ஞாயிறு, ஜனவரி 23, 2011

கமலின் 'நாயகன்' - திரைவிமர்சனம்

1975. இந்த ஆண்டுக்கு பின் எவ்வளவோ தமிழ் திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. காலம் கடந்து நிற்கும் எவ்வளவோ திரைப்படங்கள் வெளிவந்திருந்தாலும், தமிழ் சினிமாவை ஸ்டுடியோவிலிருந்து வெளியே கொண்டுவந்தது இந்த ஆண்டுக்கு பிறகு தான். ஸ்ரீதர், பீம் சிங், திருலோகச்சந்தர் என்று மிகப்பெரிய ஜாம்பவான்கள் இருந்த தமிழ் சினிமாவில், 'உலக சினிமா'
என்ற ஒன்றை தமிழ் சினிமா ரசிகனுக்கு அறிமுகப்படுத்தியது இந்த ஆண்டுக்கு பிறகு தான். அன்றிலிருந்து இன்று வரை தமிழ் சினிமாவில் 'உலக சினிமாக்கள்' என்ற பட்டியல் நீண்டு கொண்டே இருக்கிறது. இந்த பட்டியல் எவ்வளவு தூரம் நீண்டாலும், அதில் என்றுமே முதலிடம் வகிப்பது ஒரே படம் தான். அந்த படம் தான் 'நாயகன்'.
ஒரு தொழிலாளர் சங்க தலைவரான தன் தந்தையை துப்பாக்கி குண்டுக்கு பலி கொடுத்து விட்டு, அதற்கு காரணமான ஒரு போலீஸ் அதிகாரியை கொன்றுவிட்டு, பம்பாய்க்கு தப்பி செல்கிறான் ஒரு சிறுவன். அந்த சிறுவன் வளர்ந்து, பெரியவனாகி தான் இருக்கும் பகுதியை ஆக்ரமிக்க வருபவர்களிடமிருந்து காப்பாற்றி, அந்த பகுதிக்கு தலைவனாகிறான். பலருக்கு நல்ல செயல்களைச் செய்யும் அவன், பல கடத்தல் தொழில்களிலும் ஈடுபடுகிறான். குறுகிய காலத்தில் அவன் மிகப்பெரிய Don ஆகிறான். ஊருக்கு நல்லவனாக தெரியும் அவன், அவன் குடும்பத்தார்க்கு எவ்வாறு தெரிகிறான்? உண்மையிலேயே அவன் 'நல்லவனா? கெட்டவனா? இது தான் இந்த படத்தின் கதை.


கலைஞானி கமல்ஹாசன் 'வேலு நாயக்கர்' என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்று சொல்வதை விட வாழ்த்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். ஒரு நடிகன் 'மகா நடிகன்' ஆவது என்பது சாதரணமான விஷயமல்ல. அவனுக்கு கையில் இருக்கும் முடி கூட சிறப்பாக நடிக்க வேண்டும். அது தான் ஒரு 'மகா நடிகனின்' நடிப்பு. கமல் இந்த படத்தில் நான்கு விதமான தோற்றத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். சக்திவேல், வேலு நாயக்கராக மாறும்போது அந்த Body Language மேனரிசங்கள் அபாரம். 'ரெட்டி குடும்பத்துல ஒரு ஆம்பள உயிரோட இருக்ககூடாது' என்று மனைவி சாவுக்கு பழிவாங்குவதாகட்டும், 'வேற வழி இல்லடா கண்ணா' என்று தன் மகளிடம் பாசத்தில் மருகுவதாகட்டும், 'செல்வா மேல கை வெச்சது எவண்டா?' என்று தன் நண்பனுக்காக கோபப்படுவதாகட்டும், 'ஒரு கேழவனுக்காக இத்தன பேரா? போதும்பா' என்று தனக்காக அடிபட்ட மக்களுக்காக அழுவதாகட்டும், பின்னியிருக்கிறார் கலைஞானி. எனக்கு தெரிந்து கமலுக்கு இந்த படம், அவரது மணிமகுடத்தில் ஒரு கோஹினூர் வைரக்கல்.


நடிகை சரண்யாவுக்கு இது முதல் படம். 'நாளைக்கு கணக்கு பரீட்சை, சிக்கரமா விட்டுடுவிங்கள?' என்று கேட்கும் இடம், ஒரு வலி மிகுந்த வசனம். ஒரு வெகுளியான காதலியாகவும், இரண்டு பிள்ளைகளுக்கு பாசமிகு அம்மாவாகவும் நடிப்பில் மிளிர்கிறார். ஜனகராஜின் நடிப்பு இந்த படத்தில் ஒரு சிறப்பம்சம். ஒரு நகைச்சுவை நடிகனிடமிருந்து ஒரு மாறுபட்ட நடிப்பை காட்டியிருப்பது இயக்குனரின் திறமை. 'குப்பத்துக்குள்ள Ambulance வராதாம்' என்று கமலிடம் உண்மையை மட்டுமே சொல்லும் டில்லி கணேஷ் நடிப்பு அருமை. மற்றபடி மகனாக 'நிழல்கள்' ரவி, மகளாக கார்த்திகா, போலீஸ் அதிகாரியாக நாசர் என்று அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

படத்திற்கு பெரிய பலம், இசைஞானியின் இசை. இந்த படத்தில் வரும் அணைத்து பாடல்களும் அருமை. குறிப்பாக பின்னணி இசை. ராஜா பல சமயங்களில் மனதை உருக வைக்கிறார். 'தென்பாண்டி சீமையிலே' பாடல், என்னுடைய All Time Favorite பாடல்களில் ஒன்று. இந்த படம் இளையராஜா இசையமைத்த 400 வது படம்.

P.C. ஸ்ரீராம் கேமரா மிகவும் அருமை. ஜாடிக்கேற்ற மூடி போல மணிரத்னத்திற்கு ஏற்ற ஒரே கேமரா மேன், P.C. ஸ்ரீராம் மட்டும் தான். 'நாலு பேருக்கு நல்லதுனா எதுவுமே தப்பில்ல', 'நீங்க நல்லவரா? கெட்டவரா?', 'அவன நிறுத்த சொல்லு, நான் நிறுத்துறேன்' என்று பல இடங்களில் பாலகுமாரனின் வசனங்கள் மிளிர்கிறது. கலை இயக்கம் செய்த Thotta தரணி சிறப்பாக செய்திருக்கிறார். ஒரு தாராவி குப்பத்தை நம் கண் முன்னே நிறுத்துகிறார் தரணி. மணிரத்னத்திற்கு இந்த படம், ஒரு மணிமகுடம் தான். படத்தின் திரைக்கதை அமைப்பை மிகவும் சரியாக கையாண்டிருக்கிறார் மணிரத்னம். படத்தை தயாரித்தது, மணிரத்னமும், அவரது அண்ணன் மறைந்த தயாரிப்பாளர் அமரர் திரு. G. வெங்கடேசன்.

இந்த படம், 31 ஜூலை 1987 அன்று வெளியானது. இந்த படம் Marlon Brando நடித்த 'The GodFather' என்ற படத்தின் தழுவல் என்று சிலர் சொல்கிறார்கள். அது சத்தியமாக உண்மையில்லை. 1980 களில் பம்பாய் நகரை கலக்கிய Don, தமிழ்நாட்டுக்காரரான 'வரதா பாய் என்கிற வரதராஜ முதலியாரின்' வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட படம் இது. இந்த படம், சிறந்த நடிகர் - கமல்ஹாசன், சிறந்த ஒளிப்பதிவு - P.C. ஸ்ரீராம், சிறந்த கலை இயக்கம் - Thotta தரணி என்று முன்று பிரிவுகளில் தேசிய விருதுகளை அள்ளியது. இந்த படம் ஹிந்தியில், வினோத் கண்ணா நடிப்பில் 'Dayavan' என்ற பெயரில் பின்பு வெளிவந்தது. இன்றைக்கும் இந்தியாவின் சிறந்த படங்கள் இரண்டே இரண்டு தான். ஒன்று சத்யஜித்ரே இயக்கிய 'பதேர் பாஞ்சாலி' மற்றொன்று கமலின் 'நாயகன்'...



தயவுசெய்து படித்ததோடு மட்டுமல்லாமல் வாக்களித்து, பின்னூட்டமிட்டு என்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

10 கருத்துகள்:

  1. wonderful Prasath. You have done a different job.. well done.

    பதிலளிநீக்கு
  2. WONDER FUL REVIEW . BUT THE MOVIE RELEASED ON 1987 DEEPAAVALI NOT IN JULY AS U MENTIONED

    பதிலளிநீக்கு
  3. அருமைான படம்
    நூற்றாண்டை கடந்து நிற்கும் படம்

    பதிலளிநீக்கு