ஞாயிறு, ஏப்ரல் 10, 2011

பாண்டியராஜனின் 'ஆண் பாவம்' - திரை விமர்சனம்

கடந்த வாரம் நான் மிஷ்கினின் 'அஞ்சாதே' படத்தை பார்த்து கொண்டிருந்தபோது குறிப்பாக ஒரு நடிகர் என்னை தன் கவனத்திற்கு வெகுவாக ஈர்த்தார். அவர் ஒரு நடிகர் என்பதை விட, ஒரு நல்ல குடும்பபாங்கான படங்களை நகைச்சுவையாக சொல்லியவர். இவரின் குருவை போலவே இவருக்கும் அதே திருட்டு முழி. என்னை கண்டுபுடிசிட்டிங்களா? yes. அவர் தான் நடிகர் &
இயக்குனர் பாண்டியராஜன். இவர் என் நினைவுக்கு வந்தபோதே அவரின் 'ஆண் பாவம்' படமும் நினைவுக்கு வந்தது. சட்டென ஒரு ஐடியா. நாமும் பழைய படங்களை விமர்சித்து ஒரு மாதத்துக்கு மேல ஆச்சி. இந்த படத்த விமர்சனம் பண்ணினால் என்ன? என்று. இதோ அந்த விமர்சனம்.
ஊருக்கு பெரிய மனிதரான V.K. ராமசாமிக்கு பாண்டியன், பாண்டியராஜன் இருவரும் மகன்கள். மூத்த மகன் பாண்டியனை பக்கத்துக்கு ஊருக்கு சென்று பெண் பார்த்துவிட்டு வரச்சொல்கிறார் VKR. அவரும் அந்த ஊருக்கு சென்று தவறுதலாக வேறொரு வீட்டில் இருக்கும் சீதாவை பார்த்துவிட்டு வருகிறார். பின்பு தான் தெரிகிறது அவர் பார்க்க வந்த பெண் இவரில்லை என்று. இருந்தாலும் சீதாவை இவர் காதலிக்க, பின்பு சீதாவும் இவரை காதலிக்கிறார். ஆனால் VKR பார்க்க சொன்ன பெண்ணான ரேவதியை பாண்டியன் நிராகரித்து விட, ரேவதி தற்கொலைக்கு முயன்று தன் பேசும் தன்மையை இழக்கிறார். அதே சமயம் சீதாவுக்கும் வேறொருவரோடு நிச்சயமாக கடைசியில் பாண்டியன், சீதா ஒன்று சேர்ந்தார்களா? ரேவதியின் நிலை என்ன? என்ற கேள்விகளுக்கு மிகவும் நகைச்சுவையாக சொல்லியிருக்கும் படம் இந்த 'ஆண் பாவம்'.
இந்த படத்திற்கு யார் ஹீரோ, யார் கதாநாயகி என்று சொல்வதை விட யார் இந்த படத்தில் சிறப்பாக காமெடி செய்திருக்கிறார்கள் என்று பார்த்தால், நம்ம VKR தான் முதலில் மனதில் நிற்கிறார். 'பொண்ணு கருப்பு தோலா, சிகப்பு தோலா' என்று பாண்டியன் கேட்கும்போது புலித்தோலு என்று நக்கலாக பதில் சொல்வது செம காமெடி. என்னை பொறுத்தவரை அய்யா VKR அவர்கள் தான் படத்தின் ஹீரோ. அடுத்து பாண்டியன். பஸ்ஸில், தான் பார்க்கப்போகும் பெண் எந்த நடிகை போல இருப்பாள்? என்று நினைத்துக்கொண்டே பக்கத்திலிருப்பவனின் கையை சிகரட்டால் சுட்டு விட்டு அடி வாங்குவது, தான் கட்டியிருக்கும் வாட்சை சீதாவிடம் தன் காதல் பரிசாக கொடுப்பது என்று ஒரு கிராமத்து இளைஞனாக அழகாக நடித்திருக்கிறார். VKR க்கு தம்பியாக ஜனகராஜ். தன் அண்ணனுக்கு போட்டியாக ஹோட்டல் வைத்து நஷ்டத்தை சம்பாதிப்பது செம ரகளையான சீன்கள். 'பூர்ணம்' விஸ்வநாதன் ரேவதியின் அப்பாவாக வந்து நிறைவாக நடித்திருக்கிறார்.
பாண்டியனின் ஜோடியாக சீதா. நல்ல தேர்வு. சீதாவிற்கு இது முதல் படம் என்று நினைக்கிறேன். ஒரு கிராமத்து பெண்ணிற்குரிய அழகுடன் நன்றாக நடித்திருக்கிறார். அடுத்து ரேவதி. ரேவதி என் Favorite நடிகை. இவருக்கு எந்த வேடம் கொடுத்தாலும் சரி, மிக சிறப்பாக நடிப்பார். இந்த படத்தில் அவருக்கு வாத்தியார் மகள் வேடம். முதல் கொஞ்சம் நேரம் ஒரு துள்ளலான பெண்ணாக காட்டி, பின்பு ஊமையாக நடிக்க வைத்தது கொஞ்சம் சோகம் தான். ஆனால் இந்த கதாபாத்திரத்திற்கு இவர் தான் சரியான தேர்வு. அடுத்து பாண்டியராஜனின் பாட்டியாக வரும் கொல்லங்குடி கருப்பாயி. இவரை ஒவ்வொரு காட்சியிலும் ஒரு நாட்டுப்புறப்பாட்டை பாட சொல்லியிருப்பார்கள் போலிருக்கிறது. ஏதாவது ஒரு பாட்டை பாடிக்கொண்டே இருக்கிறார். ஒரு காட்சியில் ரேவதிக்கு ஊசி போடும்போது தன் கைகளால் தன் முகத்தை மூடிக்கொண்டு விரலிடுக்கில் ஊசி போடுவதை பார்க்கும்போது, அந்த கால பாட்டிகளுக்கு ஊசி என்றாலே பயம் என்று அழகாகவும், சூசகமாகவும் சொல்லியிருக்கிறார் இயக்குனர்.
'இந்த கால இளைஞர் செய்யும் காதலுக்கு, இளையராஜா எந்தன் பாட்டிருக்கு' என்ற வரி இசைஞானிக்கு தான் அம்சமாக பொருந்தும். படத்தில் மொத்தம் நான்கு பாடல்கள். இதில் 'காதல் கசக்குதைய்யா' பாடல் இன்றைய தேதிவரை பிரபலம். ஒரு காதல் பின்னணி இசையை, சோக பின்னணி இசையாக மாற்றும் திறமை இசைஞானிக்கு தான் உண்டு. அதுமட்டுமல்ல, அவருக்குத்தான் அதை எப்படி, எந்த காட்சியில் வைக்கவேண்டும் என்று மிக சரியாக கணிப்பார். அடுத்து படத்தின் இயக்குனர் பாண்டியராஜன். படத்தில் இவரின் பங்கு என்னவென்று பார்த்தால், ஒரு குணசித்திர காதாபாத்திரம் என்று தான் சொல்வேன். ஆனால் ஒரு இயக்குனராக இவர் புகுந்து விளையாடியிருக்கிறார். இவரது குரு பாக்யராஜ் திரைக்கதையில் வல்லவர் என்றால், இவர் நக்கலான வசனங்கள் அமைப்பதில் வல்லவர் என்று சொல்லலாம். 'நீ எங்க அம்மாவை கட்டிக்கும்போது, நான் உங்க அம்மாவை கட்டிக்க கூடாதா?' போன்ற வசனங்கள் குபீர் சிரிப்பை வரவழைக்கும். எனக்கு இந்த படத்தில் மிகவும் பிடித்த காட்சி, ஜனகராஜின் மகனாக நடித்திருக்கும் தவக்களை குழாயடியில் ஒரு சிறுமியோடு தண்ணீர் குடத்தில் தலையை உள்ளே விட்டு 'ஹலோ ஆண்டாலு, சாப்பிட்டியா?' என்று ஆரம்பிக்கும் காட்சி, எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத சீன் அது.
இந்த படம் டிசம்பர் 7 1985 அன்று வெளியாகி பெரும் வெற்றிபெற்றது. குறிப்பாக சென்னை அண்ணா சாலை சாந்தி திரையரங்கில் 100 நாட்களை தாண்டி வெற்றிகரமாக ஓடியது. சமிபத்தில் கூட நடிகர் பாண்டியராஜன் இந்த படத்துக்கான 25 வது ஆண்டு விழாவை கொண்டாடினார். எனக்கு ஒரு சின்ன வருத்தம். இது போல Family Oriented with Comedy படங்கள் இப்போது சுத்தமாக வருவதே இல்லை. எல்லா ஹீரோக்களும் தியேட்டர் வாசலின் போஸ்டர்களில் கையில் ஏதாவது ஆயுதத்தை வைத்துக்கொண்டு 'உள்ள வந்தா, கொன்னுடுவேன்' என்ற ரீதியில் மக்களை மிரட்டுவதை விடுத்து, கொஞ்சம் இந்த மாதிரி கதைகளில் கூட நடிக்க முயற்சி செய்யலாமே?




(தயவுசெய்து படித்ததோடு மட்டுமல்லாமல் வாக்களித்து, பின்னூட்டமிட்டு என்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தவும்).

15 கருத்துகள்:

  1. I too like this movie. I think i have seen this movie more than 20 times. :)

    பதிலளிநீக்கு
  2. super review thala.. morning vanthathum padikka mind freshaa irukku..

    பதிலளிநீக்கு
  3. ஆண்பாவம் 25 வருடங்களுக்கு முந்தைய படம்..எனவே இதில் கதையின் முடிவை சொல்லாமல் விட்டிருப்பதால் என்ன பயன்..?
    மற்றபடி அதே போன்ற படங்கள் வரவேண்டும் என்று எதிர்பார்ப்பதும் அர்த்தமற்றது..
    "என் அம்மாவை நீ கட்டி கொண்டிருக்கும்போது, உன் அம்மாவை நான் கட்டினால் என்ன தப்பு? " என்று கேட்பது உங்களுக்கு வேண்டுமானால் குபீர் சிரிப்பை வரவழைக்கலாம்..அதில் உள்ள ஆபாசம் வாந்தி எடுக்க வைக்கிறது.. வெறும் குப்பைகள்தான் எல்லா காலங்களிலும் திரைப்படங்களாக வருகிறது..

    பதிலளிநீக்கு
  4. Jegan சொன்னது…
    I too like this movie. I think i have seen this movie more than 20 times. :)

    Thanks for your Comment Mr. Jegan.

    பதிலளிநீக்கு
  5. //சி.பி.செந்தில்குமார் சொன்னது…
    ஹா ஹா செம..//

    அண்ணன் சி.பி.செந்தில்குமாரின் வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  6. //அபிமன்யு சொன்னது…
    super review thala.. morning vanthathum padikka mind freshaa irukku..//

    நண்பர் அசோக்மூர்த்தியின் வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  7. //ராஜகோபால் சொன்னது…
    kalakkal nanpaa i like it this film one of my best film.//

    Thanks for your Comment Mr. Rajagopal.

    பதிலளிநீக்கு
  8. //மர்மயோகி சொன்னது…
    ஆண்பாவம் 25 வருடங்களுக்கு முந்தைய படம்..எனவே இதில் கதையின் முடிவை சொல்லாமல் விட்டிருப்பதால் என்ன பயன்..?
    மற்றபடி அதே போன்ற படங்கள் வரவேண்டும் என்று எதிர்பார்ப்பதும் அர்த்தமற்றது..
    "என் அம்மாவை நீ கட்டி கொண்டிருக்கும்போது, உன் அம்மாவை நான் கட்டினால் என்ன தப்பு? " என்று கேட்பது உங்களுக்கு வேண்டுமானால் குபீர் சிரிப்பை வரவழைக்கலாம்..அதில் உள்ள ஆபாசம் வாந்தி எடுக்க வைக்கிறது.. வெறும் குப்பைகள்தான் எல்லா காலங்களிலும் திரைப்படங்களாக வருகிறது..//

    நண்பர் மர்மயோகிக்கு என்ன ஆச்சி? நான் முன்பே உங்களுக்கு சொல்லியிருக்கிறேன். எதையும் தவறான கண்ணோட்டத்தில் பார்க்காதிர்கள் என்று. சினிமா என்பது ஒரு ஊடகம். அதை பற்றி எழுதுவது ஒன்றும் தப்பில்லையே?

    பதிலளிநீக்கு
  9. //Arun J Prakash சொன்னது…
    Good movie, Nice review.//

    Thanks for your Comment Mr. Arun J Prakash.

    பதிலளிநீக்கு
  10. பாண்டியராஜனின் கன்னிராசி படம் பார்த்தீர்களா?அது மிகவும் அற்புதமான திரைப் படம்.அதப் பற்றியும் எழுதுங்களேன்.

    பதிலளிநீக்கு
  11. நல்ல விமர்சனம்.......எப்போதாவது வாய்ப்பு கிடைக்கும்போது பாண்டியராஜனின் ' மனைவி ரெடி ' என்ற படத்தை பற்றியும் எழுதவும்.
    மனிதர் திரைக்கதையில் போட்டுத்தாக்கி இருப்பார்...

    பதிலளிநீக்கு