கற்க கற்க கள்ளும் கற்க...

ஞாயிறு, ஜனவரி 09, 2011

ரஜினியின் பில்லா - திரைவிமர்சனம்

அனைவருக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள். என் கடந்த பதிவில் படையப்பா திரைவிமர்சனத்தை பற்றி ஒரு பதிவு போட்டிருந்தேன். அந்த பதிவில் நான் முக்கியமாக சொல்ல நினைத்த சில விஷயங்களை நான் சொல்ல முடியாமல் போனது. காரணம், படையப்பாவை பற்றி நான் சொல்ல நினைத்த பல விஷயங்களை நான் பதிவேற்றும்போது மறந்தே போனேன்.
எதை சொல்வது, எதை விடுவது என்ற குழப்பம் தான் காரணம். அதுமட்டுமல்ல, பதிவை இன்றே வெளியிடவேண்டும் என்ற அவசரம் தான். இந்த முறை முடிந்தவரைக்கும், அனைத்தையும் எழுதியிருக்கிறேன் என்று நம்புகிறேன். Lets go to my Review.
சர்வதேச காவல்துறையினரால் தேடப்படும் மிகப்பெரிய கிரிமினல் டேவிட் பில்லா. பில்லாவை பிடிக்க DSP அலெக்ஸ்சண்டரான பாலாஜி முயற்சிக்க, அந்த முயற்சியில் பில்லா துப்பாக்கி குண்டடிபட்டு இறக்க, இறந்து போன பில்லாவின் கூட்டத்தை பிடிக்க பில்லா போன்றே உருவமுடைய ஒரு அப்பாவியை அந்த கூட்டத்தினுள் அனுப்புகிறார் DSP. அப்பாவியான ராஜுவும் பில்லாவாக நடித்து அந்த கூட்டத்தை பிடித்து கொடுக்கும்போது DSP கொல்லப்படுகிறார். தான் பில்லா அல்ல, ராஜப்பா என்று எவ்வளவோ சொல்லியும் நம்ப மறுக்கிறது போலீஸ். அதனால் போலிசிடமிருந்து தப்பித்து, DSP யை கொன்றது யார்? உண்மையான குற்றவாளி யார்? என்று ராஜப்பா கண்டுபிடிப்பது தான் மிதி கதை.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஸ்ரீப்ரியா நடிப்பில் வந்த ஸ்டைலிஷான திரைப்படம். நான் சிறுவயதில் இருந்தபோது இந்த படத்தில் வரும் 'மை நேம் இஸ் பில்லா' பாடல் எனக்கு பிடிக்கவே பிடிக்காது. காரணம், அந்த பாடலில் தலைவர் ஸ்டைல் எதுவும் காட்டாமல் டான்ஸ் ஆடிக்கொண்டும், பாட்டுபாடிக்கொண்டும் இருப்பார். குழந்தைகளுக்கு ஏதாவது ஸ்டைல் காட்டும் ரஜினியை தான் மிகவும் பிடிக்கும். எனக்கு இந்த பாடல் பிடிக்காமல் போனதால், பின்னாளில் இந்த படமே பிடிக்காமல் போனது. ஆனால் நம்ம அல்டிமேட் ஸ்டார் 'தல' அஜித்குமார் பில்லாவை ரீமேக் செய்யப்போவதாக அறிவித்தபோது அப்படியென்ன இருக்கு தலைவரின் பில்லாவில்? என்று நினைத்து பில்லா படத்தை பார்த்தேன். பார்த்தபிறகு தான் தெரிந்தது, தல ஏன் இந்த படத்தை செலக்ட் செய்தார் என்று. ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால், சூப்பர்'ஓ சூப்பர்.
ரஜினியின் அலட்டல் இல்லாத நடிப்பு அருமை. பில்லாவான ரஜினியின் சத்தமில்லாத பேச்சே படம் பார்க்கும் அனைவரையும் மெதுவாக மிரட்ட ஆரம்பிக்கும். எதை செய்தாலும் நின்று, நிதானமாக செய்வது, துப்பாக்கிமுனையில் நின்றாலும் கொஞ்சம் கூட பயமே இல்லாமல் லாவகமாக பேசி தப்பிப்பது சூப்பர். பில்லாவுக்கு நேரெதிர் ராஜப்பா. ரஜினி பெண்மையின் ஒருவிதமான நளினத்தோடு நடப்பது, பேசுவது, தன் தாடையில் கைவைத்து கொள்வது என்று அசத்துகிறார். இப்படி ஒரு பெண்மை கலந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒரு தனி தைரியம் வேண்டும். அது கண்டிப்பாக தலைவருக்கு உண்டு. அடுத்து ஸ்ரீப்ரியா. ஸ்ரீப்ரியாவின் நடிப்பு எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. அன்றைய கவர்ச்சியான நடிகையும் கூட. முக்கியமாக ரஜினிக்கு பொருத்தமான ஜோடி இவர் தான். பாலாஜி போலிஸ் அதிகாரியாக நடித்துள்ளார். அவர் தான் இந்த படத்தின் தயாரிப்பாளரும் கூட. இந்த படத்தில் ரஞ்சித்தாக மனோகர், Interpole officer கோகுல்நாத்தாகவும் ஜகதீஷாகவும் மேஜர் சுந்தர்ராஜன், மனோரம்மா, தேங்காய் ஸ்ரீநிவாசன், அசோகன் என்று அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு இசை மெல்லிசை மன்னர் M.S. விசுவநாதன். மை நேம் இஸ் பில்லா, வெத்தலைய போட்டேண்டி என்ற இரு பாடல்களும் இன்றைய தேதி வரை பிரபலம். படத்தை இயக்கியது கிருஷ்ணமூர்த்தி.இந்த படம் ஜனவரி 24, 1980 அன்று அலங்கார், மகாராணி, பால அபிராமி என்று பல திரையரங்குகளில் வெளியானது. இது ரஜினியின் 54 வது படமாகும். இந்த படம் ஹிந்தியில் அமிதாப் பச்சன் நடித்து, மிகபெரிய வெற்றி பெற்ற 'டான்' படத்தின் ரீமேக் ஆகும். மற்ற படங்களை விட, பில்லா படத்திற்கு ஒரு சிறப்பம்சம் உள்ளது. ஹிந்தியிலும், தமிழிலும் இந்த படம் வெளியானது போல தெலுங்கிலும் NTR நடித்து 'யுகந்தர்' என்ற பெயரில் வெளியானது. அதேபோல இந்த படத்தை இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப மாற்றி ரீமேக் செய்து நடித்தவர்கள் யார்? ஹிந்தியில் ஷாருக், தமிழில் நம்ம தல, தெலுங்கில் பிரபாஸ். இப்போது கூட இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கிறார்கள். திரும்பவும் ஹிந்தியில் ஷாருக், தமிழில் திரும்பவும் நம்ம தல. இந்த இரண்டு மொழிகளில் வெற்றிபெற்றால், அப்போ தெலுங்கில் ஹீரோ யாரு...?
(தயவுசெய்து படித்ததோடு மட்டுமல்லாமல் வாக்களித்து, பின்னூட்டமிட்டு என்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்).

Post Comment

6 comments:

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) சொன்னது…

இனம் மறந்து இயல் மறந்து
இருப்பின் நிலைமறந்து
பொருள் ஈட்டும் போதையிலே
தமிழின் தரம் மறந்த தமிழனுக்கு
நினைவூட்டும் தாயகத் திருநாள்

உழவர் திருநாள் வாழ்த்துக்கள்!

N.H.பிரசாத் சொன்னது…

அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

பதிவுலகில் பாபு சொன்னது…

நல்ல விமர்சனம்..

பொங்கல் வாழ்த்துக்கள்..

N.H.பிரசாத் சொன்னது…

நண்பர் பாபுவின் கருத்துரைக்கு நன்றி

shortfilmindia.com சொன்னது…

vaazhthukkal. cablesankar

N.H.பிரசாத் சொன்னது…

நன்றி Cable அண்ணா

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

கருத்துரையிடுக