செவ்வாய், டிசம்பர் 31, 2013

எனக்கு பிடித்த டாப் 20 தமிழ் திரைப்படங்கள் 2013...

இந்த ஆண்டு ஆரம்பத்திலிருந்து இன்று வரை பல படங்கள் தமிழில் வெளியாகின. அதில் சில படங்கள் சூப்பர் ஹிட், சில படங்கள் சுமார். நாம் பார்க்கப்போவது இந்த இரண்டு வகை படங்களை தான். அதற்க்கு முன்பு அனைவருக்கும் Advance புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். வரும் 2014 நம் அனைவருக்கும் சிறந்த ஆண்டாக இருக்கவேண்டுமென இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

 சூது கவ்வும்:
எனக்கு பிடித்த டாப் 20 தமிழ் திரைப்படங்கள் 2013 1
 'Black Comedy' படம். விஜய் சேதுபதி, சஞ்சிதா ரெட்டி, M. S. பாஸ்கர் மற்றும் பலர் நடித்து ஹிட்டடித்த படம். இன்னும் சொல்லப்போனால், இந்த வருடத்தில் வெளிவந்த பல காமெடி படங்களுக்கு இதுவே முன்னோடி. 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்துக்கு பிறகு விஜய் சேதுபதிக்கு ஒரு நல்ல 'Bench Mark' இந்த 'சூது கவ்வும்'.



வருத்தப்படாத வாலிபர் சங்கம்:
எனக்கு பிடித்த டாப் 20 தமிழ் திரைப்படங்கள் 2013 2
சிவகார்த்திகேயன் + சூரி கூட்டணியில், சத்யராஜ், ஸ்ரீதிவ்யா மற்றும் பலர் நடித்து, புதுமுக இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் வெளிவந்த படம். காமெடிக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்து வெளிவந்த இந்தப் படம், இந்த வருடத்தின் பாக்ஸ் ஆபீசில் பெரிதாக இடம் பிடித்தது. சிவகார்த்திகேயனுக்கும், 'பரோட்டா' சூரிக்கும் மார்கெட்டை ஏற்றி விட்டது இந்த 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்'.

மூடர் கூடம்:
எனக்கு பிடித்த டாப் 20 தமிழ் திரைப்படங்கள் 2013 3
இதுவும் 'Black Comedy' Genre படம் தான். படத்தின் இயக்குனர் நவீனின் கதாபாத்திரத் தேர்வு, அருமையான வசனங்கள், அபாரமான காட்சியமைப்பு என்று மிக அருமையாக செய்திருக்கிறார். படத்தில் நடித்த அனைவரும் மிக சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ஒரு சில சாதாரண காட்சிகளைக் கூட, 'ஹைக்கூ' கவிதையை போல மிக அருமையாக காட்சிப்படுத்தி இருக்கிறது, இந்த 'மூடர் கூடம்'.

தீயா வேல செய்யணும் குமாரு:
எனக்கு பிடித்த டாப் 20 தமிழ் திரைப்படங்கள் 2013 4
இயக்குனர் சுந்தர்.C யின் இயக்கத்தில், சித்தார்த், ஹன்சிகா, சந்தானம் மற்றும் பலர் நடித்து வெளிவந்த முழுநீள காமெடிப் படம். வழக்கமான சுந்தர்.C யின் 'நகைச்சுவை ப்ராண்ட்' படம். எந்த விதமான லாஜிக்கும் இல்லாமல், இரண்டரை மணிநேரம் சிரிப்பதற்கு ஏற்ற திரைக்கதையும், சந்தானத்தின் நடிப்பும் படத்துக்கு பலம் என்றே சொல்லலாம்.

இதற்குத்தானே ஆசைபட்டாய் பாலகுமாரா:
எனக்கு பிடித்த டாப் 20 தமிழ் திரைப்படங்கள் 2013 5
விஜய் சேதுபதியின் அடுத்த கலக்கலான படம். அறிமுக இயக்குனர் கோகுல் இயக்கத்தில், சுவாதி, பரோட்டா சூரி மற்றும் பலர் நடித்து வெளிவந்த காமெடிப் படம். இதில் விஜய் சேதுபதி மட்டுமில்லாமல், படத்தின் படத்தின் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இந்த வருடம் வெளிவந்த காமெடிப் படங்களில், 'பாலா-குமாருக்கும்' ஒரு தனி இடம் உண்டு.

கேடி பில்லா கில்லாடி ரங்கா:
எனக்கு பிடித்த டாப் 20 தமிழ் திரைப்படங்கள் 2013 6
இயக்குனர் பாண்டிராஜின் இயக்கத்தில், விமல், சிவகார்த்திகேயன், பிந்துமாதவி, பரோட்டா சூரி மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த மற்றொரு நகைச்சுவை திரைப்படம். விமல் + சிவகார்த்திகேயன் கூட்டணியில், பரோட்டா சூரியின் நகைச்சுவை நடிப்பில், படம் சொல்லிக்கொள்ளும்படியான ஹிட்டடித்தது. இதுவும் இந்த வருடம் வெளிவந்த சிறந்த காமெடிப் படங்களில் ஒன்று.

ராஜா ராணி:
எனக்கு பிடித்த டாப் 20 தமிழ் திரைப்படங்கள் 2013 7
புதுமுக இயக்குனர் அட்லீயின் இயக்கத்தில், ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா, சத்யராஜ், சந்தானம் என்று வெளிவந்த பெரிய Star Cast திரைப்படம். இந்த வருடத்தில் வெளிவந்த ஆர்யா நடித்த 3 படங்களில், இது ஒன்று தான் அவருக்கு பெரிய பெயர் வாங்கித் தந்தது. இது தவிர, நயன்தாராவின் Re-Entry படம், ஜெய் யின் ரசிக்கும்படியான நடிப்பு, நஸ்ரியாவின் Cute Performance என்று இந்த படம், சினிமா ரசிகனை திருப்திபடுத்தியது என்றே சொல்லலாம்.

எதிர்நீச்சல்:
எனக்கு பிடித்த டாப் 20 தமிழ் திரைப்படங்கள் 2013 8
நடிகர் தனுஷ் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து வெளிவந்த படம். சிவகார்த்திகேயனுக்கு மார்கெட் ஏற்படுத்திய இந்த படம், சொல்லிக்கொல்லும்படியான வெற்றியை பெற்றது. இதில் பிரியா ஆனந்த், ஜெயப்ரகாஷ், மதன்பாப் என்று பலரும் நடித்திருந்தார்கள்.

நேரம்:
ஒரே நேரத்தில், தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியான படம். நஸ்ரியா, சார்லி, மற்றும் பலர் நடித்திருந்த இந்தப் படம், சற்று வித்தியாசமான திரைக்கதையோடு படமாக்கப்பட்டிருந்தது. ஒரே நாளில் நடக்கும் சம்பவங்களை, மிக அழகாக சொல்லியிருக்கிறார் இயக்குனர்.
 தேசிங்குராஜா:
எனக்கு பிடித்த டாப் 20 தமிழ் திரைப்படங்கள் 2013 10
இயக்குனர் எழிலின் இயக்கத்தில், விமல், பிந்துமாதவி, பரோட்டா சூரி, சிங்கம்புலி, ரவிமரியா என்று பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த படம். படத்தின் முதல் பாதியை விட, இரண்டாம் பாதி நகைச்சுவையோடு நன்றாகவே இருந்தது.



இதன் தொடர்ச்சி இன்னும் சில மணிநேரங்களில்...


Thanks & Regards,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக