கற்க கற்க கள்ளும் கற்க...

புதன், ஜூன் 22, 2011

'அவன் இவன்' திரைப்படம் - இது உலக சினிமா அல்ல...

நான் பதிவெழுத ஆரம்பித்ததிலிருந்தே புதிதாக ரிலீஸ் ஆகும் படங்களை விமர்சித்ததில்லை. காரணம், புதிய படங்களை விமர்சிக்க பல பதிவர்கள் இருக்கிறார்கள். ஆனால் பழைய படங்களை விமர்சிப்பதற்கு ஆட்கள் மிகவும் கம்மி. 'எவ்வளவோ புதிய, நல்ல படங்கள் வெளிவந்தபோது நீ எந்த படத்தையும் விமர்சிக்கவில்லையே. இந்த படத்திற்கு மட்டும் ஏன்?
என்று நீங்கள் கேட்கலாம். தலைவர் நடித்த எந்திரன் படத்தையே விமர்சிக்காத நான், நேற்று வந்த 'பாலா' படத்திற்கு விமர்சனம் எழுதவேண்டுமா? என்று நான் கூட யோசித்துப்பார்த்தேன். ஆனால் பாலா இயக்கிய அவன் இவனை குறித்து சில 'உலக சினிமா ரசிகர்கள்' அவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும். அதற்காகத்தான் இந்த பதிவு. அதற்காக நான் பாலாவின் 'பரம ரசிகன்' என்று நினைக்கவேண்டாம். பாலா ஒரு சிறந்த இயக்குனர் என்பதை தாண்டி அவரை எனக்கு பர்சனலாக சுத்தமாக பிடிக்காது. சரி, மேற்கொண்டு படத்தின் விமர்சனத்தை பார்ப்போம்.அவனாக விஷால், இவனாக ஆர்யா. இரண்டு பேரும் திருட்டையே தொழிலாக நம்பும் குடும்பத்தில் பிறந்தவர்கள். விஷாலுக்கு நடிப்பென்றால் உயிர். ஆர்யாவுக்கோ திருட்டு தான் எல்லாமே. இருவருமே அந்த ஊரின் வாழ்ந்து கெட்ட ஜமீன்தாரின் செல்ல பிள்ளைகள். இருவருக்கும் தனித்தனி காதல் காட்சிகள், நகைச்சுவை காட்சிகள் எல்லாம் முடிந்தவுடன் மாடுகளை அடிமாடுகளாக்கி விற்கும் வில்லனை போலீசில் மாட்டி விடுகிறார் ஜமீன்தார். கோபமாகும் வில்லன், ஜமீன்தாரை கொடூரமாக கொல்கிறான். இறுதியில் ஜமீன்தாரை கொன்ற வில்லனை பழிக்கு பழி வாங்குகிறார்களா இல்லையா என்பது தான் இந்த 'அவன் இவனின்' கதை.வால்டர் வணங்காமுடியாக விஷால். சிறந்த நாடகக் கலைஞராக ஆகவேண்டும் என்ற நினைப்பை கொண்டவர். இவரைப் பற்றி கேட்கப்படும் கேள்விகள், அவர் எதற்கு பெண்மைதன்மையோடு இருக்க வேண்டும்? அவருக்கு மாறுகண் ஏன்? முதல் கேள்விக்கான பதில் இந்த படத்திலேயே இருக்கும். அதாவது 'அகரம்' தொண்டு நிறுவனத்துக்கான மேடையில், நடிகர் சூர்யாவிடம் 'அபிநயங்கள்' செய்துகாட்டும்போதே தெரிந்துகொள்ள வேண்டும் இவர் ஒரு பக்கா நாடக நடிகர் என்று. இன்னும் சாட்சியோடு பதில் வேண்டுமானால், 'வரலாறு' அஜித்குமார் தான் பதில். அடுத்து கேள்விக்கு பதில், எங்கோ இருக்கும் ஹீரோயினை எங்கோ இருக்கும் ஹீரோ எப்படி காப்பாற்றுகிறார்? நோஞ்சான் ஹீரோ பலமான அடியாட்களை எப்படி அடித்து விழ்த்துகிறார்? இந்த இரண்டு கேள்விகளுக்கு நியாயமான பதில் சொல்லுங்கள், பிறகு உங்கள் கேள்விக்கு நான் விளக்கம் தருகிறேன். (விட்டால் ஆர்யாவுக்கு எப்படி செம்பட்டை முடி வந்தது என்று கேட்டாலும் கேட்பார்கள் நம் 'உலக சினிமா ரசிகர்கள்!) விஷாலை பொறுத்தவரை இவர் 'நடித்த' முதல் படம் இது தான் என்பதை அவர் மறக்கக்கூடாது.கும்புடுறேன் சாமியாக ஆர்யா. இவரை பற்றிய குறை என்னவென்றால், இவர் தன் காதலியைகுட்டிக்கரணம் அடிக்கவைத்தார் என்று. சரி, அவர் செய்தது கொஞ்சம்உறுத்தலான விஷயம்தான். அதற்காக பாலாவைஆணாதிக்கவாதி' என்றுசொல்லுவது எந்தவகையில் நியாயம்? ஒரேஒரு காட்சியை வைத்துஒரு இயக்குனரின் முழுபடத்தையும் எடைபோடக்கூடாது. அடுத்து, கதாநாயகிகளாக வரும்ஜனனி அய்யர், மதுஷாலினி அவர்களின்கதாபாத்திரங்கள்பிதாமகன் & சேது' படத்துகதாநாயகிகளின் காப்பிஎன்கிறார்கள். இதில்என்ன தப்பு இருக்கிறது? அவர் ஒன்றும் ஒருஜப்பானிய படத்தை திருடி, அதை தமிழில் ரீமேக்செய்து, கதை, திரைக்கதைவசனம், இயக்கம் - 'மிஷ்கின்' என்ற பெயரைமாற்றி தன்போட்டுக்கொள்ளவில்லையே. அவர் தான் இயக்கியகதாபாத்திரங்களின்பிரதிபலிப்பை தானேஎடுத்தார்? அடுத்துஎஸ்ராவின் நாராசமானவசனமாம். அய்யாசாமிங்களா, நீங்க வீட்டைவிட்டு கொஞ்சம் வெளியேவந்து பாருங்க.இன்னைக்கி நல்லா படிச்சி, அமெரிக்கன் இங்கிலீஷ் பேசுறவன் கூட ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது நாராச வார்த்தைகள் உபயோகப்படுத்துறான். இந்த விளக்கம் போதுமா? கடைசி முக்கியமான கேள்வி, 'இந்த மாதிரி படத்தை நீங்க ஏன் பாலா இயக்குறிங்க? ஏன்னா... அவர் ஒரு இயக்குனர். பாலாவுடைய முந்தைய படங்கள் விளிம்பு நிலை மனிதர்களின் படங்கள். அதோடு அவன் இவன் படத்தை ஒப்பிட்டால் என்ன நியாயம்? இது ஒரு கமர்சியல் படம். பாலா இப்படித்தான் படங்களை இயக்க வேண்டும் என்று யாரும் சொல்ல முடியாது. பாலாவை மட்டுமல்ல, எந்த ஒருத்தரையும் சொல்ல முடியாது. இவ்வளவு குறை கூறுபவர்கள் தான், இந்த படத்தை முதல் நாள், முதல் ஷோ பார்த்திருப்பார்கள். இப்படி பாலாவின் ரசிகர்களான நீங்களே இந்த படத்தை தவறான கண்ணோட்டத்தில் எடுத்துக்கொண்டால் சாதாரண ரசிகன் என்ன நினைப்பான் பாலாவை பற்றி?இவ்வளவு குறைகள் கூறிய 'உலக சினிமா ரசிக' நண்பர்களே, இந்த படத்தில் சிறப்பாக நடித்த ஜிஎம். குமார், ஆர்.கே அவர்கள் பற்றி மூச்சே வரவில்லையே உங்களிடமிருந்து, அது ஏன்? ஓஹோ, ஒரு வேளை அவர்கள் உங்கள் கண்ணோட்டத்திலும் சிறப்பாக நடித்திருக்கிறார்களா? அதனால் தான் நீங்கள் அவர்களை குறை கூறவில்லையோ? ரொம்ப நல்லது. சரி, நம் தமிழ் சினிமாவில் 'உலக சினிமாக்கள்' வருவதில்லை என்று குற்றம் சாட்டுகிறீர்கள். உண்மை தான். இந்த வருடம் தமிழில் இரண்டு உலகத்தரத்திலான திரைப்படங்கள் வெளிவந்தன. ஒன்று, 'அழகர்சாமியின் குதிரை' மற்றொன்று 'ஆரண்ய காண்டம்'. இந்த இரண்டும் இன்றும் வசூல் சாதனை படைத்து ஓடிக்கொண்டிருக்கிறதா? இல்லை. மற்ற நாட்டில் இது போன்ற உலகத்தரம் வாய்ந்த படங்கள் ஆஹா, ஓஹோவென்று ஓடுவது போல நம் நாட்டில் ஓடாது. அதற்கு காரணம், நம் ரசிகனின் 'பொறுமையின்மை'. அவனை பொறுத்தவரை ஒரே பாடலில் பணக்காரன் ஆவது, படத்தின் முடிவில் வில்லனை ஹீரோ விழ்த்துவது என்ற ஒரே ரூட்டு தான் அவனுக்கு பிடிக்கும். இங்கே உலகத்தரம் வாய்ந்த படங்கள் கொடுக்க லட்சம் பேர் இருக்கிறார்கள். ஆனால் இங்கே அந்த மாதிரி படத்தை பார்க்க நம் தமிழ் சினிமா ரசிகர்கள் இன்னும் தயாராகவில்லை. ஆனால் 'மாற்றம் ஒன்று தான் மாற்றமில்லாதது' என்பதுபோல இந்த நிலைமையும் மாறும். அதுவரை மற்ற படங்களை வீணாக குறைகூறாமல் இருக்க முயற்சிக்கலாமே?


(தயவுசெய்து படித்ததோடு மட்டுமல்லாமல் வாக்களித்து, என்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தவும்).

Post Comment

1 comments:

கவிதை காதலன் சொன்னது…

நீங்கள் சொன்ன கருத்துக்களில் எனக்கு சில விஷயங்களில் உடன்பாடு இல்லை என்றாலும், ஆரண்யகாண்டம் குறித்து சொல்லி இருப்பது, முற்றிலும் உண்மையே.. இந்தப்படத்தை ஏன் ஆதரிக்காமல், குப்பைப்படங்களை எல்லாம் ஆதரிக்கிறார்கள் என்ற கோபமும் மக்கள் மேல் எழத்தான் செய்கிறது... எனிவே உங்கள் பார்வையில் மிகத்தெளிவாக விரிவாக சொல்லி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் நண்பா

கவிதை காதலன்

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

கருத்துரையிடுக