
எங்கிருந்து வந்தது என்று நீங்கள் கேட்கலாம். அவன் கொலைகளை செய்தான் என்று சொன்னேனே தவிர, எவ்வாறு கொலைகளை செய்தான் என்று சொல்லவில்லை. ஆனால் சிகாடிலோ எவ்வாறு கொலைகள் செய்தான் என்று விலாவரியாக கிழே சொல்லியிருக்கிறேன். அவன் கொலை செய்யும் படலத்தை மட்டும் சிகப்பு கலரில் எழுதியிருக்கிறேன். அதனால் இளகிய மனம் கொண்டவர்கள், இருதய நோயாளிகள் மற்றும் பதினெட்டு வயதிற்கு உட்பட்டவர்கள் அந்த சிகப்பு கலர் பாராவை தவிர்ப்பது நல்லது. அதையும் மீறி படித்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.

முன்னெச்சரிக்கையோடு, திட்டம் போட்டு செய்யாத கொலையாக இருந்தாலும், துப்பு துலக்காமல் 'எலேனா கேஸை' ரஷ்ய போலீஸ் மூடிவிட்டது. செப்டம்பர் 3, 1981, மாலை ஏழு மணி. லைப்ரரியிலிருந்து வெளிப்பட்ட சிக்காடிலோ, தன் காரில் ஏறிக்கொண்டான். மெள்ள காரை ஒட்டி சென்ற சிக்காடிலோவிடம் ஒரு பெரும்மூச்சும், கூடவே இனம் புரியாத கோபமும் தலைதூக்கியது. 'ஏன் நான் இப்படி இருக்கிறேன்? என் ஆண்மை முழுவதும் போய்விட்டதா? மனைவி என்னை பார்த்து எகக்காளமாக சிரிக்கிறாள். என்ன அவமானம் இது?' என்கிற எண்ணங்கள் அவனுக்குள் அலைமோதின (இதெல்லாமே பிற்பாடு போலீஸிடம் அவன் நுணுக்கமாக விவரித்தது). ஸ்டியரிங் மீது வெறுப்போடு தன் நெற்றியை ஒருமுறை மோதிக்கொண்டு நிமிர்ந்த சிக்காடிலோவின் பார்வை, அந்த பதினேழு வயது நிரம்பிய பள்ளி மாணவியின் மீது விழுந்தது. அவள் - லாரிசா கேசென்கோ. காரை நிறுத்தி இறங்கிய சிக்காடிலோ சுலபமாக அவளிடம் பேச்சு கொடுத்தான். பள்ளி ஆசிரியர் என்று தெரிந்தவுடன், அந்த பெண்ணும் நம்பிக்கையோடு பழகினாள். இருவரும் அருகே இருந்த சூப்பர் மார்க்கெட் சென்று ஐஸ்கிரீம் சாப்பிட்டார்கள். குளிபானம், சாக்லேட், பாப்கார்ன் வாங்கி கொண்டு வெளியேறினார்கள். கொஞ்ச தூரத்தில் இருந்த மரங்கள் அடர்ந்த தனிமையான பகுதிக்கு அந்த பெண்ணை அழைத்து சென்றான் அவன். அந்த பெண்ணை கொலை செய்கிற எண்ணமெல்லாம் அவனுக்கு அப்போது கிடையாது. 'யாராவது பெண்ணொருத்தி தன் ஆண்மைக்கு புத்துயிர் தருவாளா? என்கிற தயக்கமான எதிர்பார்ப்பு மட்டும்தான் சிக்காடிலோவுக்கு இருந்தது.

குதறப்பட்ட அந்த பெண்ணின் உயிரற்ற உடல் கிழே கிடக்க, கழற்றி போட்டிருந்த அந்த பெண்ணின் உடைகளை வானத்தை நோக்கி தூக்கி எறிந்தான். பிறகு, உன்மத்தத்துடன் அந்த உடலை சுற்றி பாடிக்கொண்டே நடனமாடினான். 'என்னால் சாதிக்க முடியும். எனக்கும் ஆண்மை வந்துவிட்டது! நான் உதவாக்கரை மனிதன் இல்லை. நான் ஜெயிப்பேன். யாரை வேண்டுமானாலும் கட்டளைக்கு பணியவைக்க என்னால் முடியும்' என்று தரையில் மண்டியிட்டு, இரு கரங்களையும் வானை நோக்கி உயர்த்தி, சிவந்து போயிருந்த வாயால் ஆனந்த கூச்சலிட்டான் சிக்காடிலோ. அதே சமயம்... இப்படிப்பட்ட ஒரு ரத்த பசி கொண்ட கொடூர மிருகம் தங்களிடையே சாவதானமாக வளைய வருகிறது என்கிற உண்மை ஊர்மக்களுக்கு கொஞ்சமும் தெரியாமல், அவன் எதிர்பட்டபோதேல்லாம் கனிவோடு 'விஷ்' பண்ணிக்கொண்டிருந்தார்கள். தினமும் நூலகங்களில் பணிவாக அமர்ந்து புத்தகம் படித்துக்கொண்டிருந்த சிக்காடிலோவை போலீஸும் சந்தேகப்படவில்லை! ஒன்றல்ல, இரண்டல்ல... பன்னிரண்டு வருடங்களுக்கு போலீசிடம் பிடிபடவில்லை ஆசிரிய தோல் போர்த்திய அந்த வெறி கொண்ட ஓநாய்! கடைசியில்... ஒரு சின்ன விஷயம் அவனை மாட்டிவிட்டது!

கொலைகளும் தொடர்ந்தன. 'கையாலாகாத காவல்துறை' என்று மக்கள் விமர்சிக்க ஆரம்பித்தார்கள். தர்மசங்கடப்பட்டுப்போன போலீஸ், புகழ்பெற்ற மனோதத்துவ நிபுணர், டாக்டர் அலெக்சாண்டர் புகானோவிஸ்கி என்பவரின் உதவியை நாடியது. தீவிர விசாரணைக்கும், ஆழ்ந்த சிந்தனைக்கும் பிறகு அந்த டாக்டர் கொலைகாரனின் குணநலன்களை ஒரு பேப்பரில் எழுதி போலீசிடம் கொடுத்தார். அதிலிருந்த முக்கிய விஷயங்கள், 'கொலைகாரன் இளைஞன் அல்ல. நாற்பது வயது நிரம்பியவன். அவனுடைய குழந்தை பருவம் மிகவும் கொடூரமாக இருந்திருக்கிறது. அன்பு என்பதே தெரியாமல் வளர்ந்தவன். அதீத தாழ்வு மனப்பான்மை உள்ளவன், செக்ஸ் பிரச்சனைகள் இருக்கும். ஆண், பெண் இருவரோடும் செக்ஸ் வைத்துக்கொள்ளும் ஆர்வம் உண்டு. திருமணமானவன், மூக்கு கண்ணாடி அணிந்திருப்பான், பள்ளி ஆசிரியனாக இருக்கும் வாய்ப்பு இருக்கிறது'! என்று சொல்லப்பட்டிருந்தன. இதை வைத்துக்கொண்டு நகர் முழுவதும் மப்டியில் போலீஸ் கண்காணிக்க ஆரம்பித்தது. ஒரு நாள்... பஸ் ஸ்டாப் அருகே ஒரு சிறுவன் கண்ணாடி அணிந்த, நடுத்தர வயதுள்ள ஒருவனோடு நடந்து போய் கொண்டிருந்தான். இது சட்டென்று போலீஸ்காரரின் ஒருவரின் பார்வையில் பட்டது. 'ஒருவேளை தந்தை, மகனாக இருக்குமோ?! பார்த்து விடுவோம்...' என்று அவர்களை மடக்கினார் அவர். 'இவர் என் அப்பா இல்லை, நண்பர். ஏன்? என்ன ஆச்சி?' என்றான் சிறுவன்.
சந்தேகத்தின் பேரில் சிக்காடிலோவை உடனே கைது செய்தார் அந்த போலீஸ்காரர். ஆனால், தாங்கள் தேடிக்கொண்டிருக்கும் கொலைகாரன் இவன்தானா என்று ஒன்பது நாட்கள் தொடர்ந்து விசாரித்தும் சிக்காடிலோ துளியும் அசைந்து கொடுக்கவில்லை. 'சந்தேகப்பட்டு இரண்டு அப்பாவிகளை கொன்றீர்கள். அதுபோல என்னையும் கொல்லுங்கள்!' என்று அவன் அழுததோடு சரி! பிறகு அந்த போலீஸ் அதிகாரி, அந்த டாக்டர் கொலைகாரனை பற்றி ஊகித்து எழுதியிருந்த விஷயங்களை அவனுக்கு நிதானமாக படித்து காட்டினார். கவனத்துடன் அதை கேட்டுக்கொண்டிருந்த சிக்காடிலோ திடீரென்று வாய்தவறி 'அட... அப்படியே இவ்வளவு கரெக்டாக என்னை விவரித்திருக்கிறாரே' என்று சொல்லி தொலைத்து - மாட்டிக்கொண்டான். 'இதோ, இவனேதான்!' சரேலென்று போலீஸ் எச்சரிக்கையானது. அதற்கு பிறகு போலீஸுக்கு சிக்காடிலோ ரொம்ப சிரமம் கொடுக்கவில்லை. ஒரு பெரும்மூச்சுடன். 'சரி, எல்லாவற்றையும் சொல்கிறேன், கேளுங்கள்' என்று தன் கொலை வரலாறை சொல்ல ஆரம்பித்தான் அவன்.
மிகவும் பரிதாபமான, கொடூரமான குழந்தை பருவம் சிக்காடிலோவை திக்குமுக்காட வைத்திருக்கிறது. சிறுவயதில், சோவியத் ரஷ்யாவின் பகுதியான உக்ரெயினில் பஞ்சம் தலைவிரித்தாடியபோது நடந்த பயங்கரமான ஒரு சம்பவம்... சிக்காடிலோவும் அவனுடைய பத்து வயது அண்ணனும் காட்டுபகுதியில் நடந்து வந்தபோது பஞ்சத்தில் தவித்த ஒரு கூட்டம், அவனுடைய அண்ணனை பிடித்து கொன்று, உடலை துண்டு துண்டாக்கி தீயில் வறுத்தெடுத்து சாவகாசமாக சாப்பிட்ட காட்சியை, தப்பி ஓடுவதற்கு முன்பு நேரில் பார்த்தான் சிக்காடிலோ. அந்த குரூரமான காட்சி கடைசிவரை அவன் மனதை விட்டு அகலவில்லை. அவனுடைய தந்தை போர்கைதியானார். வீட்டில் பட்டினி. அம்மாவின் அன்பு துளிக்கூட கிடைக்கவில்லை. தினமும் அவனை போட்டு அடிப்பாள். ஊர் பெண்கள் அவனை ஏளனம் செய்தார்கள். திருமணத்திற்கு பிறகு மனைவியும் அவனை மோசமாக நடத்தினாள். தொடர்ந்து ஒவ்வொரு இரவும் ஏசினாள்.

எடுத்தவுடன் கொலை செய்வதை தவிர்த்தான் அவன். உடலெங்கும் கத்தியால் சரமாரியாக குத்தி, பிறகு கத்தியை தூக்கிப்போட்டுவிட்டு, பற்களையும் நகங்களையும் பயன்படுத்துவான். /'இரை'யின் கண்கள் அவனை 'டிஸ்டர்ப்' செய்தன. ஆகவே (உயிரோடு இருக்கும்போதே) கண்களை கத்தியால் தோண்டியெடுத்து பையில் போட்டுக்கொள்வான். பிறகு அந்த பகுதியிலிருந்து பீறிடும் ரத்தத்தை உறிஞ்சி குடிப்பான். அவன் முகமே ரத்தமயமாகி போனது. இறந்து கொண்டிருப்பவரின் நாக்கை இழுத்து வைத்து பல்லால் கடித்து குதறி தின்பது அவனுக்கு ரொம்ப பிடித்தது. கடைசியாக கொஞ்சநஞ்சம் இருக்கும் உயிரையும் கழுத்தை நெரித்து கொன்று விட்டு பிறகு அந்த உடல்மீது அமர்ந்து சாவதானமாக சுயஇன்பத்தில் ஈடுபடுவான். அவன் ஆண்மை சிலிர்த்துக்கொண்டது இம்மாதிரி சூழ்நிலையில் மட்டுமே!/. 1992 அக்டோபர் 15. நீதிமன்றம் சிக்காடிலோவுக்கு மரண தண்டனை விதித்தது. நீதிபதி தீர்ப்பை படித்தபோது சற்றே (மனித இறைச்சி இல்லாததால்?) இளைத்து போயிருந்த சிக்காடிலோவின் ரியாக்க்ஷன் என்ன தெரியுமா? கொட்டாவி விட்டுக்கொண்டிருந்தான். வெளியே கூடியிருந்த கூட்டம் கோபவெறியில் இருந்தது. 'எங்களிடம் அந்த மிருகத்தை விட்டுவிடுங்கள். நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்!' என்று அவனை அடித்து கொன்று போடும் ஆத்திரத்துடன் மக்கள் கூச்சல் போட்டார்கள். போலீஸ் ஒருவாறாக அவனை பத்திரமாக சிறைக்கு அழைத்து சென்றது.
1994, பிப்ரவரி 21. சிக்காடிலோவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அன்று அதிகாலை நீண்ட வராண்டா வழியாக அவனை நடக்கவைத்து மரண தண்டனைக்கான அறைக்கு அழைத்து சென்றார்கள். அங்கே நடுநாயகமாக மண்டியிட்டு அமர்ந்தான் அவன். 'ஏதேனும் சொல்ல விரும்புகிறாயா?' என்று கேட்டார் ஜெயில் அதிகாரி. நிமிர்ந்து யோசித்த சிக்காடிலோ, 'இறப்பதற்கு முன் ஒவ்வொருவரும் தங்கள் முத்திரையை உலகில் பதித்துவிட்டு போக வேண்டும். இல்லையென்றால், வாழ்க்கை அர்த்தம் இல்லை!' என்றான் சாவதானமாக. சிக்காடிலோவின் பின்னந்தலையில் ஒரு 'ஆட்டோமேட்டிக்' துப்பாக்கியை வைத்து அழுத்தினார்கள். அதிலிருந்த சக்தி வாய்ந்த புல்லட், அவன் மூளையை சிதறடித்தது...
நன்றி: மதனின் 'மனிதனுக்குள் ஒரு மிருகம்', விகடன் வெளியிடு.
(தயவுசெய்து படித்ததோடு மட்டுமல்லாமல் வாக்களித்து, பின்னூட்டமிட்டு என்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தவும்).
கொடூரமான உண்மையை படித்ததும் சிலிர்த்துவிட்டது. நன்றி.
பதிலளிநீக்குஷப்ப்பாஅ..... கண்ண கட்டுது... ஒவ்வொரு மனிதனையும் சூழ்னிலை எப்படியெல்லாம் மாற்றி விடுகிறது
பதிலளிநீக்குபடத்துல கூடஇப்படி பாத்தது இல்ல....
பதிலளிநீக்குமிகவும் அழகான தமிழில் இச் சம்பவம் பற்றி தெளிவாகவும் அருமையாக விளக்கம் தந்துள்ளீர்கள்.
பதிலளிநீக்குமிக்க நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்.