வெள்ளி, டிசம்பர் 25, 2020

எனக்கு பிடித்த புத்தகங்கள் 9 - சுஜாதா நாவல்களும் மற்ற சில புத்தகங்களும்...

எனக்கு பிடித்த புத்தகங்கள் 9 - சுஜாதா நாவல்களும் மற்ற சில புத்தகங்களும்...
முன்பு போல பதிவுகள் நான் அதிகம் எழுதுவதில்லை. அதிலும் புத்தகங்களை பற்றிய பதிவெழுதி 3 வருடங்களுக்கு  மேல் ஆகிறது. சமீபத்தில் சில குறிப்பிடத்தக்க சுஜாதாவின் புத்தகங்களும் வாசிக்க கிடைத்தன. அதோடு சேர்த்து இன்னும் சில புத்தகங்களை வாசித்தேன். ஆனால் உடனுக்குடனே பதிவு எழுத நேரமில்லை. இப்போது கூட நானாக எதையும் எழுதவில்லை.

வியாழன், ஜூன் 04, 2020

கலைஞரின் 'மனோகரா' (1954) திரைப்பட வசனங்கள்...

கலைஞரின் 'மனோகரா' (1954) திரைப்பட வசனங்கள் 1
ஜூன் 3, நேற்று கலைஞருக்கு பிறந்த நாள். திராவிட அரசியலில் எதிர்ப்பும், ஆதரவும் அதிகம் பெற்ற ஒரே தலைவர் எனக்கு தெரிந்து திரு. மு. கருணாநிதி அவர்கள் மட்டுமே. அதற்க்கு நேற்றைய சாட்சி தான் ட்விட்டரில் ஒரே நேரத்தில் ட்ரெண்டான Father of Modern Tamilnadu மற்றும்  Father of Corruption. கலைஞரை பற்றி பல நூறு குற்றச்சாட்டுகளை வைப்பவர்களும் சரி, ஆயிரமாயிரம் விமர்சனங்களை வைப்பவர்களுக்கு சரி. அவரின் தமிழ் வசனங்களை ஒருவராலும் குறைசொல்ல முடியாது. குறிப்பாக 1950, 60'களில் வெளியான படங்களில் திரு. மு. கருணாநிதி எழுதிய வசனங்களுக்காகவே படம் பார்த்த பலர், பின்னாளில் அவரின் அரசியல் தொண்டர்கள் ஆனார்கள்.

திங்கள், மே 27, 2019

தேர்தல் 2019...

டந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், பா.ஜ.க கூட்டணி இந்தியா முழுவதும் உள்ள நாடாளுமன்ற தொகுதிகளில் 350 தொகுதிகளுக்கு மேல் வென்று திரும்பவும் ஆட்சியமைத்துள்ளது. அதே போல தமிழகத்தில் நடந்து முடிந்த 22 இடைத்தேர்தலில் 13 இல் தி.மு.கவும், 9 இல் அ.தி.மு.கவும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் அ.தி.மு.க அரசு இன்னும் இரண்டு வருடங்களுக்கு தொடர்ந்து ஆட்சியை தரவுள்ளது. தேர்தல் அறிவித்ததிலிருந்து, தேர்தல் முடிவுகள் அறிவித்தது வரை நடந்த கூத்துக்கள், களேபரங்கள், கணிப்புகள் என்று பல மக்களாகிய நாம் கண்கூடாக கண்டோம். அவற்றை பற்றிய தெளிவான அலசல்கள் இதோ...

தேர்தலுக்கு முந்தைய கலவரம்:
மக்களிடம் சம்பாதித்துள்ள அதிருப்தியை தாண்டி பெரிய அளவில் வெற்றிவாகை சூடவேண்டும் என்ற கட்டாயத்தில் பா.ஜ.க, பா.ம.க, தே.மு.தி.க என்று மெகா கூட்டணியை அமைத்து களம் கண்டது அ.தி.மு.க. அதே போல கலைஞர் இல்லாத தி.மு.கவில் வி.சி.க, ம.தி.மு.க, காங்கிரஸ் என்று எதிர் கட்சிக்கு சளைக்காமல் கூட்டணி அமைத்து களம் கண்டார் ஸ்டாலின்.

செவ்வாய், ஜனவரி 08, 2019

2018 தமிழ் டாப் 10 திரைப்படங்கள்...

இனிய 2019 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். பதிவு எழுதி பல மாதங்கள் ஆகிறது. சோம்பலும், வேலையும் சேர்ந்து என்னை எழுத விடாமல் செய்து விட்டன. இந்த பதிவு கூட ஜனவரி ஒன்றாம் தேதி வெளியிட வேண்டியது. வழக்கம் போல தள்ளி வைத்து இப்போது பதிவேற்றுகிறேன். இந்த வருடம் முதல் தொடர்ந்து எழுதுவேன் என்று நம்புகிறேன். பார்ப்போம். சரி, இந்த ஆண்டில் பல படங்கள் வெளியாகின. 'தல' அஜித்தை தவிர பெரிய நடிகர்களின் படங்கள் குறைந்த பட்சம் ஒன்றாவது வெளிவந்திருந்தது மகிழ்ச்சி. ஆனால், ஓப்பனிங் வசூல் நிலவரங்கள் தவிர்த்து விமர்சனரீதியாக பெயர் பெற்ற படங்கள் எதுவுமே இல்லை என்பதே வருத்தம் கலந்த உண்மை. அதே சமயம் சிறிய பட்ஜெட்டில், கதையை மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட சில படங்கள் விமர்சனரீதியாகவும், வசூல்ரீதியாகவும் வெற்றிபெற்றிருந்தன. அதில் எனக்கு பிடித்த 10 படங்களை பட்டியலிடுகிறேன்.

மேற்குத்தொடர்ச்சி மலை:
இந்த திரைப்படத்தை பார்க்கும்போது என் மனதிற்குள் ஒலித்த குரல், 'இப்படி ஒரு வாழ்க்கை நமக்கு வாய்க்கவில்லையே, எவ்வளவு பெரிய யோகக்காரன் நான், பாவம் அவர்கள்'. கடவுள் சத்தியமாக எனக்கு அப்படித்தான் தோன்றியது. மலையும், மலை சார்ந்த மழையும் என்பது அவ்வளவு சாதாரணமானது அல்ல. ஒரு குறிப்பிட்ட காட்சி, அந்த ஏலக்காய் மூட்டை

வெள்ளி, மார்ச் 23, 2018

'மெகா ஸ்டார்' சிரஞ்சீவியின் டாப் 10 தெலுங்கு பாடல்கள்...

மெகா ஸ்டார் சிரஞ்சீவி. தென்னிந்திய சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவர். இன்றைய ஜூனியர் என்.டி.ஆர், அல்லு அர்ஜுன், ராம் சரண் தேஜா போன்ற நடிகர்களின் அதிவேக நடனத்திற்கு இவரே முன்னோடி. 'Power Star' பவன் கல்யாண், 'Prince' மகேஷ் பாபு போன்ற இன்றைய Collection King களின் முன்னோடியும் இவர்தான். ஒரு காலத்தில் என்.டி.ஆர் படங்களை அதிகம் ரீமேக் செய்தது எம்.ஜி.ஆர் என்றால், சிரஞ்சீவியின் அதிகமான வெற்றிப்படங்களை ரீமேக் செய்தது ரஜினிகாந்த் எனலாம். தெலுங்கு இண்டஸ்ட்ரியின் 'வசூல் சக்கரவர்த்தி' திரு. சிரஞ்சீவி அவர்களை பற்றி தனியாக ஒரு பதிவு எழுத இப்போதைக்கு நேரம் இல்லை. அதனால் அவரின் டாப் 10 ஹிட் பாடல்களின் தொகுப்பை படம் வெளிவந்த வருடத்தின் வரிசையில் தொகுத்திருக்கிறேன். பார்த்து, கேட்டு, ரசித்து மகிழுங்கள்.

வெள்ளி, பிப்ரவரி 23, 2018

Production No. 1975...

'ரெண்டு சின்ன பசங்க சார், இது ஜெயிக்கும்னு நானும், இதுவும் ஜெயிக்கும்னு அவரும் சொல்லிக்கிட்டு இருப்போம், அப்படி சொன்னது அன்னைக்கு முழுக்க எங்க மைண்ட்ல ஓடிக்கிட்டே இருந்துச்சி' - நடிகர் பிரகாஷ் ராஜ் தொகுத்து வழங்கிய 'நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி' நிகழ்ச்சியில் பங்கேற்ற உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பற்றியும் அவர்களின் இருவேறு சினிமா பாணி பற்றி விவாதித்ததை நிகழ்வில் பகிர்ந்து கொண்டார்.

செவ்வாய், டிசம்பர் 19, 2017

ஸ்ரீதரின் 'ஊட்டி வரை உறவு (1967)' மற்றும் 'கலாட்டா கல்யாணம் (1968)' - 2 in 1 திரை அலசல்

ஊட்டி வரை உறவு (1967):
காமெடி ஆள் மாறாட்ட கதைகள் எழுதுவது அவ்வளவு சுலபமல்ல. ஆனால் கோபுவுக்கும், ஸ்ரீதருக்கு மிகவும் சுலபம் போல. அதனால் தான் காதலிக்க நேரமில்லை தொடங்கி பல படங்கள் இவர்களால் சாதிக்க முடிந்தது. படத்தின் கதை இது தான். டி.எஸ். பாலையா ஒரு பணக்காரர். அவரின் மகன் சிவாஜி கணேசன். சொந்த பிரச்சனை காரணமாக வீட்டை விட்டு ஓடி வரும் கே.ஆர். விஜயாவின் காரில் விபத்தில் சிக்குகிறார் எல். விஜயலக்ஷ்மி.

செவ்வாய், ஆகஸ்ட் 29, 2017

எனக்கு பிடித்த புத்தகங்கள் 8 - சுஜாதா நாவல்கள் மற்றும் புத்தகத் திருவிழாவில் வாங்கியவை...

பதவிக்காக:
சில நாட்களுக்கு முன்பு இந்த நாவலை நான் படித்தபோது சுஜாதாவுக்கும் நாஸ்ட்ரடாமஸ்க்கும் என்ன விதமான மரபிய உறவு இருந்திருக்கும் என்று யோசிக்க ஆரம்பித்து விட்டேன். நான் அப்படி நினைப்பதற்கான 'காரண' கதையையும் சொல்கிறேன். தனபால் ஒரு சுயேச்சை எம்.எல்.ஏ. ஆட்சியில் இருக்கும் பிரதான கட்சியில், யார் மெஜாரிட்டி? என்ற யுத்தம், ஒரு கட்டத்தில்

வியாழன், ஜூன் 15, 2017

எனக்கு பிடித்த புத்தகங்கள் 7 - சுஜாதாவின் 'கணேஷ் மற்றும் வசந்த்' ஸ்பெஷல்...

கணேஷ் - வசந்த், சுஜாதாவின் வாசகர்களுக்கு மிகவும் பரிட்சயமான பெயர்கள். நான் சுஜாதாவின் நாவல்களை படிக்க ஆரம்பித்ததில் இருந்து அவரின் ஆஸ்தான கதாநாயகர்களான கணேஷும் வசந்தும் என்னுடைய Favorite ஹீரோக்கள் ஆகிவிட்டார்கள் என்றே சொல்ல வேண்டும்.

வெள்ளி, ஏப்ரல் 14, 2017

சிறந்த 90's நைட் கிளப் பாடல்கள் - தமிழ் மற்றும் ஹிந்தி...

சிறந்த 90's நைட் கிளப் பாடல்கள் - தமிழ் மற்றும் ஹிந்தி
எனக்கு தெரிந்து 90's சினிமாக்களின் காலகட்டம் தான் பரவலாக ஆக்க்ஷன் படங்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருந்த காலகட்டம். குறிப்பாக அது போன்ற படங்களை எடுத்துக்கொண்டிருந்த கமர்ஷியல் இயக்குனர்கள் ஒரு ஆக்க்ஷன் படத்திற்கான திரைக்கதையை எழுதும்போது சில விஷயங்களை கண்டிப்பாக படத்தில் சேர்ப்பார்கள். அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டியது நைட் கிளப் பாடல்கள்.

வியாழன், மார்ச் 23, 2017

40 வது புத்தகத் திருவிழாவும், லாக்கப் புத்தகமும்...

40 வது புத்தகத் திருவிழாவும், லாக்கப் புத்தகமும் 1
இந்த முறை இந்தியா வந்திருந்தபோது ஒரு சின்ன குறை மனதில் நிறைந்திருந்தது. 'நாற்பது நாட்கள் விடுமுறையில் வந்திருக்கிறோம். புத்தகத் திருவிழாவும் இருந்தா பார்க்கலாமே' என்ற ஆசை. 2015 டிசம்பர் மழை வெள்ளத்தால் 2016 ஜனவரியில் நடக்கவேண்டிய 39 வது புத்தகத் திருவிழா, ஜூலையில் நடந்ததாக கேள்விப்பட்டேன்.

வியாழன், பிப்ரவரி 09, 2017

மார்கழி மாத விடுமுறை நாட்கள்...

மார்கழி மாத விடுமுறை நாட்கள் 1
கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் ஆகிறது, சென்னையை ஆற, அமர பார்த்து. 2012 இல் என் திருமணத்திற்காக 45 நாட்கள் விடுமுறையில் வந்திருந்தேன். அதன் பிறகு இரண்டு முறை வந்திருக்கிறேன். ஆனால், ஒரு வாரம், இருபது நாள் என்று மரங்களை கடக்கும் ரயில்கள் போல நாட்கள் வேகமாக ஓடிவிடும்.

செவ்வாய், டிசம்பர் 06, 2016

அம்மா...

அம்மா 1
அழுகை வரவில்லை எனக்கு, உங்கள் பூத உடலை காணும்வரை,

குரல் தழுதழுக்கவில்லை எனக்கு, உங்களை பற்றி பேசும் வரை.

வியாழன், அக்டோபர் 06, 2016

புரட்சித் தலைவரின் 'ஆயிரத்தில் ஒருவன்' (1965) - திரை பார்வை...

புரட்சித் தலைவரின் 'ஆயிரத்தில் ஒருவன்' (1965) - திரை பார்வை 1
ஒரு முறை நடிகர் சத்யராஜ் தனது பேட்டியில் 'இப்போ நெறைய பழைய படங்களை ரீமேக் பண்ணிக்கிட்டு இருக்காங்க. அதே சமயம் நெறைய ஜானர்ல படங்கள் வெளிவந்துக்கிட்டிருக்கு. நம்ம புரட்சித்தலைவர் நடிச்ச 'ஆயிரத்தில் ஒருவன்' மாதிரி பைரேட் டைப் படங்கள் எடுத்து வெளிவந்தா, பிரம்மாண்டமா ஓடும்' என்று சொல்லியிருந்தார்.