கற்க கற்க கள்ளும் கற்க...

ஞாயிறு, மே 01, 2011

வாழ்த்துக்கள் அஜித் - ஒரு தல ரசிகனின் அலசல்


முதலில் என் பிறந்த நாள் வாழ்த்துக்களை இந்த பதிவின் மூலமாக எங்கள் 'தல' அஜித்குமாருக்கு தெரிவித்துக்கொள்கிறேன். நான் இந்த மே 1 அன்று 'தல' அஜித்தை பற்றி ஒரு வாழ்த்து பதிவு போடலாம் என்றிருந்தேன். ஆனால் நேற்று தடாலடியாக 'என் ரசிகர் மன்றங்களை கலைக்கிறேன்' என்று அதிரடியாக அறிவித்துள்ளார் அஜித். தமிழ் சினிமா
துறையில் எத்தனையோ ஹீரோக்கள் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாமே 'ஸ்டார்ட், கேமரா, ஆக்க்ஷன்' என்ற வார்த்தைகளிலிருந்து 'கட்' என்ற வார்த்தை வரைக்கும் தான் அவர்கள் எல்லோருமே ஹீரோவாக வலம் வருகிறார்கள். ஆனால் கடந்த இருபது வருடமாக ஒரே ஒருவர் மட்டும் சினிமாவிலும் சரி, நிஜ வாழ்விலும் சரி உண்மையான ஒரு ஹீரோவாக வலம் வருகிறார். அது தான் எங்க ஒரே 'தல' அஜித்.

நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறபோது 'காதல் மன்னன்' என்ற ஒரு படம் பார்க்க நேர்ந்தது. அந்த படத்தின் ஆரம்பத்தில் அஜித் ஒரு டயலாக் சொல்வார், 'எனக்கு ஜெயிக்கறது தான் பிடிக்கும்'. அதே போல அந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் கதாநாயகியிடம் ஒரு டயலாக் சொல்வார், 'துணிஞ்சி வா, தூக்கிட்டு போறேன்' என்று. அந்த படத்திலிருந்து தான் அஜித்தை நான் கவனிக்க ஆரம்பித்தேன். ஒரு காதலையும், லட்சியத்தையும் சற்று ஆண்மையோடு தன் திரைப்படத்தில் சொன்ன அந்த ஹீரோ, இன்று வரை அந்த தைரியத்தை கொஞ்சம் கூட குறையாமல் வைத்திருப்பது உண்மையிலேயே ஆச்சிரியம் தான். 'சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு சாதனம், அதில் நடிக்கும் நான் ஒரு சாதாரண நடிகன், எனக்காக நீங்கள் எதற்கு கொடி பிடித்து கோஷம் போடவேண்டும்?' என்பது அஜித்தின் கேள்வி. எனக்கே பல சமயங்களில் 'நடிகர்களுக்கு ரசிகர் மன்றம் தேவை தானா? ரசிகர் மன்றத்தில் இல்லாதவர்கள், ரசிகர்களே இல்லையா?' என்ற ஒரு கேள்வி என் மனதில் எப்போதும் இருக்கும். இன்றைக்கு என் கேள்விக்கான பதிலை அஜித்தின் அறிக்கையில் படித்து தெரிந்துகொண்டேன்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் சினிமா நடிகர்கள், அரசியல் கட்சிகளுக்கு எப்படியெல்லாம் பயன்பட்டார்கள் என்பது நாடறிந்த உண்மை. ஒரு சிரிப்பு நடிகர் மற்றொரு முன்னால் நடிகர் கம் அரசியல் கட்சி தலைவரை கேவலமாக பேசினார், இன்னொரு இளம் நடிகர் நாகபட்டினத்தில் மீனவர்களுக்காக போராட்டம் நடத்தினார். இவர்கள் அனைவருமே சொந்த லாபத்திற்காக இதெல்லாம் செய்தார்களே தவிர, மக்களுக்காகவோ, தன்னை நம்பியிருக்கும் ரசிக கண்மணிகளுக்காகவோ ஒன்றும் செய்யவுமில்லை, செய்யப்போவதுமில்லை. ஆனால், 'இது எதுவும் நான் செய்யப்போவது இல்லை, நீ உன் வேலையை பார். நான் என் வேலையை பார்க்கிறேன்' என்று சொல்கிறார் அஜித்குமார். தன் 50 வது படம் வெளிவரவிருக்கும் வேளையில், இப்படி மன்றத்தை கலைக்கலாமா? என்று பலர் கேள்வி எழுப்புகிறார்கள். அவர்களுக்கெல்லாம் அஜித் ரசிகனாக நான் ஒன்றை சொல்லிக்கொள்கிறேன். அஜித்தின் ரசிகர்கள் பலர் அஜித்தின் படங்களை பார்த்து ரசிகர்கள் ஆனதை விட, அவரின் நல்ல குணம், தன்னம்பிக்கை, தைரியம் ஆகியவற்றை பார்த்து தான் ரசிகர்களாக இன்னும் நீடிக்கிறார்கள், இன்னும் தொடர்ந்து நீடிப்பார்கள். இது என்னை பொறுத்தவரை நிதர்சனம்.

சினிமாவில் இருக்கும் நடிகர்கள் பலர் 'மக்களுக்காக சேவை செய்யவே அரசியலுக்கு வருகிறேன்' என்று சொல்வதை நாம் பார்க்கிறோம். இப்படி சொல்லும் இவர்கள், சில விஷயங்களை கவனிக்கவில்லை. அன்னை தெரசா சமுக சேவை செய்வதற்கு எந்த சினிமாவில் நடித்தார்? ஊழலுக்காக குரல் கொடுத்து உண்ணாவிரதம் இருந்த அன்னா ஹசாரே எத்தனை சினிமாக்களில் பஞ்ச் வசனங்கள் பேசினார்? சமூகசேவை செய்வதற்கு சினிமாவிலோ அல்லது அரசியலிலோ இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை, நல்ல மனம் இருந்தாலே போதும் என்பது தான் அஜித்தின் கருத்து. இந்த கருத்து அஜித் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, மற்ற நடிகர்களுக்காக இன்றும் கொடி பிடித்து கோஷம் போடும் அவர்களின் முட்டாள் ரசிகர்களுக்கும் சேர்த்து தான் என்பது என் தாழ்மையான கருத்தும் கூட. இன்றைய தென்னிந்தியாவில், குறிப்பாக ஆந்திரா மற்றும் தமிழகத்தில் தான் சினிமா நடிகர்களுக்கு ரசிகர் மன்றங்கள் அதிகமாக இருக்கிறது. பணம் கொடுத்து படம் பார்ப்பது நாம். அந்த படத்தில் நன்றாக நடித்தவர்களை பாராட்டலாம். ஆனால் 'நாட்டின் அடுத்த முதல்வராக நீங்கள் தான் வரவேண்டும்' என்று அந்த படத்தில் நடித்த நடிகரை அழைப்பது எந்த வகையில் நியாயம்?

அஜித் என்றுமே தன் ரசிகர்களை தன் சுயலாபத்திற்காக பயன்படுத்தியதில்லை. இன்றைக்கும் 'நான் போன ஜென்மத்தில் பண்ணிய புண்ணியம் தான் என் ரசிகர்கள்' என்று சற்று பெருமையாகவே சொல்லுவார் அஜித். இப்போது கூட அஜித் 'மன்றத்தில் கலைக்கிறேன்' என்று சொன்னதால், எனக்கு நீ ரசிகனாக இருக்காதே என்று அவர் சொல்லவில்லை. முதலில் நீ உன்னையும், உன் குடும்பத்தையும், நீ வாழும் சமுகத்தையும் கவனி. அதற்கு பிறகு தான் மற்றவை' என்று சொல்கிறார். மாறிவரும் இன்றைய காலகட்டத்தில் ரசிகர் மன்றம் என்பது ஒரு நடிகனுக்கு தேவையற்ற ஒன்று. அதனால் சினிமாவை சினிமாவாக பாருங்கள் என்பது தான் அஜித்தின் கருத்து. உண்மையில் இப்படி ஒரு முடிவு எடுப்பதற்கு மகா துணிச்சல் வேண்டும். அந்த துணிச்சல் அஜித்துக்கு மட்டுமே பொருந்தும்.

கடைசியாக அஜித் அவர்களுக்கு, நீங்கள் ரசிகர் மன்றத்தை கலைத்தாலும், கலைக்காவிட்டாலும் நாங்கள் என்றுமே உங்கள் ரசிகர்கள் தான். தமிழ் சினிமாவில் முதுகெலும்பு இருந்தும் பலருக்கு வளைந்து கொடுக்கும் நடிகர்களுக்கு மத்தியில், முதுகில் பல Operation செய்தும் இன்றும் யாருக்குமே வளைந்து கொடுக்காத உங்களுக்கு எங்கள் சார்பில் ஒரு சல்யுட்.
Hats off Thala. I Really Admire you Ji...
(தயவுசெய்து படித்ததோடு மட்டுமல்லாமல் வாக்களித்து, பின்னூட்டமிட்டுஎன்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த தளம் உங்களுக்குபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தவும்).

Post Comment

10 comments:

Philosophy Prabhakaran சொன்னது…

தல அஜித்துக்கு எனது வாழ்த்துக்கள்...

Philosophy Prabhakaran சொன்னது…

நீங்க முந்திட்டீங்களே...

Philosophy Prabhakaran சொன்னது…

என்னுடைய இடுகை இன்னும் சில நிமிடங்களில்...

நா.மணிவண்ணன் சொன்னது…

பகிர்வுக்கு மிக்க நன்றி நண்பா .உண்மைலே தல ரசிகனாக இருப்பதற்கு நான் பெருமைப்படுகிறேன்

SSS சொன்னது…

U r Great

Arun J Prakash சொன்னது…

Good Post,
Thala Pola Varuma....

அஹோரி சொன்னது…

//தமிழ் சினிமாவில் முதுகெலும்பு இருந்தும் பலருக்கு வளைந்து கொடுக்கும் நடிகர்களுக்கு மத்தியில், முதுகில் பல Operation செய்தும் இன்றும் யாருக்குமே வளைந்து கொடுக்காத உங்களுக்கு எங்கள் சார்பில் ஒரு சல்யுட்.//


அட .. அருமையான வரிகள்.

vivek சொன்னது…

VIVEK


thala ...thalathan.

DEAR FANS ...! PLS UNDERSTAND HIM & OBEY HIM.

"ராஜா" சொன்னது…

// நான் போன ஜென்மத்தில் பண்ணிய புண்ணியம் தான் என் ரசிகர்கள்'
இதுதான் தல

சினிமா நடிகனின் ரசிகன் என்று சொல்வது சிறுபிள்ளைதானம்தான் ஆனால் அது மற்ற நடிகர்களுக்கு... நாங்கள் பெருமையாய் சொல்லிக்கொள்ளுவோம் இந்த மனிதனின் ரசிகர்கள் என்று ..

பிறந்த நாள் வாழ்துக்கள் தல ....

உங்கள் பதிவின் ஒவ்வொரு வரிகளும் சத்தியமான உண்மை ...

samy சொன்னது…

அஜித் அவர்களுக்கு தல என்ற சொல் மிகவும் பொருந்தும் .அவருடைய வெளிப்படயான் பேச்சு தல என்ற சொல்லுக்கு மிக பொருத்தமாக அமைந்துள்ளது.

ஆனால் அஜித் அவர்களின் ரசிகர்கள் குறிப்பாக மதுரை,விருதுநகர்,போன்ற தென் மாவட்ட பக்கம் வந்து பாருங்கள் அங்கு அஜித்தை ஒரு குறிப்பிட்ட இனத்தவர் போல சித்தரித்து அந்த இனத்தின் பெரும்பாலானோர் அஜித் ரசிகர்களாக உள்ளனர் . உண்மையில் அவர்களில் பெரும்பாலானோர் அந்த இனவெறெய்யின் காரணமாக தன்னை அஜித் ரசிகன் என மார் தட்டி கொள்கின்றனர் அவர்களிடம் அஜித் மேல் உள்ள அன்பை விட இன வெறி தான் மேலோங்கி உள்ளன

இவ்வளவு நல்ல நடிகருக்கு இப்படியும் சில போசமான ரசிகர்கள் இருப்பதை பார்த்தால் .சற்று முகம் சுளிக்கும் படி தான் உள்ளது .

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

கருத்துரையிடுக