1898. பிரிட்டிஷ்காரர்கள் கென்யாவையும், உகாண்டாவையும் காலனி நாடுகளாக ஆண்டு கொண்டிருந்த காலம். இரண்டு நாடுகளும் நல்ல இயற்கை வளமுள்ள நாடுகள். அதனால் பிரிட்டிஷ் அரசாங்கம் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு பொருட்களை அனுப்புவதற்கு
போக்குவரத்து வசதியை விரிவுபடுத்த முடிவு செய்தனர். குறிப்பாக 'ரயில் வசதி' இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று நினைத்தனர். அதற்க்கான பணிகளை ஆரம்பித்தது பிரிட்டிஷ் அரசாங்கம். கென்யாவில் உள்ள மொம்பாசா என்ற ஊரில் இருந்து பாலம் கட்ட ஆரம்பித்தார்கள்.
மொம்பாசா, கென்யாவின் இரண்டாவது பெரிய நகரம். என்ன தான் அது பெரிய நகரமாக இருந்தாலும், அது காடு சூழ்ந்த பகுதி. அந்த காட்டில் பிரிட்டிஷ் அரசாங்கத்தினரால் வரவழைக்கப்பட்ட இந்தியர்களும், ஆப்ரிக்கர்களும் பாலம் அமைக்கும் பணியில் ஈடுபட ஆரம்பித்திருந்தனர். இந்தியர்களில் குறிப்பாக குஜராத்திகளும், பஞ்சாபிகளும், பாகிஸ்தானிகளும் பங்கேற்றிருந்தனர் (அப்போது இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே நாடாக இருந்த சமயம்). மொம்பாசா ஒட்டிய பகுதியில் சாவோ என்ற நதியும் ஓடிக் கொண்டிருந்தது. ரயில்வே மேம்பால பணிகளுக்காக டென்ட் போட்டு தங்கியிருந்த கூலியாட்களை மர்மமான ஒரு மிருகம் தாக்கி கொல்ல ஆரம்பித்தது. அது சாவோ காட்டுப்பகுதியில் வாழ்ந்த இரண்டு சிங்கங்கள்.
John Henry Patterson
பொதுவாகவே சாவோ காட்டுப்பகுதி சிங்கங்கள் மிகவும் மூர்க்கமானவை. ஆனால் இந்த இரண்டு சிங்கங்களுக்கு மூர்க்கமும், ரத்த வெறியும் சற்று அதிகமாகவே இருந்தது. முதலில் அந்த காட்டுப்பகுதியில் வாழ்ந்த காட்டுவாசிகள் அவைகளை ஒரு சராசரி சிங்கங்களாக நம்பவில்லை. சில காலங்களுக்கு முன்பு வாழ்ந்து இறந்து போன அந்த ஊர் மன்னர்கள் தான், சிங்கங்களாக வந்து அங்கே பணி நடக்காமல் செய்கிறார்கள் என்று பயந்து அவைகளை வேட்டையாட மறுத்துவிட்டனர். அதையும் மீறி வேட்டையாடப்போன சிலர் அந்த சிங்கங்களுக்கு இரையானது சோகத்திலும் பெரும் சோகம்.
இதனால் அங்கே பாலம் நடக்கும் பணிகள் தடைபட்டது. வேலையாட்கள் அச்சத்துடனே ஒவ்வொரு நாளையும் கழிக்க ஆரம்பித்தனர். வாரத்திற்கு ஒருவராவது சிங்கத்திற்கு பலியாவது தொடர்கதையானது. இதனால் வேலையாட்கள் வேலைக்கு செல்லவே பயப்பட்டனர். அவர்களுக்கு 'Ghost & Darkness' என்று சொன்னாலே குலை நடுங்கும். Ghost என்றால் முதல் சிங்கத்தையும், Darkness என்றால் இரண்டாவது சிங்கத்தையும் அவர்கள் 'பயத்தோடு' அழைக்க ஆரம்பித்தார்கள். இதற்க்கு வேறு வழியே இல்லையா என்று யோசித்து கொண்டிருந்தபோது வந்து சேர்ந்தவர் தான் John Henry Patterson.
பேட்டர்சன், பாலம் கட்டுமான இன்ஜினியர். அவர் ஒரு முன்னால் ராணுவ வீரரும் ஆவார். அதனால் அவரே களத்தில் இறங்கி அந்த சிங்கங்களை வேட்டையாட முடிவு செய்தார். அவரும், சிலரும் சேர்ந்து இரவு நேரத்தில் கண்காணித்து வந்தனர். அவர்கள் எதிர்பார்த்தது போலவே ஒரு சிங்கம் அவர்களின் கண்ணில் சிக்கியது. பேட்டர்சன் குறிபார்த்து அதை சுட்டு சாகடித்தார். அனைவரும் ரொம்பவே சந்தோஷப்பட்டனர். ஆனால் அவர்களின் சந்தோஷம் அடுத்த நாள் இரவு வரை தான் நீடித்தது. அன்று இரவு ஒருவர் சிங்கத்தால் வேட்டையாடப்பட்டார். ஆம். பேட்டர்சன் கொன்றது வேறு ஒரு சிங்கத்தை. அந்த சிங்கம், 'The Ghost & The Darkness' சிங்கங்கள் இல்லை.
பேட்டர்சன் மிகவும் கவனமாக கண்காணிக்க ஆரம்பித்தார். அவரின் முயற்சி வீண் போகவில்லை. ஒருநாள், அந்த சிங்கத்தை பார்த்தார். 9.9'' அடி நீளமும், 3.9'' அடி உயரமும் கொண்ட அந்த சிங்கத்தின் கர்ஜினை, அந்த காட்டையே கதி கலக்கியது. பேட்டர்சன் மிகவும் தைரியமாக எதிர்கொண்டு அதை சுட்டார். முதல் குண்டடிப்பட்டவுடன் அது தப்பித்து ஓடியது. ஆனால் அன்று இரவு திரும்பவும் கூடாரம் இருக்கும் பகுதிக்கு வந்த போது, பேட்டர்சன் மறுபடியும் சுட ஆரம்பித்தார். பலமுறை சுட்ட பிறகு அது ஓடிவிட்டது. அடுத்த நாள் காலையில் பார்த்தபோது அது இறந்து கிடந்தது. முதல் கட்ட வெற்றியோடு அடுத்த சிங்கத்திற்காக எதிர்பார்த்து காத்திருக்க ஆரம்பித்தார்.
பாடம் செய்யப்பட்ட சாவோ சிங்கங்கள்
சரியாக மூன்று வாரங்கள் கழித்து இரண்டாவது சிங்கம் கூடாரம் இருக்கும் இடத்திற்கு வந்தது. இந்த சிங்கம், 9.6'' அடி நீளமும், 3.11'' உயரமும் கொண்டிருந்தது. அவர் மரத்தில் அமர்ந்தபடியே குறிபார்த்து சுட்டார். ஆனால் இந்த சிங்கம் சற்று மூர்க்கமானது. தன்னை சுடுபவனை கொல்ல வேண்டும் என்பதற்காக அவர் இருக்கும் மரத்தில் ஏறப் பார்த்தது. ஆனால் பேட்டர்சன் அதற்க்கு இடம் கொடுக்கவில்லை. இரண்டு முறை சிங்கத்தின் மார்பிலும், தலையிலும் சுட்டார் பேட்டர்சன். அந்த சிங்கம் கடைசிவரை அவரை கொல்வதற்காக போராடி, இறுதியில் உயிரை விட்டது. ஒரு வழியாக கடந்த ஓராண்டாக மனிதர்களை வேட்டையாடிய சிங்கங்களுக்கு தன் துப்பாக்கியால் முடிவு கட்டினார் 'வேட்டைக்காரன்' பேட்டர்சன்.
சிங்கங்களை கொன்ற பிறகு, அவைகள் வாழ்ந்த குகையினை கண்டு பிடித்தார் பேட்டர்சன். அந்த குகையில் மனித எலும்பு கூடுகள் பல இருந்ததை பார்த்தார் அவர். 'The Ghost & The Darkness' சிங்கங்களால் வேட்டையாடப்பட்ட மனிதர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 135 ஆகும். பேட்டர்சன் அன்றிலிருந்து ஒரு 'ஹீரோவாக' அங்குள்ள மக்களுக்கு கருதப்பட்டார். அவருக்கு பிரிட்டிஷ் பாராளுமன்றத்தின் சார்பிலும், பிரிட்டிஷ் அதிபரின் சார்பிலும் பாராட்டுக்கள் வழங்கப்பட்டது. அடுத்த ஓராண்டில் ரயில் மேம்பால பணிகளும் முடிக்கப்பட்டு, அவர் இங்கிலாந்திற்கு புறப்பட்டு சென்றார். சில ஆண்டுகள் கழித்து அவர் 'The man Eaters of Tsavo (1907)' என்ற புத்தகத்தை எழுதினார். அந்த புத்தகமும் பெரும் வரவேற்ப்பை பெற்றது.
பேட்டர்சன் பயன்படுத்திய துப்பாக்கி
கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் கழித்து (1924) அவரிடமிருந்த சிங்கங்களின் தோல்களை 5000 டாலருக்கு சிகாகோ அருங்காட்சியகத்திற்கு விற்றுவிட்டார் (இன்றைய இந்தியா ருபாய் மதிப்பின்படி ஒன்றரை கோடி). மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்த சிங்கத்தின் தோல்களை சரி செய்து இன்று அதற்க்கு சிலை வடிவம் கொடுத்திருக்கிறார்கள் அருங்காட்சியாளர்கள். இப்போது கென்யா அரசாங்கம் 'அந்த பாடம் பண்ணப்பட்ட சிங்கங்கள் எங்கள் நாட்டை சேர்ந்தவை. அதை எங்களுக்கு கொடுத்து விடுங்கள்' என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். பேட்டர்சன் எழுதிய புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படங்கள் தான் Bwana Devil (1952), Killers of Kilimanjaro (1959) மற்றும் the Ghost and the Darkness (1996).
(தயவுசெய்து படித்ததோடு மட்டுமல்லாமல் வாக்களித்து, பின்னூட்டமிட்டு என்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தவும்).
என்றும் அன்புடன்
கோஸ்ட் அண்ட் டார்க்னஸ் படத்தை நானும் பார்த்திருக்கிறேன். அருமையான பகிர்வு.
பதிலளிநீக்குinteresting ...nice info..
பதிலளிநீக்குarumaiyana pathivu thodara valthukal
பதிலளிநீக்குசுவாரஸ்யமான தகவல்....
பதிலளிநீக்குஎன்ன பாஸ் கல்யாணத்துக்கு பதிவுலகிற்கு நீண்ட விடுமுறை விடுகிறீர்கள். :(
சுவாரசியமான தகவல்கள்.
பதிலளிநீக்குநிறைய இது போன்ற புதிய விஷயங்களை பற்றி பதிவிடவும்.
Idhey sotry ya Two Brothers endru edhuthu irukkirrargal, konjam vithyaasamaaga. sentiment kalandha story.
பதிலளிநீக்குஅருமையான பதிவு,,, வாழ்த்துக்கள் பிரசாத்
பதிலளிநீக்குhii.. Nice Post
பதிலளிநீக்குThanks for sharing
More Entertainment
Best Regarding.
The Ghost and the Darkness படம் எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று... Ghost and the Darkness சிங்கங்களை பார்க்கும் போது யாராக இருந்தாலும் பயம் வரும்..gigantaic Lions...
பதிலளிநீக்குசுவாரிசியமான பதிவு...
அருமையான பதிவு !!! ஆனால் இன்று சிங்கங்களின் நிலை பாவமாக அல்லவா உள்ளது ???
பதிலளிநீக்கு