கற்க கற்க கள்ளும் கற்க...

வெள்ளி, பிப்ரவரி 18, 2011

இளையதளபதி விஜய்யின் ATM, குருவி படங்களும், என் தியேட்டர் அனுபவங்களும்

சமீப காலமாகவே நம் பதிவுலகில் 'டாக்டர்' விஜய்யை கலாய்த்து பலர் பதிவெழுதி வருகிறார்கள். டாக்டரு Flop படங்கள் கொடுக்கும் போது தான் விடலே, 'காவலன்'ன்னு ஒரு ஹிட்டு கொடுத்தாலும் விட மாட்டோம்னு ஆளாளுக்கு கலாய்ச்சிட்டு இருக்காங்க. ஆனா நான் 'இளைய தளபதிய' கலாய்கிரதுக்காக நான் இந்த பதிவ எழுதல. பலருடைய எதிர்ப்பையும் மீறி
நான் இவர் படத்துக்கு போன காரணம், என் 'நண்பன்டா' தான். சிக்கிடுச்சிடா சிங்கம்னு தளபதி 'நடிச்ச' படத்துக்கு கூட்டிட்டு போயி கும்பலா சேர்ந்து கும்மியடிசாங்க. அந்த மறக்க முடியாத வேதனைய உங்களோட பகிர்ந்துகிட்டா என் மனசு ஆறுதல் அடையும்னு தான் நான் இந்த பதிவ எழுதுறேன்.


மொதல்ல ATM படத்த பத்தி சொல்றேன் (அழகிய தமிழ்மகனாம்?). இந்த படம் ஒரு தீபாவளி அன்னிக்கி வெளிவந்துசி. நான் பொறந்து வளர்ந்தது எல்லாமே சென்னை, வில்லிவாக்கதுல தான். சரி போக்கிரிக்கு அப்பறம் வர்ற விஜய் படம், A.R. ரஹ்மான் மியூசிக், விஜய் வேற பாக்குறதுக்கு கொஞ்சம் லூக்கா இருந்தாரு. படம் நல்லா இருக்கும்னு நம்பி கொளத்தூர் கங்கா தியேட்டர் பக்கம் போனேன். தியேட்டர்ல அப்படி ஒரு கூட்டம். ஒப்பனிங் எல்லாம் நல்லாத்தான் இருந்துச்சி. சரி நம்ம பயபுள்ளங்கள வச்சி Ticket எடுக்கலாம்னு பார்த்தா ஒருத்தனையும் காணோம். எங்க இருக்கானுங்கனு செல்லுல கேட்டா, 'மச்சான், சரக்கடிசுகிட்டு இருக்கோம், டாஸ்மாக் பக்கம் வான்னாங்க. ஒரு வழியா டாஸ்மாக்ல இருந்து வெளிய வந்து படத்துக்கு போயி டிக்கெட்ட எடுத்துகிட்டு உள்ள போனா, சீட்டு இல்ல.
ஒரு ரெண்டு சீட்டு கெடச்சா நல்லாயிருக்குமேன்னு பக்கத்துல இருந்த என் நண்பனை தேடுனா, 'தலைவா, 'உய்ய்யய்யி'ன்னு விசிலடிசிகிட்டு இருந்துச்சி அந்த முதேவி. 'அடிங்க, ஒரு சீட்டு கூட இல்ல, எங்கடா உக்காரதுன்னு அவன் கிட்ட கேட்டா, 'சீட்டு இல்லனா என்ன மச்சான், அப்படியே தரைல உக்காந்துகலாம்னு' சொல்லிட்டு உடனே தரைல உக்காந்துகிச்சி அந்த விஜய் பைத்தியம். எனக்கோ உள்ளே எரியுது. ஆனானப்பட்ட சூப்பர் ஸ்டார் படத்துக்கே நான் சீட்ல உக்காந்து தான் படத்த பார்த்திருக்கேன். விஜய் படத்த பாக்க நான் தரையில உக்காரனுமா? சரி, வந்தது வந்துட்டோம். வெளியவும் போக முடியாது. எல்லாம் நம்ம விதின்னு தரைல உக்காந்து படத்த பாக்க ஆரம்பிச்சேன். படத்துல விஜய்க்கு 'Extrasensory Perception' அப்படின்னு ஒரு வியாதியாம். அதாவது இந்த வியாதி இருக்கறவங்களுக்கு முன்கூட்டியே என்ன நடக்க போவுதுன்னு தெரியுமாம். சரி விஜய் உலகத்துக்கு என்னமோ சொல்ல வரார்னு பார்த்தா, இண்டர்வல்லுக்கு அப்பறம் இன்னொரு விஜய் வேற வந்துட்டாரு.
'ஆஹா, சனியன் ஜடை போட ஆரம்பிச்சிடுச்சே, இனி பூ வச்சி போட்டு வைக்காம விடதேன்னு' என் விதிய நோந்துகிட்டேன். படத்தோட கிளைமாக்ஸ்'ல ஒரு செம காமெடி சீன் வந்துச்சி. அதாவது ஸ்ரேயா வில்லன் விஜய்கிட்ட 'அன்னிக்கி என்ன நடந்துச்சின்னு சொல்லு பாப்போம்ன்னு கேப்பாங்க. 'அடபாவிங்களா, எங்கிருந்து திருடரதுன்னு ஒரு வெவஸ்தையே இல்லையா? 'வாலி' படத்துல இருந்த த்ரில்லிங்கான சீனை எடுத்து, அப்படியே இந்த படத்துல சொருகிட்டாங்க. குறிப்பா இந்த காட்சி வரவரைக்கும் நல்லா ஜாலியா படம் பார்த்த விஜய் ரசிகர்கள், இந்த காட்சி வந்த உடனே, 'இது அஜித் படத்துல வர்ற சீன் ஆச்சே'ன்னு முனுமுனுக்க ஆரம்பிச்சிடாங்க. முக்கியமா என் நண்பன்டா மொத்தமா அப்செட். பயபுள்ள விசில் எல்லாம் அடிச்சிது. கடைசியா படம் முடிங்கி வெளிய வரும்போது எனக்கு ஒன்னு தோனுச்சி. என்னன்னா, விஜய்க்கு வந்த ESP Power மாதிரி எனக்கும் ஏதாவது ஒரு பவர் வந்தா நல்லா இருக்கும்னு தான். ஏன்னா, இனிமேல வர்ற விஜய் படம் எல்லாம் நல்லா இருக்குமா, இருக்காதான்னு முன்கூட்டியே தெரிஞ்சி வச்சிருக்கலாம்ல.

அடுத்தது டாக்டர் நடிச்ச 'குருவி'. வாழ்க்கைல ரெண்டு வகைல ஒரு மனிதன் தப்பு பண்ணலாம். ஒன்னு தெரிஞ்சி பண்ற தப்பு, இன்னொன்னு தெரியாம பண்ற தப்பு. நான் தெரியாம பண்ண தப்பு, ATM படத்துக்கு போனது. தெரிஞ்சி பண்ண தப்பு குருவி படத்துக்கு டிக்கெட் புக் பண்ணது. இந்த படம் வெளியான மே மாசம் தான் நான் பொறந்த மாசம். அதனால நானும் என் லவ்வரும் என் பிறந்த நாள் அன்னைக்கு விஜய் நடிச்ச 'குருவி' படம் பாக்கலாம்னு தான் டிக்கெட் புக் பண்ணேன். படம் வெளியான அன்னிக்கி நான் வேலைல இருந்தேன். என் ஆபீஸ் லஞ்ச் டைம் அப்போ படம் எப்படி இருக்குன்னு என் நண்பனுக்கு போன் போட்டு கேட்டேன். அவன் என்னடான்னா 'படம் நல்லாயிருக்குன்னு சொல்ல முடியல, நல்லா இல்லென்னும் சொல்ல முடியல. நீயே படம் பார்த்து தெரிஞ்சிக்கோ' அப்படின்னு சொல்லிட்டான். நானும் சரி பையன் கொழம்பியிருக்கான்'ன்னு நெனச்சிகிட்டு என் வேலைய பாக்க ஆரம்பிச்சேன். சாயங்காலம் வேல முடிச்சிட்டு வீட்டுக்கு வரும்போது என் இன்னொரு நண்பன் கால் பண்ணி, 'மச்சான், குருவி படத்துக்கு போறேன், நீயும் வான்னு அவன்கூட போயிட்டேன்.
அதே கொளத்தூர் கங்கா தியேட்டர், நைட் ஷோ போயிருந்தேன். இந்த படத்துக்கு நான் போக காரணம், இந்த படத்தோட இயக்குனர் தரணி தான். கண்டிப்பா படம் இன்னொரு கில்லின்னு நெனச்சிகிட்டு உள்ள பொய் சீட்ல உக்காந்தா, மொத்தமா சேர்ந்து ஏமாத்திட்டாங்க. இன்டர்வெல் முன்னாடி விஜய் அந்த உயரமான பில்டிங்'ல இருந்து குதிக்கும்போது விஜய் பெருசா என்னமோ பண்ண போறாருன்னு பார்த்தா, தளபதி அந்தரத்துல பறந்து, காத்துல நீச்சலடிச்சிகிட்டு இருந்தாரு. இந்த சீன பார்த்த உடனே நானும், என் நண்பனும் சத்தம் போட்டு சிரிச்சோம். ஒரு விஜய் ரசிகனும் ஒரு கேள்வி கேக்கல. பின்ன, அவங்களுக்கே விஜய் பண்றது ஓவர்னு தெரியுமில்ல?
இந்த படத்த திரும்ப என் லவ்வரோட பார்க்க சங்கம் திரையரங்கம் போயிருந்தேன். படம் ஆரம்பிச்ச ஒரு பத்து நிமிஷத்துல என் ஆளு தூங்க ஆரம்பிச்சிட்டா. ஏண்டி தூங்கற, படத்த பாருடின்னு சொன்னேன். படம் முடிஞ்சி வெளிய வரும்போது என் ஆளு சொன்னா, 'நான் நிம்மதியா தூங்கியிருப்பேன், அநியாயமா என் தூக்கத்தை கெடுத்து, இந்த படத்த பாக்க வச்சி, உங்கள?' அப்படின்னு கொஞ்சம் கோபமானாள். இனிமேலாவது விஜய் படம் பாக்கறது குடும்பத்துக்கு நல்லதில்லைன்னு தெரிஞ்சிகோங்க.

(கடந்த பதிவை பிரபலமாக்கிய நண்பர்களுக்கு என் நன்றிகள். தயவுசெய்து படித்ததோடு மட்டுமல்லாமல் வாக்களித்து, பின்னூட்டமிட்டு என்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தவும்).

Post Comment

10 comments:

Philosophy Prabhakaran சொன்னது…

செம நக்கல்... சூப்பர்ப் போஸ்ட்...

N.H.பிரசாத் சொன்னது…

நன்றி நண்பரே.

மர்மயோகி சொன்னது…

பழைய திரைப்படங்களை விர்மர்சிப்பது என்று புதிய முறையை கையாண்டு இருக்கிறீர்கள்..இரவில் டி வி க்களில் வரும் பழைய திரைப்படங்களை பார்க்கும்போது எனக்கும் இப்படி விமர்சனம் எழுதலாமே என்று எண்ணம் வரும்..ஆனால் காலையில் பல்வேறு வேலைகளுக்கிடையே இது மறந்து விடும்..
தங்கள் மேலும் தொடர விரும்பும் நண்பன்..மர்மயோகி...நன்றி..

N.H.பிரசாத் சொன்னது…

நன்றி திரு. மர்மயோகி அவர்களே. என்னுடைய Concept பழைய படங்களை விமர்சிப்பது தான். சில சமயம் இது போல பதிவெழுதி வருகிறேன்.

ராஜகோபால் சொன்னது…

என்னங்க போயிம் போயிம் லவ்ற கூட்டிகிட்டு டாக்டர் படத்துக்கு போயிருகிங்கலே. இதுக்கு நீங்க வீட்டுல ஒக்காந்து சீரியல் பாத்துருக்கலாம்.

நா.மணிவண்ணன் சொன்னது…

ஓகே ஓகே

நா.மணிவண்ணன் சொன்னது…

///குருவி :விஜய் அந்த உயரமான பில்டிங்'ல இருந்து குதிக்கும்போது விஜய் பெருசா என்னமோ பண்ண போறாருன்னு பார்த்தா, தளபதி அந்தரத்துல பறந்து, காத்துல
நீச்சலடிச்சிகிட்டு இருந்தாரு.///

அந்த காட்சசியை பார்த்துவிட்டு குரங்கு கூட்டங்கள் கூட்டம் கூட்டமாக தற்கொலை செய்து கொண்டன

N.H.பிரசாத் சொன்னது…

//என்னங்க போயிம் போயிம் லவ்ற கூட்டிகிட்டு டாக்டர் படத்துக்கு போயிருகிங்கலே. இதுக்கு நீங்க வீட்டுல ஒக்காந்து சீரியல் பாத்துருக்கலாம்.//

என்னங்க பண்றது? எல்லாம் விதி...

N.H.பிரசாத் சொன்னது…

//அந்த காட்சசியை பார்த்துவிட்டு குரங்கு கூட்டங்கள் கூட்டம் கூட்டமாக தற்கொலை செய்து கொண்டன.//

ஹா ஹா ஹா.

தமிழ் செல்வன் சொன்னது…

ஆமா.. டாக்டரு மேல அப்படி என்னெங்க உங்களுக்கு கோபம்..

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

கருத்துரையிடுக