திங்கள், மே 28, 2012

கேப்டன் விஜயகாந்த் படங்களில் எனக்கு பிடித்தவை...

DMDK Leader Vijaykanth
சின்ன வயதிலிருந்தே நான் ஒரு ரஜினி ரசிகன். அதற்க்கு காரணம் என்று கேட்டால் அதற்க்கு 'ரஜினி' என்ற பதில் தான் வரும். வளர ஆரம்பித்த பிறகு தான் நான் மற்ற நடிகர்களின் நடிப்பை கவனிக்க ஆரம்பித்தேன். அதில் முக்கியமானவர் நம்ம கேப்டன். அவர் நடித்த ஒரு சில படங்களை நான்
சிறுவயதில் பார்த்த ஞாபகம் உண்டு. ஒரு உறவினரின் திருமணத்திற்காக குடும்பத்தோடு காஞ்சிபுரம் சென்றிருந்தபோது விஜய்காந்த் நடித்த 'ஏழை ஜாதி' படத்தை அங்குள்ள ஒரு தியேட்டரில் நைட் ஷோ பார்த்தேன். அதற்க்கு பிறகு அவர் நடித்த சில ப்ளாக் பஸ்டர் படங்களை பார்த்திருக்கிறேன். அதில் எனக்கு பிடித்த சில படங்களை பற்றி இங்கே சொல்லியிருக்கிறேன். கண்டிப்பாக இந்த படங்கள் உங்களுக்கும் மிகவும் பிடிக்கும்.

நானே ராஜா நானே மந்திரி:

இந்த படத்தில் விஜய்காந்த் ஒரு படிக்காத, முட்டாள்தனமான பண்ணையாராக நடித்திருப்பார். அதுவும் நகைச்சுவை வேடத்தில். படத்தில் இவர் நடந்து வரும்போது இளையராஜா போடும் BGM, அந்த காட்சிக்கு ரொம்ப அருமையாக பொருந்தும். படத்திற்கு திரைக்கதை வசனம், ஆர். சுந்தர் ராஜன். ஒரு ரேடியோ நிகழ்ச்சியில் விஜயகாந்திடம் 'நானே ராஜா நானே மந்திரி படத்திற்கு பிறகு நீங்க ஏன் காமெடி கலந்த கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் தர மறுக்கிறீர்கள்?' என்று கேட்டதற்கு 'எனக்கு கதை சொல்ல வருகிற அனைவரும் என்னிடம் ஆக்க்ஷன் வேடத்தை முன்னிலைபடுத்திய கதைகளையே கொண்டு வருகிறார்கள். மற்றபடி எனக்கு காமெடி வேடங்களில் நடிக்க ரொம்ப பிடிக்கும்' என்றார். இந்த படத்திற்கு பிறகு கேப்டனும் நடிகை ஷோபனாவும் நடித்த 'என்கிட்டே மோதாதே' படத்தில் கூட வெண்ணிற ஆடை மூர்த்தியுடன் சேர்ந்து காமெடியில் கலக்கியிருப்பார் விஜயகாந்த்.


ஊமை விழிகள்:
எனக்கு தெரிந்து, விஜயகாந்த்திற்கு போலீஸ் அதிகாரி வேடம் சரியாக பொருந்திய படமென்றால் அது இந்த படமாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். DSP தீனதயாளனாக அருமையாக நடித்திருப்பார் இவர். கடந்த வாரத்தில் கூட இந்த படத்தை சன் டிவியில் பார்த்தேன். இந்த படத்தை தயாரித்து, கதை வசனம் எழுதிய ஆபாவாணனுக்கு இது தான் முதல் படம். அதுவும் ஆபாவாணன், நடிகர் அருண் பாண்டியன் இருவரும் பிலிம் Institute மாணவர்கள். நண்பர்களும் கூட. அவர்களுக்காகவே விஜய்காந்த் இலவசமாக நடித்து கொடுத்தார். தமிழ் சினிமாவில் ஒரு ஹாலிவுட் தரத்திற்கு நிகரான படம் என்று இந்த படத்தை கண்டிப்பாக சொல்லலாம் (இந்த படத்தின் திரை விமர்சனம் விரைவில்...)

புலன் விசாரணை:
ஆர்.கே. செல்வமணியின் கூட்டணியில் 1990 இல் வெளிவந்த விஜயகாந்தின் ஆக்க்ஷன் திரைப்படம். 'ஆட்டோ சங்கர்' என்ற ஒரு ஹாட் டாப்பிக்கையும், அர்னோல்ட் நடித்த கமாண்டோ' படத்தையும் சரி விகிதத்தில் கலந்து எடுத்த படம். ஆர்.கே. செல்வமணியிடம் எனக்கு பிடித்ததே ஒவ்வொரு காட்சியையும் அதிகபட்ச த்ரில்லிங்கோடு கொண்டு செல்வார். அதற்க்கு இந்த படமும் விதிவிலக்கல்ல. இந்த படத்தை செகண்ட் ரிலீஸ் செய்தாலும் பார்க்கலாம். பரபரப்பான திரைக்கதை, அதிரடி வசனங்கள் மற்றும் தெளிவான இயக்கம். இந்த படத்திலிருந்து விஜய்காந்த் தமிழ் சினிமாவின் நிரந்தர 'போலீஸ் அதிகாரி' ஆகிவிட்டார்.

சத்ரியன்:
மணிரத்னத்தின் திரைக்கதை வசனத்தில், K. Subash இயக்கத்தில் வெளிவந்த படம். AC பன்னீர் செல்வம் என்ற கதாபாத்திரத்தில் கலக்கியிருப்பார் கேப்டன். இந்த படத்தில் வரும் இளையராஜாவின் BGM செம. படத்தில் வில்லனாக நடித்திருக்கும் திலகனும் அருமையாக நடித்திருப்பார். சத்ரியன் படத்தை தியேட்டரில் பார்த்ததாக நினைவு இல்லை. ஆனால் டிவியில் எப்போது போட்டாலும் பார்ப்பேன். காரணம், படத்தின் மேக்கிங் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

கேப்டன் பிரபாகரன்:
செந்தூர பூவே படத்திற்கு பிறகு 'கேப்டன்' என்ற பட்டம் விஜய்காந்திற்கு பாந்தமாக பொருந்தச் செய்த படம். ஆர். கே. செல்வமணிக்கும், விஜயகாந்திற்கும் அடுத்த வெற்றியை கொடுத்த படம். சந்தன கடத்தல் வீரப்பன் என்ற ஒன்லைனை வைத்துக்கொண்டு பரபர திரைக்கதையில், லியாகத் அலிகானின் அனல் தெறிக்கும் வசனத்தில் வெளிவந்த விஜயகாந்தின் நூறாவது படம் இது. இந்த படமும் எனது ஹிட் லிஸ்டில் உண்டு.

மாநகர காவல்:
எனக்கு ரஜினி படங்களில் முதலில் பிடிக்கும் விஷயம் தலைவரின் அறிமுகக் காட்சி (Entry Scene). ரஜினிக்கு பிறகு எனக்கு இந்த படத்தில் விஜய்காந்த் அறிமுகமாகும் அந்த காட்சி இருக்கே, கலக்கியிருப்பாரு கேப்டன். அதற்க்கு Chandrabose தரும் பின்னணி இசை தான் அந்த காட்சியையே தூக்கி நிறுத்தும். உண்மையில் 1990 மற்றும் 1991 களில் சத்ரியன், கேப்டன் பிரபாகரன் மற்றும் மாநகர காவல் என்று வரிசையாக வெளியாகி விஜயகாந்தை 'புரட்சிக் கலைஞர்' என்று தொடர்ந்து ஊர்ஜிதப்படுத்திக் கொண்டிருந்தது.

சின்ன கவுண்டர்:
இந்த படம் வில்லிவாக்கம் ராயல் தியேட்டரில் (இன்றைய AGS Cinemas) வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது. இந்தப்படத்தை என் அப்பா, அம்மா இருவரும் எனக்கு தெரியாமல் பார்க்கப் போக ரெடியானார்கள். எனக்கு எப்படியோ விஷயம் தெரிந்து 'நானும் வருவேன்' என்று அடம்பிடிக்க ஆரம்பித்து விட்டேன். அவர்களோ 'இந்த படத்துல ரஜினி இல்ல, சண்டை படம் கிடையாது' என்று எவ்வளவு சொல்லியும் கேட்காமல் போய் பார்த்த படம் இது. ஆக்க்ஷன் என்ற பாதையில் பயணித்துக் கொண்டிருந்த விஜயகாந்திற்கு ஜனரஞ்சகமான ஒரு வெற்றிப் படத்தை ஆர். வி. உதயகுமார் கொடுத்தார். ஆர். வி. உதயகுமாரின் மேல் எனக்கு ஒரு சின்ன கோபம் இன்னும் இருக்கிறது. கமலுக்கு ஒரு 'சிங்கார வேலன்', விஜயகாந்திற்கு இந்த படம் என்று கொடுத்த அவர், ரஜினிக்கு ஒரு சுமாரான 'எஜமான்' படத்தை கொடுத்து விட்டாரே என்று.

ரமணா:
எனக்கு தெரிந்து விஜயகாந்திற்கு கிடைத்த கடைசி மிகப்பெரிய வெற்றிப் படம் இது என்று சொல்லலாம். விஜய்காந்த் சொல்லும் 'புள்ளிவிவர' வசனம் படத்தின் முக்கிய காட்சிகளில் ஒன்று. அமைதியான நடிப்பு, ஏ. ஆர். முருகதாஸின் ஆர்ப்பாட்டமான இயக்கம் என்று பெரிய அளவில் ஹிட்டடித்த படம். இன்று ஹிந்தியில் ஷாருக் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. இதற்க்கு பிறகு வெளிவந்த 'எங்கள் அண்ணா' படம் வெற்றி பெற்றாலும் அதற்க்கு காரணம் என்று பார்த்தால் வடிவேலும், படத்தின் இயக்குனர் சித்திக் அவர்களின் நகைச்சுவை பாணி திரைக்கதையும் தான். இந்த படம் தெலுங்கில் சிரஞ்சீவி நடித்து 'தாகூர்' என்ற பெயரில் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது.





(தயவுசெய்து படித்ததோடு மட்டுமல்லாமல் வாக்களித்து, பின்னூட்டமிட்டு என்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தவும்).






என்றும் அன்புடன்



11 கருத்துகள்:

  1. சத்ரியன் K.சுபாஷ் இயக்கிய படம்.. :-)

    பதிலளிநீக்கு
  2. சிறு வயதில் நானும் அதி தவிர விஜயகாந்த் ரசிகன்...அவர் போடும் லெக் Fight எனக்கு ரொம்பவே பிடிக்கும்...
    நீங்கள் சொன்ன எல்லாமே ரொம்ப நல்ல படங்கள்...இதில் என்னுடைய favourite சத்ரியன்.. விஜயகாந்த் நடிப்பில் பின்னி இருப்பார்..

    பதிலளிநீக்கு
  3. the music director of manakara kaval was Chandra bose i think.. its definitely not ilayaraja,, please check..

    பதிலளிநீக்கு
  4. இப்பவெல்லாம் கப்டன் பற்றி எவருமே பதிவு எழுதுவது குறைவு.. இச்சயமயத்தில் தங்களின் இந்தப்பதிவு சாலச்சிறந்தது..... வாழ்த்துக்கள் பிரசாத்.. இது போன்று அரியதொரு பதிவுகளை தொடர்ந்தும் வழங்கவேண்டும் என்பது எனது விருப்பம்......

    பதிலளிநீக்கு
  5. ஒரு குறிப்பிட்ட சின்ன வயதில் ரஜினிக்கு பிறகு என்னைக் கவர்ந்த நடிகர் என்றால் அது விஜய்காந்த்-தான்..அவரது படங்களில் வரும் ஒரு வகையான பரப்பர வேகமும் விறுவிறுப்பும் ரொம்ப பிடிக்கும்..இப்ப கொஞ்ச வருடங்களாகவே அவரது படங்கள் தோல்வியில்.. பிடிக்காமலேயே போய்விட்டது..நீங்கள் கொடுத்த லிஸ்டில் சின்ன கவுண்டரை எத்தனை தடவை டிவியில் பார்த்தேன் என்றே கணக்கு தெரியவில்லை..நல்ல திரை அலசல்..ஊமை விழிகள் விமர்சனத்துக்கு காத்திருக்கிறேன்.பகிரும் பதிவுகளுக்கு நன்றிகள்.

    Carnage (2011)- திரைப்பார்வை

    பதிலளிநீக்கு
  6. லேட்டா வந்ததுக்கு மன்னிக்கவும். நான் கப்டனின் ஆரம்பகால படங்களை பார்த்ததில்லை. ஆனால் சின்ன கவுண்டர் இற்கு பின்னர் பார்த்திருக்கிறேன். உண்மையில் அருமையான படங்கள்.

    பதிலளிநீக்கு
  7. பதிவிட்ட அனைத்தும் நல்ல திரைப்படங்கள். காட்சிகள் அனைத்தும் அருமை.
    மாநகர காவல் என்ட்ரி சூப்பர்.

    பதிலளிநீக்கு
  8. CAPTAIN ALLWAYS EVERGREEN HERO NOT ONLY IN FILM

    பதிலளிநீக்கு
  9. நினைவு தெரிந்த நாள் முதல் கேப்டன் ரசிகன் டிவி ல தலைவர் படம்னா நான் தான் முதல் ஆல நிப்பேன் அது வும் கட்டுஅடிச்சிட்டு

    பதிலளிநீக்கு