கற்க கற்க கள்ளும் கற்க...

திங்கள், செப்டம்பர் 05, 2011

தல, தளபதி வெறியர்களே - இந்த பதிவு உங்களுக்காக

தல அஜித் குமார் நடிப்பில் வெளிவந்த 'மங்காத்தா' திரைப்படம் திரையிட்ட இடங்களிலெல்லாம் வெற்றி நடைபோடுகிறது. ரொம்ப நாள் கழித்து அஜித்தை ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருப்பது தல ரசிகர்களை குஷி படுத்தி இருக்கிறது. இந்த படம் வெளிவந்து ஒரு வாரம் கூட ஆகியிருக்காது. அதற்குள் நம் பதிவுலகில் ஒரு யுத்தமே
நடந்து கொண்டிருக்கிறது. இந்த சண்டை அவசியமா? இல்லையா என்பதை பற்றி நான் விவாதிக்கப்போவதுமில்லை. தல ரசிகர்களோடு சேர்ந்து தளபதி ரசிகர்களை என் பதிவில் திட்டித் தீர்க்கப்போவதுமில்லை. கடந்த இரண்டு மூன்று தினங்களாக இன்டலியை பார்க்கும்போதெல்லாம் யாராவது ஒருவர் அஜித்தை பற்றியும் அல்லது விஜய்யை பற்றியும் கண்டமேனிக்குத் திட்டி பதிவெழுதி வருகிறார்கள். 'உங்க ஆளேன்ன பெரிய மயிரா?' என்று கொஞ்சம் கீழ் தரமாகவே விமர்சிக்கிறார்கள். அவர்களுக்காகவே இந்த பதிவு. நான் உங்களுக்கு அறிவுரை கூறுகிறேன் என்று நீங்கள் நினைத்தால், தயவு செய்து இந்த பதிவை மேற்கொண்டு படிக்க வேண்டாம்.இரண்டு பெரிய நடிகர்களின் ரசிகர்கள் அடிக்கடி சண்டையிடுவது சகஜம் தான். இந்த ரசிகர் சண்டைகள் இன்று புதிதாக ஒன்றும் தோன்றவில்லை. எம்.ஜி.ஆர் - சிவாஜி கணேசன், ரஜினிகாந்த் - கமல்ஹாசன், அஜித்குமார் - விஜய் என்று இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த சண்டைகள் நடக்கும்போதெல்லாம் அந்த இரண்டு பெரிய நடிகர்கள் ரசிகர்களை சமாதானமாகச் சொல்லி அறிக்கை விடுவதும், 'சண்டை போடக்கூடாது' என்று அறிவுறுத்துவதும் வழக்கமான ஒன்று. ஆனால் பதிவர்கள் இப்படி சண்டை போட்டுக்கொள்ளலாமா? உங்கள் பதிவுகளை எவ்வளவு பேர் படிக்கிறார்கள், அவர்கள் உங்களை பற்றி என்ன நினைப்பார்கள்? நீங்களே தரம் தாழ்ந்த வார்த்தைகளை பேசி நம் பதிவுலக வாசகர்கள் நம்மீது வைத்திருக்கும் மதிப்பை குறைத்துக்கொள்வது எந்த வகையில் நியாயம்? நடிகர்கள் நடித்துள்ள படங்களை பார்த்து நீங்கள் விமர்சனம் செய்யலாம், தவறில்லை. ஆனால் அந்த நடிகரை பற்றி கேவலமாக கமெண்ட் செய்வதும், அவரது ரசிகர்களை தூற்றுவதும் சரியா? கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்.என்னுடைய நெருங்கிய நண்பன் ஒருவன் தீவிரமான விஜய் ரசிகன். அவனை ரசிகன் என்று சொல்வதை விட, விஜய் வெறியன் என்று சொன்னால் தான் தகும். நானோ அஜித் ரசிகன். எங்கள் இருவரும் அரசியல், விளையாட்டு, தனிப்பட்ட விஷயங்களை பற்றி பேசுவதை விட சினிமாவை பற்றியே அதிகம் பேசுவோம். அதுவும் புள்ளி விவரங்களுடன். அதில் கண்டிப்பாக தலையும் தளபதியும் இடம்பெற்று விடுவார்கள். எங்கள் பேச்சு எவ்வளவு சூடாக போனாலும், ஒரு கட்டத்திற்கு மேல் பேச மாட்டோம். ஒரு நாள் அவன் விஜய்க்கு ரசிகர் மன்றம் வைக்கவேண்டும் என்று சொன்னான். நானும், இன்னும் சில நண்பர்களும் சேர்ந்து அவனுக்கு உதவியாக இருந்து ரசிகர் மன்றம் ஆரம்பமாவதற்கு எங்கள் பங்கை செய்து கொடுத்தோம். அதிலும் மன்றப் பலகை டிசைன் வேலைகளை செய்தது நான் தான். அந்த ப்ளெக்ஸ் பேனரில் என்ன வாசகம் எழுத வேண்டும், என் நண்பர்கள் எந்த பொறுப்புகளில் இருக்கவேண்டும் என்று முடிவு செய்ததும் நான் தான். இரண்டு நாட்களுக்கு முன்பு கூட நல்ல விஜய் ஸ்டில்களை எனக்கு அனுப்பி வை என்று என் நண்பன் சொன்னான்.இதை எதற்காக சொல்கிறேன் என்றால் எனக்கு அஜித் பிடிக்கும், அவனுக்கு விஜய் பிடிக்கும். அவ்வளவு தான். தளபதியை பற்றி நான் நாலு வார்த்தை கிண்டல் செய்தால், அவனும் தலையை நாலு வார்த்தை கிண்டல் செய்வான். ஆனால் இங்கே பதிவேழுதியவரை கண்டமேனிக்கு தனிமனித தாக்குதல்கள் நடத்துகிறார்கள். அது தவறல்லவா? வார்த்தைகளை Sportive ஆக உபயோகப்படுத்துங்கள் நண்பர்களே, Serious ஆக வேண்டாம். 'நீ என்ன எங்களுக்கு சொல்ல வந்துட்ட? நீ மட்டும் ஒழுங்கா? நீ இது வரைக்கும் தளபதியை தாக்கி கமெண்ட் போடவே இல்லையா?' என்று கேட்கலாம். நான் போடும் கமெண்ட்கள் எல்லாம் Serious ஆக இருக்காது. ஒரு முறை ஒரு பதிவர் 'ரஜினி ஒரு பொட்டை' என்று விமர்சித்திருந்தார். வந்த கோபத்தில் 'நீ யாரு டா நாயே என் தலைவனை பற்றி எழுத?' என்று திட்டி கமெண்ட் போட்டேன். பின்பு தான் நான் அப்படி கமெண்ட் போட்டிருக்கக் கூடாது என்று தவறை உணர்ந்துகொண்டேன். அந்த பதிவரும் கொஞ்சம் பெரும்தன்மையானவர். அந்த கமெண்ட்க்கு எந்த பதிலும் சொல்லவில்லை.ஒரு பதிவர் உங்கள் அபிமான நடிகரை பற்றி தரைக்குறைவாக பதிவேழுதியிருந்தால், அவரது பதிவை படிக்கவும் வேண்டாம். கமெண்ட் போடவும் வேண்டாம். அப்படியே புறக்கணியுங்கள். அப்படி செய்தால் தானாகவே அந்த பதிவர் அப்படி எழுதுவதை நிறுத்தி விடுவார். Atleast, அவருக்கு எதிர் பதிவு போடாமலாவது இருங்கள். நீங்கள் திட்ட, அவர் திட்ட என்று இது வளர்ந்து கொண்டே போகும். நமக்கு தெரிந்த விஷயங்களை, நம் சிந்தனைகளை எழுத்து வடிவில் கொடுக்கத்தான் நாம் பதிவெழுதி வருகிறோம். ஒரு நல்ல விஷயத்தை நாம் எவ்வாறு எழுதலாம் என்று யோசிக்கலாமே தவிர என்னென்ன கெட்ட வார்த்தைகள் பிடித்து நம் நடிகரை திட்டிய பதிவரை திட்டலாம் என்று நம் மூளையை உபயோகப்படுத்தக்கூடாது. அது மிகப் பெரிய தவறு. இந்த முறை தல ஜெயித்துவிட்டார். தீபாவளியில் தளபதி ஜெயிப்பார். இல்லையா, கண்டிப்பாக பொங்கலுக்கு 'நன்பனில்' ஜெயிப்பார். அதுபோல பில்லா 2 வில் தலையும் ஜெயிப்பார். அவ்வளவு தான். நம்மை போன்ற பதிவர்களுக்குள் போட்டியிருக்கலாம். தப்பில்லை. ஆனால் அது சண்டையாக மாறக்கூடாது என்பதே என் தாழ்மையான கருத்து.
(தயவுசெய்து படித்ததோடு மட்டுமல்லாமல் வாக்களித்து, பின்னூட்டமிட்டு என்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தவும்).
என்றும் அன்புடன்

Post Comment

28 comments:

ச.செல்வ முருகன். சொன்னது…

தங்கள் கருத்து அஜித் விஜய் ரசிகர்களுக்கு மட்டுமல்ல. அனைத்து ரசிகர்களும் படித்து மாற வேண்டியவை. நன்றி!ுமல்ல. அனைத்து ரசிகர்களும் ப

பாலா சொன்னது…

அருமையான கருத்துக்களுக்கு நன்றி நண்பரே...

ஜ.ரா.ரமேஷ் பாபு சொன்னது…

சரியாய் சொன்னீங்க

கந்தசாமி. சொன்னது…

///தல, தளபதி வெறியர்களே// இவ்வாறு வெறித்தனமாக தனிமனிதர்களை ரசிப்பதை விடுத்து, அவர்களின் நடிப்பு திறமை மீதான ரசனையுடன் மட்டுப்படுத்திக்கொண்டால் பிரச்சினையே இல்லை )

மழைதூறல் சொன்னது…

அனைத்து ரசிகளுக்கும் இத்த பதிவு எப்படி செயல் பட வேண்டும் என்று விளக்கியிருக்கு.அதன் படி நடந்தால் பிரச்சனையாருக்கும் இல்லை.உன்மையை உனர்ந்து செயல் படுவொம் பதிவுலக ரசிகர்களே!

Philosophy Prabhakaran சொன்னது…

இந்த பதிவு எனக்கானதல்ல என்பதை தலைப்பை மட்டும் படித்தபோதே தெரிந்துக்கொண்டேன்...

amalan சொன்னது…

nalla pavithu :)

ஜீ... சொன்னது…

WELL SAID!

# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

தல தளபதி உறவில் தற்போது ஆரோக்கியமான நட்பு தெரிகிறது...

ஒரு வேளை இரு தளபதியின் அரசிலுக்கான தந்திரமாககூட இருக்கலாம்..

மங்காத்தா படத்தில் அஜித் செல்லும் ஒரு திரையரங்கில் விஜய் படம் ஓடுவது போல காட்சியிருக்கும்...

# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

தமிழ் மணத்தில் 7 வது ஓட்டும் போட்டாச்சி

Pari T Moorthy சொன்னது…

தங்கள் கருத்துக்களை நானும் ஏற்றுக்கொள்கிறேன்...அருமையான பதிவு.......

"ராஜா" சொன்னது…

:))

//நான் உங்களுக்கு அறிவுரை கூறுகிறேன் என்று நீங்கள் நினைத்தால், தயவு செய்து இந்த பதிவை மேற்கொண்டு படிக்க வேண்டாம்.

இதுவரைக்கும்தான் படித்தேன் ....

இராஜராஜேஸ்வரி சொன்னது…

பதிவர்களுக்குள் போட்டியிருக்கலாம். தப்பில்லை. ஆனால் அது சண்டையாக மாறக்கூடாது /

அருமையான கருத்து

பெயரில்லா சொன்னது…

well said... itha ketu rasigargal thirunthina sari...

பெயரில்லா சொன்னது…

நல்ல பதிவு.

ஷீ-நிசி சொன்னது…

நிஜமான அக்கறையின் வெளிப்பாடு இப்பதிவு...

silandhy சொன்னது…

SAC க்கு பையனா பொறக்கலேன்னா இந்த விஜயை யாருக்கும்
தெரிந்திருக்காது.ஆனால் அஜீத்தின் அப்பா பெயர் எத்தனை பேருக்கு தெரியும்?
நான் அஜீத் ரசிகன் அல்ல.விஜயையை அலட்டல் இல்லாத
எத்தனையோ படங்களில் ரசித்திருக்கிறேன்.
அது வேறு.ஆனால் நிஜ வாழ்விலும் கண்ணியமாக இருப்பவர்களை
கூடுதலனாவர்கள் விரும்புவது இயல்பு.
துணிச்சல்,வெளிப்படையாக பேசுதல்,நேர்மை.இதை எத்தனை
முன்னணி நடிகர்களிடம் நீங்கள் கண்டுள்ளீர்கள்?
கில்லி படமும்,பேரழகன் படமும் ஒரே வருடத்தில்
ரிலீஸ் ஆனது.கில்லி படத்தில் நடித்தற்காக விஜய்க்கு
தமிழக அரசின் சிறந்த நடிகர் விருது கிடைத்தது.
யோசித்து பாருங்கள்.இதுவே அஜீத் ஆக இருந்தால்
அந்த விருது சூர்யாவுக்கே உரியது என்று வெளிப்படையாக
மேடையிலேயே சொல்லியிருப்பார்.
தக்கார் தகவிலார் என்பது அவர்தம்,,,
நன்றி.

sasemkumar சொன்னது…

NANDRIKAL PALA NANBA INTHA PATHIVU ENAKU MIGAVUM PIDITHULLATHU

ravi சொன்னது…

நான் என்ன சொல்ல நினைத்தேனோ அப்படியே பதிவிட்டிருக்கிறீர்கள். சிலபேர் பதிவர் என்பதையே மறந்துவிடுகின்றனர் கண்டமேனிக்கு எழுதுகின்றனர்.

நன்றி பிரசாத்

கவி அழகன் சொன்னது…

சரியான பதிவு

பெயரில்லா சொன்னது…

i agree nanba ippadiaye ellarum irundhuta elaa nadigar padamum hit aagum

ananthu சொன்னது…

நல்ல பதிவு..சில சமயம் நடிகர்களே போலி சண்டையை உருவாக்குவதும் உண்டு...நடிகைகளின் கிசு கிசு வைப்போல...

பெயரில்லா சொன்னது…

சரியான பதிவு ...

பெயரில்லா சொன்னது…

I think this site indirectly support only for Ajith. This site praise only Ajith popularity. Most of the cheap fellows Insulting hero's image, both Vijay (or) Ajith fans who are all insult with nasty words, they are all treated as Transgender. I boycott this site, and this may implement from my colleague side also.

மாங்கனி நகர செல்லக் குழந்தை சொன்னது…

அருமை...நான் விஜய் ரசிகன் அங்கிள்........

Swapna 2v சொன்னது…

hii.. Nice Post

Thanks for sharing

More Entertainment

Best Regarding.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

முன்பு நல்லதொரு வாக்குவாதம் நடக்கும்... இப்போது கீழ்த்தரமானதும் உண்மை...

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

உங்கள் தளம் .in என்று முடிவதால் தமிழ்மணம் இணைப்பதிலும், ஓட்டு அளிப்பதிலும் சில மாற்றங்கள் html-ல் செய்ய வேண்டும்... தொடர்பு கொள்ளவும்... dindiguldhanabalan@yahoo.com நன்றி...

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

கருத்துரையிடுக