திங்கள், டிசம்பர் 03, 2012

எம்.ஜி.ஆரின் 'அன்பே வா' (1966) - திரை விமர்சனம்

MGR's Anbe Vaa Tamil Review 1
ஒரு நாள் இயக்குனர் A.C. திருலோகசந்தர் அவர்கள், Rock Hudson நடித்த Come September படத்தை பார்த்தார். அந்த படம் ஒரு Romantic Comedy வகைப் படம். இந்த படத்தின் மையக் கருவை மட்டும் எடுத்து தமிழிற்கு ஏற்றாற்போல் மாற்றி நாம் ஒரு படத்தை இயக்கினால் என்ன என்ற எண்ணம் தோன்றவே, அதை தன் ஆஸ்தான கம்பெனியின்
முதலாளி திரு. A.V. மெய்யப்ப செட்டியாரிடம் தெரிவித்தாராம். செட்டியாரும், 'சரி, பண்ணலாம். யாரை ஹீரோவா போடலாம்னு இருக்க?' என்று அவர் கேட்க, அவர் ஒரு வித தயக்கத்தோடு 'எம்.ஜி.ஆரை போட்டு படம் பண்ணலாம்னு இருக்கேன்' என்று சொன்னாராம். செட்டியாரோ 'எம்.ஜி.ஆரா? அவர் நமக்கு தோது பட மாட்டாரே? அதுவுமில்லாம இது காதல் & காமெடி கலந்த படம். அவர் இதுக்கு ஒத்துக்குவாருன்னு நினைக்கிறியா?' என்று கேட்க, அதற்க்கு A.C. திருலோக்கோ 'நீங்க அனுமதி மட்டும் கொடுங்க. நான் போய் பேசி பார்கிறேன்' என்று சொன்னார். A.V. மெய்யப்ப செட்டியாரும் அனுமதி கொடுக்க, எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டத்திற்கு பறந்தது A.C. திருலோகசந்தரின் கார்.

ராமாவரம் தோட்டத்து வீட்டு ஹாலில் ஏற்கனவே பல தயாரிப்பு கம்பெனி மேனேஜர்களும், இயக்குனர்களும் எம்.ஜி.ஆரை தங்களின் அடுத்த படத்தில் புக் செய்ய காத்துக்கொண்டிருந்தார்கள். A.C.திருலோகசந்தரும் தான் வந்திருப்பதாக எம்.ஜி.ஆரிடம் தெரியப்படுத்த சொல்லிவிட்டு, அவரும் தலைவரின் வருகைக்காக காத்திருந்தார். எம்.ஜி.ஆருக்கு தகவல் தெரிவிக்கப்பட, அவர் 'அவர் எங்க இந்தப்பக்கம்? அட்ரஸ் மாறி வந்துட்டாரா?' என்று சொன்னாராம். காரணம், A.V. மெய்யப்ப செட்டியாருக்கு மிகவும் பிடித்த நடிகர் சிவாஜி கணேசன். அதனால் தான் எம்.ஜி.ஆர் அப்படி கேட்டார். சிறிது நேரம் கழித்து ஹாலுக்கு வந்த எம்.ஜி.ஆர், 'உள்ளே வாங்க' என்று திருலோக்கை அழைத்து கதை கேட்க ஆரம்பித்தார். முழு கதையை கேட்ட எம்.ஜி.ஆர் 'கதை நல்லா இருக்கு. ஆனா என் ஆடியன்ஸுக்கு பைட்டு சீன்ஸ் இருந்தா தான் பிடிக்கும். இதுல ஒரு ரெண்டு இடத்துல மட்டும் பைட்டு வைக்கிற மாதிரி திரைக்கதை வைங்க. நாம இந்த படத்தை பண்ணலாம்' என்று சொன்னாராம். அந்த படம் தான் இந்த 'அன்பே வா'.
MGR's Anbe Vaa Tamil Review 2
படத்தின் கதை ரொம்ப சிம்பிள். பெரும் தொழிலதிபரான ஜே.பி, விடுமுறைக்காக சிம்லாவில் இருக்கும் தன் கெஸ்ட் ஹவுஸ்க்கு செல்கிறார். ஆனால் அந்த மாளிகையை நிர்வகிக்கும் வேலைக்காரன், வீட்டை வேறு ஒருவருக்கு வாடகைக்கு விட்டிருப்பதை அறிந்து கொள்ளும் ஜே.பி, அங்கே தன்னை பாலுவாக அறிமுகப்படுத்திக்கொண்டு சொந்த வீட்டிற்க்கே வாடகை கொடுத்துக்கொண்டு தங்க ஆரம்பிக்கிறார். ஏற்கனவே அந்த மாளிகையில் தங்கி வரும் கீதா என்ற பெண்ணுடன் சின்னத் சின்ன மோதல்கள் ஏற்பட்டு அதுவே காதலாக மாறுகிறது அவருக்கு. இருவரும் எப்படி இணைந்தார்கள் என்பதை மிகவும் பொழுது போக்காக காட்டியிருக்கும் படம் தான் இந்த 'அன்பே வா'.

ஜே.பி என்கிற பாலுவாக எம்.ஜி.ஆர். எனக்கு தெரிந்து தலைவர் நடித்த படங்களில், ரொமாண்டிக் காமெடி Genre வகை திரைப்படம் இது ஒன்று தான். இப்படிப்பட்ட ஒரு படத்தில் நடித்தாலும், அதுவும் சிறப்பான படமாக அமைந்தது எம்.ஜி.ஆரின் சிறப்பு. இந்த படத்தில் தலைவர் காமெடியில் கலக்கியிருக்கிறார். அதுவும் புரட்சித் தலைவரின் குறும்புத்தனங்கள் இந்த படத்தில் நன்றாக வெளிப்பட்டிருக்கிறது. சரோஜா தேவியை செல்லமாக 'சின்ன பாப்பா' என்று கிண்டலாக அழைக்கும்போதும் சரி, ஒவ்வொரு முறையும் கண்டத்து பைங்கிளியை ஏமாற்றும் போதும் சரி, ஒவ்வொரு இடத்திலும் சிக்சர் அடிக்கிறார் தலைவர். 'நாடோடி' பாடலில் தலைவரின் வேகத்தை நடனத்தில் கலந்து கட்டி அடிக்கிறார். அதே போலத் தான் சண்டை காட்சிகளும். குறிப்பாக Sitting Bull 'ஆந்திரா' குண்டுராவை அசால்டாக தூக்கி தோளில் நிறுத்தும் காட்சி இருக்கே, கலக்கிட்டிங்க தலைவரே (இந்த படத்தில் நடிக்கும்போது தலைவருக்கு வயது 49 என்பதை நினைவில் கொள்ளவேண்டும்). தலைவர் பொதுவாகவே அழகு தான் என்றாலும், இந்த படத்தில் பலவிதமான உடைகளில் இன்னும் அழகாக தெரிகிறார் மக்கள் திலகம்.
MGR's Anbe Vaa Tamil Review 3
கீதா என்கிற 'சின்ன பாப்பாவாக' கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவி. அன்றைய காதல் கதாநாயகிக்கே உரிய நடையில் நளினம், காதல் சொட்டும் பார்வை என்று நடிப்பில் பல பரிமாணங்களை காட்டுகிறார். அதுவும் அவரின் குரல், நிஜக் குயிலே தோற்று விடும் போங்கள். சமையற்காரன் ராமையாவாக நாகேஷ் வரும் காட்சிகள் ஒவ்வொன்றும் வெடிச் சிரிப்பை வரவழைக்கும் காட்சிகள். 'உங்க கிட்ட நிறைய பணம் இருக்கு. என் கிட்ட கொஞ்சம்... கூட பணம் இல்ல' என்று நாகேஷ் வசனம் பேசும் போது செய்யும் ஏற்ற இறக்கம், நாகேஷால் மட்டுமே செய்ய முடிகிற விஷயம். சரோஜா தேவியின் அப்பாவாக வரும் T.R. ராமச்சந்திரன், மனோரமா, S.A. அசோகன் ஆகியோரும் அவரவர் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
படத்தின் ஒளிப்பதிவு, மாருதி ராவ். ஈஸ்டர் மேன் கலரில், சிம்லாவை மிகவும் அழகாக தன் கேமராவில் படம் பிடித்திருக்கிறார். பாடலாசிரியர் வாலி & M.S. விஸ்வநாதனின் கூட்டணியில் வெளிவந்த பாடல்கள் அனைத்தும் மயக்கும் ரகம். புதிய வானம், நான் பார்த்ததிலே, ராஜாவின் பார்வை, நாடோடி மற்றும் அன்பே வா போன்ற பாடல்கள் அனைத்தும் அருமை. எனக்கு இந்த படத்தில் மிகவும் பிடித்த பாடல்கள் புதிய வானம் & நாடோடி. வசனம், ஆரூர் தாஸ். 'ஒருத்தன் ஏழையா கூட இருக்கலாம், ஆனா எந்திரமா மட்டும் இருக்கவே கூடாது', ஒருத்தன் நொண்டியா கூட இருக்கலாம், ஆனா ஒண்டியா மாத்திரம் இருக்கவே கூடாது' என்று மிகவும் யதார்த்தமான வசனங்கள் மூலம் நம்மை கவர்கிறார். கதை & இயக்கம், A.C. திருலோகசந்தர். படத்தின் எந்த இடத்திலும் சிறு தொய்வு கூட இல்லாமல் படத்தை கொண்டு சென்ற விதம், மிகவும் அருமை. எந்த ஒரு இடத்திலும் 'Come September' படத்தின் ஒரு காட்சியைக் கூட காப்பியடிக்காமல், வெறும் மூலக்கதையை வைத்து அற்புதமான திரைக்கதையை இயற்றி படம் எடுத்தது Simply Super. படத்தை தயாரித்தது, AVM Productions.
MGR's Anbe Vaa Tamil Review 4
'அன்பே வா' திரைப்படம், 1966 அன்று வெளிவந்து பெரும் வெற்றி பெற்றது. அந்த வருடத்தில் எம்.ஜி.ஆர் நடித்த 9 படங்களில், இந்த படம் தான் மிகப் பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தை தயாரித்த ஏ.வி.எம் நிறுவனத்திற்கு ஆன தொகை, 30 லட்சம். ஆனால் வசூல் ஆன தொகையோ 62 லட்சம். ஏ.வி.எம் நிறுவனம், எம்.ஜி.ஆருக்கு தந்த சம்பளம் 3 லட்சம். இந்த படத்தின் சண்டைக் காட்சிகள் அனைத்தும், ராமாவரம் தோட்டத்தில் நன்றாக ரிகர்சல் பார்க்கப்பட்ட பின், படமாக்கப்பட்டது. காரணம், எம்.ஜி.ஆரின் தொழில் பக்தி மற்றும் ஸ்டன்ட் ஆட்களுக்கு எந்த காயமும் ஏற்படக்கூடாது என்ற அக்கறை. இந்த படம் வெள்ளிவிழாவை நோக்கிக் ஓடிக்கொண்டிருந்த போது, திடீரென்று அன்பே வா படம் அனைத்து திரையரங்குகளில் இருந்து தூக்கப்பட்டது. காரணம், ஏ.வி.எம்மின் மற்றொரு படம் திரைக்கு புதிதாக வந்திருந்தது. எம்.ஜி.ஆர் செட்டியாரிடம், 'படம் வெள்ளிவிழா நாள் வரைக்கும் இருக்கட்டும். அப்போ தான் படத்துக்கு ஒரு Record கிடைக்கும்' என்று சொல்லியும் அவர் கேட்கவில்லை. அதனால் தான் எம்.ஜி.ஆருக்கு 'அன்பே வா' திரைப்படம் ஏ.வி.எம் நிறுவனத்தோடு முதலும், கடைசியுமான படமாக போய் விட்டது.




என்றும் அன்புடன்

13 கருத்துகள்:

  1. @@ கீதா என்கிற 'சின்ன பாப்பாவாக' கன்னடத்து பைங்கிளி @@
    நல்ல பார்வை....

    இந்த படம் பார்க்க வேண்டுமென்ற ஆவல், சில வருடங்களுக்கு முன்பு பாடல்களை கேட்ட போதே உருவாகியது..படத்தை டவுன்லோடு போட்டு இதுவரை ஏறக்குறைய 4 முறை பார்த்திருப்பேன்.அதுவரை என்னக்கவர்ந்த உலகம் சுற்றும் வாலிபன், அடிமைப்பெண் வரிசையில் இந்த படத்தையும் சேர்த்துவிட்டேன்..ரொம்ப அழகான படம்..நான் பார்த்த சிறந்த ரொமாண்டிக் காமெடி படங்களில் இதற்கும் ஒரு இடம் உண்டு.அருமையான விமர்சனம்.மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  2. எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத படம்... பாடல்களும் அப்படியே... அறியாத தகவல்களுக்கும் நன்றி...

    பதிலளிநீக்கு
  3. விமர்சனம் அருமை, சில தெரியாத விசயங்களை தெரிந்து கொண்டோம்,, ஆனால் அதில் எந்த அலவுக்கு உண்மை இருக்கிறது என்பதை நான் மட்டமல்ல மற்றவர்களும் கீழெ உள்ள லிங்கில் அதன் ஒரிஜினலை பார்த்து தெரிந்து கொள்ளட்டும்
    http://www.youtube.com/watch?v=Cb_xsOGMtiE

    பதிலளிநீக்கு
  4. மற்றும் ஒரு வித்தியாசமான பதிவு உங்களிடம் இருந்தது. அதற்கு என் நன்றி....நீங்கள் ஏற்கனவே "Come Septembe" படத்தை பற்றி வேறு எழுதி உள்ளீர்கள். அதையும் படித்து உள்ளேன்.
    "அன்பே வா" எவர்கிரீன் மூவி. எனக்கு நினைவு தெரிந்து உடன் எனது அப்பாவுடன் பார்த்த முதல் திரைப்படம். மறக்க முடியாத படம்..
    நீங்கள் தீவிர எம்.ஜி.யார் ரசிகர் போல் தெரிகிறது. படத்தை அனுபவித்தது எழுதி உள்ளீர்கள். அந்த காலத்தில் தலைவர் ஆடிய டான்ஸ் ரசித்து பார்த்தேன். இப்ப பார்க்கும் போது கொஞ்சம் காமெடியாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  5. To me, the movie was dragged after 80% completion. The last "anbe vaa" repeated song in a "fast tune" was intolerable to me. And the climax was boring. Other than that that was a good entertainer, great songs and comedy was good. I could not appreciate the fights in this movie as this movie supposed to be a love story!

    பதிலளிநீக்கு
  6. @Good citizen

    வருகைக்கு நன்றி நண்பரே. மேலும் Come September படத்தின் You Tube link கொடுத்ததற்கு மிக்க நன்றி. காரணம், திருடாமல் அப்போது படம் எடுத்திருக்கிறார்கள் என்பதற்கு இந்த படம் ஒரு சிறந்த உதாரணம் என்பதை தெரியப்படுத்தலாம்.

    பதிலளிநீக்கு
  7. @ராஜ்

    வருகைக்கு நன்றி ராஜ். எனக்கு எம்.ஜி.ஆரை ரொம்ப பிடிக்கும். அது மட்டுமல்ல, இந்த வருடம் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 25 வது ஆண்டு நினைவு நாள் & சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் (12 - 12 - 12) என்ற அபூர்வ தேதியில் வரும் 62 வது பிறந்த நாள் ஆகிய இரண்டும் கலந்த மாதம் இது. அதனால் இந்த மாதம் முழுக்க மக்கள் திலகம் & சூப்பர் ஸ்டார் படங்களை மட்டும் விமர்சனம் எழுதப்போகிறேன் அதன் ஆரம்பம் தான் இந்த 'அன்பே வா' விமர்சனம். அதே போல அன்றைய கதாநாயகர்கள் யாருக்குமே சரியாக நடனம் ஆட வராது. அந்த வகையில் புரட்சித் தலைவர் ஆடும் நடனம் எவ்வளவோ தேவல.

    பதிலளிநீக்கு
  8. @வருண்

    Thanking for Visiting my Blog Varun. Whatever it is, MGR's Anbe vaa Movie is a Best Romantic Comedy Movie Which i ever seen.

    பதிலளிநீக்கு
  9. தலைவர் பற்றிய ஒரு பதிவு எழுதி எங்களை(தலைவரின் இக்கால இளம் ரசிகர்களை) சந்தோசப்படுத்திட்டீங்க.. நன்றி பிரசாத். எத்தனை தடவை வேணும்னாலும் இந்த படத்தை பார்க்கலாம்.. எல்லா பாடல்களுமே அருமை.. இதில் வரும் "ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்" என்ற பாடலை மிகுந்த கஷ்டப்பட்டு இசையமைத்ததாக ஒருமுறை எம்.எஸ்.வி சொன்னாராம்.....

    பதிலளிநீக்கு
  10. @sajirathan

    வருகைக்கு நன்றி சஜி. இது ஆரம்பம் தான். இன்னும் புரட்சித் தலைவரை பற்றியும், சூப்பர் ஸ்டாரை பற்றிய பதிவுகள் தொடந்து வரப்போகுது.

    பதிலளிநீக்கு
  11. SUPER FINE FILM ANBE VAA.
    I LIKE MGR SINGING WITH SIMLA KIDS.
    IN THIS REVIEW ONLY I GOT ANSWER FOR THE NAME OF FIGHTER "SITTING BULL" AS ANDHRA GUNDU RAO. ALSO I AM MAD OF MGR TWIST DANCE SONG. ALL ARE HIT SONGS.
    I LIKE THE SPECIFIC SCEINE, WHERE MGR THROWING HIS HAT,FROM A DISTANCE, BUT EXACTLY SIT ON SAROJADEVI'S HEAD IN THE SONG "NAAN PAARTHATHILE"
    I ALSO MESMERISED BY MGR AND SAROJADEVI ICE SCATING MOVEMENTS BALL DANCE IN SIMLA. THAT INSTRUMENTAL MUSIC IS OUTSTANDING. THE PERSON AFTER LEAVING THATRE, WILL BE MADE TO REVISIT THE MOVIE. FOR ME MGR IS STILL LIVING. SAROJADEVI IS MY CHOICEST DREAM GIRĹ FOR EVER. SAROJADEVI'S TALENT IS TO MERGE, UNITE, MATCH WITH ANY HERO LIKE SIVAJI(PAALUM PAZHAMUM), GEMINIGANESAN (AADIPERUKKU,) I AM A FAN OF ALL TOP HEROS, AND HEROINES OF OLD FILM.

    பதிலளிநீக்கு