கற்க கற்க கள்ளும் கற்க...

திங்கள், மார்ச் 14, 2011

பாலச்சந்தரின் 'நிழல் நிஜமாகிறது' - திரைவிமர்சனம்

பொதுவாகவே நான் பதிவு போட நினைக்கும் படங்கள் எல்லாமே பழைய படங்கள் தான். அதுவும் நன்றாக தெரிந்த, நன்கு பரிட்சயமான படங்களை தான் நான் பதிவேற்றுவேன். ஆனால் இன்று மதியம் பொதிகை தொலைக்காட்சியில் 'இயக்குனர் சிகரம்' பாலச்சந்தரின் 'நிழல் நிஜமாகிறது' படத்தை பார்த்தபோது, 'ஆஹா, ஒரு சூப்பர் படத்தை பதிவெழுதாம
விட்டுட்டோமே?' என்று நினைத்தேன். சரி, இன்றைக்கே இந்த படத்தை பதிவெழுதலாம் என்று முடிவெடுத்து, ஒரு வழியாக முடித்து உங்களுக்கு சமர்பித்துள்ளேன். Here we go now.

வெங்கடாசலம், இந்துமதி இருவரும் அண்ணன் தங்கை. இவர்கள் வீட்டில் வேலைக்கு சேர்கிறாள் திலகம் என்ற பெண். இவர்கள் வீட்டின் எதிரில் புதிதாக குடி வருகிறார் வெங்கடாச்சலத்தின் நண்பர் சஞ்சீவி. அந்த வீட்டில் ஏற்கனவே வேலை செய்யும் காசி என்பவன் திலகத்தை ஒருதலையாக காதலிக்கிறான். ஆனால் திலகமோ வீட்டு உரிமையாளரான வெங்கடாச்சலத்தின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி தன்னையே அவனிடம் இழக்கிறாள். பின்பு அவள் கர்ப்பமாக, அதை வெங்கடாச்சலதிடம் கூறி அவளை ஏற்று கொள்ள சொல்கிறாள். ஆனால் அவளை ஏற்று கொள்ளாமலும், அவள் கர்ப்பத்திற்கு தான் காரணம் இல்லையென்றும் கூறி அவளை வீட்டை விட்டு வெளியே துரத்தி விடுகின்றான். ஆதரவின்றி தவிக்கும் அவளுக்கு சஞ்சீவி அடைக்கலம் தந்து, காசியை துணையாக வைக்கின்றார். அவளுக்கு குழந்தை பிறந்த பிறகு வெங்கடாசலம் அவளை ஏற்க வருகிறான். அதற்கு பின் என்ன நடந்தது என்பது தான் இந்த படத்தின் சூப்பர் கதையும், திரைக்கதையும், வசனமும் & இயக்கமும்.

திலகமாக ஷோபா. அருமையான தேர்வு. ஒவ்வொரு காட்சியையும் உணர்ந்து நடித்திருக்கிறார். ஒரு பதினெட்டே வயதான பெண்ணிடமிருந்து இப்படி ஒரு நடிப்பா? அபாரம். குறிப்பாக ஷோபாவின் கண்கள் அருமையாக நடித்திருக்கிறது. நம் தமிழ் சினிமாவிற்கு என்ன சாபமோ, என்ன கர்மமோ தெரியவில்லை. நல்ல நடிகைகளை தொடர்ந்து இழந்து கொண்டே இருக்கிறோம் என்பதே உண்மை. இவரின் கணவர் தான் டைரக்டர் பாலுமகேந்திரா.

காசியாக அனுமந்து. இவரை நீங்கள் பல படங்களில் காமெடியனாக பார்த்திருப்பிர்கள். ஆனால் அவரிடமும் ஒரு மிகசிறந்த நடிகன் இருக்கிறான் என்று கண்டுபிடித்தது பாலசந்தர் தான். இந்த படத்தில் இவரின் பங்கு கொஞ்சம் பெரியது தான் என்றாலும், அதை உணர்ந்து நடித்திருக்கிறார். குறிப்பாக அவரது முகபாவனைகள் அசத்தல் ரகம். தான் ஒருதலையாக காதலிக்கும் பெண் தன் முதலாளியோடு சல்லாபித்துவிட்டு வருவதை பார்க்கும்போது, அதை அமைதியான கோபத்தோடு காட்டுவது சூப்பர்.

இந்துமதியாக சுமித்ரா. சுமித்ராவை பல படங்களில் ஹீரோக்களின் அம்மாவாகவும், அக்காவாகவும் நான் பார்த்திருக்கிறேன். ஆனால் இந்த படத்தில் தான் நான் ஒரு இளம் வயது பெண்ணாக பார்கிறேன். ஒரு திமிர்த்தனமான பெண் வேடம் இது. நன்றாகவே நடித்திருக்கிறார். குறிப்பாக கமலுடனான காதலை கமலுக்கே வெளிப்படுத்தாமல் ஒரு ஈகோவோடு நடந்துகொள்ளும் நடிப்பு சூப்பர். அந்த ஈகோவை குரலிலும் ஒரு அதட்டலோடு பேசுவது Simply Super.

சஞ்சீவியாக கமல்ஹாசன். என்னடா இது? ஹீரோவை பற்றி முதலில் எழுதாமல் கடைசியில் எழுதுறிங்களே? என்று நீங்கள் கேட்கலாம். உண்மையிலேயே கமல் இந்த படத்தின் Supporting Character மட்டுமே. உண்மையான கதாநாயகன், கதாநாயகி ஷோபாவும், அனுமந்துவும் தான். இந்த படத்தில் கமலின் Body Language அபாரம். எல்லா காட்சியிலும் புகை பிடித்துக்கொண்டும், லேசாக இருமிக்கொண்டும் வசனம் பேசும் காட்சிகள் சூப்பர். படத்தில் சுமித்ரா பேசும் ஒவ்வொரு வசனத்துக்கும் கமல் பதிலடி கொடுப்பது செம.

வெங்கடாச்சலமாக சரத்பாபு. தங்கைக்கு பயந்து பேசும்போது என்னடா நீ ஒரு அண்ணன்? என்ற நினைக்க தோன்றுகிறது. இந்த படத்தில் மௌலி ஒரு அருமையான கதாபாத்திரத்தில் வருகிறார். இந்த கதாபாத்திரத்தை 'காமெடி' என்று சொல்ல முடியாது. இதுவும் ஒரு Interesting Character தான். படத்திற்கு பாடல்கள் எழுதியது கவியரசு கண்ணதாசன். படத்திற்கு இசை மெல்லிசை மன்னர் M.S. விசுவநாதன். கம்பன் ஏமாந்தான் & இலக்கணம் மாறுதோ இரண்டுமே அருமையான பாடல்கள் தான். படத்தின் திரைக்கதை, வசனம், இயக்கம் திரு K. பாலசந்தர். ஒரு புரட்சிகரமான கருத்துக்களை கொண்ட Classic Type படங்களை கொடுக்க பாலச்சந்தரால் மட்டுமே முடியும் என்பதற்கு இந்த படமும் ஒரு சான்று.

இந்த படம் 24 மார்ச் 1978 அன்று வெளியாகி பெரும் வெற்றிபெற்றது. இப்போதுள்ள இயக்குனர்களுக்கு நான் சொல்லிகொள்வது ஒன்று தான். உங்களால் பாலசந்தர் அளவுக்கு படம் பண்ண முடியாது என்பது உங்களுக்கே தெரியும். ஆனால் Atleast அவரை போல நல்ல படம் எடுக்க முயற்சியாவது செய்யுங்கள். அதுவே போதும்.
(தயவுசெய்து படித்ததோடு மட்டுமல்லாமல் வாக்களித்து, பின்னூட்டமிட்டு என்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தவும்).

Post Comment

4 comments:

பதிவுலகில் பாபு சொன்னது…

நல்ல விமர்சனம் நண்பா.. இந்தப் படத்தை நான் பார்த்ததில்லை..

N.H.பிரசாத் சொன்னது…

//பதிவுலகில் பாபு சொன்னது…
நல்ல விமர்சனம் நண்பா.. இந்தப் படத்தை நான் பார்த்ததில்லை..//வருகைக்கு நன்றி பாபு. நேரம் கிடைத்தால் இந்த படத்தை கண்டிப்பாக பர்ர்க்கவும்.

D. Chandramouli சொன்னது…

Recently, I have taken up viewing old Tamil movies - some even from 1947 onwards! I had seen KB's movie Nizhal Nijamagiridhu when it was released. But, now, I thoroughly enjoyed the moview, frame by frame. You're right. Shoba's and Ananthu's (I came to know that it was Ananthu from your blog only) acting were exceptionally good. However, I could see some artificiality in Kamal's performance. Something I noticed in most of the old movies is that villains always had a cigarette on his hand! KB was certainly a path breaker.

உலக சினிமா ரசிகன் சொன்னது…

அருமையாக எழுதி உள்ளீர்கள்.வாழ்த்துக்கள்.

புது இயக்குனர்களுக்கு கொடுத்த பளீர்...
சரியான சுளீர்.

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

கருத்துரையிடுக