கற்க கற்க கள்ளும் கற்க...

சனி, ஏப்ரல் 02, 2011

சீரியல் கொலைகாரன் Jeffrey Dahmer - ஒரு பார்வை


நான் பதிவெழுத வந்த நாளிலிருந்தே சைகோ கொலைகாரர்களை பற்றி பதிவு எழுதவேண்டும் என்று ஒரு ஆசை இருந்தது. அந்த ஆசை இப்போது தான் நிறைவேறியிருக்கிறது. இந்த ஆசை எனக்கு வர காரணம், மதன் எழுதிய 'மனிதனுக்குள் ஒரு மிருகம்' புத்தகம் தான். அந்த புத்தகத்தில் இரண்டு முக்கிய சைகோ கொலைகாரர்களை பற்றி குறிப்பிட்டிருந்தார். அந்த
இரண்டு பேர்களில் ஒரு சைகோ கொலைகாரனை பற்றி இன்னும் சில தகவல்களோடு நான் இந்த இடுகையை பகிர்ந்துகொள்கிறேன். அதுமட்டுமல்ல. இது ஒரு தொடர் பதிவு. அதனால் இனி ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு சைகோ.

Jeffrey Lionel Dahmer என்பவன் 1960 மே 20 அன்று அமெரிக்காவில் பிறந்தவன். இவன் தன் பெற்றோருடனும், தன் தம்பி டேவிட்டுடனும் வசித்து வந்தான். இவனின் வாழ்க்கை எட்டு வயது வரை அமைதியாக போய்கொண்டிருந்தாலும், பதினைந்து வயதுக்கு பிறகு இவனின் பழக்கவழக்கங்கள் அடியோடு மாற ஆரம்பித்தது. டாமர் இந்த வயதில் முயல், அணில், ஓணான் போன்ற சிறு விலங்குகளை பிடிப்பதற்காகவே அருகில் உள்ள காட்டுக்குள் மணிக்கணக்கில் அலைவான். ஸ்டாம்ப் சேகரிப்பு மாதிரி புனை, அணில், முயல் உடற்பகுதிகளை துண்டு துண்டாக்கி சேகரித்து விதவிதமான ஜாடிகளில் வைத்திருந்தான் சிறுவன் டாமர். அவன் வசித்த தெருவில் ஒரு நாய் காரில் அடிபட்டு செத்துப்போனது. இரவு அங்கு ஒரு கத்தியுடன் போய், அந்த நாயின் தலையை மட்டும் வெட்டி வீட்டுக்கு எடுத்துசென்று ஒரு குச்சியில் செருகி வைத்தான் அவன். இவற்றையெல்லாம் தன்னை சுற்றி பரப்பி வைத்துக்கொண்டு பிறகு சுயஇன்பம் மேற்கொள்வதில் அந்த சிறுவனுக்கு மிகவும் விருப்பம் இருந்தது. எதோ 'மேற்படிப்பு' மாதிரி டாமர் மனித தலைகளை தேடி போனது பிற்பாடுதான்.

டாமருக்கு 17 வயதிருக்கும் போது அவனது பெற்றோர் விவாகரத்து வாங்கிக்கொண்டனர். டாமர் குடி பழக்கத்திற்கு அடிமையாக ஆரம்பித்தான். படிப்பும் அவனுக்கு சுத்தமாக ஏறவில்லை. அவனின் தந்தை அவனை ராணுவத்தில் சேர வற்புறுத்தினார். அவனும் ராணுவத்தில் சேர்ந்து ஆரம்பத்தில் ஒழுங்காகத்தான் இருந்தான். ஆனால் அந்த குடிப்பழக்கத்தால் அவன் திரும்ப தவறானவனாக மாற ஆரம்பித்தான். இரண்டு வருடங்கள் கழித்து அவனை Dismiss செய்தது ராணுவம். அவன் தந்தையிடம் செல்ல பயந்து, பாட்டி வீட்டில் தன் 'பாட்டிலோடு' தங்க ஆரம்பித்தான் டாமர். இவனின் 22 வது வயதிலிருந்து சுமார் ஆறு வருடம் வரை தன் பாட்டி விட்டில் வசித்து வந்தான் டாமர். அந்த சமயங்களில் அவனின் நடவடிக்கைகள் முற்றிலுமாக மாறி போயிருந்தது. துணிக்கடைகளில் இருக்கும் பொம்மைகளை திருடிக்கொண்டு வந்து தன் பிரோவில் வைத்துக்கொண்டான். ஏன் தெரியுமா? அதோடு தன் செக்ஸ் ஆசைகளை நிவர்த்தி செய்து கொள்வான் டாமர். இது போன்ற செய்கைகள் கொஞ்சம்கொஞ்சமாக அவன் பாட்டிக்கு தெரியவர, அவன் பாட்டி அவனை வீட்டை விட்டு வெளியே போக சொன்னாள். அவனும் தனியாக ஒரு புறநகரில், மரங்கள் சூழ்ந்த ஒரு பகுதியில் இருந்த வீட்டில் தனியாக தங்க ஆரம்பித்தான்.


டாமர் ஏற்கனவே இரண்டு முறை அமெரிக்க போலீசாரால் கைதுசெய்யப்பட்டவன். இரண்டு தடவையும் பாலியல் குற்றங்களுக்காகவே அவன் கைது செய்யப்பட்டான். ஐந்து வருடங்கள் சிறையிலும் இருந்திருக்கிறான் டாமர். சிறையிலிருந்து வெளியே வந்த டாமர், தன் கொலை படலத்தை ஆரம்பித்திருக்கிறான். ஆண், பெண் பேதமின்றி இதுவரை 17 பேரை கொடூரமாக கொன்றிருக்கிறது அந்த கொடூர மிருகம். தன்னந்தனியாக செயல்பட்ட டாமர், ஒரு சாடிஸ - செச்சுவல் கொலைகாரன். யாராவது ஒரு அப்பாவி பெண்ணையோ அல்லது ஆணையோ போகிறபோக்கில் தேர்ந்தெடுத்து கடத்தி கொண்டுபோய், பல மணி நேரம் விதவிதமாக சித்ரவதை செய்து, கடைசியாக கழுத்தை நெரித்து திர்த்து கட்டிய பிறகு, அந்த உடலோடு செக்ஸ் வைத்துக்கொள்வது டாமருக்கு ரொம்ப பிடிக்கும். 'பலநாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்' என்பது போல ஒரு நாள் வசமாக போலீசிடம் மாட்டினான். எப்படி தெரியுமா? ஒருவனை கொலை செய்வதற்காக அவனிடம் கத்தியை காட்டி மிரட்டி, விலங்கிட்டு வீட்டுக்குள் இழுத்து வந்திருக்கிறான். அவன் கொஞ்சம் சுதாரித்து டாமரை அடித்து விட்டு போலீசிடம் புகார் அளித்திருக்கிறான் அவன். டாமரை விசாரிக்க வந்த போலீசார், அவன் வீட்டிலிருந்து வரும் துர்நாற்றத்தை கண்டு சந்தேகமடைந்து அவன் வீட்டில் சோதனை போட்டார்கள்.

வீட்டுக்கு கிழே இருந்த ஒரு பாதாள அறைக்குள் நுழைந்த பார்த்த துணிவு மிகுந்த காவலதிகாரிகள் அனைவரின் நெற்றிகளும் சரேலென்று வியர்க்க ஆரம்பித்தன. சிலர் வெளியில் ஓடிவந்து வாந்தி எடுத்தார்கள். அங்கே...அறை முழுவதும், வெட்டப்பட்ட மனித கை, கால், தலைகள் சிதறி கிடந்தன. ஆசிட் நிரப்பப்பட்ட ஒரு பெரிய 'மீன்தொட்டிக்குள்' அழுகிப்போன (தலை, கை கால்கள் இல்லாத) உடல்கள் மெதுவாக மிதந்து கொண்டிருந்தன. அவனது குளிர்சாதன பெட்டிக்குள் வரிசையாக மனித தலைகள் அடுக்கப்பட்டிருந்தன. இன்னொன்றில், ஐஸ் படர்ந்து வெளுத்து போன நாலைந்து மனித இதயங்கள், கூடவே கச்சிதமாக வெட்டப்பட்டு வைக்கப்பட்டிருந்த ஆண் உறுப்புகளும் இருந்தன. மனித உடல் பகுதிகளை காய்கறிகளை போல சாப்பாட்டிலும் பயன்படுத்தினான் டாமர். போலீஸ் விசாரணையில், 'வீட்டில் இடமில்லை. எலும்புகள் ரொம்ப சேர்ந்து விட்டன. ஆகவே, அவற்றை சுத்தியலால் பொடியாக்கி, கிளிஞ்சல்களை போல மூட்டைகளில் கட்டி வைத்திருக்கிறேன். தலைகளை தனியே வெட்டி எடுத்து கொதிக்கும் நீரில் போட்டு, தோல்களை உரித்து துடைத்து, மண்டை ஓடுகளின்மீது சம்மந்தப்பட்டவரின் பெயர், வயது, கொலை செய்த தேதி போன்ற குறிப்புகளை எழுதி வைத்து விடுவேன்' என்று மிகவும் சாவதானமாக சொன்னான் டாமர்.

டாமரின் சார்பில் வாதாடிய வக்கீல், 'கொலைவேறிவந்தால், நம்மை போல அவனால் தன்னை கட்டுப்படுத்தி கொள்ள முடியாது. உடனே கொலையை செய்தாக வேண்டும். அதற்கு அவன் காரணமல்ல. டாமர் ஒரு சிந்திக்க முடியாத ஒரு மனநோயாளி' என்று வாதிட்டார். கொலையின்போது படிப்படியாக டாமர் மேற்கொண்ட அணுகுமுறை, அவனது ரசனை, மற்றும் 'சாதாரண' காலங்களில் அவன் மேற்கொண்ட அமைதியான வாழ்க்கை... இப்படி பல விஷயங்கள் டாமருக்கு எதிராக போனது. 'டாமருக்கு தரவேண்டியது ட்ரீட்மென்ட் அல்ல... பனிஷ்மென்ட்' என்று ஜூரி ஏகமனதாக சொல்ல, தொடர்ந்து 15 வருடங்கள் (957 ஆண்டுகள்) ஆயுள் தண்டனையை ஒருசேர அனுபவிக்க வேண்டும்' என்று தீர்ப்பு வழங்கினார் நீதிபதி (டாமர் வசித்த விஸ்கான்ஸின் மாநிலத்தில் மரண தண்டனை கிடையாது). சிறைப்பட்ட 950-வது நாளன்று ஒரு சக கைதி, 'டாமருக்கு தரவேண்டியது மரண தண்டனை தான்' என்று முடிவு கட்டி, அவன் பாத்ரூமில் அசந்திருந்த சமயம் பார்த்து ஒரு இரும்பு தடியால் டாமரின் தலையில் திரும்பத்திரும்ப அடித்து கொன்றான்.
ஒரு வேளை, 'எங்களை போன்ற சாமான்ய மனிதர்கள் வேறு, டாமர் போன்ற கொலை மிருகங்கள் வேறு. கொலை மிருகங்களையும், சாமான்ய மனிதர்களையும் ஒரே சிறையில் வைக்காதிர்கள்' என்று டாமரை கொன்ற அந்த சக கைதி நினைத்திருக்கலாமோ என்னவோ...நன்றி: மதனின் 'மனிதனுக்குள் ஒரு மிருகம்', விகடன் வெளியிடு.(தயவுசெய்து படித்ததோடு மட்டுமல்லாமல் வாக்களித்து, பின்னூட்டமிட்டு என்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தவும்).

Post Comment

7 comments:

Philosophy Prabhakaran சொன்னது…

interesting post... Just now i heard a shocking term called necrophilia... if u can write a decent post about that...

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

நல்ல பதிவு

Arun J Prakash சொன்னது…

நல்ல பதிவு, அடுத்த சைகோ பதிவை விரைவில் எதிர்பார்கிறேன்.

N.H.பிரசாத் சொன்னது…

//Philosophy Prabhakaran சொன்னது…
interesting post... Just now i heard a shocking term called necrophilia... if u can write a decent post about that...//

Thank u Prabha. Sure I will try to Write About Necrophilia.

N.H.பிரசாத் சொன்னது…

//சி.பி.செந்தில்குமார் சொன்னது…
நல்ல பதிவு//

திரு.சி.பி.செந்தில்குமாரின் வருகைக்கு நன்றி.

N.H.பிரசாத் சொன்னது…

//Arun J Prakash சொன்னது…
நல்ல பதிவு, அடுத்த சைகோ பதிவை விரைவில் எதிர்பார்கிறேன்.//

வருகைக்கு நன்றி நண்பரே. அடுத்த பதிவை கூடியவிரைவில் வெளியிடுகிறேன்.

குணசேகரன்... சொன்னது…

அந்த மதனின் கட்டுரையை நானும் படித்திருக்கிறேன். அதனை வலைப்பூவில் தெளிவான படங்களுடன் வெளியிட்டமைக்கு மிக்க நன்றி. தொடருங்கள்.

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

கருத்துரையிடுக