ஞாயிறு, மே 01, 2011

திகிலூட்டும் Necrophilia மேனியா - ஒரு திகிலான அலசல்

Necrophilia பற்றிய பதிவு அவசியமா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் என் பதிவுலக நண்பர் பிரபாகரனுக்கு இதை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசையால் இது பற்றி எழுதுங்கள் என்று கேட்டிருந்தார். சரி, சீரியல் கொலைகாரர்களை பற்றி எழுதுகிறோம், இதை பற்றியும் எழுதலாமே என்று எனக்கு கிடைத்த தகவல்களோடு இந்த பதிவை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

Necrophilia என்றால் இறந்தவர்களோடு (பிணத்தோடு) காதல் என்று பொருள். இந்த Necrophilia என்ற வார்த்தை கிரேக்க மொழியிலிருந்து வந்தது. இறந்தவருடன் காதலா? என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் இந்த காதலும் ஒரு விதமான பர்வேர்ஷன் தான் என்கிறார்கள் மனோதத்துவ நிபுணர்கள். அதாவது ஒருவர் தன் ஆளுமைக்கு உட்பட்டு நடக்க வேண்டும் என்பது ஒரு சாதாரண விஷயம் தான். ஆனால் அந்த ஆளுமை உடலுறவிலும் இருக்க வேண்டும் என்று நினைப்பது தான் இந்த Necrophilia. இப்படி நினைப்பவர்கள் குருரமான செக்ஸ் கற்பனைகள் கொண்டவர்கள், அதிதமான செக்ஸ் ஆசைகள் உள்ளவர்கள், இயற்கைக்கு மாறாக உடலுறவில் நடந்து கொள்வார்கள். முக்கியமாக சீரியல் கொலைகாரர்கள் இந்த Necrophilia பர்வேர்ஷன்களால் பாதிக்கப்பட்டவர்களாவர்.

இந்த பர்வேர்ஷன் எப்போது துவங்கியது என்று பார்த்தால், பண்டைய எகிப்திய காலத்திலேயே நடந்ததாக வரலாறு சொல்கிறது. பண்டைய எகிப்திய பெண்கள் இறந்தால், பல நாட்களுக்கு அவர்களுடைய உடல்களை அரண்மனையிலேயே பாதுகாப்பார்கள். மம்மி (Mummification) தயாரிப்பதற்காக பூசாரிகளிடம் உடலை அனுப்பினால், யாரேனும் மகாராணியின் உடலோடு செக்ஸ் (Necrophilia) வைத்துக்கொள்வார்களோ என்ற பயம் தான் காரணம். ஆனால் இந்த குருரமான Necrophilia என்னும் 'பர்வேர்ஷன்' இன்றும் தொடர்கிறது என்பது உண்மை.


இந்த 'மேனியா' மனிதர்களன்றி விலங்குகளுக்கு சாத்தியப்படுமா என்று கேட்டால், சாத்தியம் தான். ஆனால் தன் பாட்னர் ஏதோ அதிகமான மயக்க நிலையில் இருக்கிறதென்று விலங்குகள் நினைத்துக்கொள்ளும். மற்றபடி விலங்குகளுக்கு மனிதனை போல குருர மனப்பான்மை எல்லாம் கிடையாது. சீரியல் கொலைகாரர்களான சிக்காடிலோ, டாமர், டேட் பண்டி போன்றவர்கள் கொலை செய்து விட்டு உடலுறவு கொள்ளும்போது ஒரு விதமான 'பரவசத்தை' அடைந்ததாக சொன்னார்கள்.


இந்த Necrophilia பர்வேர்ஷனுக்கு உலகில் உள்ள முக்கிய நாடுகளான இந்தியா, லண்டன், அமெரிக்கா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் தடை சட்டங்கள் உள்ளது. பொதுவாகவே புத்தியுள்ள யாரும் இந்த காரியத்தை செய்ய தயங்குவார்கள். ஆனால் 'நான் அடையவேண்டிய உடல், இறந்து உயிரற்ற பிணமாக இருந்தாலும் அதை அடைந்தே திருவது' என்ற மனோபாவம் அதை செய்ய தூண்டுகிறது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு சீனாவில் ஒரு 13 வயது சிறுவன், மூன்று வயது பெண் குழந்தையை கொன்று பிறகு அதனோடு உடலுறவு கொண்டிருக்கிறான். இது தான் Necrophilia கொலை.


இதற்கு தீர்வு என்னவென்று பார்த்தால், மனோதத்துவமுறை தான் சிறந்தது. பாதிக்கப்பட்டவரின் மனநிலையை உணர்ந்து அவருக்கு கவுன்சிலிங் கொடுத்து, தியானம் போன்றவற்றை செய்ய சொல்லி சமூகத்திற்கும் அவர்களின் மனதிற்கும் உள்ள இடைவெளியை குறைத்தால் குணமடைவார்கள். அதுமட்டுமல்ல, செக்ஸ் மீது கொண்ட அதீத கற்பனைகளை அவர்களின் கட்டுக்குள் கொண்டுவர வைக்கவேண்டும்.இது தான் ஒரே தீர்வு.


(தயவுசெய்து படித்ததோடு மட்டுமல்லாமல் வாக்களித்து, பின்னூட்டமிட்டுஎன்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த தளம் உங்களுக்குபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தவும்).



9 கருத்துகள்:

  1. கொஞ்சம் இருங்க பிரசாந்த் படிச்சிட்டு வரேன்!

    பதிலளிநீக்கு
  2. நண்பா உங்கள் விமர்சனமும் அருமை! Necrophilia கு நீங்கள் கொடுத்த விளக்கமும் அருமை! அருமையான தகவல் தொகுப்பு! வாழ்த்துக்கள் நண்பா!!

    பதிலளிநீக்கு
  3. என்னுடைய வாசகர் விருப்பத்தை மதித்து இந்த இடுகையை எழுதியதற்கு மிக்க நன்றி... ஆனால் எனது பெயரை இதுபோல வெளிப்படையாக போட்டால் என்னை துப்புகிற கும்பல் ஒன்று உங்களையும் துப்பும்... அதுக்கு மேல உங்க இஷ்டம் :)))

    பதிலளிநீக்கு
  4. பகிர்வுக்கு நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
  5. நல்லா விளக்கி இருக்கீங்க.. டைட்டில்ல 18 + போட்டிருக்கலாம்

    பதிலளிநீக்கு
  6. இப்படியும் சில மனிதர்கள் இருக்கிறார்களா? பயங்கரம்

    பதிலளிநீக்கு
  7. நண்பரே இந்த விட்ஜெட்டை தங்கள் தளத்தில் இணைத்து கொள்ளுங்கள்
    திருட்டை தடுக்க 95% உத்திரவாதம்...!

    பதிலளிநீக்கு
  8. பெயரில்லா11 மே, 2011 00:37

    it's madan writing .don't copy and paste. or write his name in the bottom at least

    பதிலளிநீக்கு
  9. Informative article. It would have been much more interesting and informative, if u had illustrated some more similiar incident across the world.
    B.Meenakshi Sundaram.

    பதிலளிநீக்கு