இது வரைக்கும் நான், 99 பதிவுகள் எழுதியிருக்கிறேன் என்று நினைக்கும்போது எனக்கே ஆச்சர்யமாக இருக்கிறது. இந்த 'நூறாவது' பதிவை எப்பவோ எழுதவேண்டியது. ஆனால் என் வேலை பளுவின் காரணத்தினால் எழுத முடியாமல் போய் விட்டேன். பதிவு எழுத வந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. இப்போது தான் நான் நூறாவது பதிவை எழுதுகிறேன்.
இந்த நூறாவது பதிவில் என்னை பற்றிய சில விஷயங்களையும், என் பதிவுகள் பற்றிய விஷயங்களையும் சொல்லத்தான் இந்த நூறாவது பதிவு.
என் முழு பெயர் நரசிம்ம பிரசாத். நான் இப்போது உகாண்டாவின் தலைநகரான கம்பாலாவில் வேலை பார்க்கிறேன். உண்மையில் எனக்கு கம்ப்யூட்டர் பற்றி என் இருபத்தைந்து வயது வரைக்கும் ஒன்றுமே தெரியாது என்பதே உண்மை. வெளிநாட்டு வேலைக்கு வரும் ஒருவன், அதுவும் கம்ப்யூட்டர் பற்றி ஒன்றுமே தெரியாது என்று சொன்னால் என்ன நினைப்பார்கள்? இந்த காலத்தில் கம்ப்யூட்டர் தெரியாத ஒருவன் இருக்கிறானா என்று கேவலமாக பார்ப்பார்கள் அல்லவா? அப்படி ஒன்றுமே தெரியாமல் வந்து, இன்று மற்றவங்களுக்கு கம்ப்யூட்டர் பற்றிய சில தெரியாத விஷயங்களை சொல்லி கொடுக்கும் அளவுக்கு வந்திருக்கிறேன் என்றால் அதற்க்கு பதிவுலக வலைத்தளங்கள் ஒரு காரணம் என்று தான் சொல்வேன். எனக்கு பதிவுலகை பற்றி அறிமுகம் செய்து வைத்தது நண்பர் அருண் பிரகாஷ். என்னோடு வேலை பார்ப்பவர். ஆங்கில பட விமர்சனம் எழுதுபவர்களுக்கு இவரை பற்றி ஓரளவுக்கு கண்டிப்பாக தெரியும். 'முரட்டு சிங்கம்' அருண் என்றால் இன்னும் நன்றாக தெரியும். இவர் தான் இப்படி ஒன்று இருக்கிறது என்று எனக்கு சொன்னவர். அதுமட்டுமல்ல, 'இதை யார் வேண்டுமானாலும் எழுதலாமா? என்று கேட்டதற்கு 'நீ கூட எழுதலாம்' என்று சொல்லி என்னை பதிவெழுத தூண்டியவர்.
தற்போதைய என் பதிவுகளில் கொஞ்சம் ஆங்கில படங்களின் வாசனை அடிப்பதற்கு அருண் ஒரு முக்கிய காரணம் என்று தான் சொல்வேன். Al Pacino முதல் Harrison Ford வரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தது அண்ணன் தான். (சீக்கிரம் புதுப் பதிவு ஒன்னு எழுது டா). புதிதாக ப்ளாக் தொடங்கியபோது என்ன பெயர் வைப்பது என்று யோசித்தபோது சட்டென என் மனதில் பட்ட பெயர், 'ஊர் காவலன்'. அடிப்படையில் நான் ஒரு தீவிர ரஜினி ரசிகன். அதனால் தானோ என்னவோ, தலைவர் நடித்த படத்தின் பெயரையே வைக்க வேண்டியதாயிற்று.
எனக்கு எதையும் ரொம்ப சீரியஸாக சொல்லப் பிடிக்காது. அதே போல மொக்கை பதிவுகள் எழுதுவது சுத்தமாக பிடிக்காது. என்னைப் பொறுத்தவரை யாரும் தொடாத ஏரியாவை எழுத வேண்டும். அப்படியே எழுதியிருந்தாலும், அவர்களை விட நாம் இண்டரெஸ்ட் ஆக எழுத வேண்டும் என்றே நினைப்பேன். அதனால் தான் என்னுடைய பதிவுகளில் பழைய பட விமர்சனம், அமானுஷ்ய தொடர் பதிவு, சீரியல் கில்லர் தொடர் பதிவு என்று கொஞ்சம் வெரைட்டியாக எழுதுகிறேன். இன்னும் இது போல பல பதிவுகள் நான் எழுதுவேன். ஆனால் அதே சமயம், முன்பு இருந்தது போன்ற ஒரு உற்சாகம், இன்று நம் பதிவுலகில் இல்லை என்பதே உண்மை. அது சீக்கிரம் மாற வேண்டும். அப்படி மாறினால் தான் பல புதுப் பதிவர்கள், அனைவருக்கும் அறியப்படுவார்கள்.
இந்த நூறாவது பதிவு எழுதுவதை தொடர்ந்து, இன்னும் 99 பதிவுகளை எழுதி, கூடிய விரைவில் 200 வது பதிவு எழுதுவதற்கு வாழுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். இதுவரை எனக்கு ஊக்கமளித்த பதிவுலக நண்பர்களுக்கும், மற்றவர்களுக்கும் என் நன்றியை இந்த பதிவின் மூலமாக தெரிவித்துக் கொள்கிறேன் & அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
என்றும் அன்புடன்
well done, congratulations!!!
பதிலளிநீக்குமென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் நண்பரே...
பதிலளிநீக்குமுதலில் 100 செஞ்சுரி போட்டதற்கு வாழ்த்துக்கள் பிரசாத்....
பதிலளிநீக்குஉங்க ப்ளாக் முதலில் வந்த உடனே எனக்கு தெரிந்து விட்டது...நீங்க தலைவர் ரஜினி ரசிகர் என்று. உங்க ப்ளாக் பெயரும் தலைவர் படமாய் போனது மற்றும் ஒரு சிறப்பு.....
நான் பார்த்த வரையில் வெரைட்டியாக மற்றும் சுவாரிசியமாக எழுதும் சில பதிவர்களில் நீங்களும் ஒருவர். அதை அப்படியே தொடருங்கள்..
அப்புறம் நான் பதிவு எழுத வந்த புதிதில் அருண் அவர்களை தான் என்னுடைய அணைத்து பதிவுகளுக்கும் ஆதரவு குடுத்தார், நல்ல நண்பர்..... :):)
Well done keep it up
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் நண்பரே தொடருங்கள்
பதிலளிநீக்குஉங்கள் பயணம் இன்னும் இனிமையாக தொடரட்டும்...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் பிரசாத் Keep rocks
பதிலளிநீக்குநூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் பிரசாத். உங்களைப் பற்றியும் அறியக்கிடைத்தது. தொடர்ந்தும் உங்கள் பாணியில் வித்தியாசமான பதிவுகள் எழுதுங்கள்.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் நண்பரே !
பதிலளிநீக்குதொடரட்டும் உங்கள் வெற்றி பதிவுகள்
100வது பதிவுக்கு வாழ்த்தக்கள் பாஸ். நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று சும்மா ப்ளாக்கிற்கு வந்தபோதுதான் உங்கள் மடலை கண்டேன். கம்பஸ் தொடங்கலையே என்று புலம்பினதுக்கு கிடைச்ச பலன்தான் பாஸ் தொடங்கினாலும் தொடங்கினாங்க மூச்சு விட முடியல :'( :)
பதிலளிநீக்குமேலும் வளர வாழ்த்துக்கள்
ஆ முக்கியமான ஒரு விடயம்...
எனக்கு ப்ளாக்கில் ஆர்வத்தை தூண்டிவிட்டது நீங்கள்தான். சில வருடங்களுக்கு முன் (நான் வலையுலகில் நுழைய முன்னர்) உங்கள் அமானுஸ்ய பதிவுகளை படிக்கநேர்ந்தது. ஒரேயடியாக இருந்து முழுத்தொடரையும் படித்து முடித்துவிட்டுத்தான் எழுந்தேன் சாரி பாஸ் அப்போதெல்லாம் நான் யாருக்கும் கொமன்ற் போடுறதில்ல. கோபிச்சுடாதீங்க ;)
Wish you happy diwali !
பதிலளிநீக்கு100-வது பதிவுக்கு என் பாராட்டுக்கள்.........
பதிலளிநீக்குநன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)