திங்கள், மே 27, 2019

தேர்தல் 2019...

டந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், பா.ஜ.க கூட்டணி இந்தியா முழுவதும் உள்ள நாடாளுமன்ற தொகுதிகளில் 350 தொகுதிகளுக்கு மேல் வென்று திரும்பவும் ஆட்சியமைத்துள்ளது. அதே போல தமிழகத்தில் நடந்து முடிந்த 22 இடைத்தேர்தலில் 13 இல் தி.மு.கவும், 9 இல் அ.தி.மு.கவும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் அ.தி.மு.க அரசு இன்னும் இரண்டு வருடங்களுக்கு தொடர்ந்து ஆட்சியை தரவுள்ளது. தேர்தல் அறிவித்ததிலிருந்து, தேர்தல் முடிவுகள் அறிவித்தது வரை நடந்த கூத்துக்கள், களேபரங்கள், கணிப்புகள் என்று பல மக்களாகிய நாம் கண்கூடாக கண்டோம். அவற்றை பற்றிய தெளிவான அலசல்கள் இதோ...

தேர்தலுக்கு முந்தைய கலவரம்:
மக்களிடம் சம்பாதித்துள்ள அதிருப்தியை தாண்டி பெரிய அளவில் வெற்றிவாகை சூடவேண்டும் என்ற கட்டாயத்தில் பா.ஜ.க, பா.ம.க, தே.மு.தி.க என்று மெகா கூட்டணியை அமைத்து களம் கண்டது அ.தி.மு.க. அதே போல கலைஞர் இல்லாத தி.மு.கவில் வி.சி.க, ம.தி.மு.க, காங்கிரஸ் என்று எதிர் கட்சிக்கு சளைக்காமல் கூட்டணி அமைத்து களம் கண்டார் ஸ்டாலின்.