கற்க கற்க கள்ளும் கற்க...

வெள்ளி, டிசம்பர் 30, 2011

எனக்கு பிடித்த டாப் 20 தமிழ் திரைப்படங்கள் பாகம் - 1

இன்னும் இரண்டு நாட்களில் புத்தாண்டு பிறக்கப் போகிறது. கடந்த வருடத்தை விட, இந்த வருடம் நிறைய நல்ல படங்கள் வெளி வந்திருக்கின்றன. அவற்றில் எனக்கு பிடித்த 20 படங்களை பட்டியலிட்டிருக்கின்றேன். இதில் சில படங்கள் சிலருக்கு பிடிக்காமல் போகலாம். ஆனால் இந்த படங்கள் அனைத்துமே எனக்கு இந்த வருடத்தின் பிடித்த படங்கள்.


20). வேங்கை:
எனக்கு பிடித்த கமர்ஷியல் இயக்குனர் ஹரி இயக்கி, தனுஷ் நடித்த படம். இந்த படத்தின் கதைக்கு தனுஷ் பொருந்தாததால் தான் இந்த படம் மக்களிடையே பெரிய வரவேற்பு பெறவில்லை என்றாலும், படத்தின் திரைக்கதை படு ஸ்பீட். இயக்குனர் ஹரிக்காகவே இந்த படத்தை இன்னொரு முறை பார்க்கலாம்.

19). அவன் இவன்:
பாலா இயக்கத்தில் ஆர்யா, விஷால் நடிப்பில் வெளிவந்த படம். தன்னுடைய பாணியில் இருந்து விலகி, பாலா எடுத்த ஒரு ஜனரஞ்சக படம். இந்த படம் பாலாவின் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தாலும், நடிகர் விஷாலுக்குள் இப்படியும் ஒரு நடிகன் இருக்கிறான் என்று சினிமா ரசிகனுக்கு உணர்த்திய படம்.


18). பயணம்:
ராதாமோகனின் இயக்கத்தில், தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா, பிரகாஷ்ராஜ் நடித்த இந்த படம் ஒரு விமான கடத்தலை பற்றியது. பிரகாஷ்ராஜ் கம்பெனியில் இருந்து வெளிவந்த மற்றொரு வித்தியாசமான கதையம்சம் கொண்ட திரைப்படம். பாடல்களே இல்லாமல் வெளிவந்த படமும் இது.

17). குள்ளநரிக் கூட்டம்:
ஸ்ரீபாலாஜி என்ற புதிய இயக்குனரின் இயக்கத்தில் வெளியான படம். விஷ்ணு, ரம்யா நம்பிசன் நடிப்பில் நல்ல ஒரு குடும்பப்பாங்கான படம் இது என்று சொல்லலாம். காதலுக்காக போலீஸாக நினைக்கும் ஒரு இளைஞனின் கதை. இது போன்ற நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் விஷ்ணு தேர்ந்தெடுத்து நடித்தால், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வருவது உறுதி.


16). போராளி:
சமுத்திரக்கனி இயக்கத்தில், இயக்குனர் சசிகுமார், தெலுங்கு நடிகர் அல்லரி நரேஷ் நடித்த படம். படத்தின் டைட்டிலுக்கும், படத்தின் கதைக்கும் சம்பந்தமில்லை என்றாலும் மூலக் கதையை படமாக்கிய விதம் மிகவும் அருமை. முக்கியமாக அல்லரி நரேஷின் நடிப்பு சூப்பர். ஆனால் சமுத்திரக்கனியின் முந்தைய படமான 'நாடோடிகள்' போல ஒரு வேகம் இந்த படத்தின் திரைக்கதையில் இல்லையென்பதே ஒரு சின்ன வருத்தம்.

15). தம்பி வெட்டோத்தி சுந்தரம்:
அறிமுக இயக்குனர் வடிவுடையானின் இயக்கத்தில், கரண், அஞ்சலி, சரவணன் ஆகியோர் நடித்த உண்மை சம்பவத்தின் அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட ஒரு படம். இந்த படத்தில் கரண், அஞ்சலி என்று படத்தில் நடித்த அனைவரும் மிக அருமையாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக குமரி மாவட்டத்தின் வட்டார மொழி இந்த படத்தின் மூலமாக என்னை மிகவும் கவர்ந்தது என்றே சொல்லலாம்.

14). மயக்கம் என்ன:
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ், ரிச்சா நடித்த படம். படத்தை பற்றி ஒரே வார்த்தையில் சொன்னால், 'பீல் குட் மூவி'. இந்த படத்தில் தனுஷ் மற்றும் ரிச்சா இருவரும் போட்டி போட்டுக்கொண்டு நடித்திருக்கிறார்கள் என்றே சொல்லவேண்டும். இயக்குனர் செல்வராகவனிடம் இருந்து வந்த மற்றொரு நல்ல படம் இது. இது போன்ற படங்கள் தொடர்ந்து வெளிவர வேண்டும் என்பதே என் ஆசை.

13). வாகை சூட வா:
போன வருடம் 'களவாணி' இயக்குனராக இருந்தவர், இந்த வருடம் 'வாகை சூட வா' இயக்குனராகிவிட்டார் சற்குணம். பீரீயட் படமான இதில் கல்வியை பற்றி மிக அழகாக சொல்லியிருக்கிறார் இயக்குனர். விமல், இனியாவின் நடிப்பு மிகவும் அருமை. அந்தகால உடை, வாகனம் என்று பார்த்து, பார்த்து உழைத்திருக்கிறார் இந்த படத்தின் கலை இயக்குனர் சீனு. அவருக்கு என் ஸ்பெஷல் பாராட்டு.


12). அழகர்சாமியின் குதிரை:
ஒரு நாவலை தழுவி எடுக்கப்பட்ட படத்தை மிக நேர்த்தியாக இயக்கியிருக்கிறார் இயக்குனர் சுசீந்தரன். அப்புக்குட்டி, சரண்யா என்று மிக சாதாரண நடிகர்களை வைத்து அற்புதமான படத்தை இயக்கியிருக்கிறார் சுசீந்தரன். தமிழ் சினிமாவிலும் உலக திரைப்படங்கள் எடுக்கமுடியும் என்பதற்கு இந்த படமும் சாட்சி.

11). ஆரண்ய காண்டம்:
பக்கா 'உலக சினிமா'. நம்ம ஜனங்களுக்கு புரியவில்லை. ஆனாலும் பலர் பெரிதாக பாராட்டிய படம். அறிமுக இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா என்பவரின் இயக்கத்தில் வெளியான இதில் சம்பத், ஜாக்கி ஸ்ரொப், ரவி கிருஷ்ணா என்ற நடிகர்கள் நடித்து வெளியான படம். படத்திற்கான டேக்கிங், லைட்டிங், கேமரா என்று மிக அற்புதமாக எடுத்திருக்கிறார்கள். யாருக்கு பிடித்திருக்கிறதோ இல்லையோ, எனக்கு இந்த படம் மிகவும் பிடித்திருக்கிறது.இந்த பதிவின் தொடர்ச்சி நாளை...

(தயவுசெய்து படித்ததோடு மட்டுமல்லாமல் வாக்களித்து, பின்னூட்டமிட்டு என்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தவும்).

என்றும் அன்புடன்

Post Comment

9 comments:

Kumaran சொன்னது…

லிஸ்ட் மிகவும் அருமையாக இருக்கிறது..அதை நல்ல வரிசையாக அமைத்ததும் சிறப்பு..
எனக்கு ரொம்ப பிடிச்ச படங்கள் : பயணம், ஆரண்ய கண்டம்மும் தான்..
நன்றி மற்றும் வாழ்த்துக்கள்..

தனிமரம் சொன்னது…

வாகை சூடவா நல்ல படம் என்பது என் கருத்து மற்றத் தெரிவையும் கான காத்திருக்கின்றேன் நண்பா!

தனிமரம் சொன்னது…

அழகர்சாமி குதிரை மிகவும் ரசித்துப் பார்த்த படம் இசையானியின் இசை என்னை கட்டிப்போட்டது பாடல் என அடுக்கலாம் பலதை!

இரா.குமரேசன் சொன்னது…

நீங்கள் வெளியிட்டுள்ள அனைத்து படங்களுமே சூப்பர், இவை அனைத்தும் எனக்கும் மிகவும் பிடித்த படங்கள் ஆகும்.

இன்று என்னுடைய வலைப்பூவில் ஜிமெயிலின் அரட்டை பெட்டியினை நீக்க

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

பகிர்வுக்கு நன்றி.

Jayadev Das சொன்னது…

2011 -ல் இருபது படம் தேரிடிச்சா... அஹா... உங்களுக்கு பரந்த மனசு..!!

Loganathan Gobinath சொன்னது…

பயணம் வாகைசூடவா அழகர்சாமியின் குதிரை 3ம் எனக்கும் பிடித்த படங்கள். மற்றவை பற்றி நோ கொமன்ற்ஸ். தொடர்ச்சிக்காக காத்திருக்கிறேன்.

K.s.s.Rajh சொன்னது…

வணக்கம் பாஸ் நல்ல தொகுப்பு நீங்கள் குறிப்பிட்ட படங்களில் பல படங்கள் எனக்கும் பிடித்தவைதான்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் பாஸ்

arunambur0 சொன்னது…

அனைத்தும் ஒவ்வொரு விதத்தில் நல்ல திரைப்படமே. சரியான வரிசை தொகுப்பு, இதன் தொடர்ச்சியை எதிர்பார்க்கிறேன்.

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

கருத்துரையிடுக