கற்க கற்க கள்ளும் கற்க...

வியாழன், மார்ச் 17, 2011

அடுத்த முதல்வர் யார்? கலைஞரா? அம்மாவா? - ஒரு அலசல்

அரசியலை பற்றிய ஒரு பதிவை நான் நெடுநாட்களாக எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் அதற்கு தக்க சமயம் என்று ஒன்று இருக்கிறதல்லவா? அதனால் தான் தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் இந்த நேரத்தில் நான் இதை எழுதுகிறேன். அதுமட்டுமல்ல, அரசியலை பற்றி என்னுடைய பார்வையை சொல்ல வேண்டும் என்பதற்காகத்தான் இந்த பதிவு.

திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும்:கலைஞரின் ஆட்சியில் பாலும், தேனும் ஆறாக ஓடியது என்று சில உடன்பிறப்புக்கள் சொன்னாலும் அது எந்தளவுக்கு உண்மை என்று ஒரு சாமான்யனுக்கு நன்றாகவே தெரியும். ஒரு ரூபாய்க்கு கிலோ அரிசி, கலர் டிவி விநியோகம், விவசாயிகளுக்கு கூட்டுறவு கடன் ரத்து, மகளிர் சுயஉதவி குழு, மெட்ரோ ரயில் திட்டம், சென்னையில் மேம்பாலங்கள், பூங்காக்கள் என்று சிங்கார சென்னையாக மாற்றியது என்று பல சாதனைகள் செய்தாலும் 2G ஸ்பெக்ட்ரம் ஊழலில் பெரிய அளவில் அடி வாங்கினார். அதுமட்டுமல்லாமல் சினிமா துறையில் அவர்களின் குடும்ப ஆதிக்கம், சட்டம் ஒழுங்கு சீர்கேடு என்று அவருக்கு பாதகமாக அமைந்தது. இந்த தேர்தல் சமயத்தில் காங்கிரஸ் 63 தொகுதிகள் கேட்க, கலைஞரோ 60 தொகுதிகளே சாத்தியம் என்று கூற, கூட்டணி உடையும் என்று பெரிய அளவில் எதிர்பார்க்க பட்டது. ஆனால் இரண்டு நாளில் 63 தொகுதிகள் காங்கிரசுக்கு தருகிறோம் என்று கூறியது திமுக. கலைஞர் காங்கிரஸின் நிர்பந்தத்திற்கு ஒப்புக்கொள்ள காரணம் என்ன? கனிமொழி தான் காரணம் என்று சொல்கிறார்கள் சில திமுகவினர்கள் . தேர்தல் நேரத்தில் சிபிஐ ரெய்டு அது, இது என்று தலைவலி இல்லாமல் இருக்க வேண்டும் என்பதால் தான் அவர் காங்கிரஸ் கேட்ட தொகுதிகளை தர ஒப்பு கொண்டார். காங்கிரஸ் கட்சி தனியாக தமிழகத்தில் காலுன்ற முடியாது என்பது காங்கிரஸ்காரர்களுக்கே நன்றாக தெரியும். அதனால் தான் கடைசி வரை பேச்சுவார்த்தையை நடத்தி வேண்டிய தொகுதிகளை கேட்டு பெற்றார்கள். இந்த முறை திமுக 119 தொகுதிகள், காங்கிரஸ் 63 தொகுதிகள், பாமக 30 தொகுதிகள், விடுதலை சிறுத்தைகள் 10 தொகுதிகள் மற்றும் முஸ்லிம் லிக், மற்ற திமுக கூட்டணி கட்சிகள் அனைத்தும் இன்ன பிற தொகுதிகளில் போட்டியிடுகிறது.
அதிமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும்:அம்மா ஆட்சி என்றாலே அது ஒன்றும் இல்லாத உப்புமா ஆட்சி என்று அனைவருக்குமே நன்றாக தெரியும். கடந்த ஐந்தாண்டுகளில் அம்மா கொட நாட்டில் நாலரை ஆண்டுகள் பொழுதை கழித்தார். கூட்டணி தலைவர்களை சந்திக்காமல் இழுத்தடித்தார். ஆனால் திடிரென்று தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தார். இறந்து போன மீனவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி செய்தார். என்னடா இது ஆச்சிர்யம் என்று திகைத்தபோது தான் தெரிந்தது, தேர்தல் நெருங்குகிறது என்று. பின்பு விஜயகாந்தின் தேமுதிகவோடு கூட்டணியமைத்து 41 தொகுதிகள் ஒதுக்கி கொடுத்தார். மதிமுகவை மறந்து அ தி மு கவின் பிரசார பேச்சாளராகவே மாறியிருந்த வைகோவிற்கு அல்வா கொடுத்தார். பின்பு சரத்குமாரின் சமகவிற்கு 2 தொகுதிகள், மனித நேய மக்கள் கட்சிக்கு 3 தொகுதிகள் என்று 'வழங்கிவிட்டு' பிரசாரத்திற்கு கிளம்பிவிட்டார். கூட்டணி கட்சியினரையும் மதிக்காமல், கூட்டணி தர்மத்தையும் மதிக்காமல் அவர் நடந்து கொண்டதால் இன்று முன்றாவது அணி உருவாக வழி வகுத்து விட்டார். இது திமுகவிற்கு ஆபத்தோ இல்லையோ, கண்டிப்பாக அதிமுகவிற்கு பேராபத்து தான். ஏற்கனவே கட்சிக்காக உழைத்த சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன், பெரியசாமி என்று பல முக்கிய பிரமுகர்கள் எதிரணியில் சேர்ந்து விட்டார்கள். கட்சி மேலும், மேலும் பலவினமடைந்து கொண்டிருக்கிறதே தவிர பலமுட்டுவது போல் ஒன்றும் தெரியவில்லை.

என் அலசல்:கடந்த தேர்தலை விட இந்த தேர்தல் தாறுமாறாக சூடுபிடித்திருகிறது. காரணம், அதிமுகவோடு கூட்டணி என்று கருதப்பட்ட தேமுதிக, மற்ற கட்சிகளோடு இணைந்து மூன்றாவது அணி அமைப்பது குறித்து ஆலோசனை நடத்திக்கொண்டிருக்கிறது. என்ன பிரச்சனை அதிமுகவில்? கட்சி வேட்பாளர்களுக்கான நேர்காணலுக்கு ருபாய் 10,000 த்தை டெபொசிட் செய்ய சொல்லிருக்கிறது அதிமுக. அதன்படி பல்வேறு மாவட்டங்களில் இருந்து பலர் பணத்தை கட்டி விண்ணப்பித்திருக்கிறார்கள். ஆனால் விண்ணப்பித்த முக்கால்வாசி பேருக்கு நேர்காணலுக்கான அழைப்பு வரவேயில்லை. பணத்தை கட்டிய பல பேர் கட்சி அலுவலகத்தை சூழ்ந்து கோஷம் எழுப்பினார்கள். இதற்கெல்லாம் மேலாக ஒரு பெண்மணி கட்சி அலுவலக வாசலிலேயே திக்குளிக்க முயற்சித்திருக்கிறார். கட்சி தலைமை ஒவ்வொரு மாவட்ட செயலாளர்களை அழைத்து ஒரு லிஸ்ட் கேட்டது. அது என்னவென்றால், வரும் தேர்தலில் எந்தெந்த தொகுதிகளில் யாரையெல்லாம் வேட்பாளர்களாய் நிறுத்தலாம் என்ற லிஸ்ட் தான் அது. அதன்படியே அனைவரும் அவர்களுக்கு வேண்டப்பட்டவர்களை அந்த லிஸ்டில் இணைத்து கொடுத்திருக்கிறார்கள். பின்பு கட்சி மேலிடத்திற்கு வேண்டப்பட்டவர்களை மட்டும் நேர்காணல் என்ற பெயரில் பேரம் பேசி வேட்பாளராக அறிவித்திருக்கிறது அதிமுக. இப்படி நேர்காணலுக்காக விண்ணப்பித்தவர்களை புறக்கணித்துவிட்டு சிபாரிசில் வருபவர்களை வேட்பாளராக அறிவிப்பது எந்த வகையில் நியாயம்? அப்படி செய்வதால் விண்ணப்பித்தவர்கள் கட்சியின் மேல் கடுப்பாகி எதிரணிக்கு வாக்களிப்பார்கள். இது நிதர்சனமான உண்மை.

இதன் தொடர்ச்சி நாளை...(தயவுசெய்து படித்ததோடு மட்டுமல்லாமல் வாக்களித்து, பின்னூட்டமிட்டு என்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தவும்).

Post Comment

8 comments:

சண்முககுமார் சொன்னது…

அருமயான பதிவு இதன் தொடர்ச்சி நாளை எதிர் பார்க்கிறேன்

இதயம் படிச்சி பாருங்க
எதிர்த்து போராடுபவனே நிஜமான வீரன்

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

விரிவான அலசல்..

Arun J Prakash சொன்னது…

அருமயான பதிவு, விரிவான அலசல்.

பதிவுலகில் பாபு சொன்னது…

நல்லா அலசியிருக்கீங்க.. நல்ல பதிவு..

N.H.பிரசாத் சொன்னது…

//சண்முககுமார் சொன்னது…
அருமயான பதிவு இதன் தொடர்ச்சி நாளை எதிர் பார்க்கிறேன்.//

வருகைக்கு நன்றி நண்பரே. உங்கள் பதிவும் ஒரு அருமையான பதிவு.

N.H.பிரசாத் சொன்னது…

//தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…
விரிவான அலசல்.//

வருகைக்கு நன்றி மேடம்.

N.H.பிரசாத் சொன்னது…

//Arun J Prakash சொன்னது…
அருமயான பதிவு, விரிவான அலசல்.//

வருகைக்கு நன்றி நண்பரே.

N.H.பிரசாத் சொன்னது…

//பதிவுலகில் பாபு சொன்னது…
நல்லா அலசியிருக்கீங்க.. நல்ல பதிவு.//

வருகைக்கு நன்றி பாபு.

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

கருத்துரையிடுக