திங்கள், ஜூன் 27, 2011

அம்மா, உன் மடியில் - அமானுஷ்ய தொடர் பகுதி - 4

தபாலில் வந்த அந்தக் கடிதத்தை, பிரித்துப் படித்தபோது சம்பந்தமில்லாத ஒருவிதமான பயம், அந்தத் தாயின் மனதில் நிழலாகப் படிந்தது. ஆனால் மகன் கப்பல்படை பயிற்சி நிலையத்திலிருந்து மகிழ்ச்சியுடன் 'நலம் விசாரித்துத்தான்' கடிதம் எழுதியிருந்தான்.

புதன், ஜூன் 22, 2011

'அவன் இவன்' திரைப்படம் - இது உலக சினிமா அல்ல...

நான் பதிவெழுத ஆரம்பித்ததிலிருந்தே புதிதாக ரிலீஸ் ஆகும் படங்களை விமர்சித்ததில்லை. காரணம், புதிய படங்களை விமர்சிக்க பல பதிவர்கள் இருக்கிறார்கள். ஆனால் பழைய படங்களை விமர்சிப்பதற்கு ஆட்கள் மிகவும் கம்மி. 'எவ்வளவோ புதிய, நல்ல படங்கள் வெளிவந்தபோது நீ எந்த படத்தையும் விமர்சிக்கவில்லையே. இந்த படத்திற்கு மட்டும் ஏன்?

ஞாயிறு, ஜூன் 19, 2011

பயப்பட்டால் தான் ஆபத்து - அமானுஷ்ய தொடர் பகுதி - 3

'This World and That' என்ற புத்தகத்தை எழுதிய Febeebi Payan என்கிற பெண்மணி, ஆவிகள் பற்றி நிறைய ஆராய்ச்சிகள் செய்தவர். டிஸ்கவரி சேனலில், எங்கோ உள்ள ஓர் உயிரினத்தைப் பார்க்க காடு மலையெல்லாம் தாண்டுகிற ஆராய்ச்சியாளர் மாதிரி இவரும் உலகில் எங்கு ஆவி நடமாட்டம் இருப்பதாகக் கேள்விப்பட்டாலும், உடனே அங்கே கிளம்பிப் போய்விடுகிற டைப்!

புதன், ஜூன் 15, 2011

ரெயின்கோட் - அமானுஷ்ய தொடர் பகுதி - 2

சக்திவேல், ராமநாதபுரம் டவுனில் தன் வேலைகளை முடித்தபோது இரவு மணி 12.00. அகால வேளையைப் பற்றி சக்திவேல் கவலைப்படவில்லை. அவிடம் Suzuki பைக் இருந்ததால், தன்னுடைய கிராமத்துக்குத் திரும்பிச் செல்வதில் அவனுக்கு தயக்கமோ தடையோ இல்லை.

செவ்வாய், ஜூன் 14, 2011

உகாண்டாவில் திருப்பதி வெங்கடாசலபதி கோயில் - சுவாமி தரிசனம்



பதிவு போட ஆரம்பித்ததிலிருந்து இன்றுவரைக்கும் சீரியல் கொலைகாரர்கள், Necrophilia மற்றும் புதுசாக ஆவிகள் தொடர் என்று ஒரே 'ரத்தத்தின் ரத்தமாக' பதிவெழுதிக் கொண்டிருக்கிறேன். ஒரே ஆறுதல் என்னவென்றால் பழைய படங்களின் திரை விமர்சனங்கள் தான். எனக்கே என் ப்ளோக்கை திறக்க கொஞ்சம் பயமாகவே இருக்கிறது. சரி என்ன பண்ணலாம்? என்று

திங்கள், ஜூன் 13, 2011

உகாண்டாவின் சர்வாதிகாரி இடி அமீன் - ஒரு பார்வை



கிறுக்குத்தனமான கொடுங்கோலர்கள் அரிதாகத்தான் ஆட்சிக் கட்டிலில் அமர்கிறார்கள் என்று மக்கள் தப்புக்கணக்கு போட்டால், திடீர் திடிரென்று 'கலிக்யுலா அனுபவங்கள்' நிகழ்ந்து, நாட்டில் வாழும் அத்தனை மக்களும் அதில் சிக்கித் தவிக்க நேரிடும். உகாண்டா நாட்டு மக்கள் அப்படித்தான் அலட்சியமாக இருந்துவிட்டு, பரிதாபமான முறையில் பாடம் கற்றுக்கொண்டார்கள். அந்த பாடத்தின் பெயர் 'இடி அமீன் தாதா'.

செவ்வாய், ஜூன் 07, 2011

கே.பாக்யராஜின் 'முந்தானை முடிச்சு' - திரை விமர்சனம்

1980 களின் காலகட்டங்களில் எவ்வளவோ தமிழ் திரைப்படங்கள் வெளிவந்திருக்கிறது. அப்போது வந்த பல திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது என்பதை அனைவரும் அறிந்திருப்பார்கள். அதே போல ஒவ்வொரு படத்துக்கும், ஒவ்வொரு Variety இருக்கும். காதல், குடும்ப செண்டிமெண்ட், பக்கா கமர்சியல் என்று அன்றைய இயக்குனர்கள் பின்னி

வெள்ளி, ஜூன் 03, 2011

ஒரு சிம்பிளான ஆவி - அமானுஷ்ய தொடர் பகுதி - 1

எனக்கு 'பேய்' என்றாலே கொஞ்சமல்ல, நிறையவே பயம். ஆனால் பேய் கதைகளை பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வமோ ரொம்ப அதிகம். குறிப்பாக 'சினிமா பேய்களை' அறவே ஒதுக்கி விடுவேன். காரணம், அதில் பேய்களை சற்று மிகைபடுத்தி காட்டியிருப்பார்கள். எனக்கு பேய்களை பற்றிய நிஜக்கதைகளை கேட்பதும், படிப்பதும் ரொம்ப இஷ்டம். ஏற்கனவே நான்