கடந்த முறை ரவி தேஜாவை பற்றி பதிவு வெளியிட்டிருந்த போது பலர் கருத்துரைகளில் பதிவை தொடர சொல்லியிருந்தார்கள். அதுமட்டுமல்ல, ஒரு அனானி, மகேஷ் பாபுவை பற்றி எழுத சொல்லியிருந்தார். நானும் அடுத்த பதிவில் மகேஷ் பாபுவை பற்றித்தான் எழுத வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். மகேஷ் பாபுவை பற்றி நம்மாட்களுக்கு
ஓரளவுக்காவது தெரிந்திருக்கும். இந்த பதிவில் அவரை பற்றி முழு தகவல்களோடு சொல்லுயிருக்கிறேன். அதுமட்டுமல்ல, எனக்கு ரவி தேஜாவுக்கு பிறகு பிடித்த நடிகர் மகேஷ் பாபு தான்.நடிகர் மகேஷ் பாபு 9 ஆகஸ்ட் 1974 அன்று சென்னையில் பிறந்தார். இவரது தந்தை பிரபல தெலுங்கு சினிமாவின் நடிகர் 'சூப்பர் ஸ்டார்' கிருஷ்ணா. மகேஷ் பாபு, கிருஷ்ணாவுக்கு நான்காவது குழந்தையாவார். மகேஷ் படித்தது, வளர்ந்தது எல்லாமே சென்னையில் தான். சென்னையில் உள்ள St. Bede's ஸ்கூலில் தன் பள்ளிப்படிப்பை முடித்த மகேஷ், கல்லூரிப் படிப்பை லயோலா கல்லூரியில் தொடர்ந்தார். பின்பு மேற்படிப்புக்காக அமெரிக்காவில் சென்று படித்து திரும்பினார். அமெரிக்காவில் படித்தபோது இவருடன் படித்த இன்னொரு நடிகர், சரோஜா, கோவா போன்ற படங்களில் நடித்த வைபவ் தான்.
சிறுவயதிலிருந்தே மகேஷுக்கு சினிமா என்றால் ரொம்ப இஷ்டம். அதனால் தன் அப்பா தயாரித்து நடிக்கும் படங்களில் சிறு வயதிலேயே நடிக்க ஆரம்பித்து விட்டார். மகேஷ் பாபு சிறுவனாகவே இதுவரை 9 படங்களில் நடித்திருக்கிறார். என்னதான் அவர் கடல்தாண்டி கல்வி கற்க சென்றாலும் அவர் மனதில் இருந்த 'சினிமா ஆசை' அவரை சும்மா விடுமா? 1999 அன்று 'ராஜகுமாருடு' என்ற படத்தில் இவர் அறிமுகமானார். நடித்த முதல் படமே அவருக்கு மகத்தான வெற்றியை பெற்றித் தந்தது. அதுமட்டுமல்லாமல் அவருக்கு ஆந்திர அரசின் விருதான 'நந்தி' விருது, சிறந்த புதுமுக நடிகருக்கான விருதை பெற்றுத்தந்தது.பின்பு இவர், இயக்குனர் கிருஷ்ணவம்சி இயக்கத்தில் நடித்து வெளியான 'முராரி' என்ற படம் 175 நாட்கள் ஓடி மகேஷுக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது. இதற்க்கு நடுவில் இவர் மூன்று படங்களிலும் நடித்திருந்தார். 'பாபி' என்ற சுமாரான ஒரு படத்தில் நடித்த இவரின் அடுத்த படம்தான் 'ஒக்கடு'. இந்த படம் இவரின் திரையுலக வாழ்க்கையில் மிக முக்கியமான படமாக அமைந்து சூப்பர் டுப்பர் ஹிட்டானது (இந்த படம் தான் தமிழில் ரீமேக் செய்து விஜய் நடித்த 'கில்லி'). இந்த படத்திற்குப் பிறகு தான் இவர் தெலுங்கு முன்னணி ஹீரோக்களின் வரிசையில் இடம்பெற்றார்.அதற்குப் பிறகு இவர் நடித்த படங்களான நிஜம், நாணி, அர்ஜுன் போன்ற படங்கள் வெற்றி தோல்வி என்று சரிவிகிதத்தில் கலந்திருந்தாலும், 'அத்தடு' என்ற படம் இவரை 'டோலிவூட் பாக்ஸ் ஆபீஸ் கிங்' என்ற பெயரை பெற்றுத்தந்தது. அத்தடுவை அடுத்து பூரி ஜகன்னாத் இயக்கத்தில் வெளியான 'போக்கிரி' படம் பட்டி தொட்டியெல்லாம் பிரபலமாகி வசூலில் பெரும் சாதனை படைத்து வெற்றி பெற்றது.

போக்கிரி படம் 200 சென்டர்களில் 100 நாட்களும், 63 சென்டர்களில் வெள்ளிவிழாவும் கொண்டாடியது. இந்த படம் கிட்டத்தட்ட 40 கோடி வசூலை அள்ளியது. போக்கிரிக்குப் பிறகு வந்த படங்களில் 'அதிதி' என்ற படம் மட்டும் ஓரளவுக்கு வெற்றிபெற்றது என்றாலும் இன்னும் மகேஷ் பாபுவுக்கான 'ஓபனிங் கிங்' என்ற பட்டம் அப்படியே தான் இருக்கிறது. கடைசியாக வெளிவந்த படமான 'கலிஜா' என்ற படம் கூட தோல்விப் படம் தான் என்றாலும், அமெரிக்காவில் தலைவரின் எந்திரன் படத்திற்குப் போட்டியாக ஓடிய தென்னிந்திய மொழிப் படம் இது ஒன்று தான்.
பாலிவுட் நடிகையான நம்ரதா ஷிரோத்கரை காதலித்து மணந்த மகேஷ் பாபுவுக்கு கௌதம் கிருஷ்ணா என்ற ஐந்து வயது மகன் இருக்கிறான். 37 வயதான மகேஷ் பாபு இதுவரை கதாநாயகனாக 15 படங்கள் நடித்திருக்கிறார். ஆந்திராவின் நந்தி விருது, பிலிம்பேர் விருது என்று இவர் இதுவரை 8 விருதுகளை பெற்றுள்ளார். இவரது அடுத்த படங்களான தூகுடு, பிசினஸ் மேன் போன்ற படங்களை இன்னும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். மகேஷின் பர்சனாலிட்டி, அதிரடியான நடிப்பு, வேகமான நடனம் என்று இன்றும் தன் ரசிகர்களை கட்டிப் போட்டுள்ளார். இவருக்கு ரசிகர்களை விட ரசிகைகளே அதிகம். அதனால் தான் இவரை 'பிரின்ஸ்' என்று செல்லமாக அழைக்கிறார்கள் இவரின் ரசிகைகள்.
(தயவுசெய்து படித்ததோடு மட்டுமல்லாமல் வாக்களித்து, பின்னூட்டமிட்டு என்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தவும்).
என்றும் அன்புடன்
இவர் தலைவி காஜல் அகர்வாலோடு ஏதாவது ஒரு படத்திலாவது நடித்திருக்கிறாரா...???
பதிலளிநீக்குமகேஷ் பாபு பற்றியும் தெலுங்கு சினிமா பற்றியும் நிறையவே சொல்லியிருக்கிறீர்கள்
பதிலளிநீக்குதொடருங்கள்
தமிழ்மனம் 2
பதிலளிநீக்குசூப்பர் மகேஷ் பாபு பதிவுக்கு தலைவா,,,,,,,, போக்கிரி 65 கோடி வசுல் செய்தது,,,,,,,,, நான் நிரைய எதிர் பார்தன்.... ஓகே நலலா இருகுது நன்றி
பதிலளிநீக்குமகேஷ் --தெலுங்கு பட உலகில் எனக்கு மிகவும் பிடித்த இவர் மட்டும்தான் ,கொஞ்சம் ஓவர் ஹீரோயிசம்தான் ஆனாலும் ரசிப்பேன் ,இவருடைய அதிதி படம் செகந்தராபாதில் இருந்த பொழுது பார்த்தேன் ,தியேட்டரே அல்லகோளால் பட்டது ...பகிர்வுக்கு நன்றி நண்பா
பதிலளிநீக்குஅசால்டான இவரது டயலாக் டெலிவரி ரசிக்க வைத்தாலும் அதையே எத்தனை படத்தில் பேசுவார்?
பதிலளிநீக்குமுதல் முறையாக உங்கள் தளத்துக்கு வருகிறேன். தொடருங்கள்...
பதிலளிநீக்குபிற மொழி நடிகர்களையும் பற்றி தெரிந்துக் கொள்ள வாய்ப்பு கிடைத்தது...
பதிலளிநீக்குசூப்பர்.. தொடருங்கள்..
super
பதிலளிநீக்கு//எனக்கு ரவி தேஜாவுக்கு பிறகு பிடித்த நடிகர் மகேஷ் பாபு தான்.//
பதிலளிநீக்குஎனக்கும் இதே வரிசை தான்.. ரவி தேஜா, மகேஷ் பாபு தான், அடுத்தது அல்லு அர்ஜுன்..
ஹீரோக்கள் பத்தி மட்டும் பேசாம, மத்த ஆர்டிஸ்ட் பத்தியும் எழுதினா நல்லா இருக்கும்..
தயவு செய்து பிரம்மானந்தம் பத்தி எழுதுங்க தல.. எனக்கு ரொம்ப பிடிச்ச ஒரு காமெடியன்..
அஞ்சு படம் ரிலீஸ் ஆனா ரெண்டு படத்துல அவர் இருப்பாரு.. ரொம்பவும் திறமையான நடிகர்.. நம்ம நாகேஷ்கு இணையா சொல்லலாம் அவர..
arumayaana pathivu.unkal arimukam kidaiththathil makilchchi.
பதிலளிநீக்குtamilmanam 4
பதிலளிநீக்குi like mahesh babu...
பதிலளிநீக்குi from sri lanka (Rishan)
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குநண்பா சினிமா நடிகர்கள் பற்றி சொல்வதோடு நிறுத்தாமல் , சில களம் வென்று பெயர் பெற்று நிற்கும் தலைவர்கள் பற்றி கூட நீங்கள் எழுதலாமே . நம் நாட்டில் உண்மையான போராளியான பகத் சிங் , நேதாஜி போன்றோரது உண்மையான வாழ்க்கை அவர்கள் எப்புடி இறந்தனர் போன்றவை மக்களுக்கு தெரியாது இவர்களுக்கு தெரிந்ததெல்லாம் பகத் சிங், நேதாஜி இந்த பெயர்கள் மட்டும் தான் .
பதிலளிநீக்குநம் தமிழ் வேங்கை பிரபாகரன் பற்றி எழுதுங்கள் . உலகின் மிகவும் அதிகமானோர் போராளி என்றால் சொல்லும் ஒரே பெயர் சே குவேரா அவர் பற்றி எழுதுங்கள்.
சே குவேரா, பிடல் காஸ்ட்ரோ ,அண்ணா கஜாரே இவர்கள் பற்றியும் எழுதுங்கள்
super
பதிலளிநீக்குபுதிய தகவல்கள்
பதிலளிநீக்குபல தகவல்கள் தெரிந்து கொண்டேன்..
பதிலளிநீக்குevar 15 padam than nadichu erkara
பதிலளிநீக்குI love Mahesh babu , really he is a fantastic hero, dookadu movie is fantastic, i think u miss something in this article bt 9s thx
பதிலளிநீக்குinnummm niraya irukku ivaroda copy paste than tamil nattula onnu suthikittu irukku
பதிலளிநீக்குமஹெஷ் பாபு
பதிலளிநீக்குhii.. Nice Post
பதிலளிநீக்குThanks for sharing
More Entertainment
Best Regarding.
Wow Mahesh than ennoda fav actor..mahesh i pathi sonnadhukku romba thanks :))))
பதிலளிநீக்குnow he is the 5th most desirable men in india..:)