கற்க கற்க கள்ளும் கற்க...

திங்கள், டிசம்பர் 19, 2011

கமலின் 'குணா' - திரை விமர்சனம்

நான் எழுதிய என் முதல் பதிவான 'விக்ரம் - திரை விமர்சனத்தின்' முடிவில் நான் இப்படி எழுதியிருப்பேன். அதாவது 'விக்ரம் படம் கமலின் தோல்வி படங்கள் வரிசையில் சேர்ந்து கொண்டது. அதற்கு காரணம், உலகநாயகன் கமல்ஹாசனின் அவசரபுத்தி தான். ஏனென்றால் இந்த படத்தின் திரைக்கதையும், வசனமும் அன்றைய பார்வையாளர்களுக்கு புரியவில்லை.
இதே படத்தை 2005'க்கு பிறகு டுத்திருந்தால், கண்டிப்பாக பாக்ஸ் ஆபீசை கலக்கியிருக்கும். Because கமலின் படங்களான குணா, அன்பே சிவம், குருதிபுனல் என்று பல படங்கள் வர்த்தகரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும், அவை சிறந் படங்கள் என்று பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. கமல் ஒரு சிறந்த படைப்பாளி. சினிமாவில் புதிய விஷயங்களை யாருக்காகவும், எதற்காகவும் காத்திருக்காமல் உடனே செய்து பார்ப்பவர். அது தான்அவரின் அவசரபுத்தி' என்று. அப்படிப்பட்ட அவரின் 'அவசரபுத்தியின்' விளைவாக வந்த படம் தான் இந்த குணா.
ஒரு மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவன், எப்போதும் அபிராமி அந்தாதியை பாடிக்கொண்டே இருக்கிறான். காரணம் கேட்டால் 'அபிராமி' என்று வானத்தை நோக்கி கை காட்டுகிறான். தன்னை காக்கவும், தன்னோடு வாழவும் அபிராமி வருவாள் என்று நம்புகிறான். அதே போல ஒரு பெண்ணை கோவிலில் சந்திக்கிறான். அவள் தான் 'அபிராமி' என்று நினைத்து, சந்தர்ப்பவசத்தால் அந்த பெண்ணை கடத்திக் கொண்டு போய் ஒரு மலை உச்சியில் தங்க வைக்கிறான். அந்தப்பெண் இவனை வெறுத்தாலும், பின்னர் இவன் தன் மேல் வைத்திருக்கும் ஒரு பக்தி கலந்த காதலை புரிந்து இவளும் இவனை காதலிக்கிறாள். இவர்கள் வாழ்வில் ஒன்று சேர்ந்தார்களா? என்ன தான் ஆனது கடைசியில்? என்பதே இந்த படம்.
படத்தின் ஆரம்ப காட்சியில் கமலின் அறிமுகமே வித்தியாசமாக இருக்கும். ஒரு பெரிய பாறையின் மீது ஒற்றைக் காலில் நின்று கொண்டிருப்பார். ஒரு மனநிலை பாதிக்கப்பட்ட கதாபாத்திரம் என்றாலும், 'அவனும் ஒரு மனிதன் தான்' என்று மிக அழகாக சொல்லியிருப்பார் கமல். 'உன் மொகரகட்டைக்கு எங்கள விட்டா யாருடா வருவா?' என்று அவரின் தாய் கோபத்துடன் கேட்டு கமலை அடிக்க, அந்த ஆத்திரத்தில் ஆட்டுக்கல்லை எடுத்து தன் அம்மா மீது போடப் பார்த்து, பிறகு அதை அப்படியே தன் நெஞ்சில் வைத்து இடித்துக்கொண்டு அழும் காட்சி செம. தன் கண் முன்னே காதலி இறந்ததை பார்த்து, அதை நம்பாமல் 'இல்ல, இல்ல. இது பொய்' என்று உரக்க சொல்லுமிடத்தில் 'Iam the one & only' என்று திரும்பவும் நிருபித்திருக்கிறார் கமல் என்றே சொல்ல வேண்டும்.
படத்தின் கதாநாயகியாக புதுமுகம் ரோஷினி. இவரை கமல் பார்த்தவுடன் 'பார்த்த விழி, பார்த்தபடி பூத்து இருக்க' என்ற பாடலுக்கு மெய் மறந்தபடி ஒரு மூமென்ட் கொடுப்பார். அந்த மூமென்ட், இந்த பெண்ணின் அழகால் அது நம்மையும் தொற்றிக்கொள்ளும். அவ்வளவு அழகு. இவருக்கு இதுவே முதல் படம். அதற்குப் பிறகு ஹிந்தியில் மூன்று படங்கள் நடித்து விட்டு காணாமல் போய் விட்டார். இவர் மட்டும் தொடர்ந்து நடித்திருந்தால் தமிழ் சினிமாவில் ஒரு பெரிய ரவுண்டு வந்திருப்பார். இவர் இப்போது எங்கே இருக்கிறார் என்பது கமலுக்கு மட்டுமே தெரியும் என்றே நினைக்கிறேன். இந்த படத்தில் கமல் மட்டுமே பிரதானமானதால், இவர் வரும் காட்சிகளில் கொஞ்சம் சுமாராகவே நடித்திருக்கிறார். இவருக்கு பின்னணி குரல் கொடுத்திருப்பது நடிகை சரிதா.

கமல், ரோஷினி தவிர்த்து இந்த படத்தில் நடித்திருக்கும் பழம் பெரும் நடிகை எஸ்.வரலக்ஷ்மி, 'காகா ராதா கிருஷ்ணன், ஜனகராஜ், எஸ்.பி.பால சுப்பிரமணியம், கிரீஸ் கர்னாட், ரேகா, அஜய் ரத்னம் போன்ற அனைவரும் தங்களது கதாபத்திரத்தை நன்றாகவே செய்திருக்கிறார்கள். படத்தை தயாரித்தது அலமேலு சுப்பிரமணியம். படத்திற்கு திரைக்கதை எழுதியவர் ஜான் எடதட்டில். ஒளிப்பதிவு - வேணு, படத்தொகுப்பு - பி.லெனின் & வி.டி. விஜயன், படத்தை இயக்கியது சந்தான பாரதி. படம் வெளியான ஆண்டு 1992.

இந்த படத்தில் இசை ஞானி இளையராஜா இசையமைத்த பாடல்கள் அனைத்தும் அருமை. அப்பனென்றும், உன்னை நானறிவேன், கண்மணி அன்போடு, பார்த்த விழி என்று எல்லாமே எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள் தான். படம் வெற்றி பெறாததற்கு காரணம் என்னவென்று நான் ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டேன். 'மனிதர் உணர்ந்து கொள்ள, இது மனிதர் காதல் அல்ல. அதையும் தாண்டிப் புனிதமானது' என்ற வசனம் இன்றைய தேதி வரை பிரபலம். இது தான் இந்த படத்தின் மூலக் கருவும் கூட. இந்தப் படம் வெளிவந்த போது கூடவே வெளியான படம் தான் சூப்பர் ஸ்டாரின் 'தளபதி'. சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அபிராமி திரையரங்கில் இந்த இரு படங்களின் கட் அவுட் தொடர்பான பிரச்சனையில் ரசிகர்கள் சண்டையிட்டுக் கொண்டார்கள். அன்றிலிருந்து இன்று வரை அபிராமி திரையரங்கில் ஹீரோவுக்கான தனி கட் அவுட் வைக்க தியேட்டர் நிர்வாகம் அனுமதி அளிப்பதில்லை.

(தயவுசெய்து படித்ததோடு மட்டுமல்லாமல் வாக்களித்து, பின்னூட்டமிட்டு என்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தவும்).

என்றும் அன்புடன்

Post Comment

20 comments:

இராஜராஜேஸ்வரி சொன்னது…

அருமையான விமர்சனப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

பெயரில்லா சொன்னது…

Gunaa is in my top 5 list of evergreen movies. It is a master piece.

K.s.s.Rajh சொன்னது…

வர்த்தக ரீதியாக வெற்றியடையா விட்டாலும் காலத்தால் மறக்க முடியாத சிறந்த படங்களுல் இதுவும் ஒன்று உங்கள் விமர்சனம் அருமை

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

குனா நான் ரசித்த சில படங்களில் ஒன்று. நல்ல விமர்சனம் பகிர்வுக்கு நன்றி

முரளிகண்ணன் சொன்னது…

நல்ல விமர்சனம்

வேங்கட ஸ்ரீனிவாசன் சொன்னது…

படத்தில் ஒவ்வொரு காட்சியும் அருமையாக இருக்கும். அதுவும் மனநோய் காப்பகத்தில் “அபிராமி அபிராமி” என்று round கட்டி அடிப்பாரே அது தூள்.
ராஜாவின் இசையில் “அப்பன் என்றும் அம்மை என்றும்” பாடல் இந்தப் படத்தில் என் favorite.
பகிர்வுக்கு நன்றிகள்.

damildumil சொன்னது…

இங்க 1992 ஆம் வருடம் வெளிவந்ததுன்னு சொல்றீங்க, தளபதி விமர்சணத்தில் 1991 நவம்பர் மாதம்னு சொல்றீங்க, ரெண்டு படமும் ஒரே நேரத்துல ரிலீஸ்ன்னும் எழுதியிருக்கீங்க எது தான் உண்மை :)

தனிமரம் சொன்னது…

நல்ல படம் நல்ல இசைஞானியின் மெட்டுக்கள் காலத்தால் மறக்க முடியாது அருமை விமர்சனம்!

arunambur0 சொன்னது…

விமர்சனம் அருமை.

ராஜா MVS சொன்னது…

அருமை... நண்பா...

fire சொன்னது…

very nice review

umamaheswaran சொன்னது…

very nice review

Jayadev Das சொன்னது…

\\இவர்கள் வாழ்வில் ஒன்று சேர்ந்தார்களா? என்ன தான் ஆனது கடைசியில்? என்பதே இந்த படம்.\\ இருபது வருஷத்துக்கு முன்னாடி வந்த படத்தோட கதையின் முடிவைக் கூட சஸ்பென்ஸ் ஆகத்தான் வைக்கணுமா? ஹா...ஹா..ஹா....

ராஜ் சொன்னது…

கண்டிப்பாக, குணா ஒரு சிறந்த படம்.அதுவும் இல்லாமல் கமல் தமிழில் ஒரு தவிர்க்க முடியாத கலைஞன்..... குணா ரிலீஸ் ஆன அதே நாளில் தான் "தளபதி" படம் ரிலீஸ் ஆனது...
அனால் அவர் மீது ஒரு குற்றச்சாட்டு இருக்கின்றது... அவர் ஹாலிவுட் படங்களில் இருந்து நிறைய கதையை சுடுவார் என்று...
இந்த இடுகையில் இதை பற்றி விரிவாக எழுதி இருப்பார்கள்..
http://www.karundhel.com/2010/09/blog-post.html

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

பகிர்வுக்கு நன்றி.
வாழ்த்துக்கள்.

எனக்கு பிடித்தவை சொன்னது…

நன்றாக இருந்தது விமர்சனம். படம் பார்பதற்க்கு பொறுமை வேண்டும்..


வாங்க வாழ்த்துங்க

செல்லக் குட்டி பிறந்தநாள்

Loganathan Gobinath சொன்னது…

அருமையான படம். அருமையான விமர்சனம். பகிர்வுக்கு நன்றி பாஸ்.

DeepaK KarthiK (420*) சொன்னது…

arumaya soninga !

பெயரில்லா சொன்னது…

GUNA is superb film & KAMAL acting was very excellent ,... GUNA film.a pathu than Kaathal Konden film eduthanga,. But, kathal konden film super hit,. 200 days.ku meley oduchu,. I think Guna 2000.ku After vanthurukkalam?...

Bala Krishnan சொன்னது…

அபிராமி மிக அழகு.கமல் நடிப்பு அதைவிட அழகு. இளையராஜா இசை படத்திற்கு உயிர்

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

கருத்துரையிடுக