கற்க கற்க கள்ளும் கற்க...

சனி, ஜனவரி 01, 2011

2010 Top 10 படங்கள் - ஒரு சிறப்பு பார்வை

அனைவருக்கும் என் 2011 புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த புத்தாண்டின் முதல் தேதியில் ஒரு பதிவு போடலாம் என்று நினைத்தேன். எதை பற்றி என்று நினைக்கும்போது நம் தமிழ் சினிமாவின் Top 10 படங்களை போடலாம் என்று முடிவு செய்து வெளியிட்டுள்ளேன். இந்த பத்து படங்களும் எனக்கு பிடித்த பத்து படங்கள் தானே தவிர, இது தான் Top 10 என்று சொல்லவில்லை. அப்படியே நான் சில படங்களை விட்டிருந்தால், Iam Sorry. Top 10 படங்களை பார்ப்போமா?

10. பையா
லிங்குசாமி இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையில், கார்த்தி, தமான்னா நடிப்பில் வெளியான படம். லிங்குசாமியின் வழக்கமான மசாலா படம் என்றாலும், கார்த்தி, தமன்னாவிற்கு பெரிய பெயரை வாங்கி தந்த படம். யுவனின் இசை இந்த படத்திற்கு மிக பெரிய பிளஸ்.
9. தமிழ் படம்

தயாநிதி அழகிரி தயாரிப்பில், நீரவ் ஷா ஒளிப்பதிவில், அறிமுக இயக்குனர் அமுதன் இயக்கத்தில், 'மிர்ச்சி' சிவா நடிப்பில் வெளியான படம். தமிழ் சினிமாவின் Sentiment என்று சொல்லப்படும் சில நம்ப மறுக்கின்ற விஷயங்களை தாக்கி எடுத்த படம். பெரிய நடிகர்களின் படங்களை போல பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட படமும் இது தான்.


8. சிங்கம்
ஹரியின் இயக்கத்தில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையில், சூர்யா, அனுஷ்கா நடிப்பில் வெளியான படம். ஹரியின் Trade mark Commercial வெற்றி படம். சூர்யாவின் 2010 வெற்றி படம்.இந்த படம் சன் Pictures வெளியிடு என்பது உபரி தகவல்.
7. பாஸ் என்கிற பாஸ்கரன்
உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டில், ராஜேஷ் இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையில், ஆர்யா,நயன்தாரா, சந்தானம் நடிப்பில் வெளிவந்த 'நண்பன்டா' புகழ் படம். இயக்குனர் ராஜேஷ், சந்தானம், கூட்டணியில் ஆர்யா இணைந்து கலக்கிய காமெடி படம். 'தளபதி' படத்தில் வரும் 'நண்பன்' என்ற வசனத்தை 'நண்பன்டாவாக' மாற்றிய படம்.


6. மதராசபட்டினம்
உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டில், 'கிரீடம்' விஜய் இயக்கத்தில், நீரவ் ஷா ஒளிப்பதிவில், ஆர்யா நடிப்பில் வெளிவந்த மற்றொரு படம். ஐம்பது வருடத்திற்கு முன்பு இருந்த சென்னையை, ஒரு அழகான காதல் கதையோடு காட்டிய படம். எனக்கு பழைய சென்னையை பார்த்த திருப்தி தந்த படம்.

5. நான் மகான் அல்ல

தயாநிதி அழகிரி வெளியிட்டில், சுசிந்தரன் இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையில், கார்த்தி, காஜல் அகர்வால் நடிப்பில் வந்த படம். சமீப காலமாக சென்னையில் நடக்கும் கற்பழிப்பு, கொடூர கொலைகள் என்ற பின்னணி கொண்ட படம். யுவன் இசையில் எனக்கு இந்த படத்தில் வரும் அணைத்து பாடல்களும் பிடிக்கும்.


4. அங்காடி தெரு
அயங்கரன் இன்டர்நேஷனல் தயாரிப்பில், வசந்த பாலன் இயக்கத்தில், அஞ்சலி, புதுமுகம் மகேஷ் நடிப்பில் வெளிவந்த படம். நம்மை வெகு சில நிமிடங்களில் கடந்து போகின்ற மனிதர்களின் வலிமிகுந்த வாழ்கையை அப்பட்டமாக காட்டிய படம். 'வெயில்' தந்த வசந்த பாலனின் உஷ்ணமான மற்றொரு படைப்பு.


3. Kalavani

அறிமுக இயக்குனர் சற்குணத்தின் இயக்கத்தில், விமல், ஓவியா நடிப்பில் வெளிவந்த படம். ஒரு சாதாரண கிராமத்து காதல் கதை தான் என்றாலும், அதை படமாக்கிய விதம் மிகவும் அருமை. கஞ்சா கருப்பு காமெடி படத்திற்கு கூடுதல் பலம்.

2. மைனா

உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டில், பிரபு சாலமன் இயக்கத்தில், புதுமுக நடிகருடன் அமலா பால் நடித்த படம். கமல்ஹாசன், ரஜினிகாந்த், டைரக்டர் பாலா என்று திரையுலகில் பலரால் பாராட்டப்பட்ட படம். இசை, காட்சியமைப்பு, வெளிபடபிடிப்பு என்று அதிக சிரத்தை எடுத்து எடுக்கப்பட்ட படம். இந்த வருடத்தின் நல்ல படங்களில் இதுவும் ஒன்று.

1. எந்திரன்

சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறன் தயாரிப்பில், பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், ஆஸ்கார் நாயகன் ரஹ்மான் இசையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் நடிப்பில் வெளிவந்த 162 கோடி செலவில் எடுக்கப்பட்ட, இயக்குனர் ஷங்கரின் கனவு படம். இந்தியன் சூப்பர் ஸ்டார் ரஜினியை, உலக சூப்பர் ஸ்டாராக உயர்த்திய படம். ஹாலிவுட் படங்களுக்கே சவால் விடக்கூடிய அளவுக்கு அமைந்த ஒரு தமிழ் படம் என்பது ஒரு கூடுதல் பெருமை.


(தயவுசெய்து படித்ததோடு மட்டுமல்லாமல் வாக்களித்து, பின்னூட்டமிட்டு என்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்).

Post Comment

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

கருத்துரையிடுக