
எடுத்து எழுதிவிடுவேன். ஆனால் என்னவோ தெரியவில்லை, இந்த படத்திற்கு மட்டும் எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் ரொம்ப நாளாக யோசித்துக்கொண்டிருந்தேன். சரி, இப்படியே யோசித்து கொண்டிருந்தால் எப்போது பதிவு போடுவது? அதனால் தான் ஒரு வழியாக இந்த படத்திற்கு விமர்சனம் எழுதுகிறேன். இனி இந்த 'சலங்கை ஒலியின்' கதையை கேட்க ஆரம்பிப்போமா?



இந்த படத்தில் கதை கமல், ஜெயப்ரதா பற்றியே சுழலுவதால் மற்ற நடிகர், நடிகைகளின் பங்கு கொஞ்சமே என்றாலும் அனைவரும் சிறப்பாக செய்திருக்கிறார்கள். கமலுக்கு நண்பனாக வரும் சரத்பாபு அருமையாக நடித்துள்ளார். அதேபோல ஜெயப்ரதாவின் மகளாக நடித்துள்ள ஷைலஜாவின் கதாபாத்திரமும் அருமை. படத்தின் வசனங்கள் ஒவ்வொன்றும் அருமை. எந்த ஒரு இடத்திலும் கொச்சையான வார்த்தைகள் இல்லாமல் எடுத்தவிதம் சூப்பர்.

கமல், தான் கதக் நடனத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை மொழி தெரியாத நாட்டிய பெண்ணிடம் அபிநயத்தில் சொல்லி புரியவைப்பது.
சினிமா நடன இயக்குனர் நாட்டியத்தை கேவலப்படுத்துவதை கண்டு மனம் பொறுக்காமல் கோபத்தில் நடுரோட்டில் ஆக்ரோஷமாக நடனமாடுவது.
ஒரு பெண்ணின் நடன அரங்கேற்ற நிகழ்ச்சி நடைபெறும் மண்டபத்தின் சமையற்கட்டில் நடனமாடி காட்டுவது.
ஒரு பெண்ணின் நடன அரங்கேற்ற நிகழ்ச்சி நடைபெறும் மண்டபத்தின் சமையற்கட்டில் நடனமாடி காட்டுவது.
அகில இந்தியா நடன போட்டியின் அழைப்பிதழில் தன் பெயர் இருப்பதை பார்த்து ஜெயப்ரதாவின் கரங்களை பற்றி ஆனந்த கண்ணீர் வடிப்பது.
சாகும் தருவாயில் இருக்கும் தன் அம்மாவிற்காக நாட்டிய விழாவில் ஆடப்போகும் நாட்டியத்தை தன் அம்மாவிடம் அழுதுகொண்டே ஆடிக்காட்டுவது.
கமல் ஜெயப்ரதாவிடம் தன் காதலை வெளிப்படுத்தும் காட்சி, அதற்கு ஜெயப்ரதா React ஆகும் காட்சிகள்.
ஜெயப்ரதாவிற்கு ஏற்கனவே வேறொருவருடன் திருமணமானதை பற்றி தெரிந்தவுடன் தன் காதலை தியாகம் செய்து, பிரிந்து போன கணவன் மனைவியை சேர்த்து வைப்பது.
படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் கமல் தனக்கு கிடைத்த கைதட்டல்களை பார்த்து ஆனந்த கண்ணிர் வடிப்பது, தனக்கு அங்கீகாரம் கிடைத்த சந்தோஷத்திலேயே உயிரை விடுவது.

இந்த படம் 3 ஜூன் 1983 அன்று தெலுங்கில் 'சாகர் சங்கமம்' என்ற பெயரில் வெளிவந்து, பின்பு 31 டிசம்பர் 1983 அன்று 'சலங்கை ஒலி' என்ற பெயரில் தமிழில் டப் செய்யப்பட்டது. படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு மட்டுமில்லாமல் பல தரப்பிடமிருந்து பாராட்டுதல்களையும் பெற்று தந்தது. இந்த படம், சிறந்த இசை - இளையராஜா, சிறந்த பின்னணி பாடகர் - S.P. பாலசுப்ரமணியம், சிறந்த திரைப்படம் என்று மூன்று தேசிய விருதுகளை இந்த படம் தட்டி சென்றது.
(தயவுசெய்து படித்ததோடு மட்டுமல்லாமல் வாக்களித்து, பின்னூட்டமிட்டுஎன்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த தளம் உங்களுக்குபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தவும்).
என்றும் அன்புடன்
ஆழமான அலசல் நண்பரே .. இந்த படத்தின் மேலுள்ள தாக்கத்தை அதிகப்படுத்தியது.நன்றி.
பதிலளிநீக்குகமல் ரசிகர் போல.. நல்லாருக்கு விமர்சனம். இந்தப்படத்தை ரசிக்காதவர் யாரும் இல்லை
பதிலளிநீக்குநல்ல விமர்சனம்.
பதிலளிநீக்குkamal enral- natippu, ilayaraja enral- isai ithai thirumpa nirropitha padam .superrrrrrrrrrrrrr
பதிலளிநீக்குதெலுங்கிலிருந்து தமிழுக்கு டப் பண்ணப்பட்டதா?? இருமொழிகளிலும் இரு ஷாட் எடுக்கப்பட்டதா???
பதிலளிநீக்குஅருமையான அலசல்...
பதிலளிநீக்கு