செவ்வாய், ஜனவரி 08, 2019

2018 தமிழ் டாப் 10 திரைப்படங்கள்...

இனிய 2019 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். பதிவு எழுதி பல மாதங்கள் ஆகிறது. சோம்பலும், வேலையும் சேர்ந்து என்னை எழுத விடாமல் செய்து விட்டன. இந்த பதிவு கூட ஜனவரி ஒன்றாம் தேதி வெளியிட வேண்டியது. வழக்கம் போல தள்ளி வைத்து இப்போது பதிவேற்றுகிறேன். இந்த வருடம் முதல் தொடர்ந்து எழுதுவேன் என்று நம்புகிறேன். பார்ப்போம். சரி, இந்த ஆண்டில் பல படங்கள் வெளியாகின. 'தல' அஜித்தை தவிர பெரிய நடிகர்களின் படங்கள் குறைந்த பட்சம் ஒன்றாவது வெளிவந்திருந்தது மகிழ்ச்சி. ஆனால், ஓப்பனிங் வசூல் நிலவரங்கள் தவிர்த்து விமர்சனரீதியாக பெயர் பெற்ற படங்கள் எதுவுமே இல்லை என்பதே வருத்தம் கலந்த உண்மை. அதே சமயம் சிறிய பட்ஜெட்டில், கதையை மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட சில படங்கள் விமர்சனரீதியாகவும், வசூல்ரீதியாகவும் வெற்றிபெற்றிருந்தன. அதில் எனக்கு பிடித்த 10 படங்களை பட்டியலிடுகிறேன்.

மேற்குத்தொடர்ச்சி மலை:
இந்த திரைப்படத்தை பார்க்கும்போது என் மனதிற்குள் ஒலித்த குரல், 'இப்படி ஒரு வாழ்க்கை நமக்கு வாய்க்கவில்லையே, எவ்வளவு பெரிய யோகக்காரன் நான், பாவம் அவர்கள்'. கடவுள் சத்தியமாக எனக்கு அப்படித்தான் தோன்றியது. மலையும், மலை சார்ந்த மழையும் என்பது அவ்வளவு சாதாரணமானது அல்ல. ஒரு குறிப்பிட்ட காட்சி, அந்த ஏலக்காய் மூட்டை