கற்க கற்க கள்ளும் கற்க...

திங்கள், டிசம்பர் 12, 2011

சினிமாவா? ஆன்மிகமா? அரசியலா? - ரஜினியின் பிறந்தநாள் பதிவு...

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தமிழ்நாட்டில் பிறக்கும் அனைத்து குழந்தைகளும் முதலில் அழுவது தாய் பாலுக்காக. அதற்க்கடுத்து அவைகள் அழுவது 'ரஜினி படத்தை பார்ப்பதற்காக'. ஒருவர் படத்திற்கு மட்டும் பூஜை போடும் ஐயரில் இருந்து, அந்தப் படம் வெளியான தியேட்டரில் சைக்கிள் மற்றும் வண்டிகளுக்கு டோக்கன் போடுபவன் வரை பெரிய லாபம் பார்த்தால்,
அது இவர் படத்திற்கு மட்டும் தான். 'ஆறிலிருந்து அறுபது வரை' ரசிக்கவைக்கும் 'அதிசயப் பிறவி'.

இன்றைய தமிழ் சினிமாவின் 'மன்னன்'. இன்றைக்கு அவருக்கு பிறந்தநாள். என் தலைவனுக்கு பிறந்தநாள். என்னுடைய ரோல் மாடல், இந்த 'மனிதன்'. இவரை பற்றி பதிவு எழுத வேண்டுமேன்றால், தொடர்ந்து எழுதிக்கொண்டே இருக்கலாம். அவ்வளவு இருக்கிறது சொல்ல. ஆனால் தலைவரை பற்றிய மூன்று விஷயங்களை மட்டும் நான் அலசப் போகிறேன். இந்த பதிவில் என் நிலைபாட்டை மட்டுமே சொல்லியிருக்கிறேன்.

சினிமா:
இன்றைக்கு தமிழ் சினிமாவில் ரஜினியின் பங்கு எவ்வளவு பெரியது என்பது சின்ன குழந்தைக்கு கூட தெரியும். இன்றும் அவர் இளமையான தோற்றத்தில் நடித்தால் நாம் ஏற்றுக்கொள்கிறோம். காரணம், அது 'ரஜினி' என்பதற்க்காக மட்டும் தான். அதே சமயம், பலருக்கு தலைவர் மேல் ஒரு சின்ன வருத்தம் இருக்கிறது. அதாவது, ரஜினி 'கமர்ஷியல்' என்ற வட்டத்தை விட்டு வெளியே வந்து படம் பண்ண மாட்டாரா? என்ற ஏக்கம் தான் அது. அவர் தயாரிப்பாளர்களுக்கு வேண்டுமானால் 'ரேஸ் குதிரையாக' இருக்கலாம். ஆனால் நம்மை பொறுத்தவரை அவர் ஒரு சிறந்த நடிகர். இவரின் சிறந்த நடிப்பிற்கான மாஸ்டர் பீஸ்கள் தான், 'ஆறிலிருந்து அறுபது வரை, முள்ளும் மலரும், எங்கேயோ கேட்ட குரல் & புவனா ஒரு கேள்விக்குறி'.

தலைவர் திரும்பவும் இது போன்ற நல்ல கதையம்சம் கொண்ட, நல்ல நடிப்பாற்றல் உள்ள படங்களில் நடிக்க வேண்டும் என்பதே என்னை போன்ற ரசிகனின் ஆசை. இதை எதற்காக சொல்கிறேன் என்றால், 'நடிப்பென்றால் சிவாஜி, அதற்குப் பிறகு கமல்' என்று ஒரு இமேஜ் உருவாகிவிட்டது. இன்றைய நிலைமையில் கமல் தான் இப்போதைய நடிப்பின் முன்னோடி என்று சொல்கிறார்கள். ஆனால் கமலின் நடிப்புக்கு சவால் விடக் கூடிய ஒரே நடிகர் தமிழ்நாட்டில் உண்டென்று சொன்னால் , அது எங்கள் 'அன்புள்ள ரஜினிகாந்த்' தான்.
ஆன்மிகம்:
ரஜினி பெங்களூரில் பஸ் கண்டக்டராக இருந்தபோது, ஒரு முறை வேலை முடித்து விட்டு தன் நண்பர்களோடு டிப்போவிற்கு வெளியே வந்து கொண்டிருந்தார். அப்போது அவரது சில நண்பர்கள், அங்கே நின்று கொண்டிருந்த சில கைரேகை ஜோசியர்களிடம் ஜோசியம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அருகில் நின்று கொண்டிருந்த ரஜினியையும் வற்புறுத்தி ஜோசியம் பார்க்க வைத்தார்கள். ரஜினியின் கைரேகையை பார்த்த அந்த ஜோசியக்காரர், அருகில் இருந்த மற்ற ஜோசியக்காரர்களை அழைத்து ரஜினியின் கை ரேகையை அதிசயமாக பார்த்தார்களாம். 'என்ன ஆச்சி?' என்று தலைவர் கேட்டதற்கு, 'நீங்க சாதாரண ஆளில்ல. நீங்க போகப்போறே லெவலே வேற' என்று சொன்னார்களாம். தலைவரோ, 'நானே இந்த கண்டக்டர் வேலை பர்மனட் ஆகலேன்னு வருத்தத்துல இருக்கேன். நீங்க என்னடான்னா காமெடி பண்றீங்களே?' என்று சிரித்தாராம்.
இதை எதற்காக சொல்கிறேன் என்றால், ரஜினிக்கும் ஆன்மிகத்திற்கும் உள்ள தொடர்பு, கண்களுக்கும் தூக்கத்திற்கும் உள்ள தொடர்பு போல. என்றுமே பிரியாது. ரஜினி சிறுவயதிலிருந்தே ஆன்மிக ஈடுபாடு அதிகம் உள்ளவர். இவர் ஒரு காலத்தில் ஓய்வில்லாமல் உழைத்துக்கொண்டு இருந்தபோது, அதிக மன உளைச்சல் வந்து பாதிக்கப்பட்ட சமயத்தில் இவர் நம்பியது, இறைவனைத் தான். அவ்வளவு ஏன்? சமிபத்தில் இவர் உடல் நிலை பாதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூரில் இருந்தபோது 'ரசிகர்களின் பிரார்த்தனை' தான் தன்னை காப்பாற்றியது என்று இன்றும் நம்புகிறார். இவர் இப்போதும் அரசியல் பற்றிய கேள்விக்கு 'ஆண்டவன் என்ன சொல்றானோ, அதன்படி தான் நான் நடப்பேன்' என்று சொல்கிறார் சூப்பர் ஸ்டார்.

அரசியல்:
இந்த விஷயத்தில் ரஜினி கண்ணாம்பூச்சி ஆடிக்கொண்டிருக்கிறார் என்று தான் பலரும் நினைக்கிறார்கள். ஒரு விஷயத்தை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். அரசியல் என்பது சாதாரண விஷயம் அல்ல. நம் தோளில் ஒருவன் சிரித்துக்கொண்டே சால்வை போடுகிறான் என்றால் அது வாழ்த்துவதற்கா அல்லது நம் கழுத்தை இறுக்கி சாகடிப்பதற்க்கா என்பதே தெரியாது. அது தான் சஸ்பென்ஸ். ரஜினியை பொறுத்தவரை 'நாம் அரசியலுக்கு வந்தால் நமக்கு என்ன கிடைக்கும் என்று நினைப்பதை விட, நம்மால் இந்த நாட்டு மக்களுக்கு என்ன நன்மை செய்ய முடியும்? என்றே யோசிக்கிறார்.
அது மட்டுமல்ல, அரசியல் அனுபவம் துளி கூட இல்லாமல், இன்று கட்சி ஆரம்பித்து முப்பது சீட்டுகள் வாங்கி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருப்பவர், இன்று ஒரு காமெடி பீஸாக மக்களால் பார்க்கப்படுவதை கவனிக்கத் தவறவில்லை ரஜினி. அதனால் என்னைப் பொறுத்தவரை நேரம் பார்த்துக்கொண்டிருக்கிறார் ரஜினி என்றே நினைக்கிறேன். எனக்குத் தெரிந்து கண்டிப்பாக ரஜினி அரசியலுக்கு வருவார் என்றே நினைக்கிறேன். மதுரையில் ரஜினி ரசிகர் மன்றத்தில் பொருளாளராகவும், சினிமாவிற்கு வந்து ரஜினியை பார்த்து 'காந்த்' என்று தன் பெயருக்கு பின்னாடி சேர்த்துக் கொண்டு, அரசியலில் 'சட்டமன்ற எதிர் கட்சித் தலைவர்' என்ற அந்தஸ்தை எட்டியிருப்பவர்க்கே மவுசு இருக்குபோது என் தலைவருக்கென்ன? அவர் 'தங்க மகன்'.

எனக்கு ரஜினியின் அரசியல் பிரவேசத்தில் இரண்டு விதமான நிலைப்பாடு இருக்கிறது. ரஜினியின் நலம்விரும்பியாக சொன்னால், ரஜினி அரசியலுக்கு வராமல் இருப்பதையே நான் விரும்புவேன். காரணம், தேவையில்லாத தலைவலி அவருக்கு வேண்டாம் என்பதற்காகத் தான். ஆனால், அவரின் தீவிர ரசிகராக பார்த்தால், அவர் தீவிர அரசியலில் ஈடுபட வேண்டும் என்பதே என் கருத்து. அப்படி அவர் அரசியலுக்கு வந்தால், என் குடும்பத்தில் உள்ள மொத்த ஓட்டும் அவருக்குத் தான்...
(தயவுசெய்து படித்ததோடு மட்டுமல்லாமல் வாக்களித்து, பின்னூட்டமிட்டு என்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தவும்).


என்றும் அன்புடன்

Post Comment

14 comments:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை.
பகிர்வுக்கு நன்றி நண்பரே!

இராஜராஜேஸ்வரி சொன்னது…

'ஆறிலிருந்து அறுபது வரை' ரசிக்கவைக்கும் 'அதிசயப் பிறவி'.

nice..

K.s.s.Rajh சொன்னது…

சூப்பர் ஸ்டாருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் உங்கள் பகிர்வு அருமை

பெயரில்லா சொன்னது…

inam rajniya nampurengala

பெயரில்லா சொன்னது…

Tamilnattu thalai ezhthu Rajinikitta irukku appadinnu namabara arivili koottam irukkum varai Tamilnadu munnera povathe illai. Poli Bimbangal uyarthi vaikkap padukindrana. Nallathukku kaalam illa

Arun J Prakash சொன்னது…

சூப்பர் ஸ்டார் ரஜினி பற்றிய கலக்கல் பதிவு. மிகவும் அருமை பிரசாத்.
அரசியல் பற்றிய நீங்கள் கூறியுள்ள கருத்துக்கு நானும் உடன்படுகிறேன்.

ராஜா MVS சொன்னது…

அருமை...

சூப்பர் ஸ்டாருக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்...

பகிர்வுக்கு நன்றி... நண்பா...

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

தான் எடுக்கும் எந்த காரியமாக இருந்தாலும் அதை பொருமையுடனும் பக்தியுடனும், கர்வம் இல்லாம் செய்து முடிக்கும் குணம் ரஜினிக்கு இருப்பதால் தான் 6-லிருந்ர் 60 வரை எல்லோராலும் மதிக்கப்படுகிறார்...

நல்ல பதிவு...

தலைவருக்கு ஒரு வழ்த்தையும் சொல்லிக்கிறேன்...

!* வேடந்தாங்கல் - கருன் *! சொன்னது…

தலைவருக்கு நானும் ஒரு வாழ்த்து சொல்லிக் கொள்கிறேன்..

Loganathan Gobinath சொன்னது…

Super boss. Thalivaruku valthukal.

sanjeev சொன்னது…

good post.

saravana kumar சொன்னது…

all rajni fans have this mentality

kalakiteenga boss


எனக்கு ரஜினியின் அரசியல் பிரவேசத்தில் இரண்டு விதமான நிலைப்பாடு இருக்கிறது. ரஜினியின் நலம்விரும்பியாக சொன்னால், ரஜினி அரசியலுக்கு வராமல் இருப்பதையே நான் விரும்புவேன். காரணம், தேவையில்லாத தலைவலி அவருக்கு வேண்டாம் என்பதற்காகத் தான். ஆனால், அவரின் தீவிர ரசிகராக பார்த்தால், அவர் தீவிர அரசியலில் ஈடுபட வேண்டும் என்பதே என் கருத்து. அப்படி அவர் அரசியலுக்கு வந்தால், என் குடும்பத்தில் உள்ள மொத்த ஓட்டும் அவருக்குத் தான்...

என்றும் இனியவன் சொன்னது…

ரஜினி :
சினிமாவா? ஆன்மிகமா? அரசியலா?
பதில் :
சினிமாவில் ஆன்மிகம்
சினிமாவில் அரசியல் .

என்றும் இனியவன் சொன்னது…

ரஜினி :
சினிமாவா? ஆன்மிகமா? அரசியலா?
பதில் :
சினிமாவில் ஆன்மிகம்
சினிமாவில் அரசியல் .

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

கருத்துரையிடுக