வெள்ளி, நவம்பர் 18, 2011

தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் - ஒரு பார்வை

வர,வர தமிழ்நாட்டை விட உகாண்டா ரொம்ப மோசமாகி வருகிறது. முன்பெல்லாம் தினமும் ஒரு ஐந்து மணிநேரமாவது பவர் கட் செய்துவிடுவார்கள். கடந்த இரண்டு வாரமாக கிட்டத்தட்ட பத்து மணிநேரம் பவர் கட் செய்கிறார்கள். தொடர்ந்து இரண்டு, மூன்று நாட்களாக பவர் இல்லாமல் ரொம்பவே கஷ்டப்பட்டு விட்டேன். அதனால் தான் என்னால் பதிவெழுதாமல்
போய் விட்டது. மற்றவர்களின் பதிவை படிக்க முடியாமலும் போய்விட்டது. சரி, இப்போது நாம் பார்க்கப் போவது தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான திரு. ஜூனியர் என்.டி.ஆர் அவர்களை பற்றித்தான்.
இவர் மே 20 1983 அன்று ஆந்திராவில் உள்ள ஹைதராபாத்தில் பிறந்தார். இவரது தந்தை, நடிகர் மற்றும் அரசியல்வாதியான ஹரி கிருஷ்ணா. ஜூனியர் என்.டி.ஆர் பிறப்பால் ஒரு முஸ்லிம். ஆனால் சினிமாவில் அவர் நடிக்க ஆரம்பித்தபிறகு தன் பெயரை 'ஜூனியர் என்.டி.ஆர்' என்று மாற்றி இப்போது 'தாரக்' என்று அழைக்கப்படுகிறார். இவரின் அம்மா பெயர் ஷாலினி. ஹரி கிருஷ்ணாவுக்கு ஏற்கனவே திருமணமாகி குடும்பம் இருந்தாலும் ஷாலினியை இரண்டாவதாக திருமணம் செய்து தனியாக குடும்பம் நடத்தி வந்தார். அதனால் சிறுவயதில் என்.டி.ஆருக்கு அவரின் தந்தையின் குடும்பத்தோடு எந்த உறவும் இல்லாமல் இருந்தது.



என்.டி.ஆர் ஹைதராபாத்திலேயே தன் பள்ளிப் படிப்பையும், கல்லூரிப் படிப்பையும் படித்து முடித்தார். சிறுவயதில் என்.டி.ஆர் ரொம்ப குறும்புத்தனம் பண்ணுவார். இவரின் செயல்கள் பிடிக்காத பள்ளித் தலைமையாசிரியர் இவரை ஒரு இருட்டு அறையில் ஒரு நாள் முழுக்க கூட அடைத்து பார்த்தார். ஆனாலும் அவர் தன் குணத்தை மாற்றிக்கொள்ளவில்லை. இவருக்கு அம்மா என்றால் ரொம்ப இஷ்டம். தந்தையிடம் அவ்வளவாக ஒட்டமாட்டார். சிறுவயதில் ஒரு முறை அவரின் தாத்தாவை பார்க்கும் வாய்ப்பு தாரக்கிற்கு கிடைத்தது. அப்போது தாரக்கின் அம்மாவிடம் 'நான் இவனுக்கு எதுவும் செய்யவில்லை. ஆனால் என் ஆசிர்வாதம் எப்போதும் இவனுக்கு இருக்கும்' என்று தாரக்கை என்.டி.ஆர் ஆசிர்வதித்தார்.
தாரக் பண்ணிரண்டு வயதிலிருந்தே குச்சிபுடி நடனம் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார். சிறுவயதிலேயே இவர் நடித்த முதல் படம் 'பால ராமாயணம்'. இதில் அவர் நடித்தது ராமர் வேடம். தாத்தாவை போலவே பேரனும் பால ராமனாக அசத்தியிருந்தார் படத்தில். சில வருடங்களுக்குப் பிறகு இவர் நடித்த இரண்டாவது படம் சரியாக ஓடவில்லை. இவர் நடித்த மூன்றாவது படமான ஸ்டுடன்ட் நம்பர்.1 படம் சூப்பர் டுப்பர் ஹிட்டானது. அதன்பிறகு இவர் நடித்த 'ஆதி' என்ற படம் பயங்கர ஹிட். அதன்பிறகு இவர் நடித்தது எல்லாமே மாஸ் படங்கள் தான். அதிரடியான நடனமும், அதிவேகமான வசன உச்சரிப்பும் இவரை தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக்கியது.
ஒரு சில படங்களுக்கு பிறகு இவர் நடித்த 'சிம்மாத்ரி' என்ற படம் திரும்பவும் இவரை மாஸ் ஹீரோ இமேஜை உறுதிப்படுத்தியது. அதேசமயம் என்.டி.ஆரின் குடும்பமும் தாரக்கை அரவணைத்தது. ஆனால் சிம்மாதிரிக்கு பிறகு இவர் நடித்த படங்கள் தொடர்ந்து தோல்வியைத் தழுவின. இன்னும் சொல்லப்போனால் இவரை வைத்து படம் எடுத்த ஒரு தயாரிப்பாளர், படம் தோல்வியடைந்ததற்கு தற்கொலை முயற்சி செய்தார். அந்த அளவுக்கு தாரக்கின் இமேஜ் சரிந்திருந்தது. கிருஷ்ணவம்சி இயக்கத்தில் இவர் நடித்து வெளியான 'ராக்கி' என்ற படம் மட்டும் சுமாரான வெற்றியை பெற்றது. அப்படி சரிந்திருந்த தாரக்கின் மார்கெட்டை ஒரே அடியாக தூக்கி நிறுத்திய படம்தான் 'எம தொங்கா'. தன் உருவத்தை மொத்தமாக மாற்றி, தன் நடிப்பின் மூலமாக 'எம தொங்காவில்' தன்னை மீண்டும் நிரூபித்தார்.

எம தொங்கா படத்திற்குப் பிறகு இவர் நடித்த கந்த்ரி, அடுர்ஸ் என்ற படங்கள் ஓரளவுக்கு வெற்றிபெற்ற நிலையில் 'பிருந்தாவனம்' என்ற படத்தின் மூலம் இவர் மீண்டும் ஹிட்டடித்தார். சமிபத்தில் இவர் நடித்த 'ஒசரவல்லி' படம் இப்போது ஆந்திராவில் ஓடிக்கொண்டிருக்கிறது. கடந்த ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் சந்திரபாபு நாயிடுவின் தெலுங்கு தேசம் கட்சிக்காக பிரச்சாரம் மேற்கொண்டார். சமிபத்தில் தான் இவர் லக்ஷ்மி பிரனிதா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். எனக்குத் தெரிந்து என்.டி.ஆர் குடும்பத்திலிருந்து நடிகர் பால கிருஷ்ணாவிற்குப் பிறகு தெலுங்கு சினிமாவில் நுழைந்து மிகப்பெரிய அளவிற்கு பெயர் பெற்றது இந்த ஜூனியர் என்.டி.ஆர் மட்டுமே. இவர் இதுவரை 20 படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும், தெலுங்கு சினிமாவின் இளைய தலைமுறை நடிகர்களில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர் இவர் மட்டும் தான்.(தயவுசெய்து படித்ததோடு மட்டுமல்லாமல் வாக்களித்து, பின்னூட்டமிட்டு என்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தவும்).




என்றும்
அன்புடன்

5 கருத்துகள்:

  1. ஜூ.என்டிஆர் ஒரு பறவை பார்வைன்னு தலைப்பு வச்சிருக்கலாம்.ஆனால் தமிழ் பதிவுக்கு இந்த ரேஞ்சே அதிகம். வாழ்த்துக்கள்.

    இவர் சின்ன வயசா இருந்தப்ப எல்லாரும் என்.டி.ஆர் கிட்டே "சார்.. உங்க பேரன் 100 பர்சென்ட் உங்களை மாதிரியே இருக்கான்"னு சனம் சொல்லி சொல்லி ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு கொண்டு வரச்சொல்லி பார்த்தாரம் சீனியர்.

    என்.டி.ஆர் திட்டங்களை மீண்டும் கொண்டு வந்த ஒய்.எஸ்.ஆரை எதிர்த்து பிரச்சாரம் செய்ததும் தாத்தாவின் முதுகில் குத்திய சந்திரபாபுவை எதிர்க்காததும் , பாபு வின் யூஸ் அண்ட் த்ரோ ஸ்டைலுக்கு பலியானதும் இவர் ஹிஸ்டரியில் ஒரு கருப்பு புள்ளி தான்.

    பதிலளிநீக்கு
  2. சிறப்பான அலசல் பாஸ் எனக்கு உங்கள் பதிவில் பிடித்ததே தொகுப்புக்களை அழகாக வகைப்படுத்துவது வாழ்த்துக்கள் பாஸ்

    பதிலளிநீக்கு
  3. இவரைப் பற்றி அவ்வளவா எனக்கு தெரியாது... தங்களின் மூலம் தெரிந்துகொண்டேன்...

    தொகுத்த விதம் அருமை... நண்பா...

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் நண்பரே! தங்களின் தளத்தைப் பார்த்து நிறைய தெரிந்து கொண்டேன். தங்களின் பல சேவைகளுக்கு எனது நல்வாழ்த்துக்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
  5. நிறைய பகிர்வுகள்.. அருமை. பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு