கற்க கற்க கள்ளும் கற்க...

புதன், நவம்பர் 09, 2011

எனக்கு பிடித்த சில வீடியோ கிளிப்பிங்க்ஸ்...

இந்த வீடியோ கிளிப்பிங்க்ஸ் எல்லாமே எனக்கு ரொம்ப பிடித்த ஒன்று. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை. நீங்களும் பார்த்து ரசியுங்கள்.


வீடியோ 1:
இந்த வீடியோவில் இருப்பது போல் நம்மூரிலேயே சில சேனல் ஆட்கள் இப்படி பொதுமக்களை கலாட்டா செய்து, பின்பு 'நாங்க டிவி ஆளுங்க. அதோ பாருங்க கேமரா' என்று தூரத்தில் கை காட்டுவார்கள். முன்பு சன் டிவியில் 'உஷார் மாக்கான்' என்று ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. இப்போது அதுபோல் நிகழ்ச்சிகளை ஒரு சில சேனல்கள் செய்து வருவதாக கேள்வி.

வீடியோ 2:
இந்த குழந்தை என்னமா வாயாடுகிறது தன் அப்பாவிடம். வாயாடுகிறது என்று சொல்வதை விட, தன் அப்பாவிடம் வாக்குவாதம் செய்கிறாள் பாருங்கள், அவ்வளவு அழகு. என் நண்பனுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறாள். முழுசாக ஒரு வயது கூட ஆகவில்லை. அவனுக்கு போன் செய்தாலே 'ஏய்' என்று சற்று அதட்டலாகவே சொல்கிறாள். இவர்கள் இந்த வயதிலேயே இப்படியென்றால், வளர்ந்து பெரியவர்களாகி என்ன பாடுபடுத்தப்போகிறார்களோ?

வீடியோ 3:
இந்த பைக் சாகச காட்சி என்னை உண்மையிலேயே சிலிர்க்க வைத்துவிட்டது. மிக அருமையாக செய்திருக்கிறார் அந்த சாகசக்காரர்.

வீடியோ 4:
நம்ம கிரிகெட் ஆட்டக்காரர் ராகுல் டிராவிட் ரொம்ப பாவம். திடீரென்று ஒரு பெண் வந்து 'என்னை கல்யாணம் செஞ்சிகிரீங்களா?' என்று கேட்டால் என்ன செய்வார் அவர்? இங்கே அவர் படும் டென்ஷனை நீங்களும் பார்த்து மகிழுங்கள்.

வீடியோ 5:
தாயுள்ளம் என்பது உயிர் இருக்கும் அனைவருக்கும் உள்ள ஒன்று என்பதை மிக அழகாக சொல்லியிருக்கிறது இந்த வீடியோ. ஒரு சிறுத்தை, ஒரு குரங்கை வேட்டையாடி கொன்று விடுகிறது. கர்ப்பமான அந்த குரங்கு உயிர் போகும் நேரத்தில் ஒரு குட்டியை ஈன்று விடுகிறது. ஆனால் அந்த குட்டியை அந்த சிறுத்தை பாதுகாக்கிறது. அதை இந்த வீடியோவில் பாருங்கள்.

வீடியோ 6:
'கரணம் தப்பினால் மரணம்' என்பார்களே, அதற்க்கு இந்த வீடியோ ஒரு சிறந்த உதாரணம்.

(தயவுசெய்து படித்ததோடு மட்டுமல்லாமல் வாக்களித்து, பின்னூட்டமிட்டு என்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தவும்).

என்றும்
அன்புடன்

Post Comment

15 comments:

K.s.s.Rajh சொன்னது…

முதல் பார்வை

K.s.s.Rajh சொன்னது…

அனைத்து தொகுப்புக்களும் அருமை

Philosophy Prabhakaran சொன்னது…

ரெண்டாவது வீடியோவை மிகவும் ரசித்தேன்... பொண்ணுங்களை பார்த்து அதிகமா ஜொள்ளு விடுறவங்களுக்கு கண்டிப்பா பெண்குழந்தை தான் பிறக்கும்ன்னு ஒரு பிரபல பதிவர் சொல்லியிருக்கார்...

Philosophy Prabhakaran சொன்னது…

சிறுத்தை வீடியோ கண் கலந்கிடுச்சு... அந்த வீடியோவை நானும் பகிர்கிறேன்...

Philosophy Prabhakaran சொன்னது…

ஆமா... அனுஷ்கா படம் எதுக்கு...???

நதிமூலம் சொன்னது…

நல்லாருக்கு நல்லாருக்கு

ஜ.ரா.ரமேஷ் பாபு சொன்னது…

வீடியோக்கள் அருமை நண்பா

Mohamed Faaique சொன்னது…

சிறுத்தை வீடியோ முன்னாடி பார்த்திருக்கிறேன். கண் கலங்க வைத்து விட்டது.

மற்றைய வீடியோக்களை பார்க்க இணைய வேகம் போதவில்லை

ராஜா MVS சொன்னது…

என் கணினியில் வீடியோ தடைசெய்துள்ளார்கள்... நண்பா...

ஆமினா சொன்னது…

சிறுத்தை படம் நெகிழ வைத்துவிட்டது

பெண்குழந்தை பேசும் வீடிய்யோ ஏற்கனவே பார்த்து ஆச்சர்யப்பட்டது

வாழ்த்துக்கள்

!* வேடந்தாங்கல் - கருன் *! சொன்னது…

குயந்தை அட போட வைக்கிறது..

கிருபாநந்தினி சொன்னது…

இந்தியில் வாயாடுகிற குழந்தை கொள்ளை அழகுங்ணா! திருஷ்டி சுத்திப் போடச் சொல்லுங்க!

பெயரில்லா சொன்னது…

திராவிட் பற்றிய வீடியோவில் வரும் பெண் யாரென்று தெரிகிறதா? நியுட்டனின் மூன்றாம் விதி படத்தில் நடித்த, மிஸ் இந்திய பட்டம் வென்ற அழகி சாயாலி பகத். இந்த வீடியோவில் கூட தன்னை சாயாலி என்றே அறிமுகபடுதுகிறார்.

http://www.picx.in/search/label/Sayali%20Bagat

சி.கருணாகரசு சொன்னது…

அத்தனையும் தூள்....

Loganathan Gobinath சொன்னது…

nice post boss. super

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

கருத்துரையிடுக