளிநீக்கு
  16. It's news to me that Savithri visited Indonesia and she picked up drinking habit after having a drink with President Suharto! Only Chandrababu can comment on Sivaji and MGR as he did. Chandrababu lived in Kuppu Muthu Mudali St in Triplicane? Then, Chandrababu must have lived in a house right opposite to my paternal uncle. In elementary school days, I lived right next to that street in Bangaru Naicken Street! Surely I must have met Chandrababu then, without knowing anything about him! It was a tragedy that a comedian's life ended pathetically.

    பதிலளிநீக்கு
  17. Men of genius do not excel in any profession Because they labour in it because they excel.The golden words are created to that greater artist.by DK

    பதிலளிநீக்கு
  18. பெயரில்லா16 ஜூலை, 2014 15:33

    அருமையான தகவல்.

    பதிலளிநீக்கு