ஒரு சம்பவம்:
அது ஒரு காலை நேரம். நான் அப்போது கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தேன். அப்போது நான் ஜிம்மிற்கு போவது வழக்கம். வழக்கம் போல அன்று ஜிம்மிலிருந்து திரும்பி வீடு வந்த சேர்ந்த போது, எனக்கு அந்த துக்க செய்தி காத்திருந்தது. என் உறவினர் ஒருவர் இறந்து
விட்டார் என்று. அவர் எனக்கு அண்ணன் முறை. கொஞ்சம் கலங்கிப் போனேன். 'சரி, நடந்தது நடந்து விட்டது. இனி ஆகவேண்டியதை பார்ப்போம்' என்று மனதை திடப்படுத்திக் கொண்டு துக்க வீட்டிற்கு கிளம்பினேன். வீட்டிற்குள் சென்றால் பெண்கள் அனைவரும் அழுது என்னையும் அழவைத்து விடுவார்களோ என்ற எண்ணத்தில் போர்டிகோவில் போடப்பட்டிருந்த சேரில் அமர்ந்து கொண்டேன். என் எதிரில் யாரோ ஒருவர் தலை சாய்ந்தபடி சேரில் அமர்ந்து கொண்டே தூங்கிக்கொண்டிருந்தார். ஒருமுறை கண்ணை மூடி திறந்து பார்த்தேன். Yes. He is Ajith Kumar.
விட்டார் என்று. அவர் எனக்கு அண்ணன் முறை. கொஞ்சம் கலங்கிப் போனேன். 'சரி, நடந்தது நடந்து விட்டது. இனி ஆகவேண்டியதை பார்ப்போம்' என்று மனதை திடப்படுத்திக் கொண்டு துக்க வீட்டிற்கு கிளம்பினேன். வீட்டிற்குள் சென்றால் பெண்கள் அனைவரும் அழுது என்னையும் அழவைத்து விடுவார்களோ என்ற எண்ணத்தில் போர்டிகோவில் போடப்பட்டிருந்த சேரில் அமர்ந்து கொண்டேன். என் எதிரில் யாரோ ஒருவர் தலை சாய்ந்தபடி சேரில் அமர்ந்து கொண்டே தூங்கிக்கொண்டிருந்தார். ஒருமுறை கண்ணை மூடி திறந்து பார்த்தேன். Yes. He is Ajith Kumar.
ஒரு சாதாரண பிளாஸ்டிக் சேர், அதுவும் வெயில், மழை என்று பட்டு பூத்து போன சேர். அதில் அமர்ந்து கொண்டிருந்தார். எனக்கு ஒரு வினோத பழக்கம் உள்ளது. அதாவது, என் எதிரில் நடிகர்கள் யாராவது கடந்து போனால், அவரிடம் கை குலுக்குவதோ அல்லது ஆட்டோகிராப் வாங்கவோ செல்ல மாட்டேன். அதற்க்கு காரணம், அவர்களின் தனிமையை கெடுக்க எனக்கு விருப்பமில்லாதது தான். அதனால் அஜித்தை நான் தூரத்திலிருந்தே கவனிக்க ஆரம்பித்தேன். நான் இறுதிச் சடங்கு பொருட்கள் வாங்க போய்விட்டு திரும்பி வந்து சேர்ந்தபோது, இறந்தவரின் பூத உடல் வீட்டிற்க்கு வந்து சேர்ந்தது. உடல் இருக்கும் பெட்டியை வண்டியிலிருந்து இறக்கி வீட்டை நோக்கி நடக்கையில் என் தோளோடு ஒரு தோள் எனக்கு தோள் கொடுத்தது. ஆம். நானும் அஜித்தும், இன்னும் சிலரும் அந்த பெட்டியை தூக்கி கொண்டு போய் வீட்டில் கிடத்தினோம். வீட்டு காம்பௌண்டை சுற்றி ஒரே ரசிகர்கள் கூட்டம். யார் இழவுக்கு வந்திருக்கிறார், யார் அஜித்தை பார்க்க வந்திருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. நிறைய ரசிகர்கள் அஜித்தை பார்த்தார்கள். கை குலுக்கினார்கள். சிலர் குடும்பத்தோடும் வந்தார்கள். அப்படி வந்த அனைவரையும் 'உங்க அன்புக்கு ரொம்ப நன்றி. தயவு செஞ்சி கூட்டம் போடாதிங்க' என்று கேட்டுக் கொண்டு அவர்களை அங்கிருந்து அடிக்கடி 'அன்போடு' அப்புறப்படுத்திக் கொண்டிருந்தார். உடலை வீட்டிலிருந்து வெளியே எடுத்து வந்தார்கள். போர்டிகோவில் கிழே கிடந்த பிளாஸ்டிக் டீ கிளாஸ்களை நாங்கள் எடுத்துக் சுத்தம் செய்து கொண்டிருந்தபோது, அவரும் அந்த கிளாஸ்களை எடுத்து அந்த இடம் சுத்தம் ஆவதற்கு உதவினார்.
செய்ய வேண்டிய சில காரியங்களை முடித்துக் கொண்டு, உடலை அமரர் ஊர்தியில் ஏற்றிக் கொண்டு மயானத்திற்கு கிளம்பினோம். நாங்கள் காரிலிருந்து இறங்கும் முன்பே எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் இறங்கினார் அஜித். அந்த மயானத்தை சுற்றி ஒரு குடிசை பகுதி இருந்தது. 'அஜித் வந்திருக்கிறார்' என்று செய்தி கேட்டு கூட்டம் கூடி விட்டது. மின்சார சுடுகாட்டில் நாங்கள் இறுதிச் சடங்குகள் செய்து வாய்க்கரிசி போடும்போது யார் யாரோ வந்து இறந்தவருக்கு வாய்க்கரிசி போட்டார்கள். வாய்க்கரிசி போட்ட 'அந்த' அனைவரும் அஜித்தின் ரசிகர்கள். கிட்டத்தட்ட ஒரு நாள் முழுக்க இறந்த என் உறவினர் வீட்டிற்கு இருந்திருக்கிறார் அஜித். என்னை பொறுத்தவரை He is a very Good Human being.
ஒரு விளக்கம்:
அடிக்கடி என் 'விஜய் ரசிகர்' நண்பன் கேட்பான், 'நீங்கெல்லாம் எப்படி டா அஜித்துக்கு ரசிகனா இருக்கீங்க? உங்க தலக்கு சரியா டான்ஸ் ஆட தெரியாது, பெரிய வசனமெல்லாம் பேசத் தெரியாது. படத்தை பத்தி விளம்பரமும் பண்ண மாட்டாரு. அவ்வளவு ஏன், டிவி'ல பேட்டி கூட கொடுக்க மாட்டாரு. அப்பறம் எப்படி?' என்று. நான் ரொம்ப சிம்பிளாக 'சரி டா. நான் உன்கிட்ட ரெண்டு கேள்வி கேக்குறேன். அதற்க்கு பதில் சொல்லு. அந்த பதில்லேயே நீ கேட்ட கேள்விக்கு பதில் இருக்கும். என்ன கேள்வின்னா, நீளமான வசன உச்சரிப்பு பண்ணாத புரட்சித் தலைவர் எம்.ஜி.யாரை மக்கள் எதுக்காக முதலமைச்சர் ஆக்கினாங்க? சரியா டான்ஸ் ஆடத் தெரியாத ரஜினிகாந்த்க்கு மக்கள் எப்படி 'சூப்பர் ஸ்டாரா' அவரை ஏத்துகிட்டாங்க? இந்த ரெண்டுத்துக்கும் உள்ள பதில் தான் நீ கேட்ட கேள்விக்கான பதில்' என்பேன்.
அழகான தலயின் அருமையான பேட்டி:
தல படத்தில் எனக்கு பிடித்த காட்சி:
நான் மிகவும் ஆவலுடன் எதிர்ப்பார்க்கும் தல படம்:
சினிமாவிலும் சரி வாழ்க்கையிலும் சரி நல்ல மனிதன் என்ற பெயரெடுத்தவர் அஜித். Thala always ROCK.
பதிலளிநீக்குதலக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
தல தலதான்..அஜித் சாருக்கு என்னோட பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குதல பத்தி சொன்னதற்க்கு ரொம்ப நன்றி நண்பாஃ தல ஒரு சிறந்த மனிதர்
பதிலளிநீக்குHAPPY BIRTHDAY THALA thanks fou you
பதிலளிநீக்குஅருமையான பதிவு
பதிலளிநீக்குமே தின வாழ்த்துகள்
உங்கள் பதிவுகளை DailylLib ல் இணைத்து பயன் பெறுங்கள். DailyLib செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்
தமிழ்.DailyLib
we can get more traffic, exposure and hits for you
To get the Vote Button
தமிழ் போஸ்ட் Vote Button
உங்கள் பதிவுகளை இணைத்து பயன் பெறுங்கள்
நன்றி
தமிழ்.DailyLib
THALA...IS ALWAYS THIHALA...THANK YOU FOR SHARING TS NOBLE NEWS. MAY WE KNOW WHO IS YOUR BROTHER FOR AJITH?
பதிலளிநீக்குஅருமையான பதிவு. நல்ல மனிதன்.
பதிலளிநீக்கு