'ஈகா' படம் எப்போது வரும் என்று எதிர்பார்த்த ரசிகர்களில் நானும் ஒருவன். உகாண்டாவில் இந்த படத்தின் ஸ்பெஷல் ஷோவை ஏற்பாடு செய்திருந்தார்கள், இங்குள்ள திருப்பதி வெங்கடாசலபதி கோயில் டிரஸ்ட் உறுப்பினர்கள். இதற்க்கு முன்பே பல தெலுங்கு படங்கள் இவர்களால் இங்கே வெளியிடப்பட்டிருக்கின்றன.
அதுவும் கடந்த மூன்று மாதங்களாகத் தான். ராம் சரண் தேஜா, தமன்னா நடித்த 'ரச்சா' படம் தான் இவர்கள் இங்கே வெளியிட்ட முதல் படம். 'ரச்சா' படத்திற்கு பிறகு தம்மு, தருவு என்று பல படம் இங்கே வெளிவந்திருந்தாலும், டிக்கெட்டின் அதிக விலையால் 'ரச்சா' தவிர மற்ற படங்களை பார்க்க முடியவில்லை. ஆனால் 'ரச்சா' பார்த்த பிறகு நான் பெரிதும் எதிர்பார்த்த படம் 'ஈகா' மட்டும் தான். அதற்க்கு நான் சொல்லும் ஒரே காரணம், டைரக்டர் ராஜமௌலி.
கதை ரொம்ப சிம்பிள். ஹீரோ, ஹீரோயினை காதலிக்கிறார். ஹீரோயினை வில்லன் அடைய நினைக்கிறார். அதற்க்கு தடையாக இருக்கும் ஹீரோவை கொல்கிறார் வில்லன். இறந்த ஹீரோ, ஈயாக மாறி வில்லனை கொல்கிறார். எப்படிக் கொல்கிறார்? என்பதே திரைக்கதை. இது போன்ற கதைக்கு உயிருட்டுவது சாதாரண விஷயமில்லை. ஆனால் ராஜமௌலி, படத்தின் ஆரம்பத்திலிருந்து இறுதி வரை நம்மை இருக்கையோடு கட்டிப் போட்டு விடுகிறார் என்பதே உண்மை. அப்படி ஒரு பரபரப்பையும், விறுவிறுப்பையும் நம்மிடையே ஏற்ப்படுத்துகிறார் இயக்குனர் என்பதை மறுப்பதற்கில்லை. ஹீரோ 'ஈயாக' ஆன பிறகு வில்லனை பழி வாங்கும் காட்சிகள் ஒவ்வொன்றும் அருமை. இன்றைய தேதியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் விதத்தில் எடுக்கப்பட்டிருக்கும் ஒரே படம் 'ஈகா' மட்டும் தான்.
ஹீரோவாக நாணி. முதல் இருபது நிமிடமே வந்தாலும் மனதில் பதிகிறார் இவர். காதலி செய்யும் செயல்களை பாசிடிவ் ஆக எடுத்துக்கொண்டு தொடர்ந்து காதலிக்கும் இவர், வில்லனால் சாகும் போது பெண்களிடம் பரிதாபத்தையும் அள்ளிக்கொள்கிறார். ஹீரோயினாக சமந்தா. காதலனை அலையவிட்டு வேடிக்கை பார்க்கும் 'சராசரி' பெண் கதாபாத்திரம். பல இடங்களில் கொஞ்சம் அழகாகவே தெரிகிறார். அதே சமயம் பெரிதாக இவருக்கு காட்சிகள் இல்லையென்றாலும், பயன்படுத்திய வரை நன்றாகவே நடித்திருக்கிறார் இவர். வில்லனாக சுதிப். இவர் தான் படத்தை அதிகமாக ஆக்ரமிக்கிறார். அதுவும் இவரின் நடிப்பு, Chance less. சுதீபை பல படங்களில் பார்த்திருந்தாலும், இந்த படத்தில் இவரின் Performance சூப்பர். இயக்குனர் ராஜமௌலி படத்தில் நடித்த அனைவரையும் நன்றாக வேலை வாங்கியிருக்கிறார்.
என்றும் அன்புடன்

படத்திற்கு இசை, எம்.எம். கீரவாணி. படத்தின் பின்னணி இசையும், படத்தின் பாடல்களும் செம. ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். இசையில் பின்னியிருக்கிறார் இவர். 'நேனே நாணினே' மற்றும் 'ஈகா ஈகா ஈகா' பாடல்கள் இப்போது என்னுடைய Favorite பாடல்கள் ஆகிவிட்டது. படத்தின் Computer Graphics Works அபாரம். வெறும் கிராபிக்ஸ்க்கான செலவு ஏழு கோடி. ஆனாலும் எந்த ஒரு இடத்திலும் ஒரு சின்ன குற்றம் கூட கண்டு பிடிக்க முடியாத அளவுக்கு வேலை செய்திருக்கிறார்கள். வெறும் ஏழு கோடி வைத்து இவ்வளவு வித்தை காட்டும்போது, 162 கோடி செலவு செய்து, 'ரஜினி' என்ற பெரிய ஹீரோவை வைத்து படமெடுத்த ஷங்கர் ஏன் அவ்வளவு கேவலமாக 'எந்திரன்' படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை படமாக்கினார் என்று தான் தெரியவில்லை. குறிப்பாக 'ராட்சச மனிதன்' காட்சிகள்.
ராஜமௌலியை பற்றி என்ன சொல்வதென்றே தெரியவில்லை. காரணம், 'ஈகா' படத்தின் இடைவெளி வந்தபோது என் மனைவி என்னுடைய கையை குலுக்கி 'ஒரு நல்ல படத்துக்கு தான் என்னை கூட்டிட்டு வந்திருக்கீங்க' என்று சொன்னாள். அவளுக்கு ஓரளவு தான் தெலுங்கு தெரியுமென்றாலும், சமயங்களில் படம் பார்க்கும்போது ஏதாவது வசன காட்சி வந்தால் புரியாமல் போய் விடும். படத்தில் அதிக வசனமில்லாமல், வெறும் காட்சிகளாலேயே படத்தை வெற்றிப் படமாக்கியிருக்கிறார் இயக்குனர். படத்தின் மொத்த பட்ஜெட் முப்பது கோடி. இனி அடுத்து படம் எப்படி எடுப்பார் என்று எதிர்பார்ப்பு இப்போதே ஜாஸ்தியாகி விட்டது என்பதே உண்மை. படத்தை உகாண்டாவில் உள்ள 'Cineplex' தியேட்டரில் பார்த்தேன். ஒரு டிக்கெட்டின் விலை 50,000 Shillings (இந்திய மதிப்பின்படி Rs. 1,100 க்கு மேல்). ஆனால் கொடுத்த காசை வீணடிக்கவில்லை இந்த 'ஈகா @ நான் ஈ'.
(தயவுசெய்து படித்ததோடு மட்டுமல்லாமல் வாக்களித்து, பின்னூட்டமிட்டு என்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தவும்).
என்றும் அன்புடன்
ஓ உகாண்டாவில் தமிழ்ப்படங்கள் பார்க்க முடியாவிட்டாலும் கூட தெலுங்கு படங்கள் பார்க்க முடிகிறதா...
பதிலளிநீக்குஉகாண்டாவில் தெலுங்குப் படங்களா ? பரவா இல்லை. தமிழ் படங்களும் சீக்கிரம் வரவேண்டும் ...
பதிலளிநீக்குஎனக்கும் என் மனைவியிடம் நல்ல பெயர்
பதிலளிநீக்குஎடுக்கவேண்டும் என்கிற ஆவலைத்
தூண்டி விட்டீர்கள்
அருமையான விமர்சனப் பதிவு
தொடர வாழ்த்துக்கள்
Trailerலயே அசத்தியிருக்கிறார்கள் என்று தெரிகிறது. கண்டிப்பாக பார்க்கணும். வர வர உங்கள் விமர்சனங்களின் மெருகு கூடிக்கொண்டே செல்கிறது. வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்கு// வெறும் ஏழு கோடி வைத்து இவ்வளவு வித்தை காட்டும்போது, 162 கோடி செலவு செய்து, 'ரஜினி' என்ற பெரிய ஹீரோவை வைத்து படமெடுத்த ஷங்கர் ஏன் அவ்வளவு கேவலமாக 'எந்திரன்' படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை படமாக்கினார் என்று தான் தெரியவில்லை. குறிப்பாக 'ராட்சச மனிதன்' காட்சிகள்.//
பதிலளிநீக்குசரியான கருத்து.
விமரிசனத்தை இரசித்துப் படித்தேன். வாழ்த்துக்கள்!
ரொம்ப நல்ல விமர்சனம்...கண்டிப்பாய் படத்தை தியேட்டரில் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறன்...
பதிலளிநீக்குநல்ல விமர்சனம் நண்பரே......
பதிலளிநீக்குnice post
பதிலளிநீக்குபிளாகிங்க் பக்கம் வந்தே ரொம்ப நாள் ஆக..இந்த விமர்சனம் ரொம்பவும் அருமை..படத்தின் அழகையும், சிறப்புகளையும் நல்லா விளக்கிருக்கீங்க.ரொம்பவும் நன்றிங்க நண்பா..மீண்டும் பார்க்கலாம்.படம் பார்க்க டிரை பண்றேன்..
பதிலளிநீக்குவிமர்சனத்திற்கு நன்றி...
பதிலளிநீக்குhttp://dohatalkies.blogspot.com/2012/07/good-bad-and-ugly.html
Good Review...
பதிலளிநீக்குVALTHTHUKKAL
பதிலளிநீக்குSIRAPPAKA ULLATHU NANPARE
பதிலளிநீக்குgranir0bio_ni Donny Valentin click
பதிலளிநீக்குgahoperrend
perstatio_ki_Rochester Srinivas Blaschko Tenorshare 4DDiG 9.1.1.2
பதிலளிநீக்குSlack
MAMP PRO 5.0.5.3998
PhoneTrans Pro 5.3.0.20220816
ticksolsuce