செவ்வாய், நவம்பர் 01, 2011

எனக்கு பிடித்த தெலுங்கு பாடல்கள் (விடியோவுடன்)...

இந்த பதிவு எழுத ஆரம்பிக்கும்போது ஒரு அதிர்ச்சி தரக்கூடிய செய்தி வந்தது. இசைஞானி இளையராஜாவின் மனைவி திருமதி. ஜீவா இளையராஜா அவர்கள் இரவு மாரடைப்பால் காலமானார் என்று. மெல்லிசை மன்னருக்குப் பிறகு அருமையான பாடல்களால் உலகத் தமிழர்கள் அனைவரும் பெருமிதப்பட்டுக் கொள்ளும் அளவுக்கு இசையமைத்த
இளையராஜாவிற்கு எப்படி ஆறுதல் சொல்வது? அவரது குடும்பத்தார்க்கு எப்படி ஆறுதல் சொல்வது? இந்த இழப்பை தாங்கக் கூடிய சக்தியை அவர்களின் குடும்பத்தார்க்கு அளித்திடவும், அம்மையாரின் ஆத்மா சாந்தியடையவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
பாடல் 1:
இந்த பாடல் இசைஞானி அவர்கள் இசையமைத்த பாடல். அதுவும் சோகப் பாடல். இந்த பாடலில் நடிகர் கார்த்திக், ஷோபனா, சரத்பாபு ஆகியோர் நடித்துள்ளனர். இந்த பாடலை பார்த்தவுடனே எனக்கு மிகவும் பிடித்து விட்டது. காரணம், இளையராஜாவின் இசை. இந்த பாடல் தமிழில் வந்ததா என்று தெரியவில்லை. அப்படி வந்திருந்து, யாராவது இந்த பாட்டின் தமிழ் பதிப்பை பார்த்திருந்தால் தயவு செய்து எனக்கு லிங்க் அனுப்புங்கள்.

பாடல் 2:
இந்த பாடல் இடம்பெற்ற படம், 'சந்தமாமா'. தமிழில் கூட 'அ ஆ இ ஈ' என்ற பெயரில் வெளியாகி தோல்வியடைந்த படம். ஆனால் தெலுங்கில் இந்த படம் சூப்பர் ஹிட். இயக்குனர் கிருஷ்ணா வம்சி இயக்கத்தில் வெளியாகி இந்தப் படம் சக்கை போடு போட்டது. பொதுவாகவே கிருஷ்ணா வம்சி இயக்கிய படங்களில் உள்ள கதாநாயகியின் கதாபாத்திரங்கள் அனைத்திலும் ஒரு குழந்தைத் தன்மை இருக்கும். அதற்க்கு இந்த பாடலில் வரும் காஜல் அகர்வாலின் அழகான நடிப்பே சாட்சி. இந்த பாட்டை எனது நண்பர் 'பிலாசபி பிரபாகரனுக்கு' Dedicate செய்கிறேன் (பிரபா காஜலின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது).

பாடல் 3:
இந்த பாடல் இடம்பெற்ற படம் 'பொப்பிலி புலி'. என்.டி.ஆர் நடித்து, தாசரி நாராயணராவ் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் என்.டி.ஆரின் அரசியல் வாழ்க்கைக்கு அடித்தளமாக அமைந்ததாகும். இது ஒரு கிளப் டான்ஸ் பாட்டு தான். ஆனால் இந்த பாட்டை பாடியவரும் சரி, இசையும் சரி மிகவும் அருமை. இந்த பாட்டில் Western Music & Folk Music இரண்டையும் சரியான இடத்தில் பயன்படுத்தி அருமையாக கொடுத்திருக்கிறார்கள்.

பாடல் 4:
எனக்கு மிகவும் பிடித்த பாடல். இந்த படத்தின் பெயர் 'சிந்தூரம்'. படத்தை இயக்கியது கிருஷ்ணா வம்சி. இந்த படத்தில் தான் நடிகர் ரவி தேஜாவுக்கு ஒரு நல்ல வேடம் கிடைத்து சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். அது என்னவோ தெரியவில்லை, எனக்கு சங்கவியை அவ்வளவாக பிடிக்காது. ஆனால் இந்த படத்தில் சங்கவியின் Performance, செம கியூட். இந்த பாடலை கேட்கும்போதெல்லாம் நம்ம ஜெமினி கணேசன் பாடிய 'பட்டு பாட வா' பாடல் தான் ஞாபகம் வருகிறது.

பாடல் 5:
இந்த வீடியோ, ரவி தேஜாவின் 'மிரப்பகாய்' படத்திலிருந்து எடுத்தது. 'சிந்தூரம்' ரவி தேஜாவிற்கும் 'மிரப்பகாய்' ரவி தேஜாவிற்கும் எவ்வளவு வித்தியாசங்கள்? அன்று அவர் வெறும் நடிகர். இன்று, 'மாஸ் மகாராஜா'. எனக்கு மிகவும் பிடித்த நடிகர் இவர். இவர் சமீபத்தில் ஹிட்டடித்த படம் தான் இந்த மிரப்பகாய். இந்த படத்திற்கு இசை, 'பாய்ஸ்' படத்தில் நடித்த தமன்.






(தயவுசெய்து படித்ததோடு மட்டுமல்லாமல் வாக்களித்து, பின்னூட்டமிட்டு என்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தவும்).




என்றும் அன்புடன்

9 கருத்துகள்:

  1. இழப்பை தாங்கக் கூடிய சக்தியை அவர்களின் குடும்பத்தார்க்கு அளித்திடவும், அம்மையாரின் ஆத்மா சாந்தியடையவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. ////இந்த பதிவு எழுத ஆரம்பிக்கும்போது ஒரு அதிர்ச்சி தரக்கூடிய செய்தி வந்தது. இசைஞானி இளையராஜாவின் மனைவி திருமதி. ஜீவா இளையராஜா அவர்கள் இரவு மாரடைப்பால் காலமானார் என்று. மெல்லிசை மன்னருக்குப் பிறகு அருமையான பாடல்களால் உலகத் தமிழர்கள் அனைவரும் பெருமிதப்பட்டுக் கொள்ளும் அளவுக்கு இசையமைத்த இளையராஜாவிற்கு எப்படி ஆறுதல் சொல்வது? அவரது குடும்பத்தார்க்கு எப்படி ஆறுதல் சொல்வது? இந்த இழப்பை தாங்கக் கூடிய சக்தியை அவர்களின் குடும்பத்தார்க்கு அளித்திடவும், அம்மையாரின் ஆத்மா சாந்தியடையவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.////

    இவரின் ஆத்ம சாந்திக்காக இறைவனை வேண்டிக்கொள்வோம்

    பதிலளிநீக்கு
  3. அனைத்து பாடல்களும் அருமை பாஸ்

    பதிலளிநீக்கு
  4. அம்மையாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன்...

    பதிலளிநீக்கு
  5. என் கணினியில் வீடியோவை தடைசெய்துள்ளார்கள்... நண்பா...
    ஆகயால் தாங்கள் பதிவிட்ட எந்த வீடியோவும் பார்க்கமுடியவில்லை... நண்பா...

    பதிலளிநீக்கு
  6. நல்ல பாடல்களின் தொகுப்பு, எனக்கு தெலுங்கு பாடல்களில் ரவிதேஜா வின் ஈ அப்பாயி சால மன்ச்சொடு படத்தில் வரும் 'சந்தமாம கதலோ' பாடல் மிகவும் பிடிக்கும்.

    நன்றி ...

    பதிலளிநீக்கு
  7. ''இந்த இழப்பைதாங்கக் கூடிய சக்தியை அவர்களின் குடும்பத்தார்க்கு அளித்திடவும்''.........

    நானும் இறைவனிடம் இதையே வேண்டிகொள்கிறேன்

    பாடல்கள் அனைத்தும் அருமை.

    பதிலளிநீக்கு
  8. வித்தியாசமாக...

    எனக்கு தெலுங்கு கொஞ்சம் கொஞ்சம் தெரியும்...

    பகிர்வுக்கு நன்றி..

    பதிலளிநீக்கு
  9. இதோ தமிழில்
    http://www.youtube.com/watch?v=wjFE8OBjVGc

    பதிலளிநீக்கு