1909 - அண்ணா பிறப்பு (செப்டம்பர் 15 - காஞ்சிபுரம் - தந்தை நடராஜன், தாய் பங்காரு அம்மாள்).
1914 - காஞ்சிபுரம் பச்சையப்பன் பள்ளியில் சேர்கிறார்.
1928 - சென்னை பச்சையப்பன் கல்லூரியில் மேற்படிப்புக்காக சேர்கிறார் அண்ணா.
1930 - மனைவி திருமதி ராணி அம்மையாருடன் திருமணம்.
1931 - அண்ணாவின் முதல் கட்டுரை 'தமிழரசு' இதழில் வெளியானது.
1934 - தந்தை பெரியாருடன் முதல் சந்திப்பு. அவரை மானசீக குருவாக ஏற்கிறார்.
அரசியல் மற்றும் சமுக பணிகளில் ஆர்வமும் வேகமும் அதிகரிக்கிறது.
முதல் சிறுகதை ஆனந்த விகடனில் வெளியாகிறது.
1935 - கல்லூரியிலிருந்து பட்டதாரியாக வெளியே வருகிறார்.
1935 - வேலைக்கு செல்லாமல் சமுக பணிகளில் ஈடுபட முடிவு செய்கிறார்.நீதி கட்சியில் சேர்கிறார்.
1936 - சென்னை மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைகிறார்.
1937-38 - 'விடுதலை' மற்றும் 'குடியரசு' இதழ்களில் துணை ஆசிரியராக பணிபுரிகிறார்.
ஹிந்தி எதிர்ப்பு போராட்டம்.
அண்ணா, முதன்முதலாக சிறைக்கு செல்கிறார்.
1939 - நீதி கட்சியின் செயலாளராகிறார்.
1942 - சென்னை நீதி கட்சி மாநாட்டுக்கு தலைமை தாங்குகிறார்.
'திராவிட நாடு' இதழை தொடங்குகிறார்.
1943 - அண்ணாவின் முதல் நாடகம் 'சந்திரோதயம்' அரங்கேறுகிறது.
1944 - அண்ணா முன்வைத்த கோரிக்கையின்படி நீதி கட்சி, திராவிடர் கழகமாகிறது.
1947 - இந்திய சுதந்திர நாள் விவகாரத்தில், பெரியாருடன் முதல் கருத்து வேறுபாடு. 1948 - ஈரோட்டில் அண்ணா தலைமையில் திராவிடர் கழக ஹிந்தி எதிர்ப்பு சிறப்பு மாநாடு.
அண்ணாவிடம் 'பேட்டி சாவியை தருகிறேன்' என்று பேசுகிறார் பெரியார்.
1949 - பெரியார் மணியம்மை திருமணம்.
'திராவிட முன்னேற்ற கழகம்' உதயம் (செப்டம்பர் 17). அண்ணா அதன் முதல் பொது செயலாளராக தேர்வு செய்யப்படுகிறார்.
1950 - அண்ணாவின் வழிகாட்டுதலில், ஏராளமான கிளை கழகங்களுடன் வளர தொடங்குகிறது தி.மு. கழகம்.
'ஆரிய மாயை' நூலுக்கும் தடை. அண்ணா கைது செய்யப்படுகிறார்.
1951 - சென்னையில், அண்ணா தலைமையில் தி.மு.க முதல் மாநில மாநாடு.
1952 - தமிழக சட்டமன்ற தேர்தலில், தி.மு.க போட்டியிடவில்லை. அதன் கொள்கைகளுடன் ஒத்து போகும் சில நல்ல வேட்பாளர்களை ஆதரிப்போம் என்று அறிவிக்கிறார்.
ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் வலுக்கிறது.
1957 - தமிழக சட்டமன்ற தேர்தலில், தி.மு.க 15 இடங்களை வெல்கிறது.
காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினராகிறார்.
1960 - நெடுஞ்செழியனை தொடர்ந்து, மீண்டும் தி.மு. கழக பொது செயலாளராக தேர்வு செய்யப்படுகிறார்.
1962 - தமிழக சட்டமன்ற தேர்தலில் அண்ணா தோல்வி.
தி.மு.க 50 இடங்களில் வெற்றி பெறுகிறது.
மாநிலங்களவை உறுப்பினராகிறார்.
சீன போர் சூழ்நிலையை கருதி, திராவிட நாடு கோரிக்கையை வலியுறுத்துவதில்லை என அறிவிக்கிறார்.
1963 - 'கட்டாய ஹிந்தி'யை வலியுறுத்தும் சட்டப்பிரிவை, எரிக்க முயன்ற குற்றத்துக்காக கைதாகிறார்.
1967 - தமிழக சட்டமன்ற தேர்தலில், திராவிட முன்னேற்ற கழக கூட்டணி அபார வெற்றி.
தென்சென்னை பாராளுமன்ற தொகுதியில் அண்ணா வெற்றி (பின்னர், இந்த பதவியை ராஜினாமா செய்துவிட்டு, சட்டமன்ற மேலவை உறுப்பினராகிறார்).
தமிழக முதல்வராக பதவியேற்கிறார் (மார்ச் 6).
1968 - உலக தமிழ் மாநாட்டை சிறப்பாக நடத்துகிறது அண்ணா அரசு.
அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகம் அண்ணாவுக்கு அழைப்பு விடுக்கிறது, உலக பயணம்.
அண்ணாமலை பல்கலைக்கழகம் அவருக்கு 'டாக்டர்' பட்டம் வழங்குகிறது.
அண்ணா உடல்நலம் கெடுகிறது, புற்றுநோய் என சந்தேகம் எழுகிறது.
அமெரிக்காவில் அறுவை சிகிச்சை.
1969 - 'தமிழ்நாடு' பெயர்சூட்டு விழாவில் கலந்து கொள்கிறார்.
மேலும் உடல்நலம் கெடுகிறது.
பிப்ரவரி 3 அதிகாலையில் மரணம்.
அண்ணாவுக்கு பிறகு திராவிட இயக்கங்கள்:
திராவிட முன்னேற்ற கழகத்திலும் சரி, தமிழக ஆட்சியிலும் சரி. தனக்குப்பின்னால் யார் பொறுப்பேற்க வேண்டும் என்பதை அண்ணா தெளிவாக சொல்லியிருக்கவில்லை.
அண்ணாவுக்கு பிறகு திராவிட இயக்கங்கள்:
திராவிட முன்னேற்ற கழகத்திலும் சரி, தமிழக ஆட்சியிலும் சரி. தனக்குப்பின்னால் யார் பொறுப்பேற்க வேண்டும் என்பதை அண்ணா தெளிவாக சொல்லியிருக்கவில்லை.
அண்ணாவுக்கு பிறகு அமைக்கப்பட்ட தற்காலிக அமைச்சரவை, அப்போதைய கல்வி அமைச்சர் இரா. நெடுஞ்செழியனை முதலமைச்சராக கொண்டிருந்தது.பிற அமைச்சர்கள், அதே பொறுப்புகளுடன் இந்த அமைச்சரவையிலும் தொடர்ந்தார்கள்.
அண்ணாவின் அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த மு.கருணாநிதி பிப்ரவரி 10, 1969 அன்று புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.
1971 தேர்தலிலும், திராவிட முன்னேற்றக்கழகம் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. மு.கருணாநிதி இரண்டாவது முறையாக முதல்வரானார்.
அண்ணாவின் காலத்தில் மிக முக்கியமான கலைத்துறை பிரதிநிதிகளில் ஒருவராக இருந்தவர், நடிகர் MGR அவர்கள். எழுபதுகளின் தொடக்கத்தில், இவருக்கும் முதல்வர் கருணாநிதிக்கும் இடையே உண்டான பிரச்சனைகளால், கட்சியில் ஏகப்பட்ட குழப்பங்கள் முளைத்தன.
1972 அக்டோபரில், எம்.ஜி.ஆரை கட்சியிலிருந்து நீக்கினார் கருணாநிதி. 'அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம்' (அ.தி.மு.க) என்ற புதுக்கட்சியை தொடங்கினார் எம்.ஜி.ஆர்.
முதல்வர் கருணாநிதியை எதிர்த்து தீவிர அரசியலில் குதித்த அ.தி.மு.க, மிக விரைவில் பெரும்பான்மை மக்களின் ஆதரவை திரட்டிக்கொண்டது. இதற்கு எம்.ஜி.ஆரின் சினிமா கவர்ச்சி பெரிதும் உதவியது.
பத்து ஆண்டுகள் தொடர்ந்து தமிழகத்தை ஆண்ட எம்.ஜி.ஆர், 1987 டிசெம்பரில் மரணமடைந்தார். பின்னர், 1989-இல் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது மு.கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்றக்கழகம்.
1991 தேர்தலில் அ.தி.மு.க வெற்றிபெற்றதில், ஜெயலலிதா தமிழக முதல்வரானார்.
தொன்னூறுகளில் திராவிட முன்னேற்ற கழகத்திலிருந்து பிரிந்து, தனித்து இயங்கிவரும் இன்னொரு முக்கியமான கட்சி,வைகோவின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம் (ம.தி.மு.க).
தி.மு.க.வின் தாய் கழகமான 'திராவிடர் கழகம்', பெரியாரின் மறைவுக்குப்பிறகு (1973), அவருடைய அணுக்க சீடர் கி.வீரமணி தலைமையில் இயக்கி வருகிறது.
அண்ணாவுக்கு பிறகு தமிழகத்தை ஆட்சி செய்த கட்சிகள், அவருடைய வழிவந்த தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் மட்டும் தான் குறிப்பிடத்தக்கது.
தி.மு.க: 1969 - 76, 1989 - 91, 1996 - 2001, 2006 - இன்றுவரை.
அ.தி.மு.க: 1977 - 80, 1980 - 84, 1985 - 87, 1988, 1991 - 96, 2001 - 2006.
ஆளுங்கட்சியாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி. அண்ணாவின் பெயரை சொல்லாமல் எந்தவொரு சக்தியாலும் இன்று அரசியல் செய்ய முடியாது.
நன்றி: என்.சொக்கன், 'அண்ணாந்து பார்' புத்தகம், கிழக்கு பதிப்பகம்.
(தயவுசெய்து படித்ததோடு மட்டுமல்லாமல் வாக்களித்து, பின்னூட்டமிட்டு என்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தவும்).
நிச்சயம் பலருக்கும் பயன்படக்கூடிய தகவல்கள். நன்றி.
பதிலளிநீக்குஅருமை , அண்ணாவின் மனைவி ரானி இறந்த நாள் பதிவிடவும்
பதிலளிநீக்கு