கடந்த பதிவில் அதிமுகவை பற்றி சற்று விரிவாக சொல்லியிருந்தேன். இந்த பதிவில் திமுக, அதிமுக கட்சிகளின் நிலைப்பாடுகள் குறித்தும், யார் 2011 முதல்வர் என்பதையும் இப்போது விரிவாக பாப்போம்.
கடந்த வியாழகிழமை வெளியான ஆனந்த விகடனில் 'மரியாதை மனிதர்களின் மார்க்' என்ற பகுதி வெளியாகியிருந்தது. அதில் கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்களின் பற்றி சில முக்கிய பிரமுகர்களிடம் மார்க் போட்டிருந்தார்கள். அதில் கருணாநிதி 46 மார்க்கும், ஜெயலலிதா 41 மார்க்கும் பெற்றிருந்தார்கள். அந்த கட்டுரையில் திமுகவிற்கும், அதிமுகவிற்கும் எதிராக உள்ள அனைத்தும் சத்தியமான உண்மை.
அதிமுக, கூட்டணி கட்சியினரை மதிக்காமல் நடந்துகொண்டால் அது கட்சியின் தற்கொலைக்கு சமம் என்று ஒரு முக்கிய ஆலோசகர் அம்மாவிற்கு எடுத்து கூறினார். அதை எற்றுக்கொண்டு மதிமுக மற்றும் பிற கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை பிரித்து கொடுத்துள்ளார் அம்மா.
இது ஒரு புறமிருக்க, முன்னர் அதிமுக அறிவித்த வேட்பாளர்களின் பட்டியலில் உள்ள தொகுதிகளைத்தான் அம்மா கூட்டணி கட்சிகளுக்கு இப்போது பிரித்து கொடுத்துள்ளார். அப்போது ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அந்ததந்த அதிமுக வேட்பாளர்களின் கதி? அவர்கள் கோபப்பட்டு வாக்கை எதிரணிக்கு கொடுத்தால்?
ஆக ஒருவழியாக கூட்டி கழித்து பார்த்தால், அடுத்த முதல்வர் யார் என்று சரியாக கணிக்க முடியவில்லை. காரணம், நம் தமிழக மக்கள் தான். நாம் இவர் வருவார் என்று கூறி பின்பு வேறொருவர் வந்தாலும் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. நானும் 'மக்கள் தீர்ப்பே மகேசன் திறப்பு' என்று நம்பும் ஒரு சாதாரண தமிழன் தான். பொறுத்திருந்து பார்த்து எதிர்நோக்குவோம், மே 13 ஆம் தேதிக்கு பிறகு.
வாக்காள பெருமக்களுக்கு:
தேர்தலன்று காலையில் எழுந்து, குளித்து வாக்கு சாவடிக்கு சென்று எந்த வரிசையில் நிற்கவேண்டும் என்று கேட்டு தெரிந்து கொண்டு வாக்களித்துவிட்டு வருகிறிர்கள். ஆனால் இந்த வேலைகளை செய்யும் நேரங்களில் கண்டிப்பாக ஒரு அரை மணிநேரம் நீங்கள் ப்ரீயாக இருக்கலாம். அந்த நேரத்திலாவது யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று சரியாக யோசித்து முடிவு செய்யுங்கள். நீங்கள் யோசிக்கும் அந்த அரைமணி நேரம் தான் அடுத்த ஐந்தாண்டை தீர்மானிக்க போகிறது. நீங்கள் உங்கள் கட்சி தலைவர்களின் பேச்சுக்கோ, தைரியத்துக்கோ அபிமானியாக இருக்கலாம். ஆனால் உங்கள் தலைவர் இந்த நாட்டிற்கு அபிமானியாக இருக்கிறாரா என்று தெரிந்து ஒட்டு போடுங்கள். அட அவர் நாட்டின் அபிமானியாக இல்லையென்றாலும் பரவாயில்லை, நாட்டு மக்களாகிய நமக்கு அடிப்படை தேவைகளை செய்பவராக இருந்தாலே போதும். அவருக்கு போடலாம் நம் விலைமதிப்பற்ற ஓட்டை.
(தயவுசெய்து படித்ததோடு மட்டுமல்லாமல் வாக்களித்து, பின்னூட்டமிட்டு என்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தவும்).
நல்ல அலசல் நண்பா.. யாருக்கு ஓட்டுப் போட்டாலும் ஒரே நிலைதான்..
பதிலளிநீக்குgood post
பதிலளிநீக்குVery Good Analysis! Final touch is great!! People should know the value of their Vote!! ;-))
பதிலளிநீக்கு///நல்ல அலசல் நண்பா.. யாருக்கு ஓட்டுப் போட்டாலும் ஒரே நிலைதான்..///
பதிலளிநீக்கு(பதிவுலகில் பாபு).
நன்றி பாபு. உங்கள் கருத்துக்கு நான் உடன்படுகின்றேன்.
///good post///
பதிலளிநீக்கு(Arun J Prakash)
Thank u My Friend.
//RVS சொன்னது…
பதிலளிநீக்குVery Good Analysis! Final touch is great!! People should know the value of their Vote!! ;-))//
Thank you Mr. RVS. I Agree your Words.
கருணாநிதி ஒழிந்தால்தான் தமிழகம் விளங்கும்.......மக்களை காப்பாற்றுங்கள்.....இல்லை என்றால் தமிழகம் மேலும் சுரண்டப்படும் ................கடைசியில் தமிழர்களை அடிமைகளாய் மாற்றிவிடுவார்கள்......................
பதிலளிநீக்குகுறைந்த மதிப்பெண்ணுக்கு (ஜெயலலிதா) இத்தனை ஓட்டுகள் விழுந்தது எதனாலோ ?
பதிலளிநீக்கு