வெள்ளி, மார்ச் 23, 2018

'மெகா ஸ்டார்' சிரஞ்சீவியின் டாப் 10 தெலுங்கு பாடல்கள்...

மெகா ஸ்டார் சிரஞ்சீவி. தென்னிந்திய சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவர். இன்றைய ஜூனியர் என்.டி.ஆர், அல்லு அர்ஜுன், ராம் சரண் தேஜா போன்ற நடிகர்களின் அதிவேக நடனத்திற்கு இவரே முன்னோடி. 'Power Star' பவன் கல்யாண், 'Prince' மகேஷ் பாபு போன்ற இன்றைய Collection King களின் முன்னோடியும் இவர்தான். ஒரு காலத்தில் என்.டி.ஆர் படங்களை அதிகம் ரீமேக் செய்தது எம்.ஜி.ஆர் என்றால், சிரஞ்சீவியின் அதிகமான வெற்றிப்படங்களை ரீமேக் செய்தது ரஜினிகாந்த் எனலாம். தெலுங்கு இண்டஸ்ட்ரியின் 'வசூல் சக்கரவர்த்தி' திரு. சிரஞ்சீவி அவர்களை பற்றி தனியாக ஒரு பதிவு எழுத இப்போதைக்கு நேரம் இல்லை. அதனால் அவரின் டாப் 10 ஹிட் பாடல்களின் தொகுப்பை படம் வெளிவந்த வருடத்தின் வரிசையில் தொகுத்திருக்கிறேன். பார்த்து, கேட்டு, ரசித்து மகிழுங்கள்.

1. யமுடுக்கி மொகுடு (1988):


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த 'அதிசயப்பிறவி' திரைப்படத்தின் ஒரிஜினல் வெர்ஷன் இந்த திரைப்படம். சிரஞ்சீவி, விஜயசாந்தி மற்றும் ராதா நடிப்பில் வெளிவந்த இந்த படம், ப்ளாக்பஸ்டர் ஹிட். குறிப்பாக, ராதாவும், மெகா ஸ்டாரோடு ஆடும் இந்த பாடல் இன்று வரை பிரபலம். சமீபத்தில் கூட இந்த பாடலை ரீமேக் செய்திருக்கிறார்கள்.

2. கொண்டவீதி தொங்கா (1990):


என்னுடைய தெலுங்கு Favorite பாடல்களில் முதலிடம், இந்த பாடல் தான். இசை ஞானியின் இன்னிசையில் எஸ்.பி.பியும், சித்ராவும் பாடிய அருமையான பாடல். சிரஞ்சீவி, ராதாவின் துள்ளலான நடனமும் பாடல் காட்சிக்கு பெரும் பலம். இதுவும் ப்ளாக்பஸ்டர் படம். தெலுங்கு சினிமாவின் முதல் 70 mm 6 Track Stereo சவுண்ட் திரைப்படமும் இதுவே.

3. ஜெகதேக வீருடு, அதிரூப சுந்தரி (1990):


சிரஞ்சீவி, ஸ்ரீதேவி மற்றும் இளையராஜா கூட்டணியில் இந்த படம், முந்தைய தெலுங்கு திரைப்படங்களின் ரெக்கார்டுகளை உடைத்த  ப்ளாக்பஸ்டர் வெற்றிப்படம் என்று மறுபடியும் தனியாக சொல்லனுமா என்ன? குறிப்பாக இந்த பாடல் போல, இனி ஒரு பாடல் ஹிட்டாகி நிலைத்து நிற்பது சந்தேகமே. அவ்வளவு அருமையான, லவ்லியான பாடல்.

4. கேங் லீடர் (1991):


சிரஞ்சீவியின் திரைப்பயணத்தில் இந்த படம் ஒரு மைல் கல். இன்றைய தேதிவரை சிறந்த கமர்ஷியல் திரைப்படம் என்றே சொல்லுவார்கள் தெலுங்கு ரசிகர்கள். குறிப்பாக இந்த பாடல், இன்றைக்கும் பலருடைய Favorite, எனக்கும் தான்.

5. ரவுடி அல்லுடு (1991):


டிஸ்கோ சாந்தி நடனத்தை பற்றி நமக்கு தெரியும். அதுவும் சிரஞ்சீவி போன்ற ஒருவரோடு நடனமென்றால் சும்மாவா? அடித்து தூள் கிளப்புகிறார்கள் இருவரும். இந்த படம் ஒரு காமெடி + Action கலந்த நல்ல பொழுதுபோக்கு படமும் கூட.

6. கர்ரான மொகுடு (1992):


தலைவரின் 'மன்னன்' படத்தின் ரீமேக் இந்த படம். இந்த படம் தான் அமிதாப் பச்சனை விட சிரஞ்சீவியை 'அதிக சம்பளம் வாங்கும் நடிகர்' என்று பெயரை பெற்று தந்தது. தெலுங்கு திரையுலகில் முதன்முதலில் 10 கோடி வியாபாரம் செய்த படம் இது தான். அதே போல டிஸ்கோ சாந்தி மற்றும் சிரஞ்சீவியின் நடனத்தில் வெளிவந்த இந்த பாடலில் இருவருமே பட்டையை கிளப்பியிருக்கிறார்கள். எனக்கு மட்டுமல்ல பலருக்கும் இது ஆல் டைம் Favorite.

7. சூடாலனி உந்தி (1998):


மணி ஷர்மாவின் இசையில் வந்த பாடல், சம்திங் ஸ்பெஷல். இதுவும் இண்டஸ்ட்ரியல் ஹிட் திரைப்படம். குறிப்பாக இந்த பாடல், சிரஞ்சீவியின் நடனத்திற்காகவும், மணி ஷர்மாவின் இசைக்காகவும் எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்.

8. இந்திரா (2002):


பல தோல்வி படங்களால் துவண்டிருந்த சிரஞ்சீவியை, திரும்ப வெற்றிநாயகனாக்கிய 'கம் பேக்' படம். அதே போல நான் முதன்முதலில் சிரஞ்சீவியை திரையில் பார்த்த படமும் இதுவே. இதில் வரும் பாடல்கள் அனைத்துமே எனக்கு பிடித்தவை. ஆனால் மற்ற பாடல்களை விட இந்த பாடல் சற்று அதிகமாகவே பிடிக்கும். காரணம், மெகா ஸ்டாரின் ஸ்டைலிஷ் நடனம்.

9. ஷங்கர் தாதா எம்பிபிஎஸ் (2004):



கலைஞானியின் 'வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்' திரைப்படத்தின் தெலுங்கு வெர்ஷன் இந்த படம். 2004 இல் வெளிவந்த இத்திரைப்படம், அந்த வருடத்தின் 'ப்ளாக்பஸ்டர் படம்'. அதே போல தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் வெளிவந்த பாடல்கள் அனைத்துமே சூப்பர் ஹிட். ஓப்பனிங் பாடலான இதில் சிரஞ்சீவியின் நடனம் சிறப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமா என்ன?

10. கைதி No. 150 (2017):


மெகா ஸ்டாரின் 150 வது படம். கிட்டத்தட்ட 10 வருடங்கள் கழித்து நடித்த படம். இளைய தளபதியின் 'கத்தி' ரீமேக்கான இந்த படத்தின் பட்ஜெட் 50 கோடி. ஆனால் வசூலான தொகை 164 கோடி. இந்த பாடலில் சிரஞ்சீவியின் நடனத்தை பார்த்தபோது, எனக்கு ஒரு சந்தேகம். இவருக்கு வயசு 62 ஆ? இல்லை 26 ஆ? என.




Thanks and Regards,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக