செவ்வாய், நவம்பர் 13, 2012

விஜயின் 'துப்பாக்கி' - திரை விமர்சனம்

ilaya Thalapathy Vijay's Thuppakki Tamil Movie Review 1
 அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். இந்த வருடம் வெளிவந்த பல டாப் ஹீரோக்களின் படங்களான பில்லா 2, மாற்றான், தாண்டவம் போன்ற பல படங்கள் தோல்வியடைந்திருந்தது. இந்த ஆண்டின் முதல் மாதத்தில் வெளிவந்த விஜய் படமான 'நண்பன்' மட்டும்
கொஞ்சம் சொல்லிக் கொள்ளும்படியாக ஹிட்டடித்தது. அதைத் தொடர்ந்து இன்று வெளிவந்த மற்றொரு விஜய் படமான 'துப்பாக்கியும்' ஹிட்டாகிவிட்டதா என்று கேட்டால் 'ஆம்' என்று சொல்லத்தான் தோன்றுகிறது. அதுவும் வழக்கமான விஜய் படமாக இல்லாமல், A.R. முருகதாஸின் பரபரப்பான திரைக்கதை மற்றும் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் தான் இந்த 'துப்பாக்கி'.
ilaya Thalapathy Vijay's Thuppakki Tamil Movie Review 2
 மிலிட்டரி ஆபீசரான விஜய் விடுமுறைக்காக தன் ஊரான பம்பாய்க்கு வருகிறார். யதேச்சையாக ஒரு இடத்தில் வெடிகுண்டு வெடிக்க, அதை வைத்தவனை பிடித்து போலீசில் ஒப்படைக்கிறார். ஆனால் அவன் வெறும் Sleeper Cell தான், இவனைப் போல பலர் இருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் இன்னும் சில தினங்களில் மும்பையில் 12 இடங்களில் தொடர் குண்டுவெடிப்புகள் நடக்கும் என்பதை அறிந்து கொள்ளும் விஜய், அதை தன் மிலிட்டரி சகாக்களின் உதவியோடு முறியடிக்கிறார். தன் தொடர் குண்டிவெடிப்பு பிளான் தோல்வியடைவதை தொடர்ந்து, வில்லன் விஜயை தேடி வருகிறான். வில்லன் விஜயை கண்டுபிடித்தானா? விஜய் அவனின் அடுத்த திட்டத்தை எப்படி முறியடிக்கிறார் என்பதை மிக அழகான திரைக்கதையோடு சொல்லியிருக்கும் படம் தான் இந்த 'துப்பாக்கி'.
ilaya Thalapathy Vijay's Thuppakki Tamil Movie Review 3
 மிலிட்டரி ஆபிசர் ஜகதீஷ் வேடத்தில் விஜய். ரொம்ப நாள் கழித்து விஜயிடம் ஒரு துள்ளலான நடிப்பை பார்க்க முடிந்தது. காமெடி, செண்டிமெண்ட், அக்க்ஷன் என்று அதகளப்படுத்தியிருகிறார் இளையதளபதி. விஜயின் இந்த அலட்டிக்கொள்ளாத நடிப்பு, படத்தின் திரைக்கதைக்கு பலமாக உதவியிருக்கிறது. அதே சமயம், விஜயின் நடன அசைவுகள் வர வர ரொம்ப Slow ஆகிக் கொண்டே போகிறது (டான்ஸை கொஞ்சம் வேகப்படுத்துங்கன்னா). காஜல் அகர்வால் வழக்கம் போல தன் கதாபாத்திரத்தை 'சிறப்பாக' செய்திருக்கிறார். விஜய்க்கு நண்பராக வரும் சத்யனும், மேலதிகாரியாக வரும் ஜெயராமும் படத்தின் கலகலப்பிற்கு உதவியிருக்கிறார்கள். வில்லனாக வரும் வித்யுத் ஜாம்வாலுக்கு அதிகமான காட்சிகள் இல்லையென்றாலும், அவர் வரும் அனைத்துக் காட்சிகளுக்கும் கொஞ்சம் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
ilaya Thalapathy Vijay's Thuppakki Tamil Movie Review 4
சந்தோஷ் சிவனின் கேமரா மொத்த பம்பாயையும் அழகாகவும், அதிரடியாகவும் காட்டியிருக்கிறது. ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் கூகிள் பாடல் தவிர மற்ற பாடல்கள் ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. பின்னணி இசை கூட பரவாயில்லை ரகம் தான். ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பு அருமை. படத்தின் கதை, திரைக்கதை, வசனம் & இயக்கம் ஏ. ஆர். முருகதாஸ். ரொம்ப பழகிப்போன பழைய கதையை வைத்துக் கொண்டு, அதை திரைக்கதை மூலம் விறுவிறுப்பாக்கி படத்தை தந்திருக்கிறார் இயக்குனர். குறிப்பாக, 12 Sleeper Cells ஆட்களை 12 மிலிட்டரி ஆட்கள் பின்தொடந்து போய் கொல்வது, வில்லன், விஜய் குழுவினரை வெறும் கோட்சூட் மூலமாக கண்டுபிடிப்பது என்று அசத்தியிருந்தாலும், எதற்க்காக குண்டு வைக்கிறார்கள்? இவர்களின் பின்னணி என்ன? எந்த தீவிரவாத அமைப்பினர்? என்பது போன்ற சில கேள்விகளுக்கு பதிலே இல்லை. ஆனால் படம் பார்க்கும் போது இந்த கேள்விகள் எழுந்து விடாதவாறு நம்மை திரைக்கதையின் மூலம் ஈர்க்கிறார் முருகதாஸ் என்று தான் சொல்ல வேண்டும். மொத்தத்தில், இளையதளபதி விஜய் + ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணியில் வந்த இந்த 'துப்பாக்கி' இருவருக்குமே மீண்டும் அவர்களது பழைய அடையாளத்தை கொடுத்து விட்டது.





என்றும் அன்புடன்

x

4 கருத்துகள்:

  1. இந்த வருடத்தில் வந்த டாப் ஹீரோக்களின் மொக்கைப்படங்களை பார்த்து சலித்துப்போயிருந்த எனக்கு நல்ல திருப்தி

    ”இளையதளபதி விஜய் + ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணியில் வந்த இந்த 'துப்பாக்கி' இருவருக்குமே மீண்டும் அவர்களது பழைய அடையாளத்தை கொடுத்து விட்டது.” அதேதான் :)

    பதிலளிநீக்கு
  2. செம ஹிட்...

    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  3. NAAN THUPAKY PADAM VARUVATHATLU MUNPU KOORY IRUNTHAN PADAM BOX OFFICE HIT PADAM ENRU.

    பதிலளிநீக்கு
  4. செம ஹிட்...

    வணக்கம் வளர்ந்து வரும் புதிய திரட்டி தினபதிவு
    உங்கள் வரவை விரும்புகிறது.
    http://www.dinapathivu.com/
    தினபதிவு திரட்டி

    பதிலளிநீக்கு