அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த பதிவின் முந்தைய பகுதியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
(தயவுசெய்து படித்ததோடு மட்டுமல்லாமல் வாக்களித்து, பின்னூட்டமிட்டு என்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தவும்).
என்றும் அன்புடன்
10). யுத்தம் செய்:
மிஷ்கினின் இயக்கத்தில் வெளிவந்த பக்கா த்ரில்லர் படம். இயக்குனர் சேரனை வேறு பரிமாணத்தில் காட்டிய படம். இந்த படத்தை 'Memories of Murder' என்ற படத்தின் காப்பி என்று சொன்னார்கள். ஆனால் அப்படி ஒன்றும் இல்லை என்று பின்னர் புரிந்து கொண்டார்கள். ஒரு வேளை இது காப்பியாகவே இருந்தாலும், அதை தமிழுக்கேற்றவாறு நன்றாகவே கொடுத்திருக்கிறார் இயக்குனர்.
9). வானம்:
தெலுங்கு படமான 'வேதம்' திரைப்படத்தின் ரீமேக் இந்த படம். சிம்பு, பரத், அனுஷ்கா என்று பல நடிகர்கள் நடித்த படம். ஐந்து பேரின் ஐந்து விதமான வாழ்க்கை, ஒரே புள்ளியில் சேரும்போது என்ன நடந்தது என்பதை மிக அழகாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் க்ரிஷ். சந்தானத்தின் காமெடி படத்துக்கு கூடுதல் பலம்.
8). சிறுத்தை:
இதுவும் தெலுங்கு படமான 'விக்ரமார்குடு' படத்தின் ரீமேக் படம். ஆனால் அதை தமிழுக்கேற்றார் போல் அருமையாக செய்திருக்கிறார் அறிமுக இயக்குனர் சிவா. எனக்கு சிறுத்தையின் தமிழ் பதிப்பை விட, தெலுங்கு படம் 'விக்ரமார்குடு' படம் தான் ரொம்ப பிடிக்கும். ஆனால் இந்த படத்தை நான் ரசிக்கும் ஒரே காரணம், நடிகர் சந்தானம்.
7). கோ:
இயக்குனர் கே.வி.ஆனந்தனின் இயக்கத்தில் வெளிவந்த மற்றொரு வெற்றிப்படம். நடிகர் ஜீவாவுக்கும், ராதாவின் மகள் கார்த்திகாவுக்கும் பெரிய மார்கெட் கொடுத்த படம் என்று கூட சொல்லலாம். படத்தின் திரைக்கதை வேகம் செம. எனக்கு இந்த படம் ரொம்ப பிடித்தது. ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்கள் அனைத்தும் அருமை. முக்கியமாக படத்தின் கேமரா மேன் ரிச்சர்ட் எம். நாதனுக்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டு.
6). காவலன்:
பல தோல்விப் படங்களுக்குப் பிறகு விஜய் 'நடித்து' நான் ரசித்த படம். மலையாள படமான 'பாடிகார்ட்' படத்தின் ரீமேக் இந்த படம். படத்தில் வடிவேலுவின் காமெடி பெரிய அளவில் பேசப்படவில்லை என்றாலும், ஓரளவுக்காவது ஒப்பேற்றியது என்று தான் சொல்ல வேண்டும். காவலனுக்கு பிறகு வெளிவந்த வேலாயுதம் படத்தை பார்த்து எனக்கு ஜுரம் வந்தது தான் மிச்சம். அதனால் இந்த வருடத்தில் விஜய் நடித்த இரண்டு படங்களில், காவலனுக்கே என் ஓட்டு.
5). தெய்வத் திருமகள்:
'Iam sam' என்ற ஆங்கிலப் படத்தின் அப்பட்டமான காப்பி என்று சொன்னாலும் இந்த படம் ரசிக்கும்படியாகவே இருக்கிறது. விக்ரமின் நடிப்பை விட, அவரின் மகளாக நடித்த குழந்தை சாராவின் நடிப்பு தான் சூப்பர். அனுஷ்கா, அமலா பால், சந்தானம், நாசர் ஆகியோர் நடித்திருந்தாலும் நம் மனதில் நிற்பது விக்ரமும், குழந்தை சாராவும் தான். இந்த படத்தை இயக்கியது இயக்குனர் விஜய்.
4). காஞ்சனா:
ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த பேய் படம். பேய் படம் என்று சொல்வதை விட, காமெடி கலந்த பேய் படம் என்று தான் சொல்ல வேண்டும். முக்கியமாக மாமியார் மருமகளாக வரும் கோவை சரளாவும், தேவதர்ஷினியின் நடிப்பு செம காமெடி. இந்த இரண்டு பேரும் தான் படத்தின் திரைக்கதைக்கு பெரிய பலமே. படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சரத்குமார் நடித்திருக்கிறார். சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, பெரிய லாபம் பார்த்த படமும் இது தான்.
3). எங்கேயும் எப்போதும்:
அன்றாடம் நாம் நாளிதழ்களில் படிக்கும் விபத்து சம்பவத்தை கண் முன்னே காட்டிய படம். இயக்குனர் முருகதாஸின் தயாரிப்பில் வெளிவந்து, அவரது சிஷ்யர் சரவணன் இயக்கிய படம். ஜெய், சர்வா, அனன்யா, அஞ்சலி ஆகியோர் நடித்த இந்த படம் மிகவும் அருமை. பாடல்கள் ஒவ்வொன்றும் கலக்கல் ரகம்.
2). ஆடுகளம்:
தனுஷ், வெற்றிமாறன் கூட்டணியில் வெளிவந்த இரண்டாவது திரைப்படம். சேவல் சண்டை என்ற வித்தியாசமான கதையை களமாகக் கொண்டு வெற்றி பெற்ற படம். படம் இந்த வருடமே வெளிவந்திருந்தாலும், அதற்குள் 6 தேசிய விருதுகளை வாங்கிவிட்டது. மதுரை வட்டார மொழி பேசி மிக அருமையாக நடித்திருக்கிறார் நம் சூப்பர் ஸ்டாரின் மருமகன். இந்த வருடம் தனுஷ் நடித்த ஐந்து படங்களில் இந்த படம் தான் டாப்.
1). மங்காத்தா:
வெங்கட்பிரபு இயக்கத்தில் தல அஜித், த்ரிஷா, அர்ஜுன் ஆகியோர் நடித்த பம்பர் ஹிட் திரைப்படம். தலயின் ஐம்பதாவது படமான மங்காத்தா வசூல் செய்த பணம், 130 கோடி. கூகுல் தளத்தில் அதிகம் தேடப்பட்ட ஒரே தமிழ் படம் 'மங்காத்தா டா'. ஹீரோவான அஜித், இந்த படத்தில் முழு வில்லனாக கலக்கியிருக்கிறார். என்னைப் போன்ற தல ரசிகர்களுக்கு இந்த ஆண்டு, 'தல ஆண்ட ஆண்டு'.
என் போன வருட டாப் 10 திரைப்படங்களை பற்றி படிக்க, இங்கே கிளிக் செய்யவும்.
(தயவுசெய்து படித்ததோடு மட்டுமல்லாமல் வாக்களித்து, பின்னூட்டமிட்டு என்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தவும்).
என்றும் அன்புடன்
நல்ல பதிவு + பட்டியல் .. நன்றி.
பதிலளிநீக்குஎல்லாமெ கம்ர்ஷியல் சக்சஸா இருக்கே, ஓடாத நல்ல படம் ஒன்று கூட லிஸ்ட்ல காணோம்?
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
நல்ல தொகுப்பு! ஒவ்வொரு படத்தைப் பற்றியும் உங்கள் கருத்தும் அருமை!
பதிலளிநீக்குதங்களுக்கு மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
அன்புடன் அழைக்கிறேன் :
"மெய்ப் பொருள் காண்பது அறிவு-ஏன்?"
மங்கத்தா சூப்பர் உங்கள் முதல் தெரிவு அருமை விமர்சனங்கள் நன்றி பகிர்விற்கு!
பதிலளிநீக்குஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பா!
பதிலளிநீக்குதெய்வத்திருமகள் 2ம் இடத்திற்கு வந்திருக்கலாம்... மற்றதெல்லாம் ஓ.கே. புத்தாண்டு வாழ்த்துக்கள் பாஸ்.
பதிலளிநீக்குதெய்வத் திருட்டுமகளுக்கு மூணாவது இடமா...??? Too much :((
பதிலளிநீக்குpattiyal ok
பதிலளிநீக்குபுத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஎனது ப்ளாக்கில்:
பாட்டைக் கேளுங்க பரிசு வெல்லுங்க
புத்தாண்டு பரிசு ஒரு வாரம் கோவாவில் குடும்பத்தோடு தங்கும் வாய்ப்பு
A2ZTV ASIA விடம் இருந்து.
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஇனிய புது வருட வாழ்த்துக்கள் நன்பா/////////// வேலாயுதம் கலக்கலா தானே இருந்திசு,,,, தலயோட வாலுகலுக்கு இதெல்லாம் பிடிக்காதே...............
பதிலளிநீக்கு