கற்க கற்க கள்ளும் கற்க...

வியாழன், ஜனவரி 12, 2012

விஜயின் 'நண்பன்' - திரை விமர்சனம்

உகாண்டாவிலிருந்து சென்னைக்கு வந்து பத்து நாட்களுக்கு மேல் ஆகி விட்டது. சென்னையில் ராஜபாட்டை, மௌன குரு படத்திற்கு அப்பறம் நான் இன்று பார்த்த படம், விஜயின் 'நண்பன்'. வெளிநாடு போவதற்கு முன் நான் பார்த்த விஜய் படம் 'வேட்டைக்காரன்'. ஆனால் வேட்டைக்காரன், சராசரி விஜய் படம். நண்பன், பக்கா
ஜனரஞ்சகப் படம். ஏற்கனவே அமீர் கான் நடித்த '3 இடியட்ஸ்' படத்தை பார்த்ததால் பெரிதாக ஒன்றும் இந்த படம் என்னை கவரவில்லை என்றாலும், ஹிந்தி 'நண்பனை' பார்க்காதவர்களுக்கு இந்த படம் ரசிக்கும்படி இருக்கும். அதுக்கு தல ரசிகனாகிய நான் கியாரண்டி.
அமீர் கான் நடித்த வேடத்தில் விஜய். கொஞ்சம் அடக்கமாகவே நடித்திருக்கிறார் இளைய தளபதி. இது வழக்கமான விஜய் படம் இல்லை என்பது தான் 'ஆறுதலான' விஷயம். வருடத்தில் ஒரு படமாவது விஜய் இது போன்ற நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்கவேண்டும். அடுத்து ஜீவா & ஸ்ரீகாந்த். இருவருமே அவர்களுக்கான கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். அடுத்து இலியானா. பம்பை இடுப்புக்காரியின் நடிப்பு நன்று. இலியானாவை ரசிக்கச் சென்றவர்களுக்கு, இந்த படத்தில் வரும் கடைசிப் பாட்டு ஒரு 'ஸ்பெஷல்' தரிசனம். சத்யராஜின் கதாபாத்திரம் அருமை. ஆனால் ஹிந்தியில் போமான் இரானி நடித்த கதாபாத்திரத்தை தாண்டி சத்யராஜை, இயக்குனர் சங்கர் எதையும் புதிதாக செய்யக்கூடாது என்று சொல்லிவிட்டார் போல. ரிப்பீட்டிங் நடிப்பு பல இடங்களில் தெரிகிறது.
இந்த படத்தில் சத்யனுக்கு வெய்ட்டான ரோல். இனி சத்யனை காமெடி நடிகராக மட்டுமில்லாமல் மற்ற சில வேடங்களிலும் நடிப்பார் என்று எதிர்பார்க்கலாம். ரொம்ப நாளைக்குப் பிறகு கௌரவ வேடத்தில் எஸ்.ஜே.சூர்யா இந்த படத்தில் நடித்துள்ளார். படத்தில் குறை என்று எந்த இடத்திலும் சொல்ல முடியவில்லை. காரணம், காட்சிக்குக் காட்சி, வசனத்துக்கு வசனம் ஹிந்தி படத்திலிருந்து இறக்குமதி செய்திருக்கிறார்கள். எந்த ஒரு காட்சியையும் மாற்றி எடுக்கவில்லை. ஒரு வேளை மாற்றியிருந்தாலும், அது படத்தின் வெற்றியை பாதித்திருக்கலாம்.
படத்திற்கு இசை ஹாரிஸ் ஜெயராஜ். பாடல்கள் பரவாயில்லை. படத்திற்கு ஒளிப்பதிவு, மனோஜ் பரமஹம்சா. படத்தை இயக்கியது பிரம்மாண்ட இயக்குனர் சங்கர். 'எந்திரன்' போன்ற மெகா பட்ஜெட் படங்களை இயக்கிய இவர், எதற்காக ரீமேக் படத்தை இயக்க ஒத்துக்கொண்டார் என்று தெரியவில்லை. எந்த காட்சியையும் மாற்றாமல் எடுப்பதற்கு ஷங்கர் தேவையேயில்லை என்பதே என் கருத்து. படத்தை தயாரித்தது ஜெமினி Film Circuit. ஒரு அருமையான பொழுதுபோக்கு படத்தை கொடுத்திருக்கிறார்கள் 'நண்பன்' குழுவினர்.
படத்தை வில்லிவாக்கம் AGS திரையரங்கில் பார்த்தேன். டிக்கெட்டின் விலை 120 ருபாய். படம் ஆரம்பித்து ஒரு ஐந்து நிமிடம் கடந்த பிறகு தான் நான் தியேட்டரின் உள்ளே சென்றேன். நாளை திரும்பவும் குடும்பத்தோடு ஆல்பர்ட் திரையரங்கிற்கு படம் பார்க்க போகிறேன். ஆக மொத்தம், இந்த வருடத்தின் ஆரம்பமே விஜய்க்கு All is Well வருடம் தான்.(தயவுசெய்து படித்ததோடு மட்டுமல்லாமல் வாக்களித்து, பின்னூட்டமிட்டு என்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தவும்).

என்றும் அன்புடன்

Post Comment

16 comments:

ilavarasan சொன்னது…

உங்கள் விமர்சனத்துக்கு நன்றி .

divanasarathy சொன்னது…

//எந்த காட்சியையும் மாற்றாமல் எடுப்பதற்கு ஷங்கர் தேவையேயில்லை//

இயக்கம் என்பது சாதாரண விசயமல்ல. இதே படம் செல்வா ராகவன், பாலா, சசிகுமார் ரீமேக் செய்ய முடியாது.

விமர்சனம் அருமை. விஜய் rockz :)

பெயரில்லா சொன்னது…

bull shit

சி.பிரேம் குமார் சொன்னது…

இந்த விமர்சனத்தின் சில பகுதிகளை எங்கயோ படிச்சா மாதி இருக்கே

Jayadev Das சொன்னது…

\\காட்சிக்குக் காட்சி, வசனத்துக்கு வசனம் ஹிந்தி படத்திலிருந்து இறக்குமதி செய்திருக்கிறார்கள்.\\ அப்போ அந்த பிரசவம் பார்க்கும் காட்சி? [எந்திரன் படத்திலேயே இதை சுட்டாசே!!].

\\எதற்காக ரீமேக் படத்தை இயக்க ஒத்துக்கொண்டார.\\ வழக்கமா ஆங்கிலப் படங்களை/உலகப் படங்களைத் தான் ரீமேக் பண்ணுவார். என்ன அந்த படத்தோட தயாரிப்பாளருக்கோ வேறு யாருக்குமோ சொல்ல மாட்டார்.


\\ ஒரு வேளை மாற்றியிருந்தாலும், அது படத்தின் வெற்றியை பாதித்திருக்கலாம்.\\ படம் வெற்றின்னு இப்பவே முடிவு பண்ணியாச்சா.... கடவுளே...... கடவுளே....

கிளம்பிடோம்ல... சொன்னது…

All the best Vijay.

K.s.s.Rajh சொன்னது…

அருமையான விமர்சனம் பாஸ்

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

நான் 200 கொடுத்து திரைப்படம் பார்த்தேன்..

படம் பார்க்கும்போது ஷங்கர் படம்போல் தெரியவில்லை விக்ரமன் படம்போல் தோன்றியது...

பரவாயில்லைதான்...

arunambur0 சொன்னது…

Good Review.

Loganathan Gobinath சொன்னது…

நான் இன்னும் படத்தை பார்க்கவில்லை. ஹிந்தி 3இடியட்ஸ் இன் தரத்திற்கு எதிர்பார்க்கலாமா?

s.priya சொன்னது…

remake padam ellam odanumnu illai bas.adula main actor vijay &shankar irrukkarla apparam jeeva srikanth ellarum good actors illaya.so padam remake a irrundhalum adhula act panni irrukara ellarum nalla act panni irrukardhunaladhan padam super hit.ella remake padamum hit ahanumnu illai ana nanban super hit.ok.

வவ்வால் சொன்னது…

பிரசாத்,

என்ன சார் காமெடிப்பண்ணிக்கிட்டு 3 இடிய்ட்ஸ் ஐ தமிழ்நாட்டில் மொத்தம் நூத்தி சொச்சம் பேர் பார்த்து இருப்பாங்களா? மாத்தி எடுத்தா எத்தனைப்பேருக்கு தெரியப்போகுது.

இந்த அளவுக்க்கு மகா மட்டமாக காப்பி அடிக்க ஏன் இத்தனை பில்ட் அப். இது போல காஸ்ட் & கிரூவ் வச்சுக்கிட்டு இதான் செய்ய முடியுமா தமிழில்னு கேட்கத்தோனுது.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

விமர்சனப் பகிர்வுக்கு பாராட்டுக்கள்..

சாவி சொன்னது…

இந்த படத்திற்கு பிறகு நீங்கள் எந்த பதிவும் இடவில்லையே? But,Why?


சாவி
யின் தமிழ் சினிமா உலகம்.

மெரினா: 03.02.2012 - திரைவிமர்சனம்!

சாதாரணமானவள் சொன்னது…

நானும் '3 idiots' பார்த்துவிட்டு இந்த படத்தை பார்த்ததால் இதே தான் தோன்றியது.

Swapna 2v சொன்னது…

hii.. Nice Post

Thanks for sharing

More Entertainment

Best Regarding.

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

கருத்துரையிடுக