கற்க கற்க கள்ளும் கற்க...

ஞாயிறு, மார்ச் 06, 2011

ரஜினியின் 'நெற்றிக்கண்' - திரைவிமர்சனம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து, சங்கர் இயக்கிய படத்தை பற்றிய பேட்டிகளில் இயக்குனர் சங்கர் 'இந்த படத்துல வர்ற 'சிட்டி Version 2.0' வில்லன் கேரக்டர் இதுவரைக்கும் வந்த ரஜினி படங்களுக்கே புதுசு' என்று கூறியதை கேட்டேன். மற்றும் இந்த படத்தின் சிட்டி ரஜினி 'ரோபோ' என்று பழுப்பு காட்டும்போது நான் அசந்தே போனேன். எனக்கு இந்த 'சிட்டியை' சிக்கிரம் பார்க்க
வேண்டும் என்று பேராவல் கொண்டேன். இந்த படத்தை முதலில் பார்த்தபோது நான் மிகவும் ரசித்தேன். ஆனால் 'சிட்டி Version 2.0' கதாபாத்திரம் என்னை கவர்ந்தது என்றாலும், பெரிதாக ஒன்றும் கவரவில்லையே என்று தோன்றியது. அதுமட்டுமல்ல, இந்த சாயலை இதற்கு முன்பே நம்ம தலைவர் நடித்து பார்த்திருக்கிறோம். அந்த படத்தில் நடித்த ரஜினியின் 10% நடிப்பே இந்த சிட்டி கதாபாத்திரம். சரி, அப்ப அந்த 100% நடிப்பில் ரஜினி கலக்கிய படம்? அது தான் ரஜினியின் 'நெற்றிக்கண்'.

கோயம்பத்தூரில் இருக்கும் ஒரு தொழிலதிபருக்கு அழகான மனைவி, ஆசைக்கு ஒரு மகள், ஆஸ்திக்கு ஒரு மகன் என்று இருந்தாலும் அவர் ஒரு சபல பேர்வழி. தான் பார்க்கும் எந்த பெண்ணையும் தன மஞ்சத்திற்கு வரவழைத்து விடுவார். இந்த விஷயம் மகனுக்கு தெரிந்து தந்தையை திருத்த பார்கிறார். இதற்கிடையில் இவர் கம்பெனியில் புதிதாக வேலைக்கு சேர்கிறார் ஒரு பெண். மகன் கொடுக்கும் நெருக்கடி தாங்காமல் ஹாங்காங் செல்கிறார் அந்த தொழிலதிபர். அங்கே Company Training காக வரும் அந்த பெண்ணை கற்பழிக்கிறார் இவர். பின்பு இந்தியா வரும் அவருக்கு மகனாலும், அந்த பெண்ணாலும் பல வித சோதனைகள் ஏற்படுகிறது. அவர் மகனும், அந்த அபலை பெண்ணும் அந்த சபல பேர்வழியை திருத்தினாரா? இல்லையா? என்பதே இந்த படத்தின் கதையும், திரைக்கதையும்.


'சபல பேர்வழி' சக்ரவர்த்தி, மகன் சந்தோஷ் என்று இரு கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த். ஆனால் இந்த படத்தில் அனைவருக்கும் பிடித்தது The one & Only 'நான் சக்ரவர்த்தி டா' தான். என்ன நடை, என்ன வசன உச்சரிப்பு, என்ன வேகம் அவரது நடையில். எல்லாவற்றிற்கும் மேல் தலைவரின் ஸ்டைல். ஒவ்வொரு காட்சியிலும் சூப்பர் ஸ்டார் ஏதாவது ஸ்டைல் செய்து கொண்டே இருக்கிறார். படத்தில் ரஜினி நடித்த இந்த ஒரு காட்சி தான் சூப்பர் என்று யாராலும் சொல்ல முடியாது. காரணம், சக்ரவர்த்தியாக வரும் ஒவ்வொரு காட்சியும் சான்சே இல்ல. மகனாக வரும் ரஜினி அமைதியாகவும், அழகாகவும் நடித்திருக்கிறார்.
மீனாட்சி சக்ரவர்த்தியாக வரும் லக்ஷ்மி வழக்கம் போல படம் முழுவதும் அழுதுகொண்டே நடித்திருக்கிறார். அதுவும் ரஜினி கேட்ட கேள்விக்கு பொய் சொல்வதும், அதற்கு ரஜினி அவரை அடித்து விட்டு Cigarette Ash Tray கேட்பதும், அதை கண்ணீரை துடைத்துக்கொண்டே எடுத்து கொடுப்பதும் செம சீன். ராதாவாக வரும் சரிதாவின் வேடம் மிகவும் அருமை. ஆனால் என்னை பொறுத்தவரை சரிதாவுக்கு ஏற்ற கதாபாத்திரம் இது இல்லை தான். ஆனாலும் கொடுத்த வேடத்தை சிறப்பாக செய்திருக்கிறார். இந்த இரண்டு பேருக்கு பிறகு நம் மனதில் நிற்பது நம்ம காமெடி தலைவர் கவுண்டர் தான். 'சம்மந்தி, நான் கேளப்பு (கிளப்) வரைக்கும் போயி பில்லியர்ட்ஸ் ஆடிட்டு வர்றேன்' என்று சொல்லும் கவுண்டரின் லொள்ளு செம. மற்றபடி சரத்பாபு, மேனகா, விஜயசாந்தி, கௌரவ தோற்றத்தில் தேங்காய் ஸ்ரீனிவாசன் என்று அனைவரும் அவரவர் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
இந்த படத்தின் கதை, வசனம் விசு. பஞ்ச் வசனங்கள் ஒவ்வொன்றும் கலக்கல். 'பிடி, குடி, லேடி அதாண்டா உன் டாடி', 'நீ சொல்ற உபதேசத்த கேக்குறதுக்கு நான் ஒன்னும் அந்த ஈஸ்வரன் இல்ல டா, நான் கோடிஸ்வரன்', நீ யுவராஜான்னா நான் சக்கரவர்த்தி டா'. படத்திற்கு திரைக்கதை கே.பாலசந்தர். இப்படி ஒரு அதிரடியான, கலக்கலான ஒரு திரைக்கதையை KB யால் தான் கொடுக்க முடியும் என்பதற்கு இந்த ஒரு படமே சாட்சி. இந்த படத்தை தயாரித்தது பாலச்சந்தரின் 'கவிதாலயம்'. படத்திற்கு இசை நம் இசைஞானி. இந்த படத்தில் வரும் பாடல்கள் இனிமையாக இருந்தாலும், இந்த படத்தில் அனைவருக்கும் பிடித்தது 'சக்ரவர்த்தி' ரஜினிக்கு கொடுக்கப்படும் அந்த Back Ground Music தான். இன்றைக்கும் அந்த வயலின் இசை பலருடைய Mobile Phone Ringtone. படத்தை இயக்கியது ரஜினியின் ஆஸ்தான இயக்குனர் SP. முத்துராமன்.
'நெற்றிக்கண்' திரைப்படம் 15 Aug 1981 சுதந்திர தினத்தன்று அலங்கார் , Bala அபிராமி, Crown என்று பல திரையரங்குகளில் வெளியாகி, வெற்றிகரமாக 100 நாட்கள் ஓடி, ரஜினியின் வெற்றிபடவரிசையில் சேர்ந்து கொண்டது. இந்த படம் என் All Time Favorite ரஜினி படங்களில் முக்கிய ஒன்றாகும். நான் முன்பே சொன்னது போல அந்த 'நெற்றிக்கண்' படத்தில் இருந்து உருவிய 10% குட்டி வில்லன் தான் இன்றைய 'எந்திரன்'.(தயவுசெய்து படித்ததோடு மட்டுமல்லாமல் வாக்களித்து, பின்னூட்டமிட்டு என்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தவும்).

Post Comment

2 comments:

பதிவுலகில் பாபு சொன்னது…

நெற்றிக்கண்.. உண்மையிலயே ரொம்ப சூப்பர் படம்தாங்க பிரசாத்..

நல்ல விமர்சனம் பண்ணியிருக்கீங்க.. வாழ்த்துக்கள்..

N.H.பிரசாத் சொன்னது…

//பதிவுலகில் பாபு சொன்னது…
நெற்றிக்கண்.. உண்மையிலயே ரொம்ப சூப்பர் படம்தாங்க பிரசாத்..
நல்ல விமர்சனம் பண்ணியிருக்கீங்க.. வாழ்த்துக்கள்..//

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி பாபு.

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

கருத்துரையிடுக