திங்கள், பிப்ரவரி 14, 2011

எனக்கு பிடித்த Top 10 காதல் திரைப்படங்கள் - காதல் ஸ்பெஷல்

தமிழ் சினிமாவில் காதல் இல்லாமல் வந்த படங்கள் என்பது மிகவும் குறைவு. மொத்தத்தில் ஒரு பத்து படங்கள் கூட கணக்கில் அடங்காது. ஆனால் காதல் திரைப்படங்கள்? யப்பா, அது கணக்கிலேயே அடங்காது. எனக்கு பிடித்த ஒரு 10 காதல் படங்களை இங்கே பதிவேற்றுள்ளேன். அவை எனக்கு பிடித்தவைகளே தவிர, இது தான் சிறந்தது என்று
சொல்லவில்லை. ஆனால் உங்களுக்கு நான் குறிப்பிட்டுள்ள காதல் படங்கள் மிகவும் பிடிக்கும். இந்த படங்களை நான் வரிசைபடுத்தவில்லை. காரணம், இது காதல் ஸ்பெஷல்.

வாழ்வே மாயம்தான் காதலித்த பெண்ணிற்கு தனக்கு இருக்கும் நோய் பற்றி தெரியவிடாமல், அவள் வேறொருவரை திருமணம் செய்து கொண்டு நன்றாக வாழவேண்டும் என்று நினைக்கும் ஒரு உண்மையான காதலனின் படம். காதல் மன்னன் கமல்ஹாசன், ஸ்ரீதேவி நடிப்பு அருமை. இது ஒரு தெலுங்கு படத்தின் ரீமேக் என்றாலும் அதை தமிழ்க்கேற்றார் போல் எடுத்தது Super. படத்தில் கடைசியாக வரும் வந்தனம், வாழ்வே மாயம் என்ற இரண்டு பாடல்கள் இன்றும் உண்மையாக காதலிப்பவர்களை அழவைக்கும்.


மௌன ராகம்கார்த்திக், மோகன், ரேவதி நடிப்பில் வெளிவந்த அற்புதமான படம். ஒரு ஜாலியான காதலனாக கார்த்திக்கும், கண்ணியமான கணவனாக மோகனும் கலக்கிய படம். இப்படி ஒரு காதலி நமக்கு வேண்டும் என்று ஏங்கவைக்கும் அளவுக்கு ரேவதியின் நடிப்பு மிகவும் அருமை. நான் மணிரத்னத்தின் படங்களில் ரசிக்கும் முக்கியமான படம் இது.

புன்னகை மன்னன்
காதல் மன்னனான கமல்ஹாசனை புன்னகை மன்னனாக மாற்றிய படம். காதல் கைகூடாமல் தற்கொலை செய்துகொள்ளும் காதலர்களை பற்றி செய்திகளை படிக்கும்போதெல்லாம் எனக்கு இந்த படம் ஞாபகம் வரும். ஒரு சுட்டித்தனமான காதலி வேடம் என்றால் அதற்கு ரேவதி தான் சரியான நடிகை. கொஞ்ச நேரமே வந்தாலும் ரேகா நம் மனதில் நிங்காத இடம் பிடித்துவிடுகிறார். KB அவர்களின் அற்புதமான காதல் படம் இது.

இதயத்தை திருடாதே
இந்த படத்தை பற்றி கேள்விபட்டிருந்தேன். ஆனால் சமிபத்தில் தான் இந்த படத்தை பார்த்தேன். படம் சான்சே இல்லை. காதலிக்கும் இருவருக்குமே தங்கள் பெற்றோரிடமோ, அல்லது மற்றவர்களிடமோ எந்த பிரச்னையும் இல்லை. பிரச்சனை அவர்களுக்கு நோய் ரூபத்தில் இருக்கிறது. ஆனால் அந்த சோகங்கள் எதுவுமே இல்லாமல் சந்தோஷமே காதல் என்று நிருபித்த படம். நாகர்ஜுனா நடித்த படங்களில் எனக்கு மிகவும் பிடித்த படம் இது.
இதயம்
எல்லோருக்குமே காதலை சொல்ல தயக்கம், படபடப்பு கண்டிப்பாக இருக்கும். ஆனால் அதுவே காதலுக்கு பிரச்சனையானால்? ஆரம்பத்தில் எனக்கு இந்த படம் பிடிக்கவே பிடிக்காது. ஆனால் போகப்போக இந்த படம் எனக்கு ரொம்ப பிடித்து போனது. முரளி சாரின் நடிப்பு ஆஹா, இந்த வேடத்திற்கு சரியான நடிகர் முரளி மட்டும் தான். (I Really miss you Murali sir. இப்ப நடிக்க வர்ற எவனுக்கும் லவ் பண்ண கூட தெரியல சார்).
குணா
'மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதர் காதல் அல்ல, அதையும் தாண்டி புனிதமானது'. இந்த ஒரு வாக்கியம் போதும் இந்த படத்தை பற்றி சொல்ல. வாழக்கூடாத சுழலில் வாழும் சற்று மனநிலை சரியில்லாத ஒருவன், தான் தேவதையாக நினைக்கும் பெண்ணோடு எப்படி சேர்ந்தான் என்பதே கதை. கமல்ஹாசனின் அற்புதமான நடிப்பு, மிளிர்கிறது. படத்தின் ஒவ்வொரு காட்சியும் சூப்பர்.

காதல் கோட்டை
'தல' அஜித்குமார், அகத்தியன் கூட்டணியில் வந்த அற்புதமான திரைப்படம். பார்க்காமலேயே காதல் என்ற புது காதலை, உண்மையான நம்பகத்தன்மையோடு வந்த படம். அஜித்தும், தேவயானியும் சிறப்பாக நடித்திருப்பார்கள் இந்த படத்தில். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சி, ரசிகர்களை சீட் நுனியில் உட்கார வைத்தது.

பூவே உனக்காக
தான் காதலித்த பெண் கிடைக்கவில்லை என்றாலும், அவள் ஆசைப்பட்ட வாழ்க்கை கிடைக்கவேண்டும் என்று சொன்ன படம். இளைய தளபதி விஜய்க்கு மிகப்பெரிய வெற்றி கொடுத்த படம். இந்த படத்தின் கிளைமாக்ஸ் வசனங்கள் ஒவ்வொன்றும் அருமை.


சேது
காதலித்தால் கண்டிப்பாக ஒருவன் பைத்தியம் ஆகிவிடுவான் என்று பொதுவாக சொல்லுவார்கள். ஆனால் இந்த படம் பார்த்தால் கண்டிப்பாக காதலை ஏற்க மறுப்பவர்களையும் காதல் பைத்தியம் ஆக்கிவிடும். எங்கோ இருந்த விக்ரமை, எங்கோ ஒரு உயரத்திற்கு கொண்டுசென்ற படம் இது. இந்த படத்தின் முலமாக பாலா என்ற சிறந்த இயக்குனர் தமிழ் சினிமாவிற்கு கிடைத்தார்.

காதல்
இந்த படத்திற்கு என் நண்பன் என்னை அழைத்து சென்றபோது அவனை திட்டிக்கொண்டே படத்தை பார்த்தேன். ஏனென்றால் எனக்கு இது போன்ற காதல் தோல்வி அடையும் படங்கள் பிடிக்காது. இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை பார்த்தபோது நான் மிரண்டே போனேன். இப்படியும் உலகத்தில் நடக்குமா? என்று. ஆனால் இது உண்மை. படத்தை பற்றி சொல்ல வேண்டுமென்றால், Simply Super...






(தயவுசெய்து படித்ததோடு மட்டுமல்லாமல் வாக்களித்து, பின்னூட்டமிட்டு என்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தவும்).

9 கருத்துகள்:

  1. எல்லாமே அருமையான தெரிவுகள் நண்பரே..

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. //எனக்கு இது போன்ற காதல் தோல்வி அடையும் படங்கள் பிடிக்காது.//

    இதில் காதல் கோட்டை மற்றும் மௌன ராகம் தவிர்த்து மற்ற எல்லாமே காதல் தோல்வி படங்கள்!? :P
    மௌன ராகம் கூட கிட்டதட்ட காதல் தோல்வி படம்தான்!

    பதிலளிநீக்கு
  4. வசந்த மாளிகை விட ஒரு காதல் படம் எதுவும் கிடையாது

    பதிலளிநீக்கு